தூத்துக்குடி மாவட்டம் : Thoothukudi in Tamil

தூத்துக்குடி என்றாலே நம் நினைவுக்கு வருவது தூத்துக்குடியில் தயாரிக்கப்படும் உப்பு. தூத்துக்குடி  ஒரு காலத்தில் முத்து குளிப்பதற்கு மிகவும் புகழ் பெற்ற நகரமாக விளங்கியது தற்போது அதற்கான காலங்களில் முத்து குளிக்கிறார்கள். தூத்துக்குடி ஒரு துறைமுக நகரம் இது நாட்டின் சரக்குப் பெட்டகங்களை கையாளும் இரண்டாவது பெரிய துறைமுகம் ஆகும்.இங்கு ஸ்பிக், ரசாயன தொழிற்சாலைகள்,  அணு ஆற்றல் தயாரிக்க உதவும் கனநீர்  தொழிற்சாலை,  மின்னலை என்று நவீன தொழிற்சாலைகளும் இங்கு உள்ளன.  இது சென்னையிலிருந்து580 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதன் பரப்பளவு 4621  சதுர கிலோமீட்டர்.

தூத்துக்குடி சுற்றுலா இடங்கள் Thoothukudi Tourist Places in Tamil

ஆதிச்சநல்லூர்

ஆதிச்சநல்லூர் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். இது தொழிலாளர்களின் சொந்தமாகவே திகழ்கிறது இங்கு முதுமக்கள் தாழிகளும், சுடுமண் பாத்திரங்களும்,  இந்த நதிக்கரையில் கிடைக்கின்றது. இதைக் கண்டு இங்கு ஆதி பழங்காலத்திலேயே ஒரு நாகரீகம் தலைத்திருக்கிறது  என்று தொல்லியல் துறை நிர்ணயித்திருக்கிறது.  ஆகையால் இப்பொழுது இந்த ஊர் தமிழகத் தொல்லியல் துறை மேற்பார்வையில்  உள்ளது.

அய்யனார் சுனை

அய்யனார் சுனை  பாலைவனம் போன்ற இப்பகுதியில் இயற்கை ஊற்று ஒன்றும் பக்கத்தில் அய்யனார் கோயிலும் உள்ளது.  அதனால் இந்த ஊற்று  அய்யனார் சுனை என்று அழைக்கப்படுகிறது.  இது திருச்செந்தூரிலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

பாரதியார் மணிமண்டபம்

மகாகவி பாரதி தமிழகத்தின்  தலைசிறந்த கவிஞர்களுள் ஒருவர்.  இவர் ஒரு பத்திரிக்கையாளர்,  இதழியல் துறையில் வேலை பார்த்தார் தமிழில் முதலில் கார்ட்டூன் வரைந்தவர் மிகச்சிறந்த கட்டுரையாளர்.  பலமொழிகளைக் கற்றவர் அதன் பொருட்டு தமிழின் சிறப்பை எடுத்துக் காட்டியவர்.  பெண்விடுதலைக்கு தனது பாடல்கள் மூலம் பாடுபட்டவர்.  பாரதியாருக்கு 1945ஆம் ஆண்டு கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கட்டிய மணி மண்டபம் இது.  இந்த மணிமண்டபம் திறக்கப்பட்டது காந்தி தனது வாழ்த்துக்கள் தெரிவித்தார். பாரதியின் நூற்றாண்டு விழா 1981  ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.  இந்த ஆண்டு தமிழக அரசின் மக்கள் தொடர்புத்துறை இந்த நினைவகத்தை தனது பொறுப்பில் எடுத்துக்கொண்டது.  பாரதி நினைவு மண்டபம் பாரதியின் சொந்த ஊரான எட்டயபுரத்தில் உள்ளது.

எட்டயபுரம்

எட்டயபுரம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது பாரதியின் பிறந்த ஊர் இது.   உமறுப்புலவருக்கான நினைவகம்  இங்குதான் உள்ளது.  மதுரை பாண்டிய மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது.  இந்த இடத்தில்,  ஆந்திர மாநிலம் சிதிரகிரியில் இருந்து  மக்களை அழைத்து வந்து இங்கு திசைக் காவலர்களாக நியமித்தார்கள்.  அப்பொழுது இந்த ஊரின் பெயர் இலாச நாடு  பின்னர் ஏற்படும் என்று பெயர் மாற்றப்பட்டது.

கட்டபொம்மன் நினைவுக் கோட்டை

கட்டபொம்மன் ஆங்கிலேயருக்கு வரி தர மறுத்ததால். ஆங்கிலேயர்கள் இவருக்கு எதிராக போர் தொடுத்தனர்.  போரில் வீரமாக போரிட்ட பொழுதும் கடைசியில் தோல்வியுற நேர்ந்தது.  இவரை கைது செய்த ஆங்கிலேயர்கள் இவரை தூக்கிலிட்டனர். இதை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் இவருடைய வீரத்தை எடுத்துக்கூறுவதாக இருந்தது.  இதனால் இவர் பெரும் புகழ் பெற்றார்.  கட்டபொம்மனின் முழு பெயர் வீமராஜா  என்று அழைக்கப்படுகிற ஜெகவீர பாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்முதுரை.  கட்டபொம்மனுக்கு இந்த நினைவுக் கோட்டை  கடந்த 1974 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.  பார்வை நேரம்  காலை 8  மணி முதல் மதியம் 1  மணி வரை.  மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை.

 கயத்தாறு

கயத்தாறு என்றாள்  என்றாள் நம் நினைவுக்கு வருவது கட்டபொம்மனை தூக்கிலிட்ட இடம்.   இவ்வூரிலுள்ள ஒரு புளிய மரத்தில் 16-10-1799  அன்று மாவீரன் கட்டபொம்மனை ஆங்கில அரசு தூக்கிவிட்டது.  இப்போது அந்த இடம் நினைவிடமாக மாற்றப்பட்டுள்ளது.  இது திருநெல்வேலியிலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் மதுரை செல்லும்  தேசிய நெடுஞ்சாலை 7 ல்  உள்ளது இந்த சிற்றூர்.

குலசேகரபட்டினம்

குலசேகரப்பட்டினத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில்  நவராத்திரி திருவிழா மிகவும் புகழ்பெற்றது.  அப்போது நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வரும் நாட்டார் கலைஞர்கள் தங்கள் கலைத்திறன்களை நிகழ்த்திக் காட்டுவார்கள்.  இது ஒரு கடற்கரை கிராமம் என்பதால் அழகான கடற்கரை கண்டு மகிழலாம். இது திருச்செந்தூரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

  கொற்கை துறைமுகம்

கொற்கை துறைமுகம் சங்க காலம் முதலே பாண்டியர்களின் துறை முகப்பட்டினமாக விளங்கியது. வரலாற்று அறிஞர்கள் தொல்லியல் துறையினர் மற்றும் பல்துறை அறிஞர்களும் கடந்த ஒரு நூற்றாண்டாக இவ்விடத்தில் அகழாய்வு செய்து  இவ்விடத்தின் தொன்மையை  உலகறியச் செய்ய பெரு முயற்சி செய்து வருகின்றனர். இது திருச்செந்தூரிலிருந்து 29 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தற்பொழுது இது ஒரு சிறு கடற்கரை கிராமமாக இருக்கின்றது.

மணப்பாடு

 மணப்பாடில்  உள்ள ஆதிகால ரோமன் கத்தோலிக்க சர்ச் மிகவும் பிரபலமானது.  இந்த சர்ச்சில் உள்ள சிலுவை ஜெருசலேமில் இருந்து கொண்டுவரப்பட்டது.  ஐரோப்பாவிலிருந்து வந்த இறை பணியாளர் செயின்ட் சேவியர்  அவர்களுடைய திருநாமம் இந்தச் சாற்றுடன் சேர்த்து எனப்படுகிறது.  இதன் மற்றொரு பெயர் சின்ன ஜெருசேலம்.  இது திருச்செந்தூரில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

 ஒட்டப்பிடாரம்  வ.உசி இல்லம்

வ உ சிதம்பரனார் சுதேசிய கப்பலை சொந்தமாக வாங்கி ஓட்டினார்.  இதனால் இவரை "கப்பலோட்டிய தமிழன்" என்றும் சொல்வார்கள்.  வ உ சிதம்பரனார் பிறந்த ஊர் ஒட்டப்பிடாரம்.  இவருடைய இல்லம் கடந்த 12-12-1961  அன்று அவரது நினைவு நினைவில்லமாக அறிவிக்கப்பட்டது.  எஞ்சியுள்ள விடுதலைப் போராட்ட தியாகிகள் இப்போதும் விடுதலையின் திருத்தலமாக கருதி இந்த ஊருக்கு பயணம் மேற்கொள்கின்றனர். இங்கு வ உ சிதம்பரனார் திருவுருவச் சிலை,  வாழ்க்கை வரலாறு, புகைப்படங்கள்  ஆகியவை இடம்பெற்றுள்ளன.

பாஞ்சாலங்குறிச்சி

பாஞ்சாலங்குறிச்சியில் தான் மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை கட்டி ஆட்சி புரிந்தான்.  கடந்த பதினெட்டாம் நூற்றாண்டில் அவன் குரல் வெள்ளையனுக்கு எதிராக கர்ஜித்தது இந்தக் கோட்டையில்தான்.  கட்டபொம்மன் தனது வாழ்விடமாக இதை தேர்ந்தெடுத்ததற்கு காரணமாக ஒரு கர்ணபரம்பரைக் கதை உண்டு.  அந்தக் கதையின் படி இந்த ஊரில் ஒரு வேட்டை நாய் ஒரு முயலை துரத்தி சென்றதாகவும் கடும் கோபம் கொண்ட முயல் அந்த நாயை எதிர்த்து விரட்டியதாம்.  கடந்த 1974 ல்  தமிழக அரசு இந்த கோட்டையை கட்டபொம்மன் நினைவில்லமாக அறிவித்தது.  இந்த கோட்டையின் அருகிலேயே அவனது குலதெய்வமான ஜக்கம்மா கோவிலும் உள்ளது.  இந்த கோட்டையின் அருகிலேயே கட்டபொம்மனின் வீரர்களால் கொல்லப்பட்டார் ஆங்கிலேயர்களின் கல்லறையும் உள்ளது.  இங்கு கட்டபொம்மனின் வீர காட்சிகள் ஓவியமாக வரையப்பட்டுள்ளன.

திருச்செந்தூர்

 திருச்செந்தூர் என்றாலே நம் நினைவுக்கு வருவது திருச்செந்தூர் முருகன் கோவில்.  இங்கு குமரன் கடற்கரையில் கோவில் கொண்டுள்ளார்.  இது முருகக் கடவுளின் ஆறுபடைவீடுகளில் ஒன்று. சூரபத்மனை போரில் வென்ற  முருகப்பெருமான் இங்கு வந்து சிவனை வழிபடுகின்றார்.  இந்த கோயிலின் கோபுரம்,  சிற்பங்கள் அனைத்தும் பார்க்க வேண்டியவை.  இங்கு நடைபெறும் சூரசம்ஹார திருவிழாவை காண பல லட்சம் பக்தர்கள் வருவார்கள்.  ஐப்பசி மாதம் இத்திருவிழா  நடைபெறும். திருச்செந்தூர் தூத்துக்குடியிலிருந்து  40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

ஸ்ரீவைகுண்டம்

ஸ்ரீவைகுண்டத்தில் கண்ணபிரான்  குடிகொண்டுள்ளார். இது திருநெல்வேலியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

திருப்புளியங்குடி

திருப்புளியங்குடியில்  எழுந்தருளியுள்ள பெருமாள்  காசினை வேண்டா பெருமாள்.  இது திவ்யதேசங்களில் ஒன்று.  இவ்வூர் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும்,  நத்தத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும்  உள்ளது.

வாஞ்சி மணியாச்சி

மாவீரன் வாஞ்சிநாதன் இந்த ரயிலடியில் வைத்துதான் ஆங்கில மாவட்ட ஆட்சியர் ஆஷ்துரையை சுட்டுக்கொன்றார்.  தன்னைத் தானே  சுட்டுக்கொண்டு உயிர் துறந்தார்.  வீரமும் தியாகமும் ஒருங்கிணைத்தவர் வாஞ்சிநாதன்.  இதை போற்றும் வகையில் இந்த ஊருக்கு வாஞ்சி மணியாச்சி என்று பெயர் பெற்றது.