இரும்பு காலம் : Iron Age in Tamil

புதிய கற்கால மக்கள் வாழ்ந்த இடங்களில் கிடைத்த அவர்தம் புதிய கற்கால கருவிகளோடு,  இரும்புக் கருவிகள் சிலரும் இருந்தனர்.  பழைய கற்கால மக்கள் படிப்படியாக வளர்ச்சி பெற்று புதிய கற்கால மக்களாக   மாறினர் போலவே,  புதிய கற்கால மக்கள் படிப்படியாக வளர்ச்சி பெற்று,  இரும்பின் பயனை அறிந்து, இரும்புக்கால மக்களாக மாறினர் என்று கூடுதல் பொருத்தமாகும்.  அம்மக்கள் கற்கருவிகளை விட இரும்புக் கருவிகள் சிறந்தவை என்பதை தம் அனுபவத்தில் கண்டனர்.  இவ்வுணர்ச்சியால்  அம்மாக்கள் கற்கருவிகளை குறைத்துக்கொண்டு,  இரும்புக்  கருவிகளை பெருக்கினர்,  இரும்பு கண்டுபிடிக்கப்பட்ட பிறகு பொன்,  வெள்ளி,  செம்பு ஆகிய உலோகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.  இவற்றுக்குரிய சொற்கள் தமிழிலேயே  அமைந்திருத்தலின்,  இவை  ஆரியர்  வருகைக்கு முன்பு கண்டறியப்பட்டன என்பதை நன்கு உணரலாம்.  தென்னிந்திய புதிய  கற்கால புதைகுழிகளிலும் இரும்பின் தொடக்ககால புதைகுழிகளில் இரும்பு   கிடைக்கலைக்  காண,  இரும்பு மிகப் பழைய காலத்திலேயே தென்னிந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது என்னும் உண்மையை நன்கு உணரலாம்.

 சமயம்

 சிவன் என்னும் சொல் எதன் அடிப்படையாகப் பிறந்தது  என்பதை வடமொழி இலக்கண ஆசிரியர்கள்  பொருந்தும் முறையில் கூற முடியவில்லை.  சிவன் மலைவாழ் கடவுள் யானைத் தோலையும்,  மான் தோலையும் உடையவன்;  விலங்குகளுக்கு தலைவன் என்னும் பொருள்பட ' பசுபதி'  என்று அழைக்கப்படுகிறான்.  இவற்றையும்,  அவனைப் பற்றிய  கதைகளையும் நோக்க,  கடவுள் பழைய கற்காலத்திலும் புதிய கற்காலத்திலும் மக்களால் வழிபட்டு வந்தான் என்பதை அறியலாம். ' சிவன்'  என்பது ' சிவப்பு' என்பதிலிருந்து வந்தது.  'செந்தழல் மேனி எம்மான்' என்று பிற்கால பாடல்களில் சிவன் குறிக்கப்படுவதைக் காணலாம்.  சிவன் லிங்க உருவில் வழிபடப்படுகிறான்.  புதிய கற்கால பொருட்களில் லிங்கத்தை குறிக்கும் கற்களும் கிடைத்துள்ளன.  இந்த லிங்க வழிபாடு வேதகால  ஆரியரால் வெறுக்கப்பட்டது.  அவர்கள் தங்கள் தீ வழிபாட்டிற்கும்,  இந்திர வழிபாட்டிற்கும் மாறாக இந்த லிங்க வழிபாட்டை  வெறுத்ததில்  வியப்பில்லையன்றோ?  ஆரியர் இந்நாடு வந்த தொடக்கத்தில் அவர்கள் வழிபாட்டிற்கும்,   இந்நாட்டிற்கே உரிய லிங்க  வழிபாட்டிற்கும் போர் மூண்டது.  இறுதியில் லிங்க வழிபாடு வெற்றி பெற்றது.  ஆரியர் தங்கள் வேதத்தில் தங்கள் கடவுளர்க்கும் மேலான கடவுளாக சிவனை ஏற்றுக் கொண்டனர்; சிவனுக்கு 'மகாதேவன்'  என்று பெயரிட்டனர்.

 பண்டை முல்லை நில  மக்களால் கண்ணன் கடவுளாக வழிபட்டான்.  அவ் வழிபாடே பிற்காலத்தில் திருமால் வழிபாடாக மாறியது.  கண்ணன் வழிபாட்டிற்கும்,  ஆரியர் வழிபாட்டிற்கும் தொடக்கத்தில் போர் மூண்டது.  இறுதியில் கண்ணன் வழிபாடே வெற்றி பெற்றது.  இந்த வழிபாட்டையும்   ஆரியர் ஏற்றுக் கொண்டனர்.  லிங்க வழிபாடு,  கண்ணன் வழிபாடும் ஆரியர் வருகைக்கு முன்னரே இந்நாட்டில்  இருந்து வந்த வழிபாடுகளாகும் என்பதை வேதங்களே எடுத்துக் கூறுகின்றன.

 காளி என்பது பெண் தெய்வம். இத்தெய்வத்தைப்  'பழையோள்'  என்றும்,  கொற்றவை என்றும்,  பாலை நில தெய்வம் என்றும் தமிழ் நூல்கள் கூறுகின்றன.  பிற்காலத்தில்   இத்தெய்வம்  ஆரியரால் ' துர்க்கை'  எனப் பெயரிடப்பட்டது.  தென்னிந்தியாவில் பெரும்பாலான சிற்றூர்களில் காளி கோயில் இருப்பதை காணலாம்.

 முருகன் மலைநாட்டு கடவுள் 'குன்றுதோராடும் குமரன்'  என்று தமிழ் நூல்கள் தெய்வத்தைப் பற்றி  பேசுகின்றன. செந்நிற கடவுளான முருகன் ' சேயோன்'  எனப்பட்டான்.  கருநிறமுடைய ஆதலின் கண்ணன் 'மாயோன்' (மாயை- அருமை)  எனப்பட்டான்.  பண்டை இந்தியாவுக்கே உரிய  இக்கடவுளர்  வழிபாடுகள்  ஏரியற்ற வழிபாடுகள்;   எரி வழிபாடு ஆரியருக்கு மட்டுமே உரியது என்பது ஆராய்ச்சியாளர் கருத்து.

  முடிவுரை

 புதிய கற்காலம் ஏறத்தாழ கிமு 20000 முதல் கி-மு 5000 வரை என்று ஆராய்ச்சியாளர் உத்தேசமாக கூறுவர்.   ஏறி வழிபாடு (ஆரிய வழிபாடு)  தோன்றுவதற்கு முன்னே முன்னரே இரும்பு கண்டுபிடிக்கப்பட்டது.  காக்கைகளை விரட்டுவதற்கும்,  கூட்டத்தில் ஒருவரை ஒருவர் தாக்குவதற்கும்,  பறவைகளை குறிபார்த்து செய்வதற்கும் என்றும் நம் சிற்றூர்களில்  கற்கள் பயன்படுத்தப்படுகின்றன.  எனவே,  கற்காலம் நம்மிடத்தில் இருக்கிறது என்று கூறலாம்.   வில் இன்றும் பல சிற்றூர்களில் இருக்கிறது.  இவற்றிலிருந்து  விடப்படும் களிமண்  உருண்டைகளும் காணப்படுகின்றன.  நம் வீடுகளில் கல் உடல்களும் மரங்களும் என்றும் காட்சியளிக்கின்றன.  கோவில்களில் உள்ள கடவுளர் உருவங்களும் அல்லாஹ் இயன்றவையே;  சில கோவில்களில் மரத்தால் இயன்றவையும் இருக்கின்றன.    செம்பு முதலிய உலோகங்களால் செய்யப்பட்ட கடவுளர் உருவங்கள் உலா  வருவதற்கு பயன்படுத்தப்படுகின்றன.  இவ்வாறு பழைய கற்காலத்திலிருந்து நம்மிடையே தொடர்ந்து வரும் பொருட்கள் பலவாகும் பழக்கவழக்கங்களும் பலவாகும்.