கடலூர் மாவட்டம் : Cuddalore in Tamil

கடலூர்  வரலாற்று சிறப்புமிக்க மாவட்டம்.  இங்கு சிறப்பு மிக்க கட்டிடங்கள்,  பழமையான கோயில்கள், வரலாற்று நினைவிடங்கள்  என்று மனம் பெருமையுடைய மாவட்டமாகும்.  இம்மாவட்டத்தில் தான் சிதம்பரம் நடராஜர் கோவில்,  அண்ணாமலை பல்கலைக்கழகம்,  நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம்,  போர்த்துக்கீசியர்கள் வாணிபம் நடத்திய பரங்கிப்பேட்டை,  சமரச சன்மார்க்க நெறி வள்ளலார் பிறந்த இடம் என்று கடலூர் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில்   தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் ஒன்று.  இது கெடிலம் நதிக்கரையில் அமைந்துள்ளது.  திருப்பாதிரிப்புலியூர் கடலூரின் ஒரு பகுதி ஆகும்.  திருப்பாதிரிபுலியூரில்  பாடலீஸ்வரர் கோயில் உள்ளது.  இது சிறந்த சிவ வழிபாட்டு தலம் ஆகும்.  தேவாரப் பாடல்கள் இத்தலத்தை பற்றி குறிப்பிடுகின்றன.  பாடலிபுத்திரம் என்னும் இவ்வூர் பகுதியில் முற்காலத்தில் சமண  மடமும்,  சமணர் கோவிலும் இருந்தன.  கிபி ஐந்தாம்  நூற்றாண்டிற்கும்,  கிபி ஏழாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில்,  திருப்பாதிரிப்புலியூர் ஒரு சிறந்த சமண மையமாக விளங்கி இருக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.

 கடலூரின் வரலாற்று சிறப்பு மிக்க பகுதி டேவிட் கோட்டை பகுதி ஆகும்.  இக்கோட்டை இருக்கும் நிலப் பகுதியை ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியார்  சென்னை ஆளுநர் எல் பிரபு முயற்சியால் மராட்டிய தலைவர் இராஜா ராமிடமிருந்து கிபி 1690இல்   விலைக்கு பெற்று இவ்விடத்தில் ஒரு கோட்டையை கட்டினர்.  இது புனித டேவிட் கோட்டை என்ற பெயரைப் பெற்றது.  சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்காடு கிழக்கு கடற்கரையில் இக்கோட்டை ஆங்கிலேயருக்கு முக்கியத்துவம் பெற்றதாக விளங்கியது.  முதல் கர்நாடகப் போரின் பொழுது (கிபி1746)  பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரியின் ஆளுநர் தலைமையில் சென்னையை பிடித்துவிட்டு புனித டேவிட் கோட்டை இணையும் தாக்கினர்.  ஆனால்  பிரஞ்சுக்காரர்களால்  இ கோட்டையை பிடிக்க முடியவில்லை.  கிபி 1,746 முதல் 1752 வரை இக்கோட்டை சோழமண்டலக் கடற்கரையில் உள்ள  ஆங்கில  வாணிப தலங்களின் தலைமையிடமாக இருந்தது.  மூன்றாவது கர்நாடக போரின் போது  பிரெஞ்சு தளபதி லாலி இக்கோட்டையைப் பிடித்தார்(1758).  பிரெஞ்சு படைகள் இக்கோட்டையின் பெரும்பகுதியை  அழித்தன.  பிரெஞ்சுக்காரர்களின் வீழ்ச்சிக்குப் பின் இக்கோட்டை பகுதியை ஆங்கிலேயர்கள் மீண்டும் பெற்று புதுப்பித்துக் கட்டினர் (1761).  ஆனால்,  இதன்பின்  இக்கோட்டை அதன் ராணுவ முக்கியத்துவத்தை  இழந்தது வரலாற்று சிறப்புமிக்க புனித டேவிட்  கோட்டையின் எஞ்சிய பகுதியை இன்று நாம் காணலாம்.  இந்தியாவிலுள்ள  சிறு துறைமுகங்களில்   கடலூர் ஒன்றாகும்.

கடலூர் சுற்றுலா தளங்கள் Cuddalore Tourist Places in Tamil

சிதம்பரம்

சிதம்பரம் நடராஜர் கோவில் உலகப் புகழ் பெற்றது. நாட்டியக் கலையின் கடவுளாக கருதப்படும் கடவுள் நடராஜர் இங்கு நடராஜர் சிலைகள்,  ஒயிலும் எழிலுமாய் அமைந்துள்ளன.  தென்னாடுடைய சிவனின் ஐந்து சபைகளில் ஒன்றான பொற்சபையும் இதுதான்.  இந்த அடைமொழிக்கு பொருத்தமாக,  இங்கு ஆண்ட பராந்தகச் சோழன் இவ்வளையத்தின் மேற்கூரையை பொன்னால் வேய்ந்து  பொலிவூட்டினான்.

காட்டுமன்னார்குடி

சிதம்பரத்தில் உள்ள ஒரு சிறிய ஊர் காட்டுமன்னார்குடி.  காட்டுமன்னார்குடியில் மிகப்பழமையான பெருமாள் கோயில் ஒன்று உள்ளது. ஆளவந்தார்,  நாதமுனிகள் போன்ற வைணவ துறவிகள் பிறந்த இடம்.

பாடலீஸ்வரர் கோயில்

பாடலீஸ்வரர் கோயில் திருப்பா திரிபுலியூர் ரயில் நிலையத்திற்கு அருகே இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் தல விருட்சமான  பத்ரி மரமும் ஊரின் பழைய பெயரான புலியுறும் சேர்ந்து நாளடைவில்  திருப்பாதிரிபுலியூர் என்று மருவியதாக சொல்லப்படுகின்றது.  ஒருவரால் தான் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தமாகக் கட்டப்பட்டது இக்கோயில் என்றொரு கதையும் உண்டு.  நிகில் திருநாவுக்கரசராலும் ஞானசம்பந்தர் ஆனாலும் பாடல் பாடப்பெற்ற தலம்.  இக்கோயிலை ஒட்டி புகழ்பெற்ற பிடாரி அம்மன் கோயிலும் அமைந்துள்ளது.

நெல்லிக்குப்பம்

கடலூர் மாவட்டத்தில் கரும்பு முக்கிய பயிராக சாகுபடி செய்யப்படுகிறது.  கடலூரில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் நெல்லிக்குப்பம் உள்ளது.  இங்குள்ள சர்க்கரை ஆலை கிபி 1848இல் பாரி கம்பெனியாரால்  நிறுவப்பட்டது.  விவசாயிகள் தாங்கள் விளைவித்த கரும்புகளை ஆலைக்கு எடுத்துச் செல்வது எளிதாக உள்ளது.

நெய்வேலி

நெய்வேலி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம்  மற்றும் நெய்வேலி  மின் உற்பத்தி நிலையம்.  தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தியில் பெரும்பகுதியை நெய்வேலி மின் உற்பத்தி நிலையம் செய்கின்றது. இங்கு உற்பத்தியாகும் நிலக்கரியைக் கொண்டு உரம் உற்பத்தி செய்யப்படுகின்றது.  நெய்வேலி கடலூரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

பிச்சாவரம்

பிச்சாவரம் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது மாங்குரோவ் காடுகள்.  இது சிதம்பரத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும்,  கடலூரிலிருந்து 56 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. நிலத்துக்குள் கடல்நீர் வருவதால் கழிமுகம் உருவாகின்றது. அறிமுகங்களில் ஏற்படும் உப்பு நீரில் வளரும் தாவரம் அலையாத்திக் காடுகள் அல்லது மாங்குரோவ் காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.  இது பிச்சாவரத்தில் 11 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்துவிரிந்து கிடக்கின்றன. இங்கு பலவகையான மீன்கள் வளர்வதற்கு ஏற்ற சூழல் நிகழ்வதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தும் மீன்களைப் பிடித்து மகிழலாம்.  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் ஏற்பாட்டில் தங்கும் விடுதிகள்,  அழகிய குடில்கள்,  உணவு விடுதிகள்,  படகு பயணம் என பிச்சாவரத்தில் பல வசதிகள் செய்து தரப்படுகின்றன.

கடலூர் துறைமுகம்

 கடலூர் துறைமுகத்தின் பரப்பளவு 1132.4 மீட்டர்.  இதன் ஆழம் 15  முதல்18.மீட்டர். தென்னக ரயில்வேயின்  பிரதான தலங்களில் ஒன்றான கடவுள் வழியில் நிலையத்தோடு,  இப்பகுதி  சரக்கு போக்குவரத்தில் பொருட்டு இணைக்கப்பட்டுள்ளன. உப்பனாற்றின் மேற்கு பக்கம்,  புதிய துறைமுக அலுவலகத்திற்கு அருகில் சரக்குகளை ஏற்றி இறக்கும் வசதியுடைய கப்பல் துறை மேடை ஒன்று 200 மீட்டர் ஆழத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.

பரங்கிப்பேட்டை

பரங்கிப்பேட்டைக்கு முதலில் வந்த ஐரோப்பியர்கள் போர்ச்சுகீசியர்கள் ஆகும்.  இவர்களுக்குப் பின் டச்சுக்காரர்களின் ஆதிக்கத்திற்கு பரங்கிப்பேட்டை வந்தது.  போர்ச்சுகீசியர் காலத்தில் பரங்கிப்பேட்டை போர்டடோநோவா என்று அழைக்கப்பெற்ற இவ்வூர் ஆங்கிலேயர் வசம் வந்தவுடன் பரங்கிப்பேட்டை என மாறியது. இங்கு பெரும்பாலானோர் கடல் வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இங்கு இஸ்லாமிய துறவிகளுக்கு என என நினைவுச் சின்னங்கள்  உள்ளன. மாலுமியார்,  அரைக்காசு நாச்சியார்,  ஹபீஸ் மீர் சாஹிப், செய்யத் சாஹப் ஆகிய  இறையாளர்களின் பெயரிலான  தர்காக்கள் மிக முக்கியமானவையாகும்.  இந்நகரம்  சிதம்பரம் வட்டத்தில் வெள்ளாற்றின்  வடகரையில்  கடலுக்கு அருகே உள்ளது. பரங்கிப்பேட்டை கடலூரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

ஸ்ரீமுஷ்ணம்

 சிதம்பரத்திலிருந்து முப்பது கிலோமீட்டர் தொலைவில் ஸ்ரீ முஷ்ணம் உள்ளது.  இவ்வூரில் புகழ்பெற்ற வைணவ ஆலயம் உள்ளது.  தஞ்சை நாயக்க மன்னர் அச்சுதப்பர்  இவ்வாலயத்தை கட்டி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.  உடையார்பாளையம் நிலக்கிழார்  ஒருவரால் இவ்வாலயத்தின் சில கட்டடங்கள் எழுப்பப்பட்டன (1713).  இவ்வாலயத்திலுள்ள 16 தூண் மண்டபம் சிற்பக்கலைக்கு உறைவிடமாக உள்ளது.

ஸ்ரீ பூவராக சுவாமி கோவில் தென்னிந்தியாவில் உள்ள 8 சுயம்புவான சேத்திரங்களில் ஒன்று. இங்கு உள்ள  ரதம் போன்ற வடிவிலான புருஷாஷ்குத மண்டபத்தில் போர் வீரர்கள், யானைகள்,  குதிரைகள் மீது அமர்ந்த நிலையிலுள்ள சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன.  ஸ்ரீமுஷ்ணம் கடலூரில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

திருவஹீந்திபுரம்

திருவஹீந்திபுரம் வைணவ தேசங்களில் 108 ல்  நடு நாட்டு திருப்பதிகளில்  இதுவும் ஒன்று. இலங்கை போர்க் களத்திற்கு அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கிச் செல்லும் பொழுது,  அதில் இருந்து விழுந்த ஒரு துளியே  தேவநாத பெருமாளாக,  திருவஹீந்திபுரத்தில் எழுந்தருளியதாக பக்தர்கள் போற்றி வழங்கும் இடம். பிரபந்தம்,  பிறகநார்தியம், ஸகந்தம்  ஆகிய புராணங்களில் இதன் முக்கியத்துவம் இடம்பெற்றுள்ளது.

திருவந்திபுரம் கோவில்

திருவந்திபுரம் கோவிலில் வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் கொண்டுள்ளார்.  இது திருப்பதிக்கு இணையாக வைத்து வணங்கப்படும் ஆலயமாகும்.  சனிக்கிழமைகளில் பல இடங்களில் இருந்து பக்தர்கள் வருவார்கள்.

திருப்பாப்புலியூர்

திருப்பாப்புலியூரில்  உள்ள பாடலீஸ்வரர் கோயில் மிகப் பழமையான கோவில்களில் ஒன்று.  இத்தளத்தைப் பற்றி  தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதே இதன் தொன்மைக்கு சான்றாகும். இக்கோயிலில் நடைபெறும் பிரம்மோற்சவத்தின் போது மாவட்ட முழுவதிலிருந்தும் பக்தர்கள் திரளாக கூடுவார்கள். கோயிலின் அருகே திருப்பாப்புலியூர்  ரயில் நிலையம் அமைந்துள்ளது.

தில்லை காளி கோயில்

தில்லை காளி கோயில் கடலூரில் உள்ள பழமையான கோயில்களில் இதுவும் ஒன்று.  இது கிபி 13 ஆம் நூற்றாண்டில் கப்பேருஞ்சன் என்ற அரசனால் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.  இக்கோயில் கடலூர் நகரத்தின் வடதிசை எல்லையில் அமைந்துள்ளது.

 வடலூர்

வடலூர் என்றாலே நம் நினைவுக்கு வருபவர் வள்ளலார் ராமலிங்க சுவாமிகள். இது வள்ளலாரின்  சத்யஞான சபை நிறுவிய இடம். இங்கு வருடம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாக உள்ளது.  வடலூர் கடலூரில் இருந்து 34 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

விருத்தாச்சலம்

விருத்தாசலத்தில் விருத்தகிரீஸ்வரர் குடிகொண்டுள்ள பழமையான ஆலயம் உள்ளது.  இங்கு மாசி மாதம் நடைபெறும் திருவிழாவில் யாத்திரீகர்கள் மணிமுத்தாறு நதியில் புனித நீராடுவார்கள்.  விருத்தாச்சலம் கடலூரிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் மணிமுத்தாறு நதிக்கரையில் அமைந்துள்ளது.

 கடலூரிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் விருத்தாசலம் உள்ளது.  இந்நகரில் புகழ்பெற்ற சிவாலயம் உள்ளது.  இங்குள்ள இறைவன் விருத்தகிரீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.   பாலாம்பாளுக்கு  ஒரு சன்னதியும்,  விருத்தாம்பாளுக்கு  ஒரு சன்னதியும் உள்ளன.  இக்கோவிலின் சில முக்கிய பகுதிகள் உத்தமசோழனின் தாயும்,  கண்டராதித்தரின் மனைவியுமான செம்பியன் மாதேவியாரல்  கட்டப்பட்டதாகும்.  நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் திருப்பணிகளும் இக்கோவிலில் உள்ளன. தேரின் அமைப்பைக் கொண்ட இக்கோவிலில் உள்ள மண்டபமும் இதன் தூண்களும் சிற்பக்கலை சிறப்புமிக்கதாகும்.

விருத்தாசலத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வடலூரில் இராமலிங்க சுவாமிகள் ஆலயம் உள்ளது.  சமரச சன்மார்க்கம்  தழைத்த ஊர் இது.  திருவருட்பிரகாச வள்ளலார் என்ற இராமலிங்க அடிகள் (1823 -1874)  வடலூரிலிருந்து 11 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள  மருதூரில் பிறந்தார்.  இவர் தமது பன்னிரண்டாவது வயது முதல் முறையான ஞான வாழ்க்கையை தொடங்கினார்.  இவர் கிபி 1865 இல் சமரச வேத சன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்து புகழ்பெற்றார். ' திருவருட்பா'   இவர் இயற்றிய நூல் ஆகும்.  சத்திய தருமச்சாலை,  சத்திய ஞான சபை ஆகியவற்றையும் இவர் நிறுவினார். " கடவுள் ஒருவரே", " ஜாதி,  சமய வேறுபாடுகள் கூடாது"  போன்ற கருத்துக்களை இவர் கொண்டிருந்தார்.

 திருவதிகை

 கடலூரிலிருந்து பண்ருட்டி செல்லும் சாலையில் 22 கிலோமீட்டர் தொலைவில் திருவதிகை உள்ளது.  இங்கு வீரட்டானம் என்னும் சிவன் கோவில் உள்ளது.  இக்கோவில் திலகவதியாரும்  திருநாவுக்கரசரும் திருத்தொண்டு புரிந்த தலமாகும்.  அப்பர் வாழ்ந்த கிபி ஏழாம் நூற்றாண்டிலேயே சிறப்பு பெற்றிருந்தது.  பல்லவ மன்னன் பரமேஸ்வரன் காலத்தில் கட்டப்பட்டது.  நிருபதுங்கவர்மன் காலத்தின் புதுப்பிக்கப்பட்டது.  பாண்டிய மன்னர் திருப்பணியும் இங்கு உள்ளது.  திருவதிகை பண்டைக் காலத்தில் ஒரு சமண மையமாக விளங்கியது.

சேந்தமங்கலம 

பண்ருட்டியில் இருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் சேந்தமங்கலம் உள்ளது.  இவ்விடம் பல்லவர் வழிவந்த காடவராயர் தலைவன்  கோப்பெருஞ்சிங்கனின் (கிபி 13 ஆம் நூற்றாண்டு) தலைநகராக இருந்தது.  கோப்பெருஞ்சிங்கன் சிதம்பரம் கோவில் தெற்கு கோபுரத்தை கட்டினான்.  இங்கிருந்த கோட்டையின் சில எஞ்சிய பகுதிகள்,  ஆகியவற்றை இன்றும் காணலாம்.  இங்கு கைலாசநாதர் கோவிலும், இளமீஸ்வரர் கோவிலும் உள்ளன.  இவை சிற்பக்கலை சிறப்பு மிக்கவை.

திருவக்கரை

 கடலூரிலிருந்து 38 கிலோமீட்டர் தொலைவில் திருவக்கரை உள்ளது.   இங்குச்  சந்திர  மௌலீஸ்வரர் கோவில் உள்ளது.  இக்கோவில் சோழ அரசி செம்பியன் மாதேவியாரால்  கட்டப்பட்டதாகும்.  இக்கோவிலின் ஆயிரங்கால் மண்டபம் அம்மையப்பன் சம்புவராயன் என்பவரால் கட்டப்பட்டதாகும்.  கிபி 1130இல்  காங்கேயன் என்பவரால்  இக்கோவிலின் ஒரு மண்டபமும்,  கோபுரமும்  கட்டப்பட்டன.