திண்டுக்கல் மாவட்டம் Dindigul in tamil
திண்டுக்கல் மாவட்டம் தமிழகத்தின் முக்கியமான மாவட்டங்களின் ஒன்று. இந்த மாவட்டத்தில்தான் மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானல். திண்டுக்கல் நகரம் வெங்காயம் மற்றும் நிலக்கடலை உற்பத்தியில் மொத்தச் விற்பனை சந்தையாகத் திகழ்கின்றது.
திண்டுக்கல் சுற்றுலா இடங்கள் Dindigul Tourist Places in Tamil
திண்டுக்கல் கோட்டை
திண்டுக்கல்லில் உள்ள மலையின் ஒரு பகுதியை பார்த்தார் தலையணை திண்டு போல தெரிவதால் இவ்வூருக்கு திண்டுக்கல் என பெயர் வந்ததாக கூறப்படுகின்றது. இம்மலையின் மீது 280 அடி உயரத்தில் அமைந்துள்ள கோட்டை. கிபி 1605 ஆம் ஆண்டு மதுரையை ஆண்ட முத்துக்கிருஷ்ணன் நாயக்கர்இந்த கோட்டையை தட்ட ஆரம்பித்தார். ஆனால் திருமலை நாயக்கர் கிபி 1623 ல் துவங்கி கிபி 1659 ல் கட்டி முடித்தார். ஹைதர் அலி அவர்கள் 1755 ல் தன் மனைவி பகரூன்னிசாவையும் அவரது ஐந்து வயது மகன் திப்பு சுல்தானையும் இங்குதான் ஆங்கிலேயர்களுக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்தார். கிபி 1784 முதல் கிபி 1790 வரை இது திப்பு சுல்தானின் அதிகாரத்தின் கீழ் இருந்தது. அப்போது சைய்யது இப்ராகிம் என்ற அதிகாரி இடம் கட்டளையிட்டு இக் கோட்டையில் பல அறைகள் கட்டப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. 1790ல் மாவீரன் திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்ட பின் இக்கோட்டை ஆங்கிலேயர் வசம் வந்தது.
பழனி
பழனி மலை முருகனின் மூலஸ்தான மூர்த்தி நவபாஷாணத்தால் வடிவமைக்கப்பட்டதாகும். ஆகையால் இச்சிலையில் அபிஷேகம் செய்யப்பட்ட நீரை அருந்தினால் தீராத நோயும் தீரும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று. இக்கோயிலுக்கு தென்னிந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வருடம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இந்த மலையின் மீது செல்ல மின்சார மூலம் இயங்கும் ரோப் கார் வசதி செய்யப்பட்டுள்ளது.
அபிராமி அம்மன் கோவில்
அபிராமி அம்மன் கோயிலில் கொண்டாடப்படும் நவராத்திரி கொலு இங்கு மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோயிலில் எழுந்தருளியுள்ள ஞானாம்பிகை அம்மனுக்கு லட்சார்ச்சனை செய்வார்கள். ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் அபிராமி அம்மன் பூப்பல்லக்கில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். இக்கோயில் திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. தொலைபேசி: 0451-2433229.
நடுப்பட்டி ஆஞ்சிநேயர் கோயில்
நடுப்பட்டி ஆஞ்சிநேயர் கோயில் ஆற்றங்கரையில் அமைந்திருப்பதால் பெரும்பாலும் நீரால் சூழப்பட்டிருக்கும். இந்தக் கோயில் திண்டுக்கல்லில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் நிலக்கோட்டை தாலுகாவில் அமைந்துள்ளது.
பெரியநாயகி அம்மன் கோயில்
பழனிமலை தண்டாயுதபாணி கோவில் துணை கோயில்களில் இது முக்கியமான கோயில் ஆகும். பெரியநாயகி அம்மன் கோவில் நாயக்கர் பாணியில் கட்டப்பட்ட கோயிலாகும். இக்கோயிலின் கருவறை உட்பட்ட அனைத்து பகுதிகளும் நாயக்கர் கட்டடக் கலைப்பாணியில் கட்டப்பட்டுள்ளது. சிற்பங்கள் அனைத்தும் கலைநயத்தோடு வடிவமைக்கப்பட்டுள்ளன. பிரதான மண்டபத்தின் உயரமான தூண்கள் எல்லாவற்றிலும் முருகப்பெருமானின் திரு உருவங்கள் அழகுறச் செதுக்கப்பட்டுள்ளன. திருவிழா காலங்களில் இக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
ஸ்ரீ கோட்டை மாரியம்மன் கோவில்
கோட்டை மாரியம்மன் கோவில் மாரியம்மன் காட்சியளிக்கிறார் அவருடன் அதைச்சுற்றி பல சிற்பங்களும் அழகாக தீட்டப்பட்ட மாரியம்மனின் அவதார திட்டங்களும் உள்ளனசதுர வடிவில் கட்டப்பட்ட இக்கோயிலின் தெற்கில் வெற்றி விநாயகர் கோயிலும் வடக்கில் முருகன் கோவிலும் கட்டப்பட்டுள்ளன. மண்டபத்தின் மையத்தில் சன்னதியை பார்ப்பதுபோல் சிங்கமுக சிற்பம் அமைந்துள்ளது. இக்கோயில் 200 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும். மாவீரன் திப்பு சுல்தானின் படைவீரர்கள் மலையடிவாரத்தில் இக்கோயிலின் சிலையை நிறுவியுள்ளார்கள்.
ஸ்ரீ காளகதீஸ்வரர் போயில்
காளஹஸ்தீஸ்வரரும் ஞானாம்பிகை அம்மனும் இக்கோயிலில் குடிகொண்டுள்ளனர். பிரம்மசாரத் திருவிழா சித்திரை மாதத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. மலையிலிருந்து பத்மகிரி நகர் அபிராமி தேவி அம்மனை இக்கோயிலுக்கு கொண்டுவருவது இத்திருவிழாவின் முக்கிய அம்சம். இக்கோயில் நாயக்கர் ஆட்சி காலத்தில் மதுரையை சுற்றி புதுப்பிக்கப்பட்ட பழமையான கோவில் கோபுரங்களில் இதுவும் ஒன்று. இக்கோயிலில் ஐந்து வேளை பூஜைகள் உண்டு.
தாடிக்கொம்பு பெருமாள் கோயில்
தாடிக்கொம்பு பெருமாள் கோயில் திண்டுக்கல்லில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சித்ரா பௌர்ணமி அன்று அழகர் பெருமாள் தரிசனம் தந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அழகர் பெருமாள் சித ்திரை மாதத்தில் 12 நாட்களுக்கு சிறப்பு பூஜை உண்டு.
செயிண்ட் ஜான் தேவாலயம்
செயிண்ட் ஜான் தேவாலயம் 125 ஆண்டுகளுக்கு முன்பு தாமஸ் பெர்னாண்டோ என்ற ஆங்கிலேயரால் கட்டப்பட்டது. ஜனவரி மாதம் கடைசி வெள்ளியன்று தொடங்கும் திருவிழா தொடர்ந்து 15 நாட்களுக்கு கொண்டாடப்படுகின்றது. 1886-ல் துவங்கிய இவளை பணி, 1872 ல் நிறைவு பெற்றது.
பேகம்பூர் பெரிய மசூதி
மலைக்கோட்டை அடிவாரத்தில் தெற்கு திசையில் அமைந்துள்ளது. இந்த வசதி. இந்த மசூதி ஹைதர் அலியின் இளைய சகோதரியும் மற்றும் கோட்டை தலைவர் மிர்சா அலிகானின் மனைவியுமான அமீர் உன்னிசா பேகம் இறந்தபின் பெரிய வசதி வளாகத்திற்குள்ளேயே புதைக்கப்பட்டார். கல்லறையும் எழுப்பப்பட்டுள்ளது. திண்டுக்கல்லின் ஒரு பகுதியான பெரம்பூர் ராஜ வம்ச பெண்ணின் நினைவைப் போற்றும் வகையில் இது அமைந்துள்ளது. ஹைதர் அலி திண்டுக்கலை ஆட்சி செய்த போது கட்டிய 3 மசூதிகளில் இதுவும் ஒன்று. இந்த மசூதியில் ஹைதர் அலி, படைவீரர்கள் மற்றும் மக்களும் வழிபட தனித்தனியே மூன்று மசூதிகளை கட்டினார்.