கரூர் மாவட்டம : Karur in Tamil Language
தமிழகத்தின் மிகப்பழமையான நகரங்களில் ஒன்று. சோழப்பேரரசின் வர்த்தக நகரமாக விளங்கிய கரூர் பிற்காலத்தில் நாயக்க மன்னர்களின் ஆட்சியின் கீழ் வந்தது, பிறகு ஆங்கிலேயர்கள் அந்த நகரை கைப்பற்றி ஆட்சி செய்தவர். இது தங்கை வேலைப்பாடுகளுக்கும், வைரம் பட்டைத் தீட்டுவதற்கும், அவற்றுக்கான வர்த்தக மையமாகவும் விளங்குகிறது. முற்காலத்தில் ரோமாபுரியில் இருந்தேன் கரூருக்கு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டது. பழங்காலக் கதைகள் மற்றும் புராணங்களில் கரூர் முக்கிய இடம் பிடித்தது. இந்து மத நம்பிக்கையின் படி கரூர் படைப்புக் கடவுளான பிரம்மா கரு கருரில்தான் தனது படைப்புத் தொழிலையே துவங்கினார். இவ்வளவு புகழ் பெற்ற ஒருவர் வடக்கே நாமக்கல் மாவட்டத்தையும், தெற்ககே திண்டுக்கல் மாவட்டத்தை, மேற்கே திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், கிழக்ககே ஈரோடு மாவட்டத்தில் எல்லையாகக் கொண்டுள்ளது.
கரூர் சுற்றுலா இடங்கள் Karur Tourist Places in Tamil
கல்யாண வெங்கடராமசாமி கோவில்
தாந்தோணி மலையில் உள்ள ஸ்ரீ கல்யாண வேங்கட ராமசாமி கோயில் கரூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்று. சிறு குன்றில் உள்ள திருக்கோயில் தென் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. இக்கோயில் கரூரில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
பசுபதீஸ்வரர் கோயில்
பசுபதீஸ்வரர் கோயிலில் சிவபெருமான் ஐந்தடி உயர லிங்க வடிவில் சுற்றுச் சிற்பங்களுடன், பிரம்மாண்டமாக எழுந்தருளியுள்ளார். இந்த லிங்கத்தின் மீது மடி சொரியும் பசுவும், ரெங்கமாதா சிற்பமும் வேறுபாடுகளில் தனிச்சிறப்பு கொண்டது.இது புண்ணியத் சிவத் தலங்கள் ஏழில் ஒன்று.
பேருந்து கட்டுமானத் தொழில்
கரூர் கட்டுமானத்திற்கு பெயர் பெற்றது. நகருக்கு உள்ளோம் நகரின் சுற்றுப்பகுதிகளிலும் பெரிய மற்றும் சிறிய பேருந்து கட்டுமானத் தொழிற்சாலைகள் பரவலாக உள்ளன. இங்கிருந்து பிற மாநிலங்களுக்கும் பேருந்துகள் கட்டுமானம் செய்து அனுப்பப்படுகின்றன.
தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித தொழிற்சாலை
டி.என்.பி.எல் என்று என்று அழைக்கப்படும் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித தொழிற்சாலை. 1980 களின் துவக்கத்தில் கரூருக்கு அருகேயுள்ள புகலூரில் துவங்கப்பட்டது. கரும்பு சக்கையிலிருந்து காகிதம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தில் இந்த ஆலை இயங்குகின்றது.
ஈஐடி பாரி
ஈஐடி பாரி சர்க்கரை உற்பத்தியில் இந்திய அளவில் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தில்1842 ஆம் ஆண்டில் துவக்கப்பட்டு இன்று மிகப்பெரிய சர்க்கரை ஆலையாக இயங்கி வருகின்றது. இது தரம் வாய்ந்த உற்பத்தி இயந்திரங்களைக் கொண்டு இயங்குகின்றது.
செட்டிநாடு சிமெண்ட் கார்ப்பரேஷன்
செட்டிநாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் கரூரில் உள்ள புரியூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்நிறுவனம் 1902 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, ஏப்ரல் மாதம்1968 ஆம் ஆண்டு சிமெண்ட் உற்பத்தியை துவங்கியது. இந்த நிறுவனம் உற்பத்தி மட்டுமல்லாமல் பின்னலாடை, உருக்குத் தொழிற்சாலை மற்றும் பல துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது.