திருவண்ணாமலை மாவட்டம் : Tiruvannamalai in Tamil

திருவண்ணாமலை சென்னையிலிருந்து 187 கிலோமீட்டர் தொலைவிலும்  தெற்கே 85 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது ஒரு கோவில் நகரம் ஆகும்.  இங்கு சைவர்களின் முக்கிய கோவிலான அருணாச்சலேஸ்வரை கோவில் மற்றும் 100க்கும் மேற்பட்ட தலங்கள் உள்ளன.  இந்தியாவிலேயே மிகப்பெரிய கோபுரங்களில் ஒன்றாக பிரதான கோபுரம் 66 மீட்டர் உயரத்தில் பதிமூன்று அடுக்குகள் கொண்டது.  இங்கு ஆயிரம் கால்கள் மண்டபம் ஒன்று உள்ளது.  திருவண்ணாமலை கார்த்திகை தீபம் பெரும்புகழ் பெற்றது.  கார்த்திகை தீபத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வருவார்கள். பௌர்ணமி கிரிவலம் மிகவும் விமரிசையாக நடைபெறும்.  இதற்கு பல இடங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.

திருவண்ணாமலை  வேலூரில் இருந்து 29 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.   திருவண்ணாமலையின்  சிறப்புக்கு காரணம் புகழ்மிக்க சிவன் கோயிலாகும்.  இது அண்ணாமலையார் கோவில் எனப்படுகிறது.  தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகும்.  திருவண்ணாமலை என்ற மழையின் அடிவாரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

 திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் இறைவி பார்வதிதேவி,  திருவண்ணாமலையில் தவம் செய்து சிவபெருமானுடைய இடப்பாகத்தை பெற்றார்  என்பதும்,  சிவபெருமான் நெருப்பு மழையாய் தோன்றி தாமே பரம்பொருள் என்று மெய்ப்பித்த பதி திருவண்ணாமலை என்பதும் புராண செய்திகளாகும்.

 திருவண்ணாமலை கோவில் பழமை மிக்கது.  கிபி ஏழாம் நூற்றாண்டில் இக்கோயில் சிறிய அளவில் செங்கல் சுதை மடமாக இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

திருவண்ணாமலை வரலாறு Tiruvannamalai History in Tamil

 மன்னர்களின் திருப்பணிகள்

 அண்ணாமலையார்  கோவிலில் சோழ மன்னர்கள் இக்கோவிலின் கருங்கல் திருப்பணியை தொடங்கி வைத்தனர்.  இக்கோவிலில் உள்ள ஒன்பது கோபுரங்களில் கிளி  கோபுரமே மிகத்  தொன்மையானது.  இக்கோபுரம் கிபி 1063இல்  வீர ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது.

 கிபி 14ஆம்  நூற்றாண்டில் ஒய்சளர்களுடைய துணைத் தலைநகராக திருவண்ணாமலை விளங்கியது.  அண்ணாமலையார் கோவிலிலுள்ள  'வல்லாள  மகாராஜா கோபுரம்'  மூன்றாம் வல்லாள மகாராஜாவால் (1291-1342)  கட்டப்பட்டிருக்க வேண்டும் எனத்தெரிகிறது. இக்கோவிலின் நந்தி மண்டபம் வல்லாள மன்னரின் திருப்பணி என்பர்.

 ஒய்சள மன்னர்களுக்கு பிறகு  விஜயநகர பேரரசர்கள் காலத்தில் அண்ணாமலையார் கோவிலின் கட்டிடக்கலை உச்சம் பெற்றது.  கிருஷ்ணதேவராயர் (1509 - 1529)   தாம் பல போர்களில் பெற்ற வெற்றியின் நினைவாக அண்ணாமலையார் கோவிலின்  கிழக்கு கோபுரத்தை கிபி 1516இல் கட்ட  ஆரம்பித்தார்.  இக்கோபுரம் தஞ்சையில் நாயக்கர் ஆட்சியைத்  தோற்றுவித்த செவ்வப்பர்  என்பவரால் கட்டிமுடிக்கப்பட்டது.  இக்கோபுரம் இராய கோபுரம் எனப்படுகிறது.  அண்ணாமலையார் கோவிலில் உள்ள இராய கோபுரம் தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய கோபுரங்களில் ஒன்று.  இதன் உயரம் 66 மீட்டர்(217  அடி)  ஆகும்.

 சிவகங்கை குளமும் ஆயிரங்கால் மண்டபமும் கிருஷ்ணதேவராயர் காலத்தில் உருவானவையாகும்.  இதே நகர் கால கட்டிடக்கலைக்கு சிற்பக்கலைக்கும் ஒரு எடுத்துக்காட்டாக ஆயிரம் கால் மண்டபம்  விளங்குகிறது.

 இராய கோபுரத்தின் மேல் முகட்டில்  அழகிய ஓவியங்கள் உள்ளன.  இவற்றுள் ஒன்று "யானையை  வேட்டையாடி அடக்கி வருவதுபோல் உள்ள ஓவியம் ஆகும்".  இந்த ஓவியங்கள் விஜயநகர அரசு கால ஓவியக்கலை ஒரு சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்.

 நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் சீறிய திருப்பணிகளை மேற்கொண்டு  அண்ணாமலையார் கோவிலில்  குடமுழுக்கு விழாக்கள் நடத்தியுள்ளனர்.  இக்கோவிலின் சிறப்பு மிக்க குடமுழுக்கு விழா 1976ஆம் ஆண்டு (4-4-1976)  நடைபெற்றது.

 அண்ணாமலையார் கோவிலில் கருவறை தெய்வம் அருணாச்சலேஸ்வரர் என்ற சிவபெருமான் ஆவார்.  இறைவன் கருவறையில் லிங்க வடிவில் காட்சி தருகிறார்.  அம்மன் உண்ணாமலை எனப்படுகிறார்.  சென்ற நூற்றாண்டில்  நகரத்தார்களால்  புதுப்பிக்கப்பட்டது.  வெளியில் உள்ள மண்டபத்தில் அஷ்டலட்சுமிகள் உள்ள 'அஷ்டலட்சுமி மண்டபம்'  உள்ளது.  விநாயகர் சன்னதியும்  கம்பத்து இளையனார்(முருகன்)  சன்னதியும் இக்கோவிலில் உள்ள இதர முக்கிய சன்னதிகள் ஆகும்.

 பகவான் இரமண மகரிஷி ஞானம் பெற்ற இடம் இக்கோவிலில் இருக்கிறது. (மலையின் அடிவாரத்தில் இரமண மகரிஷியின் ஆசிரமம் உள்ளது).

 அருணகிரிநாதர் பிறந்து,  வளர்ந்து,  தவம் புரிந்த இடம் திருவண்ணாமலை என்று அறியப்படுகிறது.

 கிபி 13ஆம் நூற்றாண்டில் விக்கிரம பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் அண்ணாமலையார் கோவிலை சுற்றி வர (கிரி பிரகாரம்)  ஒரு வீதியை அமைத்தார்.  இது 'விக்கிரம பாண்டிய திரு வீதி' எனப்பட்டது.  1976ஆம்  வருடம்  கிரி வீதியில் மைல்கற்கள் 3(Mile stones)  கண்டுபிடிக்கப்பட்டன.   இக் கற்களில் பாண்டிய மன்னர் விக்கிரமனின் பெயரும் மீன் முத்திரையும் செதுக்கப்பட்டுள்ளன.

 ஒவ்வொரு வருடமும் நடைபெறும் கார்த்திகை தீபவிழா அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாவாகும்.

 வடஆற்காடு மாவட்டத்தில் போரூரில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் திருமலை உள்ளது.  இங்குள்ள குன்றின் மேல் சமண சமயத்தின் 22ஆவது தீர்த்தங்கரரான நேமி நாதரின் பெரிய திருவுருவம் வடிக்கப்பட்டுள்ளது.   இச்சிற்பத்தின் உயரம் சுமார் 5 மீட்டர். " தமிழ்நாட்டில் உள்ள சமண திருவுருவங்களில்  இவ்வுருவமே பெரியது என்று கருதப்படுகிறது."

 திண்டிவனத்திற்கு  மேற்கில் 18 கிலோமீட்டர் தொலைவில் மேல்சித்தாமூர் உள்ளது.  இங்கு ஒரு அழகிய சமணர் கோவில் உள்ளது.   இது சிங்கபுரி நாதர் கோவில் எனப்படுகிறது.  23வது தீர்த்தங்கரரான பார்சுவநாதரை  இக்கோயிலில் காணலாம்.    இக்கோயிலை அடுத்து சமண சமயத்தாரின் பெரிய மடம் ஒன்று உள்ளது.

 திருவண்ணாமலையிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாத்தனூர் அணை தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்றாகும். 

திருவண்ணாமலை சுற்றுலா இடங்கள் Tiruvannamalai Tourist Places in Tamil

அருணாச்சலேஸ்வரர் கோவில்

அருணாச்சலேஸ்வரர் கோவில் திருவண்ணாமலையின்  அடிவாரத்தில் அமைந்துள்ளது.  ஈசன் ஜோதிலிங்கமாக(அக்னி) எழுந்தருளியுள்ளார்.  இக்கோயிலின் கோபுரங்கள் கம்பீரமாகவும் உயரமாகவும் இருக்கின்றன.   தொலைபேசி: 04175-2224915.

 கிரிவலம்

இம்மலையில் சிவன் ஆகையால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பௌர்ணமி மற்றும் கார்த்திகை,  தமிழ் மாதங்களின் முதல் நாள்,  தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாள் ஆகிய சிவனுக்கு உகந்த நாட்களில்,  16 கிலோமீட்டர் தூரத்தையும் கால்நடையாக நடந்து வலம் வருவார்கள்.  இதற்கு கிரிவலம் என்று பெயர். கிரிவலம் வரும் பொழுது ' அண்ணாமலையாருக்கு அரோகரா'  என்று கோஷமிட்டபடி செல்வார்கள்.  இங்கு உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டு முழுவதும் வருவார்கள்.

சாத்தனூர் அணை

சாத்தனூர் அணை பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.  இந்த அணையை சுற்றி மலை மற்றும் அடர்ந்த காடுகள் பசுமையாக அமைந்துள்ளது.  இங்கு நீச்சல் குளம் மற்றும் முதலைப் பண்ணையும் இருக்கின்றது.  இது ஒரு சிறந்த சுற்றுலா தளம் இங்கு சிறுவர் ரயில்,  படகு சவாரி, தொங்கும் பாலம்,  வண்ணமீன் காட்சி ஆகிய பொழுதுபோக்கு காட்சிகளும் நிறைந்துள்ளது.

 ஸ்ரீ ரமண மகரிஷி ஆசிரமம்  

சென்ற நூற்றாண்டின் மிகச்சிறந்த ஆன்மீக பெரியவர்களில் ஒருவர்.  இவரது ஆசிரமத்துக்கு உலகமெங்கிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டு முழுவதும் வருகின்றனர்.  இங்குள்ள தியான மண்டபம்,  அமைதி,  எளிமை,  சுத்தம்குடி கொண்ட கோயில்.  தொலைபேசி: 04175-237491.

 ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம்

 ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் சென்ற நூற்றாண்டில் வாழ்க மகான்.  திருவண்ணாமலையில் உள்ள முக்கியமான இடங்களில் இந்த  மகானின் ஆசிரமமும்  ஒன்று.

யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம்

யோகி ராம்சுரத்குமார் விசிறி சாமியார் என்ன அனைவராலும் அன்பாக அழைக்கப்படுபவர்.  இவரது ஆசிரமம் அமையும் அழகு நிறைந்தது.  இவர் கடந்த 2000ம் ஆண்டில் முக்தி அடைந்தார்.  இவருக்கு உலகம் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான சீடர்கள் உண்டு.  தொலைபேசி எண்: 04175-235984.

 திருக்கோவிலூர்

 திருக்கோவிலூர் திருவண்ணாமலையிலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  இந்நகரைச்  சுற்றிய பண்டைய பெயர் மலைநாடு ஆகும்.  இந்நகரில் பழமை மிக்க வைணவ கோவில் ஒன்று உள்ளது.  இது  திரிவிக்கிரம பெருமாளுக்குரியது.  விஜய நகரத்திலிருந்து கலைஞர்கள் இங்கு வரை பழக்கப்பட்டு இக்கோவிலின் கட்டட சிற்ப  வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டனர் என்று கூறப்படுகிறது.  திருக்கோவிலூரில் கீழையூர் என்ற பகுதி உள்ளது.  இது  மலையமான்களின் தலைநகரமாக  கிபி 10,  11ஆம்  நூற்றாண்டுகளில்  விளங்கியது.  இங்கு வீரட்டானீஸ்வரர் கோவில் உள்ளது.

 திருக்கோவிலூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் தியாகதுர்கம் உள்ளது. இங்கு வரலாற்று சிறப்புமிக்க மலைக்கோட்டை ஒன்று உள்ளது.  கிபி 1759 இல்   இக்கோட்டையை பெற்ற பிரெஞ்சுக்காரர்கள் இதை பலப்படுத்தினார்.   பிரஞ்சுக்காரர்கள் வீழ்ச்சியை அடுத்து,  மைசூர் மன்னர் ஹைதர்  அலியின் பொறுப்பில் சிறிதுகாலம் இக்கோட்டை இருந்தது.  ஆங்கிலேயரால் இக்கோட்டை மீட்கப்பட்டது.  கிபி 1790 இல் திப்பு சுல்தான் படைகள்  தியாக தூக்கத்தைக் கைப்பற்ற முயன்ற பொழுது,  பிளின்ட் என்ற  ஆங்கிலத் தளபதி  இதைத் தடுத்தார்.
 தமிழ்நாட்டில் எஞ்சியுள்ள வரலாற்று சிறப்புமிக்க கோட்டைகளில் தியாகதுர்கம் கோட்டையும் ஒன்றாகும்.

பனைமலை 

 விழுப்புரத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் பனைமலை உள்ளது.  இங்கு தாளகிரீஸ்வரர் கோயில் உள்ளது.  'தாலகிரி' என்ற வடமொழிச் சொல் 'பனைமலை' என்ற பொருளைக் கொடுக்கிறது.   பனைமலைக் கோவில் ராஜசிம்மன் என்ற இரண்டாம் நரசிம்ம பல்லவன் காலத்தில் உருவாக்கப்பட்டதாகும்.  பல்லவர் காலத்துச்  சிறந்த ஓவியத்திற்கு எடுத்துக்காட்டாகப் பனைமலை ஓவியத்தை கூறுவர். 'பார்வதி தேவியின் உருவம்'   இங்குள்ள குறிப்பிடத்தக்க ஓவியம் ஆகும்.