சிவகங்கை மாவட்டம் : Sivagangai in Tamil

சிவகங்கை மாவட்டம் சென்னையில் இருந்து 448 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த மாவட்டம் ஒரு காலத்தில் ராமநாதபுர  அரசின் உட்பிரிவுகளாக இருந்தன. ராமநாதபுரத்தின்  ஏழாம் அரசனாகிய கிழவன் சேதுபதி என அழைக்கப்பட்ட ரகுநாத சேதுபதி கிபி 1674 க்கும் 1710 க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆண்டுவந்தார்.  அப்போதுதான் கிழவன் சேதுபதி சிவகங்கை அருகில் சோழ புரத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நலுக்கோட்டைக்கு வந்தார். இங்குள்ள பெரிய உடையத்தேவரை சந்திக்கவே சேதுபதி சிவகங்கை மாவட்டத்திற்கு வந்ததாக வரலாறு கூறுகிறது.  பிள்ளையார்பட்டி கோயில்,  காரைக்குடி செட்டியார் வீடுகள்,  காரைக்குடி கோயிலும்,  மருதுபாண்டியர் நினைவாலயம் மிகவும் புகழ் பெற்றதாகும்.  இது சிவகங்கை சீமை என சிறப்புடன் அழைக்கப்படுகின்றது.

சிவகங்கை சுற்றுலா இடங்கள் Sivagangai Tourist Places in Tamil

இடைக்காட்டூர் தேவாலயம்

தூய இருதயர்  வீற்றிருக்கும் ஆலயம் இது.  இது பிரான்சில் உள்ள ரீம்ஸ் கதீட்ரல்  மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தேவாலயம் முழுவதும் கோதிக்கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டதாகும்.  இங்குள்ள அனைத்து சிலைகளையும் பிரான்ஸ் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்டது.  இந்த தேவாலயம் கட்டப்படும்போது நூற்றுக்கும் மேற்பட்ட தேவதைகள் தோன்றி ஒரு பெரிய பிரச்சினையை தீர்த்து வைத்தனராம்.  மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் சாலையில் 36 கிலோ மீட்டர் தொலைவில் இந்த தேவாலயம் உள்ளது. 

காளீஸ்வரர் கோயில் (காளையார் கோவில்)

சிவகங்கை மாவட்டத்திலுள்ள முக்கியமான கோயில்களில் ஒன்று.  இக்கோயில் உள்ள இடத்தை காளையார்கோவில் என்று அழைக்கின்றார்கள். இது தேவகோட்டையில் இருந்து மானாமதுரை செல்லும் வழியில் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.  மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட இந்த கோவில் இது. இந்த கோயிலுக்கு 18 அடி உயரம் கொண்ட இது பெரிய மதில் சுவர் உள்ளது.  இக்கோயிலுக்கு பெரியதும் சிறியதுமாக இரண்டு ராஜகோபுரங்கள் உள்ளன.  இதன் அருகில் மிகப்பெரிய குளம் ஒன்று உள்ளது.

 கண்ணதாசன் நினைவாலயம்

கண்ணதாசன் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது அவர் ஏற்றிய காலத்தால் அழியாத மிகச்சிறந்த பாடல் வரிகள் ஆகும். இவர் திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி அர்த்தமுள்ள இந்துமதம், இயேசு காவியம் போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார். இவர் ' கண்ணதாசன்', 'தென்றல்'ஆகிய இரு இலக்கிய இதழ்களில் துவக்கி அவற்றின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.  இவர் காரைக்குடியில் உள்ள சிறுகூடல்பட்டியில் பிறந்த  இவருக்கு காரைக்குடி பேருந்து நிலையம் எதிரே ஒரு நினைவாலயம் 21.10.1992-ல் எழுப்பப்பட்டுள்ளது.

கண்டதேவி கோயில்

கண்டதேவி கோயில் வரமூர்த்தீஸ்வரர் கோயில் கொண்டுள்ளார்.  இவர் சிரகிலிநாதர் எனவும் அழைக்கப்படுகிறார். இங்குள்ள உடனுறை தெய்வம் புதிய நாயகி அம்மன்.  இந்த கோயிலை சிவகங்கை தேவஸ்தானம் இக் கோயிலை நிர்வகித்து வருகிறது.  'கண்டேன் தேவியை'  என்று ராமனிடம் அனுமான் சொன்ன இடம் இது என்று கூறப்படுகிறது.  இந்த நிகழ்வில் இருந்து இந்த இடம் கண்டதேவி என அழைக்கப்படுகிறது.  இந்தக் கோயில் 350 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு பழமையான கோயிலாகும்.  இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆணி உற்சவம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  இதற்கு 75 இற்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து மக்கள் திரளாக வருவார்கள்.

காரைக்குடி

செட்டி நாட்டாரின் தலைநகரம் போன்றது காரைக்குடி.  இங்கு உள்ள நகரத்தார்கள் ஒவ்வொரு வீடுகளும் ஒவ்வொரு மாளிகை போன்று தனித்தன்மையுடன் காட்சியளிக்கின்றது.  இங்கு ஒரு தெருவில் தலைவாசல் என்றால் அடுத்த தெருவில் பின் வாசல் இருக்கும்.  இங்கு உள்ள வீடுகளில் அலங்கார வண்ண சித்திர கண்ணாடி சாளரங்கள்,  அலங்கார தொங்கு விளக்குகள்,  தேக்கு மர வேலைப்பாடுகள்,  இப்படியாக அந்த இல்லங்களை பொக்கிஷம் போன்று இருக்கும். இவர்களின் விருந்தோம்பல் நாடறிந்த பெருமைக்குரியது. இவர்கள் அழிந்து போன பூம்புகாரை பூர்வீகமாகக் கொண்டவர்கள் என்ற ஒரு தகவல் உண்டு. வள்ளல் அழகப்ப செட்டியார் உருவாக்கிய அழகப்பா கல்லூரி தற்போது தன்னாட்சி பெற்ற அழகப்பா பல்கலைக்கழக திகழ்கிறது.

குன்றக்குடி கோயில்

குன்றக்குடி கோயில் சண்முகானந்தனாக  முருகன் எழுந்தருளியுள்ளார்.  இந்த ஆலயம்  கிபி 1000ல்  கட்டப்பட்டதாக மயூரகிரி புராணம் கூறுகிறது.  மருது சகோதரர்களால் புதுப்பிக்கப்பட்ட கோயில் இது. தைப்பூசம்,  பங்குனி உத்திரம்,  திருக்கார்த்திகை  மற்றும் கந்தசஷ்டி விரதம் ஆகியவை இக்கோயிலில் தவறாமல் நடைபெற்று வரும் முக்கிய திருவிழாக்கள் ஆகும்.  கந்த சஷ்டி விரதம் மேற்கொள்பவர்களுக் மனக்கவலை,  நோய் நொடிகள் எல்லாம் பறந்து போகும் என்று நம்பப்படுகிறது.  இங்கு பக்தர்கள்  நல்லபடியாக குழந்தைப்பேறு அடைய இந்த முருகனை தரிசனம் செய்தல் வழக்கம்.  இந்த கோயில் காரைக்குடியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மருதுபாண்டியர் நினைவாலயம்

மருது பாண்டியர்கள்  மலேரியா எதிர்ப்பு அஞ்சாமல் போரிட்டவர்கள்.  இவர்கள் சிவகங்கை சீமையை சிறப்பாக ஆண்ட வேலு நாச்சியாரின் மரபில் வந்தவர்கள்.  நாட்டு மக்களின் பாதுகாப்பை முன்னிட்டு தாங்களாகவே ஆங்கிலேயரிடம் சரணடைந்தவர்கள்.  அப்போதைய ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசு கிபி 1801-ல்  மாவீரர்களை தூக்கிலிட்டது.  என் மாவீரர்களுக்கான நினைவாலயம் 21.10.1992 ல் ஸ்வீடிஸ் மஷன் மருத்துவமனை வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

பிள்ளையார்பட்டி கோயில்

பிள்ளையார்பட்டி கோயில் ஒரு குடைவரைக் கோயில் ஆகும்.  இது பிற்கால பாண்டிய மன்னர்கள் ஒன்றிலிருந்து துண்டிக்கப்பட்ட பாறை ஒன்றைக் கொண்டு இக்கோவிலைக் கட்டி,  ஒரு கல்லில் இருந்து கற்பக விநாயகர் மற்றும் லிங்க வடிவு ஆகியவற்றை மூலக் கடவுளாக வடித்திருக்கிறார்கள்.  இந்த சிற்பங்கள் செதுக்கிய சிற்பி எக்கத்தூர் கூன்பெருபரணன் எனக் கல்வெட்டு கூறுகிறது. இரண்டாம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டு எழுத்துக்களைப் போன்று இந்தக் கல்வெட்டு உள்ளது.  இதன் மூலம் இந்த கற்பக விநாயகர்  சிலை கிபி 4ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் செதுக்கப்பட்டுள்ளது அறிய முடிகிறது. இக்கோயில் 1600  ஆண்டுகள் பழமை வாய்ந்தது.  இங்கு 14  கல்வெட்டுகள் காணப்படுகின்றன.  இவை கிபி 400  முதல் கிபி 1238  வரை பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் ஆகும். எக்கத்தூர், திருவீங்கைக்குடி,  மருதங்குடி,  இராசநாராயணபுரம் என பல பெயர்களைக் கொண்டிருந்த இந்த இடம் தற்போது பிள்ளையார்பட்டி என்று அழைக்கப்படுகிறது.  இது காரைக்குடியிலிருந்து மதுரை செல்லும் சாலையில் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.   தொலைபேசி 04577-264240.

இளையான்குடி

இளையான்குடி என்றவுடன் நம் நினைவுக்கு வருவது 63 நாயன்மார்களில் ஒருவரான இளையான்குடி மாறநாயனார்.  இவர் சிவனையும் சிவனடியார்களையும் நம் உயிரென மதித்து வழிபட்டவர்.  சிவனடியார் பணிவிடையில் மற்றற்ற மகிழ்ச்சி அடைந்தவர்.

திருக்கோஷ்டியூர் கோவில்

திருக்கோஷ்டியூர் 108 திவ்யதேசங்களில் ஒன்று.  இது மகான் ராமானுஜர் இப்பெருமாளை வழிபட்டுள்ளார்.  இக்கோயிலில் நாராயண பெருமாள் சுவாமி இக்கோயிலில் எழுந்தருளியுள்ளார்.  ஐந்து திருப்பதிகளில் ஒன்றான திருக்கோஷ்டியூர் தென் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மகா தீபம் இது மிகவும் விசேஷமாக. கொண்டாடப்படுகின்றது.

திருவேங்கடமுடையான் தென்திருப்பதி

.திருவேங்கடமுடையான் தென்திருப்பதி ஸ்ரீ நிவாச பெருமாள்  குடிகொண்டுள்ள இந்தக் கோயில் 200 ஆண்டுகள் பழமையானது.  அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலான இது தென் திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது.  நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் இக் கோயிலை கட்டி பெருமை அடைந்தனர்.