ஈரோடு மாவட்டம் : Erode in Tamil
ஈரோடு என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பவானிசாகர் அணைக்கட்டு. இது இம் மாவட்டத்தின் நீர்ப்பாசன வசதிக்கு பெரிய அளவில் பங்களிக்கின்றது, இது சுற்றுலாப் பயணிகளை கவரும் இடமாகவும் அணைக்கட்டு இருக்கின்றது. ஈரோடு மாவட்டம் மஞ்சள் உற்பத்திக்கு புகழ்பெற்ற மாவட்டம். இங்குதான் தமிழ்நாட்டின் மஞ்சள் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இங்கிருந்துதான் மஞ்சள் அனைத்து மாவட்டத்திற்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. தமிழகத்தில் தலை சிறந்த தலைவர்களில் ஒருவரான தந்தை பெரியார் பிறந்த ஊர். உலக அளவில் புகழ்பெற்ற காங்கேயம் காளை இவ்வூரின் சிறப்புகளில் ஒன்று. ஊத்துக்குளி வெண்ணையும் இவ்வூரின் சிறப்புகளில் ஒன்று. ஈரோட்டிலிருந்து துணி தயாரிப்புகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி ஆகின்றன. உலகப் புகழ்பெற்ற பன்னாரியில் உள்ள பன்னாரி அம்மன் கோவில், பவானி ஆறு, காவிரி ஆறு, அமுத நதியும் சங்கமமாகும் சங்கமேஸ்வரர் ஆலயமும் இவ்வூரின் தனிச்சிறப்பாகும்.
ஈரோடு சுற்றுலா இடங்கள் Erode Tourist Places in Tamil
ஈரோடு கோயில்கள் Erod Temples in Tamil
ஸ்ரீ கொண்டத்து காளியம்மன் கோயில்
காளியம்மன் கோயில் உட்புறம் பிரம்மஹ, மகேஸ்வரி, வைஷ்ணவி, மஹிந்தரி மற்றும் சாமுண்டி ஆகிய தெய்வச் சிலைகள் உள்ளன. வெளிப்புறம் சித்தி விநாயகர், சப்த கன்னிகை, பூங்காளியம்மன் போன்ற தெய்வங்கள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். அம்மன் முன்னிலையில் பூ போட்டு பார்க்கும் பழக்கம் இன்றும் உள்ளது. இக்கோயில் மொத்தபகுதியும் சலவைக் கற்களால் ஆன இக்கோயில் 5 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. கோபி என்று சுருக்கமாக அழைக்கப்படும் கோபிச் செட்டிபாளையத்திற்கு அருகில் பாரியூரில் இக்கோயில் அமைந்துள்ளது. கொள்ளை நோய் ஒன்றினால் இங்குள்ள மக்கள் காவு வாங்க புத்த சமயத்தில் எஞ்சியுள்ளவர்கள் வேறு இடங்களுக்கு தேடிச் செல்ல முயன்றபோது பாரியூர் கொண்டத்து காளியம்மன் இங்கு எழுந்தருளி அவர்களை காத்து ரட்சித்ததாக சொல்லப்படுகிறது.
சங்கமேஸ்வரர் கோவில்
சங்கமேஸ்வரர் கோவிலில் சங்கமேஸ்வரர் மற்றும் வேத நாயகியோடு பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். இது பவானி ஆறு காவேரி ஆறு அமுதா நதியும் சங்கமிக்கும் பவானியில் அமைந்துள்ளது. இது தென்னிந்தியாவின் திரிவேணி என்றும் அழைக்கப்படுகின்றது. கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி காலத்தில் அப்போதைய கோவை, சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த. வில்லியம் கேரோ, பவானிதலைமையகத்தில் தங்கியிருந்தார். அப்போது ஒருநாள் கனவில் தோன்றிய வேதநாயகி அம்மன் உடனே மாளிகையை விட்டு வெளியேறுமாறு கட்டளையிடகேரோவும் வெளியேறினாராம். அவர் வெளியேறிய சில நிமிடங்களில் மொத்த கட்டிடமும் இடிந்து இடிந்து விழுந்ததாம். இப்படி தன்னை காப்பாற்றிய தெய்வத்திற்கு நன்றி கடனாக அவர் காணிக்கை செலுத்திய தந்த தொட்டில் நாகர்கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இதில் அவர் கையெழுத்தும் இருக்கின்றது.
சென்னிமலை
சென்னிமலை நெசவு தொழிலுக்கு முக்கியத்தும் வாய்ந்த நகரம். ஈரோட்டுக்கும் கோவைக்கும் இடையில் அமைந்துள்ளது. கோவிலுக்குச் செல்லும் வழியில் இங்கூர் ரயில் நிலையத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஈரோட்டில் இருந்து 26 கிலோமீட்டர் தொலைவிலும் பெருந்துறையில் இருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. மலை உச்சியில் அமைந்துள்ள முருகன் கோயிலுக்குச் செல்ல தேவஸ்தானம் சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் இறைவனிடம் அசிகளாக படிக்காசு பெற்ற இடம் என்ற பெருமைக்குரியது சென்னிமலை.
அந்தியூர் குருநாத ஸ்வாமி கோவில்
அந்தியூர் குருநாத ஸ்வாமி கோவிலில் காமாட்சியம்மன், பெருமாளும், குருநாதசுவாமி என்ற திருப்பெயரில் சிவனும் முருகனும் இக்கோயிலில் ஒன்றாக எழுந்தருளியுள்ளனர்.
பண்ணாரி அம்மன் கோயில்
பண்ணாரி அம்மன் கோயிலில் எழுந்தருளியுள்ள மாரியம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக கருதப்படுகின்றது. இக்கோயிலுக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருடம் முழுவதும் வந்து செல்கின்றனர். இது பவானிசாகரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
கொடுமுடி
கொடுமுடியில் உள்ள சிவனை மச்ச கண்டீஸ்வரர் எனவும் விஷ்ணுவை வீர நாராயண பெருமாள் எனவும் பக்தர்கள் போற்றி வணங்குகிறார்கள். இக்கோயிலின் தல வரலாறு ஈசனின் தலையையும் திருப்பாதம் காண முயன்ற விஷ்ணுவிற்கும் பிரம்மாவிற்கும் கொடுமுடி சிவன் கோயில் வளாகத்தில் தனித்தனி கோவில்கள் உள்ளன. ஈரோட்டில் உள்ள சிறப்பு வாய்ந்த கோயில்களில் இதுவும் ஒன்று.
பவானி கூடுதுறை
பவானி கூடுதுறை என்பது பவானி ஆறு, காவிரி ஆறு அமுத நதி மூன்றும் சங்கமிக்கும் இடத்தை பவானி கூடுதுறை என்று அழைக்கப்படுகிறது.
சிவன்மலை
சிவன்மலை ஒரு மலைக் கோயில் ஆகும். இது காங்கேயத்தில் அமைந்துள்ளது. இங்கு நடைபெறும் தைப்பூச திருவிழா மிகவும் புகழ்பெற்றது.
பவானிசாகர் அணைக்கட்டு
பவானி ஆற்றின் குறுக்கே இந்த அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. சத்தியமங்கலத்தில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
தந்தை பெரியார் நினைவிடம்
தந்தை பெரியார் இவர்களின் இயற்பெயர் ஈ. வெ.ராமசாமி. இவர் சாதி அமைப்பினால் ஏற்படும் கொடுமைகளை எதிர்த்து தனது சீரிய சிந்தனைகளை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரும்பாடுபட்டார். இங்கு இவருக்கு 5281.1 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நினைவாலயம் 17.08.1975-ல் திறந்துவைக்கப்பட்டது. பெரியாரின் உருவச்சிலை, வாழ்க்கை வரலாறு, நிழற்படங்கள் முதலியன நினைவாலயத்தில் வைக்கப்பட்டுள்ளன.