தர்மபுரி மாவட்டம் : Dharmapuri in Tamil
தர்மபுரி என்றாலே நம் நினைவுக்கு வருவது ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி ஆகும். இந்த நீர்வீழ்ச்சியைக் காண வருடம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவார்கள். தர்மபுரி கடந்த 1965 இல் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. தர்மபுரியின் பழைய பெயர் தகடூர். இது கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமானால் ஆளப்பட்ட பகுதியாகும். பிற்காலத்தில் தர்மபுரி பாண்டியர்கள், ஹொய்சாளர்கள், விஜயநகர பேரரசர்கள், பிஜப்பூர் சுல்தான், கோல்கொண்டா சுல்தான் மற்றும் நாயக்கர்கள் ஆகிய பல பேரரசர்களின் கிழ் தர்மபுரி இருந்துள்ளது.
தர்மபுரி சுற்றுலா இடங்கள் Dharmapuri Tourist Places in Tamil
அதியமான் கோட்டை
அவ்வையாருக்கு நெல்லிக்கனி தந்த அதியமானின் கோட்டை இருந்ததற்கான அடையாளமாக அதன் எச்சங்கள் மட்டுமே உள்ளன. இந்த கோட்டைக்கு அருகிலேயே கிருஷ்ணதேவராயரின் ஹொய்சாள அரசர்களும் இணைந்து கட்டிய சென்றாய பெருமாள் குயில் உள்ளது. இக்கோயிலின் கர்ப்பக் கிரகத்திற்கு செல்லும் மண்டபத்தின் உட்கூரைகளில் மகாபாரதம், விக்ன விஸ்வரூப தரிசனம் மற்றும் ராமாயணக் காட்சிகள் பலவும் சித்திரங்களாகத் தீட்டப்பட்டுள்ளன.
ஒகேனக்கல்
ஒகேனக்கல் காவேரி ஆற்றில் அமைந்துள்ள ஓர் அருவியாகும். இது பேரிரைச்சலுடன் 20 மீட்டர் உயரத்திலிருந்து இவ்வருவி கொட்டும் அழகு காண்போரை கவரும் விதத்தில் உள்ளது. சுற்றுலா பயணிகள் விடுமுறையை உல்லாசமாக கழிக்க தேர்ந்தெடுக்கும் முக்கிய இடங்களில் இதுவும் ஒன்று. இங்கு பரிசலில் பயணம் செய்வது அலாதி இன்பம் அளிப்பதாகும்.
சுப்ரமணியம் சிவா நினைவிடம்
சுதந்திர போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா அவர்களின் சமாதியில் எழுப்பப்பட்ட நினைவிடம். இது பென்னாகரம் வட்டம் பாப்பாப்பட்டியில் இந்த நினைவிடம் அமைந்துள்ளது.
அனுமந்த தீர்த்தம்
அனுமந்த தீர்த்தம் அரூர் வட்டத்திலுள்ள ட தீர்த்தமலை எனினும் புனித தளத்தோடு தொடர்புள்ளது. புராணக்கதைகளின்படி தீர்த்தமலை கடிதம் செய்த ராமபிரான் கங்கை நீர் வேண்டுமென அனுமானிடம் வேண்ட, அனுமான் அதை எடுத்து வர தாமதமானதால் ராமன் அஸ்திரத்தைப் பிரயோகித்து கங்கை நீரை வரவழைத்தார். அனுமனுக்கு தான் கொண்டுவந்த கங்கைநீர் பயன்படவில்லையே என்ற வருத்தத்தில் கொண்டுவந்த கங்கை நீரை விட்டெறிந்தார் அதில் சிதறிய துணிகளை அனுமந்த தீர்த்தமாக மாறியதாக நம்பப்படுகிறது. இது ஊத்தங்கரை இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் பெண்ணை ஆற்றங்கரையில் உள்ளது.
தீர்த்தமலை
தீர்த்தமலையில் ஸ்ரீ தீர்த்தகிரீஸ்வரர் ஆலயம் உள்ளது. இக்கோயிலில் மகாசிவராத்திரியின் போது இங்கு வழிபட ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். தீர்த்தமலை ஒரு சுற்றுலாத் தலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு சுற்றுலாத் துறையின் பயணிகள் தங்கும் விடுதி உள்ளது.