கன்னியாகுமரி மாவட்டம் : Kaniyakumair in Tamil

 கன்னியாகுமரி இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.  இங்கு அமைந்துள்ள குமரி அம்மன் கோவில் பிரசித்திப் பெற்ற கோயிலாகும்.  கன்னியாகுமரியிலும் அதை சுற்றியுள்ள பகுதியிலும் நாம் கண்டுகளிக்க வேண்டிய இடங்கள் ஏராளமாக உள்ளன.  பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த  கடற்கரைகள் அதிகமாக உள்ளன.

கன்னியாகுமரி சுற்றுலா இடங்கள் Kanyakumari Tourist Places in Tamil

 திருவள்ளுவர் சிலை

 திருவள்ளுவருக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் வான்புகழ் கொண்ட வள்ளுவருக்கு விண்ணைத் தொடும் அளவுக்கு சிலை அமைந்துள்ளது கண்கொள்ளாக் காட்சியாகும்.  133 அதிகாரங்களை உடைய திருக்குறளின் பெருமையை பறைசாற்றும் வகையில் 133 அடி உயரத்தில் எழுப்பப்பட்டுள்ளது.  பார்வை நேரம் காலை:  8 மணி முதல் மாலை 4 மணி வரை.

 விவேகானந்தர் பாறை

 இது கன்னியாகுமரியில் அதிகப்படியான சுற்றுலா  பயணிகளின் மனதை கொள்ளை கொள்ளும் இடம்.  இது நமது சுவாமி விவேகானந்தர் அவர்களின் தியானம் செய்யும் இடமாக இருந்தது இங்கு. தியானம் செய்வதற்காக இடங்கள் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளன. பார்வை நேரம்:  காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை.

 டெலஸ்கோப் டவர்

 கன்னியாகுமரி என்றாலே எல்லோரும் விரும்புவது சூரிய உதயம் மற்றும் சூரியன் மறைதல்  காட்சியே.  இதை இந்த டவர் மேலிருந்து பார்த்தால் கன்னியாகுமரியையும் அதை சுற்றியுள்ள  பகுதிகளையும் தெளிவாகப் பார்க்க இயலும்.  பார்வை நேரம்:  காலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை.

 காமராஜர் மண்டபம்

 கருப்பு காந்தி என்று அழைக்கப்பட்ட உண்ணா தமிழக முதலமைச்சர் கு. காமராசர் அவர்களின் பெருமையை பறைசாற்றும் வண்ணம் உருவாக்கப்பட்டதுதான் இந்த மணிமண்டபம்.  பார்வை நேரம்: காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை.

 மகாத்மா காந்தி நினைவு மண்டபம்

 நமது தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்கள்  இரு முறை கன்னியாகுமரிக்கு வருகை தந்துள்ளார்கள்.  நமது தேசத் தந்தையை போற்றும் வண்ணம் அவருக்கு 1956ஆம் ஆண்டு எழுப்பப்பட்டது.  இந்த நினைவு மண்டபம்.  அவரது பிறந்த நாளான அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி மட்டும் உள்ளனர்  இம்மண்டபத்தின் உள்பகுதியில் சூரிய ஒளி விழும் படி அற்புதமான கட்டிட அமைப்பை கொண்டது.  பார்வை நேரம்:  காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை.

 உதயகிரி கோட்டை

 இந்தியாவின் தற்கால தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளது.  இது நாகர்கோவிலில்  நகரிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.  தொடக்கத்தில் கி.பி.  1600களில் கட்டப்பட்டதாகக் கருதப்படும் பத்மநாபபுரத்தில் தலைநகரமாகக் கொண்டு திருவிதாங்கூர் அரசர்கள் ஆண்ட காலத்தில் இக்கோட்டை அவர்களுக்கு பெரிய சொத்தாக அமைந்திருந்தது.  இது பின்னர் பதினெட்டாம் நூற்றாண்டில் திருவாங்கூர் அரசர் மார்த்தாண்ட வர்மரால் மீண்டும் கட்டப்பட்டது.

 மாத்தூர் தொங்கும் பாலம்

 மாத்தூர் தொங்குபாலம் தரையிலிருந்து 115 அடி உயரத்தில் சும்மா ஒரு கிலோ மீட்டர் நீளத்தில் அமைந்துள்ளது.  இது திருவட்டாறு என்ற இடத்தில் மாத்தூர் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.  இதை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருடம் முழுதும் பார்த்து செல்கின்றனர்.

 சுசீந்திரம்

 இது கன்னியாகுமரியிலிருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் நாகர்கோவிலில் இருந்து 7 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள ஒரு புனிதத் தலமாகும்.  பார்வை நேரம் காலை 4 மணி முதல் 11:45,  மாலை 5 மணி முதல் 8 மணி வரை.

 பத்மநாதபுரம் அரண்மனை

 இது கன்னியாகுமரியிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.  இது சுமார் 187 ஏக்கர் பரப்பளவில் கிபி 1601 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 

 பேச்சிப்பாறை அணை

 இது நாகர்கோவிலில் இருந்து சுமார் 43 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.  இங்கு நிலவும் குளிர்ந்த தட்பவெப்ப நிலை சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்த இடமாகும்.

 வட்டக் கோட்டை

 தமிழகத்தில்,  ஏன் இந்திய திருநாட்டிற்கு தென்கோடி முனையான எழில்மிகு கன்னியாகுமரியை தலைநகரமாகக் கொண்ட மாவட்டத்தில் கன்னியாகுமரிக்கு மிக அருகில் அமைந்துள்ள கோட்டை வட்டக் கோட்டை.  திருவாங்கூர் அரசின் கரையோரங்களை கண்காணிக்கவும் கடல் வழியாக அந்நியர்களின் படையெடுப்பில் இருந்து நாட்டை பாதுகாக்கும் நோக்கத்துடனும் படை வீடுகள் உடன் இந்தக் கோட்டை பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.  எதிரிகளை வீழ்த்துவதற்காக 3.5 ஏக்கர் நிலத்தில் 25 மீட்டர் உயரத்தில் இக்கோட்டை கட்டப்பட்டுள்ளது.  இந்த கோட்டையானது கன்னியாகுமரியில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் நாகர்கோவில் மற்றும் திருவனந்தபுரம் ரோட்டில் கடலோரத்தில் கட்டப்பட்டுள்ளது. 

 சூரியன் உதிப்பதும்,  மறைவதுமான காட்சி, திருவள்ளுவர் சிலை,  கலங்கரை விளக்கம் என பல்வேறு எழிலான காட்சிகளை கொண்டு விளங்குவது இம் மா நகர்.  இது இந்தியாவின் மிகச்சிறந்த சுற்றுலா மையமாக விளங்குகிறது.  இங்கு வந்து போகும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை ஏராளம்.  அனைவரையும் கொள்ளை கொள்ளும் அழகு வாய்ந்த மாநகரம் இதுவாகும்.

 மருந்துவாழ் மலை

 கன்னியாகுமரியில் இருந்து வடக்கே ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் நாகர்கோவில் சாலையில் உயர்ந்து தோன்றும் மழையே மருந்து வாழ்மலை.  இது பலவகை மருந்து செடி கொடிகளை உடையதால் இப்பெயர் பெற்றது.   மலைச்சரிவுகள் செங்குத்தானவை.  இதில் ஏறுவதற்கு படிகள் இல்லை.