தேனி மாவட்டம் : Theni in Tamil

தேனி மாவட்டம்  மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த ஒரு அழகான மாவட்டம்.  இது சென்னையிலிருந்து 487 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த மாவட்டத்தின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். இம்மாவட்டத்தின் தண்ணீர் தேவையை முல்லைப் பெரியாரும் சேர்ந்து  தீர்த்து வைக்கின்றன. இது மதுரை மாவட்டத்திலிருந்து தனியாக பிரிக்கப்பட்டது.  இந்த மாவட்டத்திலுள்ள முக்கிய ஊர்கள்  உத்தமபாளையம்,  பெரியகுளம்,  ஆண்டிபட்டி ஆகியவை ஒன்றிணைந்து தேனி மாவட்டம் உருவாக்கப்பட்டது.  இதில் 8 ஊராட்சிகள் உள்ளன.

தேனி சுற்றுலா இடங்கள் Theni Tourist Places in Tamil

ஆண்டிப்பட்டி

ஆண்டிபட்டி வரிசை நாடு மலைபுறத்தைச்  தேர்ந்த சிற்றூர்கள் மற்றும் கிராமங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு கைத்தறி மற்றும் நெசவு முக்கியமான தொழில் ஆகும்.
பாலசுப்பிரமணியர் கோயில்
பாலசுப்பிரமணியர் கோயிலில்  முருகன் ஆறு முகங்களுடன் தரையைப் பிளந்து வருவது போன்று காட்சியளிக்கிறார்.  அதுவும் தனது மனைவியரோடு.  இந்த கோயில் பெரியகுளத்தில் ஒரு முக்கிய கோயிலாகும்.  இது சோழ மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது.

 போடி நாயக்கனூர்

போடிநாயக்கனூர் ஏலக்காய்,  மாம்பழம் மற்றும் காபி  ஆகியவற்றின் சந்தையாக விளங்குகிறது.  இது மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ளது.

போடி மேடு

போடி மேடு 4500 அடி உயரத்தில் உள்ளது.  இது காண்பவர்களை கவரும் வகையில் பல அற்புதமான கண்கவரும் இயற்கை காட்சிகளை உள்ளடக்கியது. இது போடி நாயக்கனூரில் இருந்து 26 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

தேவதானப்பட்டி

தேவதானப்பட்டியில் உள்ள காமாட்சி அம்மன் கோவில். இந்தக் கோயில் மஞ்சள் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் உள்ள கருவறை எப்பொழுதும் திறக்கப்படுவதில்லை.  அனைத்து பூசைகளும் கதவுகளுக்கு வெளியே செய்யப்படுகின்றது.  உள்ளூர் இசைக்கலைஞர்களுடன் நடக்கும் மாலை இசை கண்ணுக்கும் காதுக்கும் விருந்தாக அமைகிறது. 

சின்னசுருளி

சின்னசுருளியில்  உள்ள அருவி  மேக மலை உச்சியில் உருவாகி இங்கு அருவியாக விழுகிறது.  இது தேனியிலிருந்து 54 கிலோமீட்டர் தொலைவில் உள்ள  கோம்பைத்தொலு  கிராமத்திற்கு அருகில் உள்ளது.

சின்னமனூர்

சின்னமனூரில் உள்ள சிவகாமி அம்மை கோயில் முல்லையாற்றின் கரையில் உள்ளது.  இந்த ஊர் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு வியாபார சந்தையாக திகழ்கிறது.  இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்ற ஒரு பழமையான ஊர் ஆகும். இந்த ஊரின்  பழைய பெயர் ஹரிகேசநல்லூர்.

கும்பக்கரை அருவி

கும்பக்கரை அருவி சுற்றுலாப் பயணிகளை பெருமளவு கவரும் இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது.  இந்த அருவி கொடைக்கானலில் தோன்றி  மலை வழியாக ஓடிவந்து  அடிவாரத்தில் அருவியாக விழுகிறது. இந்த அருவி வருடம் முழுவதும் நீர் அருவியாக விழுந்து கொண்டே இருக்கும். இங்கிருந்து கொடைக்கானலுக்கு மலைப்பாதை வழியாக நடந்தே செல்லலாம்.  இது பெரியகுளத்தில் இருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

குச்சனூர் சனீஸ்வரர் கோயில்

இந்தியாவிலேயே சனி பகவானுக்கான தனிக் கோயில் இது ஒன்றுதான்.  பாண்டியில் உள்ள திருநள்ளாறு கோயிலில் சனி பகவானுக்கு தனி சன்னதி உண்டு.  ஆனால் குச்சனூர் கோயில் உள்ள மூலக் கடவுள் சனிபகவான் தான்.  இங்குள்ள சனி பகவான் சுயம்புவாக எழுந்ததாக கூறப்படுகிறது. இக்கோயிலின்  அருகே எக்காலமும் ஓடக்கூடிய சுரபி நதி உள்ளது.  இக்கோயிலில் ஆடி மாதம் 3ல் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் இங்கு திருவிழா நடைபெறுகிறது.

 மாவூத்து வேலப்பர் கோயில்

மாவூத்து வேலப்பர் கோயிலில் எழுந்தருளியுள்ள குமரன் குடிகொண்டுள்ளார்.  இது குன்று ஒன்றில் உச்சியில் உள்ளது.  இக்குன்றின் அடிவாரம் வரை மட்டுமே பேருந்துகள் செல்லும். மலையின் மேல் நாம் நடந்துதான் செல்ல வேண்டும்.  இந்த மலையை சுற்றி பசுமையான மரங்கள் சூழ்ந்து கண்ணுக்கு குளிர்ச்சியான மனதிற்கு இதம் அளிக்கும் வகையில் எங்கும் பசுமையாக காணப்படுகின்றது.  இந்த மலையை சுற்றி பெருமளவு மாம்பழங்கள் இருப்பதாக.  மாம்பழங்களின் மனம் நம் மனதைக் கவரும்படி உள்ளது.இந்தக் கோயில் ஆண்டிப்பட்டியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

 சோத்துப்பாறை அணை

சோத்துப்பாறை அணை வராகநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இந்த சோத்துப்பாறை அணையை சுற்றி உள்ள இயற்கை அழகை ரசிப்பதற்கு பெருமளவு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.  இந்த அணை பெரியகுளத்தில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

மேகமலை

மேகமலை ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகும்.  எங்கும் நிறைந்துள்ள தேயிலை தோட்டத்தை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.  இது கடல் மட்டத்திலிருந்து 1500 மீட்டர் உயரத்தில் உள்ளது.

கைலாச நாதர் குகைக்  கோயில்

கைலாச நாதர் குகைக்  கோயில் சுருளி அருவிக்கு மேலே 800 மீட்டர் உயரத்தில் இந்த குகைக் கோயில் அமைந்துள்ளது.  இந்த அருவியில் குளித்தால் தீராத நோய்களும் தீரும் என்று மக்கள் நம்புகின்றனர். இங்கு ஆடி, தை,  சித்திரை பாதங்களில் திருவிழாக்கள் நடைபெறும்.  ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் இந்த மழை இடம்பெற்றுள்ளது இதன் சிறப்பாகும்.

 சுருளி  அபூபக்கர் மஸ்தான் தர்கா

இந்த அபுபக்கர் மஸ்தான் தர்காவிற்கு பெரும்பாலோர் புனித பயணமாக வருகின்றனர்.  இங்கு அபுபக்கர் மஸ்தானின் சமாதி உள்ளது.  இது கைலாசநாதர் குகைக் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது.  அபுபக்கர் மஸ்தான் 1630ல்  வந்த இஸ்லாமிய துறவி. 

தீர்த்தத்தொட்டி

 இங்குள்ள சுப்ரமணியர் கோவில் பிரபலமான கோயில்களில் ஒன்று.  இது மதுரை கொச்சி தேசிய நெடுஞ்சாலையில்  தேனி மற்றும் போடிநாயக்கனூர் இடையே இந்த இயற்கை நீரூற்று அமைந்துள்ளது.

 புலி அருவி

 இந்த அருவியின் நீர் மிகவும் சுவையானது.  இது தேனியிலிருந்து போடிக்கும் போடிமெட்டு க்கும் இடையே மூணாறு சாலையில் உள்ளது.

வைகை அணை

வைகை அணை ஒரு பிரபலமான சுற்றுலா தலமாகும்.  இது முல்லையாற்றின் குறுக்கே இந்த அணை கட்டப்பட்டுள்ளது.  மதுரை மாவட்டத்தின்  நீர் தேவைகள் அனைத்தும் இந்த அணைக்கட்டை சார்ந்துள்ளது. இந்த அணைக்கட்டில் குழந்தைகள் பூங்கா,  விலங்குகள் காப்பகம் போன்றவை உள்ளன.  இந்த அணைக்கட்டு தேனியிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

பெரியகுளம்

பெரியகுளம் தேனி மாவட்டத்திலுள்ள முக்கியமான நகரங்களில் ஒன்று.  சேலம் மாவட்டத்திற்கு பெரிய பிறகு இங்கு விளையும் மாம்பழங்கள் மிகவும் பிரபலமானவை.  இங்கு விளையும் பலன்கள் பெரும்பாலும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது  கொடைக்கானல் மழையின் அடிவாரத்தில் அமைந்துள்ள நகரம் ஆகும். பெரியகுளத்தில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்கலும் சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளன.  இது தேனியில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

வீரபாண்டி

வீரபாண்டியில் உள்ள கௌரிமாரியம்மன் கோயில் மிகப் பிரபலமான கோயிலாகும்.  இந்த கோயிலில் உள்ள கௌரிமாரியம்மன் பல்லாயிரம் பக்தர்கள் வருவார்கள். இக்கோயில் 14ஆம் நூற்றாண்டில்  பாண்டிய மன்னன் வீர பாண்டியனால் கட்டப்பட்டது. கௌரிமாரியம்மன், கண்ணீஸ்வரமுடையாரையும் வழிபட்டதால் பாண்டிய மன்னனின் கண் பார்வை குறைபாடு நீங்கியதாக சொல்லப்படுகின்றது.  இதனாலேயே பாண்டிய மன்னன் இக்கோயிலை கட்டியதாகும் கூறப்படுகின்றது.  இந்தக் கோயில் தேனியில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 

வீரப்ப அய்யனார் கோயில்

வீரப்ப அய்யனார் கோயில் தேனியிலிருந்து மூணு கிலோமீட்டர் தொலைவில் அல்லி நகரத்தில் இருந்து மூணு கிலோ மீட்டரில் இந்த அய்யனார் கோவில் உள்ளது. இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் நாள் கோயில் திருவிழா நடைபெறுகிறது.