விழுப்புரம் மாவட்டம் : Villupuram in Tamil
விழுப்புரம் மாவட்டம் சென்னையிலிருந்து 162 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது தென்னார்க்காடு மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு விழுப்புரம் மாவட்டம் உதயமானது. விழுப்புரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற கோயில்கள் பல உள்ளன அவையாவன முருகன் கோயில் உள்ள மயிலம், கூத்தாண்டவர் கோவில் உள்ள கூவாகம், அரங்கநாதர் பள்ளி கொண்டிருக்கும் சிங்காவரம் உலகளந்த பெருமாள் கோயில் திருக்கோவிலூர், தளவானூர்குடைவரைக் கோயில், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோவில் ஆகியவை குறிப்பிடத்தக்க கோயில்களாகும். இந்தியாவின் சரித்திர சிறப்பு வாய்ந்த செஞ்சிக்கோட்டை இங்குதான் உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 7217 சதுர கிலோமீட்டர்.
விழுப்புரம் சுற்றுலா இடங்கள் Villupuram Tourist Places in Tamil
கூவாகம்
கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவில் உலகப் புகழ் பெற்ற கோவிலாகும்.இந்தியா முழுவதும் உள்ள அரவாணிகளும் அவர்கள் குடும்பத்தினரும் வழிபடும் ஒரே கோயில் இது. மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் 15 நாள் சித்திரை திருவிழா மிகவும் புகழ் பெற்றதாகும்.மகாபாரத கதைபடி அர்ஜுனனுக்கும் நாக கன்னிகைகள் பிறந்தவன் அரவான். இவன் குருசேத்திரப் போரில் பாண்டவர் சார்பாக களப்பலியாக இந்த அரவான் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவனோ கள்ளமில்லா மணமாகாத ராஜகுமாரன். அக்குறையை போக்க அவனுக்கு திருமணம் செய்து வைத்தபின் களபலி கொடுத்து முடிவாகிறது. எந்த பெண் மரணம் அடையப் போகிறான் என்று தெரிந்தே ஒரு இளைஞரை திருமணம் செய்து கொள்வார்பங்கேற்ற. அதனால் கிருஷ்ணர் ஒரு பெண்ணாக வடிவெடுத்தது அரவானை திருமணம் செய்து கொள்கிறான். அடுத்த நாளே அவன் தளபதி ஆகிறான். இதனால் தேசமெங்கும் உள்ள அரவாணிகள் துவாக்குடி கூத்தாண்டவர் கோயில் அரவாணை எண்ணி தாலி கட்டிக்கொண்டு அடுத்த நாளே தாலியறுப்பு சடங்கையும் போர், வன்முறை, நம்பிக்கை துரோகம்ஆகியவற்றை பகடி செய்யும் மூன்றாம் பாலினத்தின் சமூக விமர்சனமாக இந்த திருவிழாவை பார்க்கிறார்கள் நவீன சமூகவியலாளர்கள்.
மேல்மலையனூர்
மேல்மலையனூர் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தியான இடம். மேல்மலையனூர் சுடுகாட்டில் வீற்றிருக்கும் அங்காளம்மன் இடம் தோஷம் பிடித்த சிவன் பிச்சைக்காரனாக பிச்சை பெற்று தோஷ நிவர்த்தி ஆனதாக கூறப்படுகின்றது. இதைக் குறிக்கும் மயானக்கொள்ளை திருவிழா மேல்மலையனூரின் முக்கிய திருவிழாவாகும். மாசி அமாவாசையில் நடத்தப்படும் இத்திருவிழா 10 நாட்கள் நடைபெறும். ரத உற்சவம், தெப்ப உற்சவம் போன்றவை இத்திருவிழாவின் முக்கிய அம்சங்களாகும். இது தவிர ஒவ்வொரு மாதமும் அமாவாசை இரவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசிக்கின்றனர். அமாவாசை இரவில் தயங்கினாள் வேண்டியது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேல்மலையனூர் மகா ஏரியிலிருந்து பிறக்கும் சங்கராபரணி ஆறு செஞ்சி வழியாகச் சென்று பாண்டிச்சேரி கடலில் கலக்கிறது. இங்கு ஏரிக்கரையில் உள்ள துர்க்கை அம்மனும், சர்க்கரை விநாயகர் திருக்கோவிலூர் இங்கு உள்ள பிற முக்கிய கோயில்களாகும். மேல்மலையனூர் விழுப்புரத்தில் இருந்து 46 கிலோமீட்டர் தொலைவிலும். செஞ்சியில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் தொலைவிலும், திருவண்ணாமலையிலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
திருநறுங்கொண்டை
திருநறுங்கொண்டையில் ஒரு சமண குகையும் பார்சவநாதர் மற்றும் சந்திர பிரபா ஆகிய இருவரும் வீற்றிருக்கும் சமண ஆலயங்களும் உள்ளன. இங்குள்ள குகை. கிபி 8-ம் நூற்றாண்டின் வீர ஷங்கத் துறவிகள் தங்கிய துறவி மடமாக இருந்தது. இக்கோயிலில் மிகப்பெரிய அளவில் வெண்கலச் சிலைகளின் தொகுப்பு காண முடிகிறது. இங்கு ஜனவரி-பிப்ரவரி நடைபெறும் ஆண்டுத் திருவிழாவிற்கு தமிழகம் முழுவதிலுமிருந்து சமணர்கள் திரண்டு வருகின்றனர். இது உளுந்தூர் பேட்டையில் இருந்து வடமேற்கில் 16 கிலோமீட்டர் தொலைவிலும் திருக்கோவிலூருக்கு கிழக்கே 26 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
திருக்கோவிலூர்
திருக்கோவிலூரில் உள்ள உலகளந்த பெருமாளை முதலாழ்வார் மூவரும் பெருமாளே பாடியுள்ளனர். இங்குப் பெருமாளுடன் புஷ்பவல்லித் தாயாரும் இங்கு கோயில் கொண்டு உள்ளார். திருக்கோவிலூரில் உள்ள கபிலர் குன்று ஒரு சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. குறிஞ்சிக் கபிலர் என்று வர்ணிக்கப்பட்ட சங்க இலக்கிய புலவர் இங்குதான் கடைசியாக வந்து தங்கினார். தற்பொழுது மாநில தொல்பொருள் ஆய்வுத்துறையின் பாதுகாப்பில் இக்கோயில் இயங்கி வருகிறது. இது கடலூர் சித்தூர் சிறைச்சாலையில் விழுப்புரத்தில் இருந்து 37 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
அவலூர்பேட்டை
அவலூர்பேட்டையில் சிறிய மலைக்குன்றில் முருகன் கோயில் கொண்டு உள்ளார். இங்கு பங்குனி உத்திர திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இது மேல்மலையனூரில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
எசலம்
ஸ்ரீ ராமநாதேஸ்வரர் கோயில் இங்கு உள்ளது. இந்த கோவிலை முதலாம் ராஜேந்திர சோழன் கிபி 1012ல் கட்டிய கோவில் ஆகும். இங்குள்ள சாசனத்தில் வடமொழி கிரந்த எழுத்துக்களில் சாசனம் பதியப்பட்டு சோழ அரச இலச்சினை பதியப்பட்டுள்ளது.
எண்ணாயிரம்
இங்கு எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட சமணத் துறவிகள் வாழ்ந்துள்ளனர். இதனால் இவ்வூருக்கு எண்ணாயிரம் என பெயர் வழங்கப்பட்டுள்ளது. இங்கு மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட நரசிம்ம சுவாமி கோயில் ஒன்று உள்ளது.
கமலக்கண்ணி அம்மன் கோவில்
கமலக்கண்ணி அம்மன் கோயில்ஒரு நாட்டார் கோவிலாகும். இங்கு பலிபீடம் மற்றும் நாயக்கர் கால சுவர் ஓவியங்களும் உள்ளன. செஞ்சி ராஜகிரி மலைக்கோட்டை வழியில் இந்தக் கோயில் உள்ளது.
மயிலம்
மயிலம் சுப்பிரமணியசுவாமி கோயில் முருகனின் புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று இது ஒரு சிறிய மலைக்குன்றில் அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் பங்குனி உத்திர திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி சிரத்தையோடு தமிழகம் முழுவதிலுமிருந்து வருவார்கள். இது விழுப்புரத்திலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் பாண்டிச்சேரி செல்லும் வழியில் திண்டிவனம் சாலையில் உள்ளது.
மண்டகப்பட்டு
மண்டகப்பட்டு மகேந்திரவர்ம பல்லவன் உருவாக்கிய புகழ்பெற்ற குடைவரைக் கோயில் எங்கு உள்ளது. இது தொல்பொருள் துறையினரின் பாதுகாப்பில் இயங்கி வருகிறது. மண்டகப்பட்டு விழுப்புரத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் நெஞ்சிலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
மேல் நாரியப்பனூர் தேவாலயம்
மேல் நாரியப்பனூர் தேவாலயம் மிகப்பழமையான தேவாலயங்களில் ஒன்று. இதை புனித அந்தோனியாரின்அடியாரான குஞ்சான் என்பவர் கட்டியுள்ளார். இது சின்ன சேலத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் சென்னை சேலம் நெடுஞ்சாலையில் இந்ததேவாலயம் உள்ளது.
மேல்சித்தாமூர்
மேல்சித்தாமூர் தமிழ் நாட்டில் வாழ்ந்த நீதான் திகாம்பர சாமிகளின் தலைமையகமாக இது திகழ்ந்தது. ஜையின காஞ்சிஎன்பவர் தலைமை குருவாக திகழ்ந்தார். இங்கு இரண்டு பெரிய சமணக் கோயில்கள் உள்ளன. ஒரு கோயிலில் பார்சவநாதரும் இன்னொரு கோயிலில் மயிலானந்தரும் உள்ளனர். மயிலானந்தர் ஆலயத்தில் உள்ள ஒரு பெரிய கற்பாறையில் பஹுபாலி, பர்சவானந்தர், ஆதிநாதர், மஹவீரர், மற்றும் அம்பிகா யக்ஷீ ஆகிய சிற்பங்கள் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன. இக்கோயில், கிபி16 ஆம் நூற்றாண்டில், மறுகட்டமைப்பு செய்யப்பட்டதுடன் இந்த நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
பச்சையம்மன் கோயில்
சித்தர்கள் வழிபட்ட கோயில் இது. இக்கோயிலின் பின்புறம் உள்ள பச்சை மலை ஏழு ஜடாமுனிகளின் உருவங்களைப் போல காட்சியளிக்கிறது. கொல்லிமலையில் கூட கிடைக்காத மூலிகைகள் இம் மலையில் கிடைக்கின்றன. இம்மலையின் உச்சியில் புராதனக் கோயில் ஒன்று உள்ளது இக்கோயில் விக்ரகங்கள் எதுவும் இல்லாத விசித்திரமான கோயிலாக உள்ளது.
திருவெண்ணெ நல்லூர்
திருவெண்ணெய்நல்லூர் கம்பரை ஆதரித்த சடையப்ப வள்ளல் பிறந்த ஊர். பழமை வாய்ந்த சிவன் கோயில் ஒன்று உள்ளது. இது விழுப்புரத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் திருக்கோவிலூர் சாலையில் அமைந்துள்ளது.
மரக்காணம் கடற்கரை
மரக்காணம் கடற்கரையில் உப்பு வகைகள் உள்ளன. இங்குள்ள கடற்கரையும் மீனவர் குடியிருப்பும் பார்ப்பதற்கு அழகான காட்சியாகும். இது புதுவையிலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில், வானூர் தாலுகா வில், கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ளது.
ராஜா தேசிங்கு
ராஜா தேசிங்கு டெல்லி பாதுஷாவுக்கு திறை செலுத்த மறுத்து போரை எதிர்கொண்ட மாவீரன். இந்த புகழ்பெற்ற இளம் அரசன் ஆண்ட செஞ்சிக்கோட்டை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது.
சிங்கவரம்
சிங்கவரம் குன்றில் ரங்கநாதர் குடிகொண்டுள்ளார்.இக்கோயிலை மாவீரன் ராஜாதேசிங்கு வழிபட்டதாக கூறப்படுகிறது. இந்த குடைவரைக் கோயில் தென்னிந்தியக் கோயில் கட்டடக் கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது. ரங்கநாத பெருமாள் 24 அடி நீளத்திற்கு பள்ளி கொண்டுள்ளார். அவரும், அவர் பள்ளியறையும் ஒரே கல்லில் வடிக்கப்பட்டவை. ஸ்ரீரங்கம் ரங்கநாதரை விட இந்த ரங்கநாதர் நீளமானவர் என கருதப்படுகிறது. இது மகேந்திர பல்லவன் கட்டிய கோயில் ஆகும்.
தளவனூர் சத்ரு மல்லேஸ்வராலயம்
மல்லேஸ்வராலயம் கோயிலைக் கட்டியவர் மகேந்திர பல்லவன். இங்கு மகேந்திரவர்ம பல்லவன் காலத்திய கல்வெட்டுகளும் சிற்பங்களும் காணப்படுகின்றன.
தீர்த்தங்கரர்கள் இருபத்தி நால்வர்
செஞ்சியில் உள்ள மலைக்குன்றில் இரண்டு சமணக் குகைகள் மற்றும் பெரிய கற்பாலத்தில் ஒருசேர செதுக்கப்பட்டுள்ள 24 தீர்த்தங்கரர்களையும் இங்கு மட்டுமே காண முடியும் இதனருகே கிடைக்கும் பார்வையில்தான் சமணத் துறவி சந்திராநந்தியார் 57 நாட்கள் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது செஞ்சியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் ஒரு பார்வை குன்றில் உள்ளது.
திருவாமாத்தூர்
திருவாமாத்தூரில் உள்ள அபிராமேஸ்வரர் முத்தாம்பிகை அம்மன் வீற்றிருக்கும் ஒரு பழமையான கோயில். இது கிபி 1500 ஆண்டுகால பழமையானது. இது ராஜராஜசோழன் காலத்தில் கட்டப்பட்டது. பின்பு ஸ்ரீ சிரங்கதேவ மகாராயர்ஆகிய பலரும் இக்கோயில் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருவக்கரை
திருவக்கரையில் உள்ள சிவன் கோவில் மிகவும் புகழ் பெற்றதாகும். இது சோழர் காலத்தில் கட்டப்பட்டது. இக்கிராமத்தில் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் நிறைய கல்மரங்கள் காணப்படுகின்றன.
தும்பூர்
தும்பூரில் உள்ள அம்மன் கோயில் மிகப்பழமையான கோயிலாகும். இது 1450 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.