நாமக்கல் மாவட்டம் : Namakkal in Tamil Language

நாமக்கல் மாவட்டம் சென்னையிலிருந்து 370 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.  இது சேலம் மாவட்டத்திலிருந்து 1.1.1997 முதல் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. மக்கள்இதில் இரண்டு கோட்டங்கள் உள்ளன அவை நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு.  இதில் உள்ள நான்கு கோட்டங்கள் முறையே நாமக்கல், ராசிபுரம்,  திருச்செங்கோடு,  மற்றும் பரமத்தி வேலூர். நாமக்கல்லில் கோட்டைப் பகுதி மேற்கு பக்கம் இருக்கின்றது.  அதன் பகுதியில்  பேட்டை என்ற வியாபார பகுதியும்,  மத்திய பகுதியில்  நாமகிரி மலையும் உள்ளன. நாமக்கல் என்று பெயர் வரக் காரணம் இம்மலையை ஆகும்.  இங்குள்ள கோட்டை ஏறுவதற்கு படிகட்டுகள் குறுகலானவை. இங்குள்ள மலை வெள்ளை மற்றும் சிவப்பு சிவப்பு நிறத்தில் இருப்பதால் மகாவிஷ்ணுவின் குறியீடாக கருதப்படுகிறது.  நாமக்கல் மாவட்டத்தின் பரப்பளவு 3,429 சதுர கிலோமீட்டர்.

நாமக்கல் சுற்றுலா இடங்கள் Namakkal Tourist Places in Tamil

ஐயாறு

ஐயாறு என்பது ஐந்து ஆறுகள் கலப்பதால் இப்பெயர் பெற்றது.  இதில் கலக்கும் ஆறுகளின் பெயர்  அரோச்சி ஆறு, கானப்பாடி மூலை ஆறு, மாசி மலை அருவி,  46 நக்காட்டு ஆறு  மற்றும் தாழிகை ஆறு. சித்தன்  குட்டு  உச்சியிலிருந்து  இந்த ஐயாறு  புறப்படுகிறது.  இதன் உயரம் 4500  அடி.  அங்கு இதன் பெயர்  வெள்ளைப்பாழி ஆறு. கொல்லிமலையின் பல இடங்களில் இருந்து வரும் இந்த ஆறு அரப்பளீஸ்வரர் அருவி என்ற பெயரையும் பெறுகிறது. இது அரப்பளீஸ்வரர் கோயிலுக்கு அருகில் விழுந்து ஆகாச கங்கை எனப் பெயர் பெறுகிறது. இங்கிருந்து புளியஞ்சோலை வழியாக காவிரி ஆற்றில் கலக்கிறது.

ஆகாச கங்கை அருவி

ஆகாச கங்கை அருவி கொல்லிமலையில் உள்ளது.  இது கடல் மட்டத்திலிருந்து1190 மீட்டர் உயரத்தில் உள்ளது.  இது நாமக்கல்லில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.  கொல்லிமலை மூலிகைகளுக்கு பெயர் பெற்ற இடம்.  இங்கு ஆகாச கங்கை அருவி அறப்பளீஸ்வரர் கோயில் தாவரத் தோட்டம் என பார்ப்பதற்கு நிறைய இடங்கள் உள்ளன.  மே மாதம் வல்வில் ஓரி திருவிழா நடக்கும்.  வல்வில் ஓரி கடையேழு வள்ளல்களில் ஒருவர்.

ஆஞ்சநேயர் கோயில்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்.  இங்குள்ள ஆஞ்சநேயர் 200 அடி உயரத்திற்கு  பிரமாண்டமாக காட்சி அளிக்கிறார். இதற்கு அடுத்து ஒரு கோட்டையும் உள்ளது.  அங்கு இரண்டு குடைவரைக் கோயில்களும் உள்ளன. தொலைபேசி: 04286-233999.

அர்த்தநாரீஸ்வரர் கோயில்

அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் சிவன் அர்த்தநாரீஸ்வரராக எழுந்தருளியுள்ளார். இங்குள்ள மூலக் கடவுள் 5 அடி  முழு அளவு சிலையாக உள்ளது.  இது சித்தர்கள் மூலிகைகளால் வடித்ததாக கருதப்படுகின்றது.  இங்கு முருகனும் செங்கூட்டு வேலர் என்ற பெயரில் எழுந்தருளியுள்ளார்.  இங்கு விஷ்ணுவிற்கும்  சன்னதி உள்ளது.

கைலாசநாதர் கோயில்

கைலாசநாதர் கோயில் கீழ் கோயில் என்று அழைக்கப்படுகிறது.  அர்த்தநாரீஸ்வரர் கோவில் மேலே உள்ளதால் இக்கோவில் பெயர்பெற்றது. இக்கோயிலை பாண்டிய மன்னன் விக்கிரம பாண்டியன் கட்டியதாக கூறப்படுகின்றது.  ஆகையால் இக்கோயில் விக்கிரம பாண்டீஸ்வரர் என்றும் அழைக்கின்றார்கள்.

கொல்லிமலை

கொல்லிமலை கிழக்குத் தொடர்ச்சி மலையின் வெளி விளிம்பில் அமைந்துள்ளது. கொல்லிமலை 28 கிலோ மீட்டர் நீளம் வட மேற்காகவும் 19 கிலோமீட்டர் அகலம் கிழக்கு மேற்காகவும் நீண்டு இருக்கிறது.  இதன் மொத்தப் பரப்பளவு நான்கு சகோதரிகள்.

கவிஞர் ராமலிங்கம் பிள்ளை நினைவில்லம்

நாமக்கல் கவிஞர் என்று அழைக்கப்படும் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை 10. 10. 1888ல்  பிறந்தார். வயதிலேயே தேசப்பற்றுடன் இருந்த நாமக்கல் கவிஞர் சுதந்திர  போராட்டத்தில் ஈடுபட்டதுடன் காந்திய மற்றும் தேசிய கொள்கைகளை உயிரென மதித்தார். 1932ல் நடந்த உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கு பெற்றார்.  இவர் தமிழக அரசின் ஆஸ்தான கவிஞராகவும் இருந்தார். இவர் பத்மவிபூஷன் விருதும் பெற்றவர்.  இவருக்காக நினைவாலயம் 21.02.2000ல் திறக்கப்பட்டது.  

 நாமக்கல் துர்க்கம்  கோட்டை

இந்த கோட்டை நாமக்கல் வரலாற்றில் பின்னிப்பிணைந்துள்ளது.  இதை ஹைதர் அலியால் மீட்கப்பட்ட இக்கோட்டை.  சில மாதங்களில் ஆங்கிலேயர்கள் மீண்டும் இக் கோட்டையை கைப்பற்றினர்.