கிருஷ்ணகிரி மாவட்டம் : Krishnagiri in Tamil Language
தமிழகத்தின் பழமையான நகரங்களில் ஒன்று கிருஷ்ணகிரி. இது 2004ம் ஆண்டு தர்மபுரி மாவட்டத்திலிருந்து தனியாக பிரிக்கப்பட்டு மணி மாவட்டமானது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு பழமையான கோட்டையின், ஒரு பெரிய மதில் சுவரும் கம்பீரமாக நிற்கின்றன. இந்த கோட்டையின் பெயர் சையத் பாட்சா கோட்டை, இந்த கோட்டையும் கோட்டையின் அருகே உள்ள அணைக்கட்டும் மக்களைக் கவரும் சுற்றுலாத்தலமாக இருக்கின்றது.
கிருஷ்ணகிரி சுற்றுலா இடங்கள் Krishnagiri Tourist Places in Tamil
ஹோசூர்
ஹோசூர் என்பதற்கு புதிய நகரம் என்று பெயர். இந்த நகரில்தான் பெரிய கோட்டை ஒன்று உள்ளது. இதை மாவீரன் திப்பு சுல்தான் கேப்டன் ஹிமில்டன் மற்றும் இரண்டு கைதிகளை கொன்று இந்த கோட்டையை பலப்படுத்தினார். அவர் விரும்பியதை போன்று இக் கோட்டையை சுற்றி ஆழமும் அகலமும் உள்ள பெரிய அகழி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பெரியகோட்டை மேடையுடன், தாக்க வசதியாக கோட்டையின் புறச்சரிவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இக்கோட்டையின் எல்லையில் உள்ள எல்லை மாரியம்மன் கோயில் மிக சக்தி வாய்ந்த தெய்வம் ஆகும். இக்குகுன்றில் உள்ள சந்திர சூரியேஸ்வரர் கோவிலின் ஆண்டுத் திருவிழாவிற்கு கர்நாடகாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.
கிருஷ்ணகிரி அணைக்கட்டு
கிருஷ்ணகிரி அணைக்கட்டு கிருஷ்ணகிரியில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது கிருஷ்ணகிரிக்கும் தர்மபுரி இருக்கும் இடையில் அமைந்துள்ளது. இந்த அணைக்கட்டால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இது ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாகவும் திகழ்கின்றது. இதற்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை நாட்களிலும் இந்த அணைக்கட்டிற்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வருவர்.
தளி
தளி ஏராளமான குன்றுகள் நிறைந்த பகுதி ஆகவே ஆண்டு முழுவதும் குளிர்ச்சியாகவே இருக்கும் ஆகையால் இதற்கு ' குட்டி இங்கிலாந்து' என்கிற சிறப்புப் பெயரும் உண்டு. இங்கு கிபி 1530 ல் பாளையக்காரர்களால் இக்கோட்டை கட்டப்பட்டது. ஹைதர் அலி மற்றும் அவரது மகன் திப்பு சுல்தான் ஆகியோரோடு ஆங்கிலேயர் புரிந்த போரில் இக்கோட்டை சிதிலமடைந்தது. இங்கு வேணுகோபால சுவாமிகளுக்கு கோயில் ஒன்று உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இக்கோயிலில் தேர்த்திருவிழா நடக்கும் இதற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடி தேர் இழுப்பார்கள். இது ஹோசுரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இராஜாஜி நினைவகம்
இராஜாஜி அவர்கள் தோரப்பள்ளியில்தான் பிறந்தார். அவர் பிறந்த இல்லம் நினைவகமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு அவர் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் அவருடைய முக்கிய வாழ்க்கை நிகழ்ச்சிகளை சித்தரிக்கும் புகைப்படங்கள் போன்றவை இந்த இடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
ராயக்கோட்டா
ராயக்கோட்டா மைசூர் போர்களுக்குப் பிறகு ஆங்கிலேயர்களின் யுத்த தந்திர முக்கியத்துவம் வாழ்ந்த பகுதியானதால் இங்கு கிபி 1861 ஆம் ஆண்டு வரை இங்கு பிரிட்டன் படை நிலை கொண்டு இருந்தது. தற்போது இக்கோட்டை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாம்பழத்திருவிழா
மாம்பழ சீசன் மாதங்களில் கிருஷ்ணகிரியில் மாம்பழத் திருவிழா நடைபெறுகிறது. அந்த சமயத்தில் இங்கு ருமானி, அல்போன்சா, மல்கோவா, பங்கனபள்ளி என்று பலவகையான மாம்பழங்களின் நறுமணங்கள் நம்மை மயக்கும் அருகில் எங்கும் நிறைந்திருக்கும். இது விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஆண்டுதோறும் ஜூன் மற்றும் ஜூலை ஆகிய மாதங்களில் கொண்டாடப்படுகின்றது.