விருதுநகர் மாவட்டம் : Virudhunagar in Tamil

விருதுநகர் மாவட்டம் சென்னையிலிருந்து 512 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது மிகச்சிறந்த வியாபாரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது.  விருதுநகர் வியாபாரிகள் நுகர்பொருட்களின் விலையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வருகின்றனர். விருதுநகரிலிருந்து இலங்கை துபாய் போன்ற நாடுகளுக்கு சமையல் எண்ணெயும்அமெரிக்கா சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு பருத்தி மிளகாய் ஏலக்காய் மற்றும் நறுமணப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.  இதன் மொத்தப் பரப்பளவு 4288 சதுர கிலோமீட்டர்.  விருதுநகர் மாவட்டம் மதுரைக்கு அருகிலுள்ள மாவட்டமாகும்.  இது மதுரையிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

விருதுநகர் சுற்றுலா இடங்கள் Virudhunagar Tourist Places in Tamil

அருள்மிகு திருமேனி நாத சுவாமி கோயில்

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து பார்த்திபனூர் செல்லும் நெடுஞ்சாலையில் இக்கோயில் அமைந்துள்ளது.  தமிழகத்தில் பாண்டியர்கள் கட்டிய 14 கோயில்களில் பத்தாவதாக கட்டப்பட்ட கோயில் இது.  இக்கோயிலில் 8  வகை லிங்கங்களும் 9 தீர்த்தங்களும் உள்ளன.

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டை நெசவு தொழிலுக்கு புகழ்பெற்ற இடங்கள்.  இங்கு கைத்தறி மற்றும் விசைத்தறி மூலமாக துணிகள் நெய்யப்படுகின்றன. இங்கு பருத்தி மற்றும் பட்டு புடவைகள் கைத்தறி மூலமாக செய்யப்படுகின்றன.  துண்டுகள்,  லுங்கிகள்,  படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை உறைகள் விசைத்தறி மூலமாக நெய்யப்படுகின்றன. அருப்புக்கோட்டையில் நூலிழைகள் தயாரிக்கும் நூற்பாலைகளும்,  நூலிழைகளுக்குச் சயம் தோய்க்கும்  ஆலைகளும் தனித்தனியாக நிறுவப்பட்டு இயங்குகின்றன.

அய்யனார் அருவி 

அய்யனார் அருவி விருதுநகரில் புகழ்பெற்ற அய்யனார் கோவிலுக்கு அருகில் உள்ளது.  இது அடர்ந்த காட்டின் நடுவே இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் உள்ளது.  இந்த அருவி 15 அடி உயரத்தில் இருந்து விழும் சிறிய அருவியாகும்.  இந்த அருவி விருதுநகரிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

பூமிநாத சுவாமி கோயில்

 பூமிநாத சுவாமி கோயில்  குண்டாற்றின்  தென்கரையில் திருச்சுழியில் இக்கோவில் உள்ளது.  பாண்டிய நாட்டிலுள்ள புகழ் பெற்ற 14 தலங்களில்  இதுவும் ஒன்று.  இங்கு பூமிநாதரும் துணைமாலை அம்மனும்  கோயில் கொண்டுள்ளார்கள்.  புகழ்மிக்க சைவ அடியார்களான சுந்தரமூர்த்தி நாயனாரும் சேக்கிழாரும் பூமிநாத சுவாமி மீது பதிகங்கள் பாடியுள்ளனர்.  முத்துராமலிங்க சேதுபதி ஆட்சியில் பலமுறை  பல காலகட்டத்தில் இக்கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. பூமிநாத சுவாமி கோயில் மதுரையிலிருந்து தெற்கே 45 கிலோ மீட்டர் தொலைவிலும்.  விருதுநகரிலிருந்து கிழக்கே 40 கிலோ மீட்டர் தொலைவிலும் இக்கோயில் அமைந்துள்ளது.

குகன் பாறை

குகன் பாறை  இக்கிராமத்தின் மேற்கே உள்ள சிறிய மலைக்குன்று குகன் பாறை உள்ளதால்.  இந்த கிராமம் இவர் பாறை என்று அழைக்கப்படுகிறது.  இம் மலை அடிவாரத்தில் இயற்கையாக அமைந்த குகை சமணத்துறவிகளின் பள்ளியாக பயன்படுத்தப்பட்டது என்ன சொல்லப்படுகிறது. கிபி 10-ம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்று இம்மலைப் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது.  அதில் இந்த துறவி மடம் முந்நூற்றவர் பெரும்பள்ளி என்ற பெயரோடு  நிறுவப்பட்டதாகவும்  அதில் பயின்ற சீடர்கள் முந்நூற்றவர்  கோயில் பிள்ளைகள் என  அழைக்கப்பட்டதாகவும் பொறிக்கப்பட்டுள்ளது.

 இருக்கன்குடி

இருக்கன்குடியில் புகழ்பெற்ற மாரியம்மன் கோயில் உள்ளது. சாத்தூர் சாத்தூருக்கு கிழக்கில் அர்ஜுனா நதியும் வைப்பாறும் சங்கமிக்கும் இருக்கன்குடியில் உள்ளது.  இந்த ஆறுகள் முகத்திற்கு நெருக்கமாக மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.  இக்கோயிலில் 21 நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திரப் பெருவிழா வெகு விமரிசையானது.

காமராஜர் இல்லம்

கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த ஊர் விருதுநகர்.  இங்கு அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக மாற்றப்பட்டுள்ளது.  இவர் எளிய குடும்பத்தில் பிறந்து இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்று பல முறை சிறை சென்றவர்.  இவர் இந்திய அரசியல் களத்தில் உயர்ந்த இடத்தைப் பெற்றவர்.  இவர் தமிழக முதல்வராக இருந்த காலத்தில் செய்த பணிகள் எண்ணற்றவை.  பள்ளிக்கு வரும் பிள்ளைகளின் படிப்புக்கு பசி தடையாகி விடக்கூடாது என்பதற்காக முதன்முதலாக மதிய உணவு வழங்கிஅறிவு பசியுடன் வயிற்றுப் பசியையும் தீர்த்த மாமனிதர்.  அவர் பிறந்து வளர்ந்த இல்லத்தில் அவர் பயன்படுத்திய கைக்கடிகாரம்,  சில ஆடைகளும்,  சில பொருட்களும்  பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.  பெருந்தலைவரின் வாழ்க்கை வரலாற்றை அறியும் வண்ணம் வீட்டின் அறைகளில் நிழற்படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

பள்ளிமாடம்

தமிழகத்தில் உள்ள ஒரே கல்லறை கோயில் இது.  இவ்விடத்திற்கு வந்து சுந்தரபாண்டியன் இங்கு எதிர்பாராமல் மரணம் எய்தினார்.  இங்கே அவர் புதைக்கப்பட்டார். அப்படி புதைக்கப்பட்ட இடத்தில் அவரின் இளைய சகோதரர் வீரபாண்டியன் பள்ளிப்படை  என் என் திருக்கோயிலை கட்டி எழுப்பினார்.  இக்கோவில் ஆரம்பத்தில் பள்ளிப்படை சுந்தரபாண்டியன் ஈஸ்வரமுடையார் கோயில் என்று வளர்க்கப்பட்டது.  ஆனால் இன்று கலை நாதசுவாமி கோயில் என்று கலக்கப்படுகிறது.  நாளடைவில் பள்ளிப்படை என்ற பெயர் பள்ளி மாடம் என்று மருவியது. 

பிளவாக்கல் அணைக்கட்டு

பிளவாக்கல் அணைக்கட்டு பெரியார் அணைக்கட்டு எனவும் கோயிலார் அணைக்கட்டு எனவும் இரு பிரிவுகளைக் கொண்டுள்ளது.  இந்த அணைக்கட்டு சுற்றியுள்ள பகுதிகளில் அழகிய தோட்டங்கள் நிறைந்துள்ளன.  இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு படகு வசதி செய்யப்பட்டுள்ளது.  இது ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.

 குள்ளூர்சந்தை நீர் தேக்கம்

அர்ஜுனா நதியின் கிளை நதியான கௌசிகா மகாநதியில் குறுக்கே அமைந்துள்ள குல்லூர்சந்தை நீர்த்தேக்கம்.  ஒரு மிகச்சிறந்த சுற்றுலா தலமாக வளர்ந்து வருகிறது.  இந்த நீர்தேக்கத்தில் படகு வசதி செய்யப்பட்டுள்ளது.  ஆகஸ்ட் மாதத்திலிருந்து பிப்ரவரி மாதம் வரை பலவகையான நீர்ப்பறவைகள் இந்த நீர்த்தேக்கத்திற்கு வலசை வருகின்றன.

ராஜபாளையம்

ராஜபாளையம் என்பதற்கு அங்கு விஜயநகர அரசில் இருந்து வந்த ஒரு பிரிவு மக்கள் அப்பகுதியில் குடியேறியதால் அவர்கள் பெருமையை உணர்த்தும் படி ராஜபாளையம் என்றே  இவ்வூர் வழங்கப்பட்டது.  நூற்பாலைகள், விசைத்தறிகள்  ஆலைகள்,  மரைஆணி செய்யும் தொழிற்சாலை, அறுவை சிகிச்சைக்கு பயன்படும் பருத்தி,  பிளாஸ்டர் ஆப் பாரிஸ்,  கழிவு பருத்தி ஆலை,  மின்சாதன பொருட்கள்,  மிதிவண்டி உதிரி பாகங்கள்,  கரும்பு பிழியும் உருளைகள்,  மரம் அறுக்கும் பட்டறைகள்,  மின்மோட்டார் போன்ற தொழிற்சாலைகள் உள்ள தொழில் வளம் நிறைந்த தொழில்துறை நகரம் ஆகும்.

 சவேரியார் தேவாலயம்

புனித பிரான்சிஸ் நினைவாக,  பிரான்சிஸ் அசோசியேஷன்.  முன்வந்து கட்டிய ஆலயம் இது. இந்த ஆலயம் 3.3.2003லிருந்து  மக்களுக்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது.  ஒரு பக்கத்தில் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் இந்துக்களின் தெய்வமாகிய ஸ்ரீ கிருஷ்ணர் வருவது போலவும் இஸ்லாம் மதத்தை குறிக்கும் பிறை நிலவும் வடிவமைப்பின் பின்பக்கத்தில் கிறிஸ்துவத்தை உணர்த்தும் விதத்தில் உயரமான சிலுவையும் வடிவமைப்பில் தெரிகின்றன.  வெள்ளி சனி ஞாயிறு ஆகிய கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.

 பராசக்தி மாரியம்மன் கோயில்

பராசக்தி மாரியம்மன் கோவில் பழமையான கோயில்களில் ஒன்று இது 1923 கட்டப்பட்டது.  இங்கு நடைபெறும் பங்குனி உத்திர திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதற்கு அருகில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.  இது 21 நாட்கள் நடைபெறும்.

செண்பகத்தோப்பு காட்டு அணில் சரணாலயம்

செண்பகத்தோப்பு காட்டு அணில் சரணாலயம் 480 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது.  இது ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் அமைந்துள்ளது.  இங்கு புலி,  சிறுத்தை,  நீலகிரி நீண்ட வால் குரங்கு,  சிங்கவால் குரங்கு,  புள்ளிமான்,  காட்டுப்பன்றி,  குரைக்கும் மான், தேன்தின்னி கரடிகள், பறக்கும் அணில்கள்,  முள்ளம்பன்றி,  இரவு நேர பயணிகளான தேவாங்கு,  காட்டு பூனை போன்றவை இங்கு காணப்படுகின்றன. இங்கு பலவகையான பறவை இனங்கள் உள்ளன.  இந்த சரணாலயத்தை மார்ச் ஏப்ரல் மே மாதங்கள் தவிர பிற மாதங்களில் சுற்றுலா செல்ல ஏற்ற இடம்.

ரமண மகரிஷி ஆசிரமம்

ரமண மகரிஷி  அவர்கள் திருச்சுழியில் பிறந்தார்.  அவர்கள் திரு சுந்தரம் ஐயங்கார் திருமதி அழகம்மைக்கும் 30.12.1879-ல் பிறந்தார். திருச்சுழியில் அவர் வாழ்ந்த இல்லம் ' சுந்தர மந்திரம்'  என அழைக்கப்படுகிறது. திருச்சுழியல் உள்ள சேதுபதி ஆரம்ப பள்ளியில் அவர் பயின்றார்.  ஸ்ரீ ரமணரின் ஆன்மீக கருத்துக்கள் பரப்புவதற்காக இந்த ஆசிரமம் கடந்த 1978-ல்  குண்டாற்றங்கரையில் நிறுவப்பட்டது. 

சிவகாசி நகரம்

 சிவகாசி என்றால் நம் நினைவுக்கு வருவது சிவகாசி பட்டாசுகள்.  இது குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படுகிறது.  சிவகாசி தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்று.  இங்கு நவீன அச்சுத் தொழில் துறையில் கொடி கட்டி பறக்கும் ஊர் இது.  மும்பையை இத்துறையில் சிவகாசிக்கு அடுத்த இடத்தில் தான் உள்ளது.  பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலைகளிலும் சிவகாசியை முதலிடம் வகிக்கிறது.  பட்டாசுகள், வாணவெடிகள்,  பொறிவாணம், சக்கரவாணம், தீப்பெட்டிகள் ஆகியவை சிவகாசியிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் தயாரிக்கப்படுகின்றன.

 ஸ்ரீவில்லிபுத்தூர்

 ஸ்ரீவில்லிபுத்தூர் என்றவுடன் நம் அனைவரது நினைவுக்கும் வருவது ஸ்ரீ ஆண்டாள்.  பெரியாழ்வாரின் பெருமைமிகு மகள்.  வடக்கே ஒரு மீன் என்றால் தெற்கு ஆண்டாள். பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில்  ஒரேயொரு பெண் நால்வர் ஆண்டாள் மட்டுமே. மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளாம் என்று பெண்மையின் பெருமையை திருப்பாவை மூலம் உயர்த்திய ஆண்டாள். தழைத்தோங்கிய புகழ் பெற்றது கோயிலின் கம்பீரமான ராஜகோபுரம்.  இக்கோபுரம் 12 அடுக்குகளைக் கொண்டது 192 அடி உயரத்தில் எழுந்து நிற்கும் பிரமாண்டம்.  இது நமது தமிழக அரசின் இலச்சினையை ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் தான்.  இங்குள்ள ஒன்பது சக்கரங்களை கொண்ட மரத்தை பிரமாண்டமானது.

திருச்சுழி

திருச்சுழி ரமண மகரிஷி  பிறந்த ஊர்.  இங்குள்ள  திருமேனி நாதசுவாமி  மிகவும் புகழ்பெற்ற கடவுள் ஆவார்.  இக்கோயில் 43 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவு கொண்டது.  இங்கு உள்ள லிங்கத்தைச் சுற்றி பத்து தீர்த்தங்கள் உள்ளன.

 திருத்தங்கல் 

 திருத்தங்கல் ஒரு தொன்மையான நகரம் ஆகும்.  இங்கு கிமு 4,000 ஆண்டுகளுக்கு  முன்பே இங்கு மக்கள் வாழ்ந்துள்ளனர். முதற்சங்கம்,  இடைச்சங்கம், கடைச்சங்கம் எனப்படும் தமிழின் மூன்று சங்கங்களிலும் இடம்பெற்ற புலவர்களில் முடக்கூரனார், போர் கோலன், வெண்ணாகனார்  மற்றும்  ஆதிரேயன் செங்கண்ணனார் ஆகியோர் திருத்தங்கலில் வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது.

வேப்பங்கோட்டை

வேப்பங்கோட்டை நீர்த்தேக்கம் வைப்பாறு  ஆற்றின் 7  நீர்ப்பாசன பிரிவுகளிலிருந்து நீர் பெறுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரிலிருந்து கிழக்குப் பக்க சரிவின் நீரோட்டங்களில் இருந்து இதற்கான நீர் ஆகாரம் கிடைக்கிறது.  இதைச் சுற்றியுள்ள தோட்டங்கள் மற்றும் படகு சவாரி ஆகியவற்றால் இது ஒரு சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது.

அருள்மிகு நச்சாடை  தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயில்

இங்குள்ள சிவபெருமான் பாண்டிய மன்னன் வீரபாகுவுக்கு,  சோழ அரசினை வெற்றி கொள்ள அருள் புரிந்ததாக கருதப்படுகிறது.  இத்தளத்திற்கு அம்பிகாபுரம்,  மந்தாகினிபுரம் என்ற பெயர்களும் உண்டு. இது அது ராஜபாளையம் அருகே உள்ள தேவதானத்திற்கு  மேற்கே  இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.