திருவள்ளூர் மாவட்டம் : Thiruvallur in Tamil
திருவள்ளூர் மாவட்டம் சென்னையிலிருந்து 46 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது வடமாவட்டங்களில் மிக வேகமாக வளர்ந்து வரும் மாவட்டமாகும். இந்த மாவட்டம் சென்னைக்கு அருகில் இருப்பதால் தொழில் மற்றும் வியாபார முக்கியத்துவம் கொண்டது. இங்கு பல்வேறு கல்வி நிறுவனங்கள், உற்பத்தித் தொழிற்சாலைகள், வியாபார நிறுவனங்கள், மத நினைவகங்கள் கோயில்கள் என்று இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுமே அதிக முக்கியத்துவம் பெறுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 1324 சதுர கிலோமீட்டர் ஆகும்.
திருவள்ளூர் சுற்றுலா இடங்கள் Thiruvallur Tourist Places in Tamil
அம்பத்தூர்
அம்பத்தூர் ஒரு தொழில்துறை மையம். இது சென்னை- ஆவடி சாலையில் 16 கிலோமீட்டர் தொலைவில் இத்தொழில் நகரம் அமைந்துள்ளது.சென்னை அரக்கோணம் அகல ரயில் பாதையில் அம்பத்தூர் என்ற பெயரிலேயே ரயில் நிலையம் உள்ளது.அம்பத்தூரில் உள்ள தொழிற்பேட்டை தான் தெற்காசியாவிலேயே மிகப் பெரிய தொழிற்பேட்டை ஆகும். இது தமிழகத்தின் பிற பகுதிகளுடன் பேருந்து மற்றும் ரயில் நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஆவடி
ஆவடி சென்னையிலிருந்து 24 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சென்னையிலிருந்து புறப்படும் அனைத்து பேருந்துகளும் அவருக்கு செல்வதால் சிறப்பான பேருந்து வசதி உள்ள பகுதி ஆகும். இங்கு ஆவடி ரயில் நிலையமும் உள்ளது. இப்பகுதியில் விமானப்படை நிலையம் ஒன்றும் உள்ளதுடன் தமிழக சிறப்பு காவல் படையில் தலைமையகம் எங்குள்ளது.
குன்றத்தூர்
குன்றத்தூர் முருகன் கோயில் மிகப் பிரபலமான கோயிலாகும். இக்கோயிலில் ஒரு சிறு குன்றின் மீது இந்த முருகன் கோவில் அமைந்துள்ளது. பெரியபுராணம் எழுதிய சேக்கிழார் இவ்வூரில் தான் பிறந்தார். இவர் கட்டிய கோயில்தான் இங்குள்ள நாகேஸ்வரர் கோயில். இக்கோயிலில் நாகேஸ்வர ராவ் சிவன் எழுந்தருளியுள்ளார். இங்கு பழமையான சிவன் கோவில் ஒன்றும் உள்ளது இதில் ராமன், அனுமான் சிலைகளும் அற்புதமான வேலைப்பாடுடன் அமைந்துள்ளது.
செம்பரம்பாக்கம்
செம்பரம்பாக்கம் சென்னைக்கு அருகே உள்ள ஒரு சிறிய கிராமம் ஆகும். இதனருகே காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், வேலூர், பொய்கனூர், பட்டாபிராம் போன்ற நூறு நகரங்களுடன் பேருந்து வசதி இங்கு இருக்கிறது. இங்கு பழமையான சிவன் கோயில் ஒன்று பாழடைந்த நிலையில் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி மிகப் பெரியது. இந்த ஏரியின் நீர் இதன் கீழ்ப்பாக்கம் உள்ள மாங்காடு கிராம பாசனத்திற்கு போகிறது.
பட்டினத்தார்
பட்டினத்தார் தமிழ் மரபு சார்ந்த பதினெட்டு சித்தர்களில் ஒருவர். புகழ்பெற்ற பல பாடல்களை வழங்கியவர். பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்து சென்னையிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் திருவொற்றியூரில் மறைந்தார். இவருக்கு திருவொற்றியூரில் கோவில் ஒன்று உள்ளது. நேரம் காலை 6 மணி முதல் 1 மணி வரை மாலை மூணு மணி முதல் இரவு 8 மணி வரை.
பூண்டி
பூண்டி என்றாலே நம் நினைவுக்கு வருவது பூண்டி நீர்த்தேக்கம். இதிலிருந்துதான் சென்னையில் உள்ள செங்குன்றம் நீர்தேக்கத்திற்கு தண்ணீர் வருகிறது. பூண்டி நீர்த்தேக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் பேருந்து இதை சுற்றுலா தளமாக மாறியுள்ளது. அது ஒரு சிறிய கிராமம். இது சென்னையில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருவள்ளூரில் இருந்து ஏராளமான பேருந்து வசதிகள் கிராமத்திற்கு செய்யப்பட்டுள்ளது.
பலையனூர்
பலையனூர் ஒரு பழமையான கிராமமாகும். திருவலங்காடு கிராமத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. தமிழுக்காக இந்த ஊர் செய்த தியாகத்தை போல வேறு எந்த ஒன்றும் செய்திருக்க இயலாது. தமிழ்ப் படைப்பு ஒன்றின் சிறப்பு எடுத்து கூறுவதற்காக 70 தமிழறிஞர்கள் ஒரே சமயத்தில் தங்கள் இன்னுயிரை இந்துள்ளனர்.
பூவிருந்தவல்லி (பூந்தமல்லி)
பூந்தமல்லி திருக்கச்சி நம்பி ஆழ்வார் பிறந்த ஊர். சென்னையிலிருந்து பெங்களூர் செல்லும் சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அரசு மற்றும் தனியார் பேருந்து வசதிகள் தாராளமாக உள்ளன. அதுபோன்று பெங்களூர், வேலூர், காஞ்சிபுரம், திருத்தணி, திருவள்ளூர் மற்றும் பிற இடங்களுக்கு செல்லும் பேருந்துகள் இவ்வூர் வழியாகச் செல்வதால் சிறந்த புறநகர் பேருந்து மையங்களில் ஒன்றாக பூந்தமல்லி விளங்குகிறது. இங்கிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் ஆவடி ரயில் நிலையம் உள்ளது.
பழவேற்காடு உப்பேரி பறவைகள் சரணாலயம்
பழவேற்காடு ஏரியில் பக்கிங்காம் கால்வாய் நீரும் கடல் நீரும் இந்த ஏரியில் கலக்கின்றன. மீன்வளமும், இறால் வளமும் நிறைந்த ஏரி இது. பழவேற்காடு பெரிய கட்டு நண்டு சென்னை நகரில் பிரபலமானது மற்றும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இங்குள்ள வெள்ளையரால் சுவைமிக்கது இதுவும் நம் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடல் நீரை உள்வாங்குவதும் வெளித்தள்ளுவதுமாக இருப்பதால் இந்த ஏரி நீர்மட்டம் குறிப்பிட்ட காலங்களில் இறங்கும் அதிகரிக்கும் இதை இப்பகுதி மீனவர்கள் "வத்தம்", "வெள்ளம்" என்பார்கள். பழவேற்காடு பகுதியை சுற்றி மீனவர் குடியிருப்புகள் அமைந்துள்ளன. அங்குள்ள சரணாலயத்தில் கொக்கு, கடல் நாரை, கூழைக்கடா மற்றும் பல நீர் பறவைகளை இந்த ஏரியில் காணலாம். இங்கே கட்டுமரத்தில் பயணம் செய்யும் வசதியும் உண்டு. இது ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகும். இங்கு.17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த டச்சுக்காரர்கள் கல்லறை ஒன்றும் உள்ளது.
கருமாரியம்மன் கோவில்
கருமாரியம்மன் கோவில்திருத்தலத்தின் பெயர் திருவேற்காடு.இங்கு நடைபெறும் லட்சார்ச்சனையும் பூர்ணிமா லட்சார்ச்சனையும் மிக முக்கியமானவை. இவற்றுடன் மாசி மகம், தமிழ் புத்தாண்டு தினம், பங்குனி உத்திரம், கருட சேவை போன்ற திருவிழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இங்கு அம்மனுக்கு நடக்கும் பூசை முறைகள் அர்ச்சனை, சகஸ்ரநாம அர்ச்சனை, அஷ்டோத்ர அர்ச்சனை, திரு நீராட்டு. இக்கோவில் சென்னையிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
சுருட்டப் பள்ளி
சுருட்டப்பள்ளியில் பள்ளி கொண்டுள்ள சிவபெருமான். அன்னை பார்வதி கவலையுடன் அருகில் இருக்க சிவன் பள்ளி கொண்ட நிலையில் இருப்பார். இப்படி சிவனைப் பார்ப்பது அதிசயம். ஐயன் இப்படி பண்ணிக்கொள்ள காரணம் தேவர்களும், அசுரர்களும் அமுதத்திற்காக பாற்கடலை கடைந்தார்கள் அல்லவா? அப்போது வந்த ஆலகால கொடிய நஞ்சு வேறு யாரும் அருந்தவில்லை. ஆனால் எம்பெருமான் விரிசடையோன் உலகத்தை காப்பதற்காக அந்த விஷத்தை வாங்கி அருந்தினார். உமையவள் பதறிப்போய் நஞ்சுண்டாபரின் கண்டத்தை அழுத்தி விடம் உள்ளிறங்காமல் காத்தருளினாள்.ஆனாலும் உண்டது விடமல்லவா? ஐயன் அயர்ந்து விட்டார். அம்மை கவலையுடன் உடன் இருக்கிறார். சுடுமண் சிற்பங்களாதலால் திரு நீராட்டு கிடையாது, எண்ணெய் முழுக்கு மட்டும்தான். அதேபோல சன்னதியில் திருநீறு தருவதில்லை. அம்மையின் செந்தூரம் மட்டும்தான். இந்த கிராமம் சென்னை-திருப்பதி பேருந்து தடத்தில் ஊரிலிருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆந்திரா மாநில பேருந்து வசதி இல்லை இங்குள்ள கோயில் வரை செல்லும். சென்னையிலிருந்து சென்றாள் பூண்டி மற்றும் ஊத்துக்கோட்டை கடந்து செல்ல வேண்டும். ஊத்துக்கோட்டை மற்றும் நாகலாபுரம் இடையே அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் சனிப்பிரதோஷம் மிகவும் பிரபலம் அந்தச் சமயங்களில் பெருந்திரளான பக்தர்கள் இங்கு வருவார்கள். அதுபோன்று சிவராத்திரியும் இங்கு வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது அப்பொழுதும் பெருந்திரளான பக்தர்கள் வருவார்கள். நேரம்: காலை 6 மணி முதல் மதியம் 12.30 வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை பிரதோஷ நாட்களில்: காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை.
திருத்தணி
திருத்தணி முருகன் கோயிலில் மிக பிரபலமான கோயில்களில் ஒன்று. இது முருகனின் ஆறுபடைவீடுகளில் ஒன்று. சரவணப் பொய்கை பூத்த திருக்குளமான குமார தீர்த்தம் குமரன் குடி கொண்டுள்ள இத்தனை மறையும் அடிவாரத்தில் தான் உள்ளது. தணிகை வேலனை ஆடிக்கிருத்திகை தெப்பத் திருவிழா மிகப் புகழ்பெற்றவை திருநாள் மற்றும் சஷ்டி திருவிழா, மகாசிவராத்திரி திருநாள் ஆகியவை மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இத்திருநாட்கள் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத மத்தியில் கொண்டாடப்படுகின்றன. இக்கோயிலிலுள்ள திருப்படிகள் 365 படிகள். தரிசன நேரம் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை. தொலைபேசி: 044-27885243.
வடிவுடையம்மன் ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயில்
வடிவுடையம்மன் ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்று. திருவெற்றியூரில் உள்ள இந்த வடிவுடையம்மன் தியாகராஜர் சாமி கோவில் ஒரு பழமையான கோயிலாகும்.
திருப்பாசூர்
திருப்பாச்சூர் கோவில் சைவக் கோயில்கள் 32-ல் பதினாறாவது கோயிலாக கருதப்படுகிறது.இக்கோயிலைப் பற்றி திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் தேவாரம் பாடிய அருள்மிகு கோயில். இங்கு கோயில் கொண்டுள்ள சிவன், பாசூர்நாதர், வீரேஸ்வரர், வீரேந்திரநாதர் என்றெல்லாம் திருநாமம் பெறுகிறார். இக்கோயில் மாமன்னன் கரிகால் சோழனால் கட்டப்பட்டது. இது திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இது சென்னையிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் திருவாலங்காட்டுத் கிழக்கிலும் திருவள்ளூர் வீரராகவ ஸ்வாமி கோவிலுக்கு மேற்கிலும் இத்தலம் அமைந்துள்ளது.
வீரராகவ பெருமாள்
வீரராகவ பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள மகாவிஷ்ணுவும் வீரராகவ பெருமாளாக காட்சியளிக்கிறார். ஆதிசேஷனின் மீது பள்ளி கொண்ட கோலத்தில். அவர் அருகே வசுமதி என்று அழைக்கப்படும் கனகவல்லி திருக்கோலமாக தரிசனம் தருகிறார். இது சென்னையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.