பெரம்பலூர் மாவட்டம் : Perambalur in Tamil

பெரம்பலூர் மாவட்டம் சென்னையிலிருந்து 267 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.  இது கடந்த 1995 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து தனியாக பிரிக்கப்பட்டது.  இந்த மாவட்டத்தின் கணக்கு இல்லையா கடலூர் மாவட்டமும் தெற்கு எல்லையாக திருச்சிராப்பள்ளி மாவட்டமும், கிழக்கு எல்லையாக நாமக்கல் மாவட்டமும் மற்றும் மேற்கு எல்லையாக தஞ்சாவூர் மாவட்டம் உள்ளது.  பெரம்பலூர்  மாவட்ட தாலுகாக்கள்  பெரம்பலூர்,  செந்துறை மற்றும் குன்னம் .  இந்த மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 1,757 சதுர கிலோமீட்டர் ஆகும்.

பெரம்பலூர் சுற்றுலா இடங்கள் Perambalur Tourist Places in Tamil

கங்கைகொண்ட சோழபுரம்

கங்கை கொண்ட சோழபுரம் ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்டது.  இது கங்கைக் கரையில் உள்ள அரசர்களை வெற்றிகொண்டதன் அடையாளமாக இந்த நகரை உருவாக்கினார். இங்குள்ள சிவன் கோயில் உள்ள நந்தி மட்டுமல்லாமல் நாட்டியமாடும் விநாயகர் உட்பட சில அற்புதமான  சிற்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  இங்குள்ள சிங்கத் தலைக்கொண்ட கிணறு மற்றும் அரசர்  இராஜேந்திருக்கு பரமசிவன் பார்வதி தேவியும் முடிசூட்டும் அற்புத சிற்பங்கள் இக்கோயிலில் உள்ளன.

செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோவில்

செட்டிகுளம் தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் மற்றும் தண்டாயுதபாணி ஸ்வாமி கோவில்கள், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செட்டிக்குளம் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இது பெரம்பலூரில் இருந்து22  கிலோமீட்டர்களுக்கு அப்பால், திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் உள்ள ஆலந்தூர் வீட்டுக்கு எட்டு கிலோமீட்டர் மேற்காக இக்கோயில் அமைந்துள்ளது.  இது முற்கால கட்டிடக்கலையின் அம்சங்களை பிரதிபலிப்பதாக உள்ளது. ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஜனவரி மாதத்தில் பத்து நாட்களும் மற்றும் தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.  தொலைபேசி: 04328-268008.

சோழகங்கம் ஏரி

 சோழகங்கம் ஏரி தற்பொழுது பொன்னேரி என அழைக்கப்படுகின்றது.முதலாம் ராஜேந்திர சோழன் தனது வெற்றியை குறிக்கும் விதமாக " வெற்றி நீர் தூணாக"  இந்த ஏரியை உருவாக்கினான்திருவலங்காடு செப்பேடு இந்த ஏரியைந்த ஏரியின்  சோழகங்கம் என்றேன் குறிப்பிட்டுள்ளது.  இந்த ஏரி ஐந்து கிலோமீட்டர் பரப்பளவிற்கு பரந்து விரிந்து உள்ளது. இந்த ஏறினாள் 130 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட வயல்கள் நீர் வசதி பெறுகின்றன.  கொள்ளிடம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வாய்க்கால்கள் மூலம் இந்த ஏரிக்கு உபரி நீர் வழங்கப்படுகின்றது.

ஏலக்குறிச்சி அடைக்கல மாதா கோவில்

 ஏலக்குறிச்சி அடைக்கல மாதா கோவில் வீரமாமுனிவர் என்று அறியப்பட்ட பிரபலமான கத்தோலிக்க திருச்சபை பாதிரியார் ஜோசப்பெஸ்கி 1711ல்  கட்டிய பழமையான சர்ச்.  இந்த சர்ச்சில் அடைக்கல மாதா சொரூபம் லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்டது.  2011ம் ஆண்டு இந்த சர்ச்சை தமிழக அரசு சுற்றுலாத் தளமாக அறிவித்துள்ளது. சோழ மன்னன் இந்த சர்ச்சுக்கு  நிலக்கொடை அளித்ததை இங்குள்ள கல்வெட்டு சாசனம் தெரிவிக்கின்றது.  இது பெரம்பலூரில் இருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருச்சியிலிருந்து 80 கிலோ மீட்டர் மற்றும் சென்னையிலிருந்து 375 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

 ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டத்தின்  உண்மையான பெயர் நெல்லிமணகிராமம். இங்குள்ள சிவன் கோயிலில் தல மரமாக நெல்லி மரம் இருப்பதால் இவ்வூருக்கு இப்பெயர் வழங்கப்பட்டது. ராஜேந்திர சோழன் தனது தலைநகரை கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றும் பொழுது இப்பொழுது உள்ள ஜெயங்கொண்டம் என்ற பெயரையே அவ்வூருக்கு வைத்தார்.  இது கங்கை கொண்ட சோழபுரத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மங்கை மேடு

 மங்கை மேடு என்ற இவ்விடம்   மாளிகைமேடு என்றும் அழைக்கப்படுகின்றது. இது கங்கைகொண்டசோழபுரத்தின் அருகிலேயே அமைந்துள்ளது.  இங்கு நடத்தப்பட்ட அகழாய்வு ராஜேந்திர சோழனின் பெருமையை பறைசாற்றும் வகையாக உள்ளன.  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பதால் தொல்லியல் துறை இந்த இடத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

ரஞ்சன்குடி கோட்டை

ரஞ்சன்குடி கோட்டை பெரம்பலூர் மாவட்டத்தில் வடக்கு திசையில் 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இது கர்நாடகா நவாபிடம் ஜாகிர்தாராக இருந்த  ஒருவர் 17 ஆம் நூற்றாண்டில் இந்த கோட்டையை கட்டினர்.  நன்கு செதுக்கப்பட்ட கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ள இந்தக் கோட்டைவெவ்வேறு உயரத்தில் உள்ளன. கோட்டை காவலுக்கு ஆன தலம்.  அதைச் சுற்றி அகழி பாதுகாப்பு என்று கச்சிதமாக இந்தக் கோட்டை கட்டப்பட்டு உள்ளது.  இந்த கோட்டைக்குள் ஒரு மாளிகை (அரண்மனை),  குடியிருப்பு,  கட்டடங்கள்,  பாதாள அறை,  மசூதி மற்றும் கொடி மேடை ஆகியவை உள்ளன.  கடந்தகிபி 1751ல் ஆங்கிலேயரும் முகமது அலியும் ஒரு பக்கம்,  சந்தாசாகிப் மற்றும் பிரெஞ்சுக்காரர்களும் எதிர்ப்பக்கமாக நின்று நடத்திய வாலிகொண்டபா  போரின் காட்சிகளாக இக்கோட்டை திகழ்கிறது.  இது இந்திய அரசின் தொல்லியல் துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றது.

கரைவேட்டி பறவைகள் சரணாலயம்

 கரைவேட்டி பறவைகள் சரணாலயம் பெரம்பலூரில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  இதன் மொத்தப் பரப்பளவு 454  ஹெக்டர். இந்த சரணாலயத்திற்கு பெரும்பாலான நீர்ப்பறவைகள்  வருகின்றன. ஒவ்வொரு நவம்பர் மாதமும் இங்கு ஏராளமான பறவைகள் வலசை வரும்.  அச்சமயத்தில் 25  லட்சத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வருகை தரும்.

 சாத்தனூர் மரப் படிவு

சாத்தனூரிலிருந்து தற்பொழுது 100 கிலோமீட்டர் தொலைவில் கடல் உள்ளது.  ஆனால் 120, 000,000  வருடங்களுக்கு முன்னால் சாத்தனூரில் மேற்குப்பகுதியில் 8 முதல் பத்து கிலோமீட்டர் தொலைவில் கடல் இருந்ததாக புவியியல் துறை ஆய்வுகள் கூறுகின்றன.  இத்தொல்காலத்தில், இப்போதைய கடல்வாழ் உயிரினங்களை ஒத்த உயிரினங்களை,  கடல் காவு கொண்டது.  இந்த உயிரினங்கள் ஆறுகால அடித்துவரப்பட்ட மனலும்,  களிமண்ணும்  அரித்தன. இவற்றோடு கடலோரம் அல்லது கடற்கரையில் செழித்து வளர்ந்திருந்த மரங்களும் அழிவுக்கு உள்ளது கடலில் அடி ஆழத்துக்கு போயின. இதில் பெரிய மரம் ஒன்று பத்து கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட திருச்சிராப்பள்ளி பாறைக்கட்டில் தங்கி காலப்போக்கில் மரபடிவாயிற்று.  சாத்தனூரில் உள்ள இந்த மரப்படிவின் நீளம் 18 மீட்டர்கள்.  இது போன்ற சில மனப்பதிவுகள் கிலோமீட்டர்கள் நீளத்தில்,  வரகூர், அணைப்பாடி,  ஆலுந்தலைப்பூர் மற்றும் சாரதாப்பூர் ஆகிய ஊர்களில் இருக்கின்றன. இது 1940 ஆம் ஆண்டு புவியியல் துறையைச் சேர்ந்த  டாக்டர்  எம். எஸ். கிருஷ்ணன்  இந்த மரப்படிவு குதித்து முதன்முதலாக அறிவித்தார்.

திருவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில்

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் மிக பிரபலமான கோயில்களில் ஒன்று.  இங்கு எழுந்தருளி உள்ள மதுர காளியம்மன் மிகவும் சக்திவாய்ந்த அம்மனாக கருதப்படுகிறார்.  இங்கு ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பூசைகள் நடைபெறும்.  பங்குனி மாதம் கடைசியில் அம்மனுக்கு திருவிழா கொண்டாடப்படும்.  சித்திரை மாதம் முதல் நாள் தேர் திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படும்.

திருமானூர்

 திருமானூரில் நடராஜர் கையில் ஒரு மானுடன் நடனமாடியதாக உள்ளூரில் புராணக் கதை ஒன்று உள்ளது. இதனால் இந்த ஊருக்கு திரு + மான்+ ஊர் என்று அழைக்கப்பட்டது. மாமன்னர் ராஜராஜ சோழன் பெரம்பலூரில் இருந்து தஞ்சாவூருக்கு செல்லும் வழியில் 20 அடி உயரமுள்ள ஒரு சிலையை விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. வருடத்தில்  சில நாட்கள் சூரிய கதிர்கள் கர்ப்பகிரகத்தில் உள்ளே விழும்.

திருமழபாடி

திருமழபாடியில் பற்றி பிரபலமான புராணக்கதை ஒன்று உள்ளது.  முன்பு தாளவனம் என்று அழைக்கப்பட்ட இந்த ஊரில் மார்க்கண்டேய முனிவருக்காக மற்றுமொரு பிரபஞ்ச நடனத்தை வைகாசி மாதம்,  பௌர்ணமி அன்று,  அருளுவதாக நடராஜர் சிதம்பரம்.  ஏனெனில் சிதம்பரம் நடராஜர் ஆடிய ஆதி தாண்டவத்தை தாமதமாக வந்த காரணத்தால் மார்க்கண்டேய முனிவர் காண முடியவில்லை ஆகவே இந்த கிராமம் திரு-மழ-பாடி என்று அழைக்கப்படுகின்றது.  இந்த கோயிலில் உள்ள குளத்தில் குளித்தாள்,  ஒரு நோய் தீரும் என்றும் பிள்ளை பாக்கியம் கிட்டும் என்றும் மக்கள் நம்புகின்றனர்.

காமரசவல்லி

மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட கோவில்.  இங்கு சோழர் காலத்தைச் சேர்ந்த ஏராளமான ஏடுகள் இந்தக் கோயிலில் கண்டெடுக்கப்பட்டன. இங்கு அப்பர் சுவாமிகள் மேளதாளத்துடன் சக்கைய கூத்து ஆடிய நிலையில் காணப்படுகிறார். இந்த ஊர் அரியலூர் ரயில் நிலையத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
கள்ளன் குறிச்சி கோயில்
கள்ளன் குறிச்சியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலுக்கு மாவட்டத்திலுள்ள மக்கள் பெரும்பாலோர் இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.  இது அரியலூர் ஊருக்கு கிழக்கே ஐந்து கிலோமீட்டர் தொலைவில் கள்ளன் குறிச்சி கிராமம் அமைந்துள்ளது.

மேலப்பழுவூர்

மேலப்பழுவூர் தமிழ் துறவிகளின் சரணாலயமாக திகழ்ந்துள்ளது.  இந்த ஊர் வரலாற்றின் முக்கியமானவர்களாக திகழ்ந்த பழுவேட்டரையரின் தலைமையகமாகவும் முன்பு விளங்கியது.  இங்குள்ள குடைவரைக் கோயிலான விஷ்ணு கோயில் மிகச் சிறப்பு வாய்ந்தது.  ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பூஜைகள் நடக்கும்.  இந்த ஊர் அரியலூரில் இருந்து திருச்சிராப்பள்ளி வரும் சாலையில் உள்ளது.