திருநெல்வேலி மாவட்டம் : Tirunelveli in Tamil

திருநெல்வேலி மாவட்டம் சென்னையிலிருந்து 603 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.  இது பசுமையான நெல் வயல்கள் சூழ்ந்த அழகான மாவட்டம்.  இது தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்த நகரம் ஆகும்.  திருநெல்வேலி என்பது காரணப் பெயராகும்,  இந்நகரைச் சுற்றி நெல் வயல்கள் வேலியை போல் அமைந்திருப்பதால் இது திருநெல்வேலி என அழைக்கப்படுகின்றது.  திருநெல்வேலி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமாகும். இது முற்கால பாண்டியர்களின் தலை நகரமாகவும் சிறிது காலம் இருந்திருக்கின்றது. விஸ்வநாத நாயக்கர் இந்நகரை 1560ஆம் ஆண்டு  மறு நிர்மாணம் செய்தார்.  இதன் பரப்பளவு 6,810  சதுர கிலோமீட்டர்.

திருநெல்வேலி சுற்றுலா இடங்கள் Tirunelveli Tourist Places in Tamil

அம்பாசமுத்திரம்

அம்பாசமுத்திரம் ஒரு கோயில்கள் நிறைந்த ஊர் ஆகும்.  இங்குள்ள முக்கியமான கோயில்கள் அவனே  காசி விசுவநாதர் கோயில்,  திருமுநாந்தசாமி கோயில்,  வீரமா தாண்டேஸ்வரர் கோயில்,  அம்மையப்பர் கோயில்,  கிருஷ்ணர் கோயில்,  புருஷோத்தம பெருமாள் கோயில்,  லஷ்மி நாராயணன் பெருமாள் கோயில் என்று கோயில்கள் நிறைந்துள்ளன.

ஆத்தங்கரை பள்ளிவாசல்

ஆத்தங்கரை பள்ளிவாசலில் சையத் அலி பாத்திமா மற்றும் ஷேக் முகமது ஆகிய இருவருக்கும் சேர்ந்து இரண்டு கோபுரக் கூடுகள் உள்ளன.  இவர்கள் இருவரும் 'சுஃபி' ஞானிகள்.  இங்கு அனைத்து மதத்தினரும் சென்று தொழுவார்கள்.  இது திருநெல்வேலியிலிருந்து 46 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

அய்யனார் சுனை

 அய்யனார் சுனை,  இது நாட்டார் தெய்வமான அய்யனார் கோவில் கொண்டுள்ளார்.  இங்கு உள்ள சுனையில் வருடம் முழுவதும் நீர் வந்துகொண்டே இருக்கும். இதனருகே சந்தனக்காடு உள்ளது.  சுற்றுலா பயணிகள் சென்று காண பிறந்த இடம்.  இது திருச்செந்தூரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

 கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்  வலசை போகும் பறவைகளுக்கு பிடித்த இடமாக உள்ளது. இங்கு டிசம்பர் மாதக்கடைசியில் பறவைகள் வந்து முட்டையிட்டு குஞ்சு பொரித்து,  தன் குஞ்சுகளுடன் வடபகுதிக்கு பறந்து செல்லும் இங்கு ஜூன் ஜூலை மாதங்கள் வரை பறவைகள் வாழ்கின்றன.  தமிழகத்தின் தென் மாவட்டமான திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி வட்டத்தில் உள்ள இந்த கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் ஆண்டுதோறும் 43 இனத்தை சேர்ந்த பறவைகள் வந்து செல்கின்றன.  வருடம் தோறும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வந்து செல்கின்றன.  குறிப்பாக பட்டைத்தலை  வாழ்த்துக்கள்,  நெடுங்கால் உள்ளான் பறவைகள் திருநெல்வேலியில் இருந்து 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் கூந்தன்குளம்,   காடன்குளம் இயற்கையாக அமைந்துள்ள நீர்ப்பரப்பில் சுமார் 130 ஏக்கர் பரந்து   விரிந்துள்ளது.

குற்றாலம்

குற்றாலம் என்றாலே நம் நினைவிற்கு வருவது அங்குள்ள அருவிகள்.  இது மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது.  இதன் பருவ காலம் ஜூன்,  ஜூலை,  ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தின் ஆரம்ப நாட்கள் மட்டும். குற்றாலத்தின் முக்கிய அருவியாக பெரிய அருவி உள்ளது.  இந்த பெரிய அருவி தவிர  சிற்றருவி,  செண்பக தேவி அருவி,  தேனருவி,  ஐந்தருவி,  புலியருவி,  பழைய குற்றால அருவி,  பழத்தோட்ட அருவி,  புது அருவி என்று பல அருவிகள் உள்ளன.  இந்த அருவிகள் மலையின் மேல் உள்ள மூலிகைச் செடிகளின் மேல் ஓடி வருவதால் மருத்துவ குணம்  நிறைந்ததாக கருதப்படுகிறது. மலைமீது உள்ள அருவிகளை சென்று பார்ப்பதற்கு பேருந்து வசதிகள் மற்றும் தனியார் வாகன வசதிகள் நிறைந்துள்ளன.  இது திருநெல்வேலியிலிருந்து 59 கிலோ மீட்டர் அப்பால் உள்ளது.

 குற்றாலநாதர் கோவில்

குற்றாலநாதர் கோயில் பெரிய அருவியின் அருகில் அமைந்துள்ளது.  இந்த சிவன் கோவிலில் பாண்டியர் மற்றும் சோழர் கால கல்வெட்டுகள் பல உள்ளன.  குற்றால நாதரை சிறப்பித்து திரிகூட ராசப்ப கவிராயர் குற்றால குறவஞ்சி என்ற சிறந்த சிற்றிலக்கிய நூலை எழுதியுள்ளார்.

மாவட்ட அறிவியல் மையம்

மாவட்ட அறிவியல் மையம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.  இது மக்களிடம் அறிவியல் கருத்துகளை கொண்டு சென்று அவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்த இந்த மையம் இலட்சியம் கொண்டு செயல்படுகிறது. இது ஒரு சுயாட்சி பெற்ற அமைப்பு இந்திய அரசின் எச். ஆர்.டி (HRD) துறையுடன் இணைந்து தேசிய அறிவியல் கண்காட்சி சாலைகள் கழகத்தின் ஒரு அமைப்பு.  இது நாட்டிலுள்ள 124  மையங்களில் இதுவும் ஒன்று.  இந்த அறிவியல் மையத்தில் கடல் பற்றிய 3 நிரந்தர காட்சி சாலைகள்,  பிரபல அறிவியல்கள்  பற்றிய நிரந்தர காட்சி சாலை,  ஆறு ஏக்கரில் அறிவியல் பூங்கா.  இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து மக்களிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்டுகின்றன.  இந்த வசதிகள் மட்டுமின்றி மாவட்ட அறிவியல் மையமானது,  நகரும் அறிவியல்,  பொருட்காட்சி, கோளரங்கம்,  அறிவியல் திரைப்பட காட்சி,  தக்காளிக்கு அறிவியல் காட்சி,  அறிவியல் நாடகம் மற்றும் அறிவியல் பொருட்காட்சி என்று ஏராளமான நிகழ்ச்சி நிரல்கள் நடக்கின்றது.

களக்காடு வனவிலங்கு சரணாலயம்

களக்காடு வனவிலங்கு சரணாலயம் அடிப்படையில் ஒரு புலிகள் காப்பக திட்ட சரணாலயம்.  இங்கு சிங்கவால் குரங்குகள்,  நீளவால் குரங்குகள்ஏராளமாக உள்ளன.  இங்கு செல்ல காட்டு இலாகா அதிகாரிகளிடம் முறையாக முன் அனுமதி பெற்று வாகனத்தில் பயணம் செய்யலாம். இங்கு தங்க வேண்டுமெனில் செங்கால்தேரி வன ஓய்வெடுத்து கிடைக்கும்.  இங்கு செல்வதற்கான மாதங்கள் செப்டம்பர் முதல் மார்ச் வரை.  இது நெல்லையிலிருந்து 47 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

கழுகுமலை

கழுகுமலை சமண மதத்தின் மிக முக்கியமான மையங்களில்  ஒன்று. இங்குள்ள சிற்பங்கள் மிகவும் பழமையானது. இங்கு புகழ் பெற்ற பாறைக குடைவரைக் கோயிலான வெட்டுவான் கோயில் உள்ளது.  இந்தக் கோயிலில் சிவபெருமான் எழுந்தருளியுள்ளார்.

 கப்பல் மாதா சர்ச்

கப்பல் மாதா சர்ச்சில் புனித மாதா  மரியாளுக்கு சொந்தமான இந்த சர்ச் கோவா இறையியல் திருச்சபை பாஸ்டர்கள் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது.  இது கடந்த 1993  முதல் இந்த சர்ச் ஒரு பள்ளியாக மாற்றப்பட்டது.  முக்கிய நாட்களில் மட்டும் மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப திருவிழாக்களும், பிரார்த்தனைகளும்,  நடக்கும். இது நெல்லையிலிருந்து 72 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ளது.

கிருஷ்ணாபுரம்

கிருஷ்ணாபுரத்தில் மகாவிஷ்ணு கோயிலில் திருவேங்கடநாதராகக் கோயில் கொண்டுள்ளார். இக்கோயிலிலுள்ள ஆளுயர கற்சிலைகள் மிகவும் புகழ்பெற்றவை.  இவை மிகவும் கலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ளன.  இது திருநெல்வேலியிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மாஞ்சோலை

மாஞ்சோலையில் தேயிலைத் தோட்டங்கள் பல உள்ளன.  இவற்றில் பாம்பே பர்மா தேயிலை தோட்டம் மிகவும் பிரபலமானது.  இங்குள்ள தேயிலைத் தோட்டங்களில் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.  இது நெல்லையிலிருந்து 57 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

குறுக்குத்துறை முருகன் கோயில்

குறுக்குத்துறை முருகன் கோவில் திரு உருவ மாலை என்ற பாறையில் முருகன் எழுந்தருளி உள்ளார்.  இந்த படத்தில் இருந்து தான் 1653 ஆம் ஆண்டு திருச்செந்தூர் முருகன் வைக்கப்பட்டார்  என்று கருதப்படுகிறது.  இது தாமிரபரணி ஆற்றின் அருகே உள்ளது.

 நம்பி மலை

 நம்பி மலை ஒரு குன்றின் அடிவாரத்தில் அமைந்துள்ளது. இதில் எழுந்தருளியுள்ள நம்பி ஆண்டவர் மலை நம்பி என்று அழைக்கப்படுகிறார்.  இந்த குன்றின் உச்சியிலிருந்து சுற்றுலா கிராமத்தை காண்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.

நாங்குநேரி

 நாங்குநேரியில்  எழுந்தருளியுள்ள வானமாமலை ஆடவர் கோவில் இங்கு மிகவும் புகழ் பெற்ற கோவிலாகும்.  நாங்குநேரி 7 மணிக்கு அருகில் உள்ளது.  இங்கு இஸ்லாமியர்களும் கூடி வாழ்கிறார்கள்.  இது நிலையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.  இது மேற்குத் தொடர்ச்சி மலையின் ஓரத்தில் இருப்பதால் மிகவும் செழிப்பானதாக இருக்கிறது.

மணிமுத்தாறு அணை

மணிமுத்தாறு அணையில் படகு சவாரி செய்வது மிகவும் இன்பகரமானது.  அணைக்கட்டிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் மணிமுத்தாறு அருவி உள்ளது.  இங்கிருந்து மாஞ்சோலை  எஸ்டேட் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மணிமுத்தாறு அணை திருநெல்வேலியிலிருந்து 47 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு நீர்வீழ்ச்சி,  பூங்கா, நீச்சல் குளம், மிருகக்காட்சி சாலை,  மாஞ்சோலை,  தேயிலை தோட்டம் ஆகியவை உள்ளன.  

 முண்டந்துறை வனவிலங்கு சரணாலயம்

 முண்டந்துறை வனவிலங்கு சரணாலயம் ஒரு புகழ் பெற்ற சிவாலயமாகும் இங்கு புலி, சிங்கவால் குரங்கு,  கரடி,  கேளை  ஆடு,  ஓநாய் போன்ற மிருகங்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.  இங்கு செல்ல காட்டு இலாகா அதிகாரியிடம் அனுமதி பெற்று வாகனத்தில் பயணம் செய்யலாம்.  உணவு வசதியுடன் கூடிய தங்கும் விடுதி மனதில் உள்ளது.  இதன் மொத்த பரப்பளவு 567 சதுர மீட்டர்.  இது வறண்ட காடு மற்றும் பசுமை காடும் கலந்த இடமாகும்.  இது நிலையிலிருந்து 56 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

 அருங்காட்சி சாலை

அருங்காட்சி சாலை இங்கு எல்லா வகையான தொல்பொருட்களையும் பார்க்கலாம்.  இது நிலையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் திருநெல்வேலி-திருவனந்தபுரம்  தேசிய நெடுஞ்சாலை எண் 7-ல் உள்ள பாளையங்கோட்டையில் அமைந்துள்ளது.

பாபநாசம்

 பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு புனிதத் தலமாகும். இங்கு உள்ள நீர்வீழ்ச்சிக்கு அதையே தான் சிவனும் பார்வதியும் அகத்தியருக்கு நேரில் வந்து காட்சி தந்தார்கள்.  ஆகையால் அகத்தியருக்கு இங்கு கோயில் உள்ளது இங்குள்ள தாமிரபரணி ஆற்றில் குளித்தாள் அனைத்து பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். நமது பாவங்கள் அனைத்தும் நாசமாகும் என்பதனாலேயே இதற்கு பாபநாசம் என்று பெயர். இதனருகே பாபநாசம் அணைக்கட்டு உள்ளது. இது ஒரு அருமையான சுற்றுலா தளமாகும்.   இது நெல்லையிலிருந்து 42 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் பொதிகை மலைச்சாரலில் அமைந்த தலம்.  அம்பாசமுத்திரத்தில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  இங்குள்ள பாபநாச சுவாமி,  அகத்திய முனிவர் வழிபட்ட பெருமையைப் பெற்றது.  பாபநாசத்திற்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவில் பழைய பாபநாசம் உள்ளது.

பத்தமடை

 பத்தமடை என்றாலே நம் நினைவுக்கு வருவது பத்தமடையில் தயாரிக்கப்படும் பாய். பத்தமடை,  கோரை என்பது நீரோடை தரையில் வளரும் நீல புல் வகையைச் சார்ந்தது.  இதை பதப்படுத்தி பாயாக நெய்கிறார்கள்.  சாமி சிவானந்தா இந்த ஊரில்தான் பிறந்தார்.

சாலை குமரன் கோயில்

சாலை குமரன் கோயில் திருநெல்வேலியில் உள்ள ஒரு புகழ்பெற்ற கோவிலாகும். ஏ நல்ல முறையில் பராமரிக்கப்படும் கோயில் இருந்ததற்கான 1965 ஆம் ஆண்டு வெள்ளி விருதை இந்த கோவில் பெற்றது.  இங்குள்ள இந்துக்கள் இந்த கோயிலில் திருமணம் செய்து கொள்வது தொன்று தொட்டுவரும் வழக்கமாக உள்ளது.

கும்பருட்டி அருவி

கும்பருட்டி அருவி  மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு அருவி.  இந்த இந்த அருவியோடு நீந்தி விளையாடுவதற்கு வசதியாய் தடாகம் ஒன்று உள்ளது.  இது நெல்லையிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவிலும்,  குற்றாலத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும்.  அச்சன் கோவிலில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

 நெல்லையப்பர் காந்திமதி அம்மையார் கோயில்

நெல்லையப்பர் காந்திமதி அமைதியா தொழில் டெல்லியில் அமைந்துள்ள ஒரு முக்கியமான கோயிலாகும். இங்கு நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அமையும் குடி கொண்டு உள்ளனர்.  இங்கு அம்மைக்கும் அப்பனுக்கும்  தனித்தனியாக கோவில் உள்ளது.  ஆகையால் இது ஒரு இரட்டை கோயிலும் கூட.  இந்த கோயிலில் அரிய வேலைப்பாடுகள் கொண்ட ஆபரணங்கள்,  தங்க அல்லிக்குளம்,  இசைத் தூண்கள்,  ஆயிரம் கால் மண்டபம் என்று அனைத்தும் அனைவரது மனதையும் கொள்ளை கொள்ளும் அழகுடன் அமைந்துள்ளது.  தொலைபேசி 0462-2339910.

 பொட்டல் புதூர் தர்கா

பொட்டல் புதூர் தர்கா தமிழக அளவில் புகழ்பெற்ற தர்காக்களில் ஒன்று. இது ஒரு  பழமையான தர்கா. இது 1674-ல் கட்டப்பட்ட  தர்கா ஆகும்.  இது இஸ்லாமிய மதத்தவரும் வருத்தமாக இருந்தாலும் இந்துக்களும் கிறிஸ்தவரும் கூட இங்கு வருகின்றனர். இந்த தர்கா இந்திய கோயில் கட்டுமான பணியில் கட்டப்பட்டுள்ளது.  இங்கு நடக்கும் ' கந்தூரி' திருநாளுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.  இந்த தர்காவை ' லெப்பை' இஸ்லாமிய பிரிவை சேர்ந்தவர்கள் நிற்கின்றார்கள். இங்கு நடக்கும் சடங்குகளில் இந்து முறை நாயகி கொண்டவை புனித புளி,  சாம்பல்,  நெய்,  நொச்சி மலர்  ஆகியவை பக்தர்களுக்கு அழைக்கப்படுகின்றன.  தொலைபேசி 04634-240566.

 சங்கரன்கோவில்

 சங்கரன்கோவிலில்  எழுந்தருளியுள்ள சிவனும் விஷ்ணுவும் ஓருடலாக உயர்ந்துவிடும்.  ஆகையால் இத்திருவுருவுக்குதிருநாமம் சங்கரநாராயணர்.  சங்கரநாராயணரோடு  இவனும் பார்வதியின் தனித்தனியே கோயில் கொண்டுள்ளனர்.  இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை சங்கரநாராயணரின்  திருவடிகளை  சூரிய கடவுள் தன் கதிர்களால் சொல்லுவார்.  இந்தக் கோயில் திருநெல்வேலியிலிருந்து  50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

ஸ்ரீவைகுண்டம்

ஸ்ரீவைகுண்டத்தில் ஸ்ரீ வைகுண்டபதி பெருமாள் கோயில் கொண்டுள்ளார்.  இங்குள்ள மாபெரும் கோபுரமும் மிகவும் புகழ்பெற்றது.  திருவேங்கட முதலியார் அவர்கள் இங்கு ஒரு மண்டபத்தைக் கட்டி உள்ளார்.  இம்மண்டபத்தில் யாளிகள், யானைகள்,  வீரர்கள் என்று அற்புதமான பல சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.  வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் திறக்கப்படும் ஏகாதசி மண்டபத்திலும் சிற்ப தொகுப்புகள் உள்ளன.  இவ்வூரின் மற்றுமொரு சிறப்பாக கைலாசநாதர் கோயில் கொண்டுள்ளார்.  இங்கு வீரபாண்டிய கட்டபொம்மன் காலா கட்டத்தைச் சார்ந்த 6 கல்வெட்டுகள் இங்கு உள்ளன.

தென்காசி காசி விஸ்வநாதர் கோவில்

 தென்காசி விஸ்வநாதர் கோவிலில் காசி விசுவநாதர் எழுந்தருளியுள்ளார்.  வட நாட்டிற்கு ஒரு காசி இருப்பது போன்று தென்னாட்டுக்கு இது காசி.  தென்காசி கோவில் நீளம் 554 அடி அகலம் 318 அடி.  இக்கோயிலின் ராஜகோபுரத்தை பாண்டியராஜன் பராக்கிரம பாண்டியன் 1456 கட்டினார்.  1924இல் பேரிடி ஒன்றால் தாக்கப்பட்ட கோபுரம் தகர்ந்து விழுந்தது.  தற்பொழுது தினத்தந்தி உரிமையாளர்  திரு.  சிவந்தி ஆதித்தனார் அவர்கள் 168 அடி உயரத்தில் மீண்டும் கோபுரத்தை கட்டித் தந்தார்.  இந்த கோயிலில் கப்பலோட்டிய தமிழன் வா.உ.சி தலைமை உரை ஆற்றி 1927இல் துவங்கப்பட்ட திருவள்ளுவர் கழகம்.  இன்றும் தமிழ் வளர்ச்சிப் பணியை விடாது செய்து வருகிறது. இந்தக் கோவில் திருநெல்வேலியிலிருந்து 53 கிலோ மீட்டர் தொலைவில் தென்காசி பேருந்து நிலையத்திற்கு அருகே அமைந்துள்ளது.  தொலைபேசி 04633-222373.

திருவிடைமருதூர்

திருவிடைமருதூரில் அகல நாதர்,  நரம்பு நாதன் ஆகியோர் கோயில் கொண்டுள்ளனர்.  இந்தக் கோயில் தாமிரபரணி ஆற்றங்கரையில் கண்களைக் கவரும் எழிலுடன் அமைந்துள்ளது. இக்கோயிலிலுள்ள மிகவும் பழமையான சிற்பங்கள் நமது சிற்பக்கலையின் பெருமையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. இந்தக் கோயில் திருநெல்வேலியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

திருக்குறுங்குடி

திருக்குறுங்குடி மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்த ஒரு அழகான கிராமம்.  இது மேதை கீரிமலையில் நம்பியாற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் நாராயண கடவுள் இடைத்தங்கல் செய்தவராக புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

ட்ரினிடி கதீட்ரல்

ட்ரினிடி கதீட்ரல்  சர்ச் ஒரு அழகு கம்பீரமும் வாய்ந்த சர்ச்சை 1826-ல் ரவரண்ட் ரெகினியஸ் அவர்கள் தோற்றுவித்தார்.  திருநெல்வேலியின்  அடையாளங்களில் இதுவும் ஒன்று.  இது திருநெல்வேலியிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் முருகன் குறிச்சி என்ற இடத்தில் உள்ளது.

 வளநாடு

 இங்கு உள்ள இந்த குன்றில் ஏராளமான புள்ளி மான்கள் வாழ்கின்றன.  அதனால் இலாகா துறை இந்த இடத்தை மான்கள் சரணாலயமாக அறிவித்துள்ளது.  இங்குள்ள காவல்துறை துப்பாக்கிப் பயிற்சி மையம் இந்தியாவில் உள்ள சிறந்த நிலையங்களில் ஒன்று.  இது திருநெல்வேலியிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

 திருவள்ளுவர் இரட்டைப் பாலம்

திருவள்ளுவர் இரட்டைப் பாலம் நெல்லை சந்திப்பில் கட்டப்பட்டுள்ள இந்த இரண்டடுக்கு பாலம் ரயில் தண்டவாளத்தை குறுக்கே கிடப்பதை தவிர்ப்பதற்காக கட்டப்பட்டது.  இந்த பாலத்தின் நீளம் 800 மீட்டர். இந்தியாவில் கட்டப்பட்ட முதல் இரண்டடுக்கு பாலம் இதுவாகும்.  இந்த இரட்டைப் பாலத்தில் 25 குறுக்கு தூண்கள் உள்ளன. இவற்றில்13  குறுக்கு தூண்கள் வில் வளைவாக 30.30 மீட்டர் அகலத்தில் அமைந்துள்ளன என்றால் மீதி உள்ள 12 தூண்கள் 11.72  மீட்டர் அகலம் உள்ளன. 

வீரன் பூலித்தேவன் நினைவுகள்

வீரன் பூலித்தேவன்  ஆங்கிலேய அரசுக்கு எதிராக முதன்முதலாக போர் செய்தவன். ஆங்கில அரசு  இவரிடம் அதிக வரி கேட்டதா தன்மானம் பாதிக்கப்படுவதாக எண்ணிய இந்த மாவீரன் கிபி 1755-ல் ஆங்கிலத் தளபதி ஆரோனுக்குவரி தர மருத்து  சுதந்திரப் போராட்டத்தைத் தொடங்கினார்.  ஆங்கிலேயருடன் போரிட்டு அவர்களை புறமுதுகிட்டு ஓடச் செய்தான். இத்தகைய மாவீரனை சங்கரநாராயணர் கோவிலில் இறைவழிபாடு செய்து கொண்டிருக்கும் பொழுது ஆங்கில அரசு வஞ்சகமாக சதி செய்து பிடிக்க நினைத்தது.  ஆனால் புலித்தேவன்.  அங்கு உள்ள குகை ஒன்றில் சென்றவன் எதிரிகள் கையில் சிக்கவும் இல்லை திரும்பவும் இல்லை. இவருக்கான நினைவகம் சிவகிரி தாலுகாவில் உள்ள நெற்கட்டும் செவலில் உள்ளது.

பான தீர்த்தம்

 திருநெல்வேலியில் இருந்து 68 கிலோ மீட்டர் தூரத்தில் வாண தீர்த்தம் அமைந்துள்ளது.  இதனை தமிழக அரசு மாவட்ட சுற்றுலாத்  தலமாக அறிவித்துள்ளது.

 வானமாமலை மடாலயம்

 வானமாமலை மடத்தின் நிறுவியவர் முதல் ஆச்சாரியன் அழகிய வரதன் ஆவார்.  குமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக்கப்பட்டு.   இன்றும் உலகளாவிய  சீடர்களை கொண்டுள்ளது.