இராமநாதபுரம் மாவட்டம் : Ramanathapuram in Tamil
இராமநாதபுரம் சென்னையிலிருந்து 510 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இராமநாதபுரத்தில் வட்டங்களாக திருவாடானை, பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், இராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் ஆகும். இது முற்காலத்தில் பாண்டிய பேரரசின் கீழ் இருந்தது. சோழர்களின் இராஜேந்திர சோழன் காலத்தில் கிபி 1063-ல் இறுதி வரை மட்டுமே சோழர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. வீ நகரை ஆண்ட நாயக்கர்கள் கிபி1520 ல் இப்பகுதியை பாண்டிய அரசிடமிருந்து கைப்பற்றினர் பிறகு இது பாண்டிய மன்னர்களின் கீழ் படைத்தளபதியாகவும் இருந்த சேதுபதி பரம்பரையினர் இராமநாதபுரத்தின் ஆட்சியை கைப்பற்றினர். இம்மாவட்டத்தின் தலைநகரம் இராமநாதபுரம் இதை ஆங்கிலேயர் ராம்நாட் என்று அழைத்தனர் விடுதலைக்குப் பிறகு ராமநாதபுரம் என்று பெயர் மாற்றப்பட்டது.
ராமநாதபுரம் சுற்றுலா இடங்கள் Ramanathapuram Tourist Places in Tamil
அக்னி தீர்த்தம்
அக்னி தீர்த்தம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் தீவில் உள்ளது. இந்த அக்னி தீர்த்தத்தில் குளித்து வந்தனர் சகல பாவங்களும் தீரும் என்பது நம்பிக்கை. கோயிலில் உயர்ந்த கவனத்திற்கு ஆழமற்ற கடல் உள்ளது. அக்னி தீர்த்தம் தவிர இக்கோயிலுக்கு அருகிலேயே உள்ள தீர்த்தங்களில் யாத்திரிகர்கள் செல்லவேண்டிய முக்கிய இடங்களாகும்.
அன்னை இந்திரா காந்தி பாலம் அல்லது பாம்பன் பாலம்
இந்தியாவில் கடல் மேல் கட்டப்பட்டுள்ள பாலங்களில் இதுவே நீளமானது. இதன் நீளம் 2.2 கிலோ மீட்டர் ஆகும். இராமநாதபுரம் மற்றும் இராமேஸ்வரத்தையும் இணைக்கின்றது. இதிலிருந்து கடலையும் ராமேஸ்வரத்தை இணைக்கும் ரயில்வே பாலமும் சுற்றுலா பயணிகளை பெருமளவு கவர்கின்றது.
பத்ரகாளியம்மன் கோவில்
பத்ரகாளியம்மன் கோவில் கந்தமாதன பர்வதம் செல்லும் வழியில் ராமேஸ்வரத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
தனுஷ்கோடி
தனுஷ்கோடி என்றவுடன் நம் நினைவுக்கு வருவது 1964ல் ஏற்பட்ட புயல். இன்றும் அந்த புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை காண முடிகிறது. இங்குதான் இராவணனின் தம்பி விபீஷணன் ராமரிடம் சரணடைந்ததாக நம்பப்படுகின்றது. தனுஷ்கோடி கடற்கரை பார்ப்பதற்கு மிகவும் அழகான ஒரு கடற்கரை ஆகும். இங்கு கடற்கரை மணலில் நடந்து செல்வது மிகவும் ஆனந்தமானது. இங்கு மிக குறைந்த அளவே கடைகள் இருப்பதாக செல்லும் பொழுது வேண்டிய பொருட்களை இராமேஸ்வரத்தில் வாங்கிச் செல்ல வேண்டும். இது ராமேஸ்வரத்திலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில்
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் செந்தூரக காப்பில் எழுந்தருளியுள்ளார். இங்கு இலங்கைக்கு செல்ல சேது பந்தனம் எனப்படும் மிதக்கும் பாலம் அமைக்க பயன்படுத்தப்பட்டதாக சொல்லப்படும் கல் ஒன்று உள்ளது.
ஏர்வாடி
ஏர்வாடி என்றாலே நம் நினைவுக்கு வருவது ஏர்வாடி தர்கா. இங்கு அரேபியாவிலிருந்து 800 ஆண்டுகளுக்கு முன்பு கண்ணனூர் வழியாக இங்கு வந்த இப்ராஹீம் செய்யத் அலியா சுல்தானுக்கு இறந்த பிறகு அவர் நினைவாக எழுப்பப்பட்டுள்ள புகழ்பெற்ற கல்லறை இங்கு உள்ளது. ஏர்வாடி தர்காவிற்கு இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய தொலைதூர நாடுகளில் இருந்து இக்கல்லறையை காண பக்தர்கள் வருவார்கள். பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள். தொலைபேசி: 04576-263807.
தேவிபட்டினம்
இந்த கடலோர கிராமத்தில் தான் ஸ்ரீ ராமர் நவக்கிரக வழிபாடு செய்ததாக நம்பப்படுகின்றது. இதனருகே மகிஷாசுரனை வதம் செய்த தேவியின் கோயில் உள்ளது. இங்கு இந்து சமயத்தினர் முன்னோர்களுக்கு சடங்குகள் செய்யும் இடம் உள்ளது. இது நவபாஷாணம் என்றும் அழைக்கப்படுகின்றது.
காந்தமதனா பர்வதம்
இங்குள்ள இரட்டை மாடி மண்டபங்களில் ஒரு சக்கரத்தில் உள்ள பாத அடையாளம் ஸ்ரீராமனின் பாதமாகக் கருதப்படுகின்றது. காந்தமதனா பர்வதத்தை வழிபட பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வருவார்கள். மலைக்குச் செல்லும் வழியில் சுக்ரீவர் கோயில் தீர்த்தம் அமைந்துள்ளது. இது இராமேஸ்வரத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரினங்களின் சரணாலயம்
மன்னார் வளைகுடா பகுதியில் மட்டுமின்றி தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ட கடல் வாழ் உயிரினங்கள் சரணாலயம் உள்ளது. தேசிய பூங்கா அமைப்பின் ஐ.யூ.சி.என் குழுவும் WWF அமைப்பும் இணைந்தது ' தனிப்பட்ட கவனத்திற்குரிய' பகுதிகளாக பிரித்து அடையாளம் காட்டி பலவகை பயன்பாட்டுக்கு நிர்வாக சிறப்பு அந்தஸ்தை வழங்கியுள்ளன. இந்தியாவில், முதல் கடல் வாழ் உயிரினங்களின் சரணாலயம் என இந்த இடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய நிலப்பரப்பில் மிகச்சிறிய கடல் சார்ந்த உயிரியல் தொகுதியாக 3600 வகையான கடல்வாழ் தாவரங்களும் இந்த மன்னார் வளைகுடா பகுதியில் உள்ளன.
ஜடாயு தீர்த்தம்
பறவைகளின் அரசனான ஜடாயு இராவணனிடம் இருந்து சீதையை காப்பாற்ற சண்டையிட்டபோது அதன் இறகு ஒன்று இங்கு விழுந்ததாக சொல்லப்படுகிறது. இந்த கோயிலையும் குளத்தையும் நிறைய மணற்குன்றுகள் சூழ்ந்துள்ளன. இக்குளத்தின் தண்ணீர் இளநீரைப் போன்று மிகுந்த சுவையானதாக உள்ளது.
கோதண்டராமசாமி கோயில்
கோதண்டராம சுவாமி கோவில் ராமேஸ்வரத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
குருசடை தீவு
குருசடை தீவு பாம்பன் பாலத்தின் மேற்குக் கரைக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. இது கடல் வாழ் உயிரினங்களை நேசிப்பவர்களுக்கும். கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்களுக்கும் நோக்கமாக உள்ளது. இங்கு கடல் உயிரினங்கள் அதிகமாக காணப்படும் இடங்களில் ஒன்று. இது மண்டபம் பகுதியில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு செல்வதற்கு மீன்வளத்துறை எனக்கு உரிய அனுமதியை பெற்று இத்தீவை சென்று காணலாம். குருசடை தீவிற்கு அப்பால் பவளப்பாறைகள் மீன்வளமும் நிறைந்து காணப்படுகின்றது. இங்கே டால்பின்கள், கடல் பசு(டியூகஸ்)ஆகியவை அடிக்கடி காணப்படும்.
கஞ்சிரங்குளம் மற்றும் சித்திரங்குடி பறவைகள் சரணாலயம்
இங்கு வெளிநாடுகளிலிருந்து வரும் ஏராளமான பறவைகள். இத்தருணத்தில் வந்து கூடி குஞ்சுகள் பொரித்து குஞ்சுகளும் தடவைகளும் தங்கள் சொந்த கண்டங்களுக்கு பறக்கின்றன. இப்படி வரும் பறவைகளை பார்க்க உகந்த பருவம் நவம்பர் துவங்கி மார்ச் வரை.
மண்டபம் மற்றும் பாம்பன்
மண்டபம் ராமேஸ்வரத்திற்கு செல்ல நுழைவாயிலாக உள்ளது. 1914க்குமுன்பு ரயில் சேவை என்பது மண்டபம் வரையிலேயே இருந்தது. மண்டபத்திலிருந்து ராமேஸ்வரத்திற்கு படகில் செல்ல வேண்டும். பாலம் கட்டும் வரை இந் நிலையே தொடர்ந்தது. தற்பொழுது மண்டபத்திலிருந்து உரிய அனுமதி பெற்று குருசடை தீவிற்கு படகில் செல்லலாம். அங்கு சதுப்புநில மாங்குரோவ் காடுகளின் ஒரே கடல் பயண சவாரி செய்து வரலாம். இது ராமநாதபுரம் ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் ராமேஸ்வரத்திற்கு 19 கிலோமீட்டர் தொலைவிற்கு முன்பாக உள்ளது.
ஓரியூர்
ஓரியூர் உலகளவில் புத்த சமயத்தினர் போற்றும் புனித தலமாக திகழ்கின்றது. இங்கு அருளானந்தர் என அழைக்கப்பட்ட போர்த்துக்கீசியர் புனித ஜான் டி பிரிட்டோ உயிர்த் தியாகம் செய்த இடம். இந்த துறவியின் தலையை வெட்டும் தண்டனை கிபி 1693ல் வழங்கப்பட்டது. அப்போது பிறவி என்று அர்த்தம் தெறித்து விழுந்த இரத்தக் கறையால் அங்குள்ள மணல் குன்றுகள் சிவப்பாக மாறியதாக நம்பப்படுகிறது. அங்கு தண்டனை நிறைவேற்றுபவர்கள் அருளானந்தர் தன் தலையை மனமார கொடுக்கும் சிலையொன்று இங்குள்ள போர்ச்சுகீசிய கட்டடத்தின் முகப்பில் இருந்து காணப்படுகின்றது.
ராமநாதபுரம்
இராமநாதபுரம் ஒரு பழமையான நகரமாகும். இது சேதுபதி மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதி. ஓவியங்கள் நிறைந்த ராமலிங்கேஸ்வரர் அரண்மனையும், தாயுமானவர் சுவாமிகள் கல்லறையும் மற்றும் அருங்காட்சியகமும் இங்கு முக்கியமாக காணாவேண்டிய இடங்களாகும்.
இராமநாதசுவாமி கோவில்
இராமேஸ்வரத்தில் வழிபாடு செய்ய லிங்கம் ஒன்று வேண்டும் என்று அனுமானிடம் இராமர் கேட்டபொழுது அனுமன் அதை எடுத்து வர காலதாமதம் ஆனதால் உரிய நேரத்தில் வழிபாடு செய்ய அன்னை சீதையை லிங்கம் ஒன்றை உருவாக்கினார் அந்த லிங்கமே இப்போதைய இராமநாத சுவாமிகள் என்பது ஐதீகம். இதனால் வருத்தப்பட்ட அனுமனை இராமர் ஆறுதல் கூறி அனுமன் கொண்டுவந்த லிங்கத்தை ராமநாத சுவாமிக்கு அருகிலேயே நிறுவியதாக கூறப்படுகிறது. இதனால் இப்பொழுது அனுமார் கொண்டு வந்ததாகக் கூறப்படும் லிங்கத்திற்கு இங்கு அதிக சிறப்பு. இக்கோயிலிலுள்ள மூன்றாவது பிரகாரம் மிக நீளமானது. தொலைபேசி: 04573-221223.
திருவெற்றியூர்
திருவெற்றியூர் என்றதும் நம் அனைவரது நினைவுக்கும் வருவது பாதம் பிரியா கோவிலாகும். இந்த கோயிலுக்கு மிக அதிகமான பக்தர்கள் வருவார்கள். இது மிகச் சிறப்பு வாய்ந்த கோவிலாகும். இங்கு மிகப்பெரிய குளமும் உள்ளது. இது ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆர்எஸ் மங்கலம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.
கடல் மீன் காட்சி சாலை (சி வேர்ல்ட் அக்வாரியம்)
சி வேர்ல்ட் அக்வாரியம் இந்திய அளவில் மிகப்பெரிய அக்வாரியம் வெளியில் ஒன்று. இதில் ஏராளமான மீன் வகைகள் உள்ளன அவைகளாவன ஆக்டோபஸ், பாம்பு மீன், கிளி மீன், நெருப்பு மீன், வெண்ணெய் மீன், கோமாளி மீன், கார்ப்ஸ், பெருங்கடல் நண்டுகள், கடல் தாமரை, பீச் டாமெட், நட்சத்திர மீன்கள், கடல் குதிரைகள் மற்றும் சுறாமீன், இறால் வகைகள் என்று பலவகையான மீன்கள் இங்கு உள்ளது. இராமேஸ்வரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளது.
சாட்சி அனுமன் கோயில்
கார்த்தி அனுமன் கோயிலில்தான் அனுமான் கண்டேன் சீதையை என்று ராமனிடம் சொல்லி சொல்லின் செல்வன் ஹனுமான் நற்செய்தி கூறி கணையாழியைத் தந்து ராமர் மனதை குளிரச் செய்தார் என்று கூறப்படுகின்றது.
சேதுக்கரை
சேதுக்கரை புராண முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதி இங்குதான் இராமர் இலங்கைக்குச் செல்ல பாலம் கட்டியதாக நம்பப்படுகிறது. இங்கு இந்துக்கள் தங்கள் சமய சடங்குகளை நிறைவேற்றும் ஒரு முக்கியமான இடமாகும். இது ராமேஸ்வரத்தில் இருந்து 68 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
திருப்புலலாணி
திருப்புல்லாணியில் உள்ள விஷ்ணு கோவிலில் ஆதிஜெகநாத பெருமாள் குடிகொண்டுள்ளார். இது 'தர்ப சயனம்' என்றும் அழைக்கப்படுகின்றது. இது ராமேஸ்வரத்தில் இருந்து 64 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
உப்பூர்
ஸ்ரீ ராமர் இலங்கைக்குச் செல்லும்முன் வழங்கிய விநாயகர் கோவில் இங்குதான் உள்ளது. இது ராமேஸ்வரத்தில் இருந்து 85 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
உத்திரகோசமங்கை
உத்திரகோசமங்கையில் மிகவும் பழமை வாய்ந்த சிவன் கோவில் ஒன்று உள்ளது. இக் கோயிலில் உள்ள லிங்கம் மரகத கல் எடுக்கப்பட்டது. டிசம்பர் மாதத்தில் ஆருத்ரா திருவிழாவிற்கு பெரும் திரளான மக்கள் வருவார்கள். இது ராமேஸ்வரத்திலிருந்து 72 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
நம்புநாயகி அம்மன் கோவில்
நம்புநாயகி அம்மன் கோவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மிக பிரபலமான கோயில்களில் ஒன்று இராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ளது.
வாலிநோக்கம்
வாலிநோக்கம் கடற்கரை ஓரத்தில் உள்ள ஒரு அழகான கிராமம். இங்கு கடல் மிகவும் அமைதியாக உள்ளது.
வில்லூண்டி தீர்த்தம்
வில்லூண்டி தீர்த்தம் என்பது ஒரு முறை சீதைக்கு தாகம் ஏற்பட்ட போது, தன் வில்லைக் கொண்டு கடலிலிருந்துநீரை எடுத்து சீதையின் தாகத்தை தணித்ததால் வில்லூண்டி தீர்த்தம் என்று பெயர் பெற்றது. இராமேஸ்வரத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் பாம்பனுக்கு செல்லும் வழியில் உள்ளது. இன்றும் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் கடற்கரையின் அருகில் கிடைக்கும் குடி நீரைப் பருகவும் அவ்விடத்தை காணவும் வருகின்றனர். இவ்வூருக்கு இராமரின் கையில் உள்ள வில்லின் பெயரைக் கொண்டு இவ்வூருக்கு இப்பெயர் பெற்றது.