புதுக்கோட்டை மாவட்டம் : Pudukkottai in Tamil

புதுக்கோட்டை மாவட்டம் சென்னையிலிருந்து 390 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.  இதன் தலைநகர் புதுக்கோட்டை.  இது ஒரு பழமையான நகரமாகும்.  இன்றும் பல இடங்களில் பழமையான மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களை இங்கு காணலாம். கற்காலத்தைச் சேர்ந்த ஏராளமான கல்மேடைகள்,  கல்வட்டங்கள்மற்றும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தின் தடையங்கள் இம்மாவட்டத்தின் தொன்மையை பறைசாற்றுகின்றன. இங்குள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்கள்  கொடும்பலூர்,  நார்த்தாமலை,  குடுமியான்மலை உன் குன்னாண்டவர் கோவில், சித்தன்னவாசல்,  திருமயம்,  ஆவுடையார் கோயில் போன்ற ஊர்களில் உள்ள பண்பாட்டு பிறப்புகள் தமிழர்களின் தொன்மை நாகரிகத்தை  உலகிற்கு எடுத்துக் காட்டுகின்றது. இதன் பரப்பளவு 4,651 சதுர கிலோமீட்டர்.

புதுக்கோட்டை சுற்றுலா இடங்கள் Pudukkottai Tourist Places in Tamil

அறந்தாங்கி

 அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டத்தின்  அடுத்த பெரிய நகரமாகும். அறந்தாங்கியில் உள்ள இடிந்த கோட்டை  அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் இடமாகும்.

ஆவுடையார் கோவில்

ஆவுடையார் கோயிலில் உள்ள ஆத்மநாதசுவாமி கோயிலின் ஆளுயர சிலை மிகவும் புகழ் பெற்றது.  அதுமட்டுமின்றி இக்கோயிலிலுள்ள மரவேலைப்பாடுகள் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்க்கும்படி அமைந்துள்ளது. இக்கோயிலிலுள்ள கருங்கல்லால் ஆன கூரை மற்றும் சிதம்பரம் நடராஜர் கோயிலைப் போலவே இக்கோயிலில் உள்ள சந்நிதிக் கூறையும்  தாமிர ஓடுகளால் செய்யப்பட்டது.  ஆவுடையார் கோவில் புதுக்கோட்டையில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

 ஆவூர்

ஊரிலுள்ள பழைய சர்ச்  கிபி 1547  ஆம் ஆண்டு ஃ பாதர் ஜான் வெனான்டியஸ் பச்சட் அவர்களால் கட்டப்பட்டது.  புதிய ரோமன் கத்தோலிக்க சர்ச் கிபி 1747-ல்  கட்டப்பட்டது.  தமிழறிஞர் வீரமாமுனிவர் ஜோசப்  டபெஸ்கி அவர்கள் இந்த இடத்தில் இறைப் பணி ஆற்றியுள்ளார்.  கோடைகாலத்தில் நடைபெறும் ஈஸ்டர் பண்டிகையும்,  தேரோட்டமும்  அனைத்து மத நம்பிக்கையாளர்களின் கவரக்கூடியது.

அரசு அருங்காட்சி சாலை

புதுக்கோட்டை மாவட்டம் ரயில் நிலையத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் இருக்கு வண்ணத்தில் உள்ளது  இந்த அரசு அருங்காட்சியகம் சாலை. இங்கு புள்ளியியல்,  விலங்கியல்,  மானுடவியல்,  கல்வெட்டியல்,  வரலாற்று ஆவணங்கள் மற்றும் பயன்கள் என்று ஏராளமான சேகரிப்புகள் உள்ளன.  வெவ்வேறு காலகட்டத்தை சேர்ந்த அற்புதமான சிலைகள்,  வெண்கலக் கலைப்பொருட்களும்,  காண்போரை வியக்கச் செய்யும்  நேரம்:  காலை 9  மணி முதல் மாலை 5  மணி வரை.  வெள்ளி விடுமுறை  தொலைபேசி: 04322-236247.

காட்டுபாவா பள்ளிவாசல்

காட்டுபாவா பள்ளிவாசல் திருமயம் மதுரை நெடுஞ்சாலையில் உள்ளது.  இந்த பள்ளிவாசல் இஸ்லாமியர்களின் புனித தலம் என்றாலும் இந்துக்களும் பள்ளிவாசலில் தொழுவார்கள்.  நபியுல் அகிர் மாதத்தில் இங்கு ' உர்ஸ்' திருவிழா சிறப்பாக நடக்கும்..  இது புதுக்கோட்டையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

 கொடும்பாலூர்

 கொடும்பாலூர் முன்பு இது  தோழர்களுடன் உறவுடைய இருக்கு  வேளிர்களுக்குரிய ஊராக இருந்தது.  இவ்வூர் முன்பு இருந்த மூன்று கோயில்களில் தற்பொழுது இரண்டு மட்டுமே மிஞ்சுகின்றன.  இக்கோயிலை விக்கிரம கேசரி அவர்கள் 10 ஆம் நூற்றாண்டு கட்டியுள்ளார்.  தென்னிந்தியக் கோயில் கட்டுமானக் கலையின் சிறப்புகளில் ஒன்றாக இக்கோயில் மும்மூர்த்தி,  அர்த்தநாரி,  கங்காதர மூர்த்தி ஆகியவை சிற்பக்கலையின்  உன்னதங்கலாகக் கருதப்படுகின்றன.  இதனருகே தோழர்கள் கால மூச்சு கொண்டேஸ்வரர் கோயிலும் உள்ளது.  இது புதுக்கோட்டையிலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவிலும் திருச்சியிலிருந்து 42 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

 குடுமியான் மலை

குடுமியான் மலையில் உள்ள சிவன் கோயிலில் அற்புதமான சிற்பங்கள் அரிதான கல்வெட்டுகளும் உள்ளன.  இவற்றில் ஒரு கல்வெட்டு மகேந்திரவர்ம பல்லவனின் இசை ஞானமும்,  பரிதவனிஎன்ற எட்டிழை  வாத்தியத்தில்  அவர் செய்த பரிசோதனைகளும் இடம்பெற்றுள்ளன.

 நார்த்தாமலை

நார்த்தாமலை ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதி.  இதுதான் பிற்காலச் சோழர்களின் முதல் அரசனான விஜயாலயன்  விஜயாலய சோழேஸ்வரன் கோயிலை காட்டினார். முன்பு இது முத்தரையர் படைத்தலைவர்களின் தலைமை அலுவலகமாக இருந்தது. இங்கு முத்தரையர்கள் பழங்கால வட்ட வடிவ கோயிலை கட்டினார்கள்.  நார்த்தாமலையில் உள்ள கோயில்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும்.  இது புதுக்கோட்டையிலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

சித்தன்னவாசல்

சித்தன்னவாசல் என்றாலே நம் அனைவரது நினைவுக்கும் வருவது சித்தன்னவாசலில் உள்ள குகை ஓவியங்களை. இந்த குகைக் கோயில் கிமு 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.  இங்குள்ள குகை ஓவியங்கள் அஜந்தா பாணியில் அமைந்துள்ளது.  ஓவியக் கலைஞர்கள் இன்றும் இதன் சிறப்பை கண்டு வியக்கும் அற்புத படைப்பாகும்.  இந்த ஓவியத்தில் ஒரு தாமரை குளத்தில் இரண்டு கந்தர்வர்கள் நடனமாட,  சிலர் தாமரை மலர் கொய்ய,  அவர்களோடு மீன்கள், விலங்குகள்,  அன்னப் பறவைகள் என்று பல வடிவங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.  இவை தவிர 9, 10ஆம்  நூற்றாண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டுகளும் உள்ளன. இவை மட்டுமல்லாமல் சித்தன்னவாசல் சுற்றுப்புறத்தில் ஆதிகால விடுகதைகள் உள்ளன.  அங்கு உள்ள கங்குப் பட்டறையில் புதைக்கப்படாத முதுமக்கள் தாழிகள் உள்ளன.

குமார மலை

குமார மலையில் முருகன் குடிகொண்டுள்ள.  இங்குள்ள திருக்குள நீர் புனித நீராகக் கருதப்படுகிறது.  இது புதுக்கோட்டையில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

திருமயம்

 திருமயம் என்றாலே  நம் நினைவுக்கு வருவது திருமயம் கோட்டை மற்றும்  குகை கோயில்.  இக்கோட்டை  தொண்டைமான் அரசர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் காலகட்டத்தில் முக்கியமான கோட்டையாக இருந்தது. ராமநாதபுரம் சேதுபதி விஜயரகுநாத தேவர் கிபி 1687  ஆம் ஆண்டு 40 ஏக்கர் பரப்பில் இந்த கோட்டையை கட்டினர்.  இந்தக் குன்றின் மேல் சிவன் கோயில் ஒன்று உள்ளது.  இக்கோயிலில் இசைக்குறிப்பு கல்வெட்டு ஒன்றும் உள்ளது.  ஒன்றுக குன்றுக்கு கீழ்ப்புறத்தில் சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள் உள்ளன.  இங்கு உள்ள விஷ்ணு கோவில் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஆனந்த சயண கோயில்களில் ஒன்று.  இயற்கையாக அமைந்த ஒரு குகையை விஷ்ணு கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. திருமயம் புதுக்கோட்டையில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

கோகர்ணேஸ்வரர் கோயில்

திருக்கோகர்ணத்தில் உள்ள கோகர்ணேஸ்வரர்  பிரகதாம்பாள்  குடைவரைக் குகைக் கோயில் மகேந்திர வர்ம பல்லவன் காலத்தை சேர்ந்தது.

வேடன் பட்டி

வேடன் பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நெய் நந்தி மிகவும் பிரசித்தி பெற்றது.  கருங்கல்லால் வடிக்கப்பட்ட இந்த நந்தியின் மேல் நெய் ஊற்றும் பொழுது பளிங்கு போல பளபளத்தது.  தினசரி நெய் ஊற்றுதல் நடந்தபோதிலும் ஈ,  எறும்புகள் அண்டுவதில்லை என்பது மிகவும் ஆச்சரியத்திற்குரிய விஷயமாகும்.  தினசரி ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகிறார்கள்.  வேடன் பட்டி புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி வழியில் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

விராலிமலை

விராலிமலை என்றாலே  நம் நினைவுக்கு வருவது விராலிமலை முருகன் கோவிலாகும்.  இக்கோயில் கிபி 15 ஆம் நூற்றாண்டுக்கு கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.  விராலிமலையில்  மயில் காப்பகம் உள்ளது.  வள்ளி தெய்வானை இருபக்கமும் அமர்ந்திருக்க,  முருகன் இங்கு மயில் மீது அமர்ந்த வண்ணம் அருள்பாலிக்கின்றார்.  இதைச் சுற்றிலும் மிகவும் பசுமையாக உள்ளது.  புதுக்கோட்டையில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோவில்

அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயிலில்  சுணையின் சுற்றுச்சுவரில் சூலம் ஒன்று வரையப்பட்டுள்ளது.  ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் குறிப்பிட்ட நாளில் தண்ணீர் மட்டம் இந்த சூலம் குறிப்பிட்ட இடத்திற்கு வரும்போது.  வழிபாட்டிற்கு ஒலிக்கப்படும் இசைக்கருவியை கேட்கலாம்.  அதாவது ஆதிசேஷன் பூமிக்குக் கீழ் அருள்மிகு நாகநாத சுவாமியை வணங்கும் வழிகாட்டி நிகழ்ச்சியில் ஒலி தான் இது என்று ஆலய வரலாறு தெரிவிக்கின்றது.  இதற்கு " சுணை முழக்கம்" என்பர். இக்கோயில் புதுக்கோட்டையில் இருந்து 13 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.