நாகப்பட்டினம் மாவட்டம் : Nagapattinam in Tamil
நாகப்பட்டினம் மாவட்டம் சென்னையிலிருந்து 344 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த மாவட்டம் 2376 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இது ஒரு பழமையான நகரமாகும். இந்நகரம் நகரம் சோழர்களின் முக்கியமான மண்டலமாக விளங்குகிறது. இது மாமன்னர் ராஜராஜ சோழனின் மற்றுமொரு பெயரான சத்திரிய சிகாமணி என்ற பெயரால் அழைக்கப்பட்டது. இதற்கு தோழகுலவல்லி பட்டினம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதற்கு இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாறு உண்டு. இந்த மாவட்டத்தில் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த வேளாங்கண்ணி, நாகூர், பூம்புகார்,தரங்கம்பாடிஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. இந்த பகுதிகளை காண்பதற்கு வருடம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
நாகப்பட்டினம் சுற்றுலா இடங்கள் Nagapattinam Tourist Places in Tamil
நாகப்பட்டினம் மாவட்டம் கோயிலகள் Nagapattinam Temples in Tamil
சிக்கல்
சிக்கலில் உள்ள சிங்காரவேலன் முருகன் கோயில் மிகவும் புகழ்பெற்றது. இங்கு இந்த நூற்றாண்டின் அற்புத வண்ண ஓவியங்கள் உள்ளன. இக்கோயிலில் சிவா விஷ்ணு மற்றும் ஹனுமான் ஆகியோருக்கு மூலதளங்கள் உள்ளன. இங்கு வழிபட்டால் சிக்கல்கள் அனைத்தும் உடனே நீங்கும் என பக்தர்கள் நம்புகிறார்கள். முருக பக்தர்கள் அதிகமாக நாடி வரும் கோயில்களில் இதுவும் ஒன்று.
திருக்கடையூர்
திருக்கடையூர் ஆதி சிவனின் பெருமைகளை எடுத்துக்கூறும் எட்டு கோயில்களில் ஒன்று. தல புராணத்தின் படி மார்க்கண்டேயனின் ஆயில் பறிக்க வந்த எம் எல் ஏ சிவபெருமான் தடுத்தாண்டது இங்குதான். இது ஒரு மகத்தான சத்தி தலமும் கூட 'சொல்லடி அபிராமி' என்று அபிராமி பட்டர் அழகு தமிழில் உரிமையோடு அம்மையை அதட்டி அந்தாதி வாடிய ஞான தலம் இது. அறுபதாவது கல்யாண நாளை கொண்டாடுவதற்கான ஒரே தலம் இது. இது மயிலாடுதுறை ஆகும் தரங்கம்பாடிக்கு இடையே உள்ள பேருந்து தடத்தில் திருக்கடையூரில் உள்ளது.
வைத்தீஸ்வரன் கோயில்
வைத்தீஸ்வரன் கோயிலில் வைத்தீஸ்வரன், தையல்நாயகி, முத்துக்குமாரசாமி (சிவன், பார்வதி, முருகன்) ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். இது ஒரு பழமையான கோயிலாகும். இங்கு எழுந்தருளியுள்ள சிவன் நோய்களை குணப்படுத்தும் வைத்தீஸ்வரன் ஆக கருதப்படுகிறார். இங்குள்ள கோபுரங்கள் மண்டபம் தூண்கள் என்று கோயில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு உள்ள உறுப்பினர் பற்றி சைவ பெரியவர்கள்பாடல் பாடியுள்ளனர்.
மாசிலாமணி நாதர் கோயில்
மாசிலாமணி நாதர் கோயில் கிபி 1305 இல் குலசேகர பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது. இந்தக் கோயில் கடலரிப்பினால் கோவிலின் பாதி பகுதியை கடல் அழித்துவிட்டது விட்டது. மீதமுள்ள பகுதியில் இப்போது மக்கள் இறைவழிபாடு செய்கிறார்கள்.
நாகூர்
நாகூர் என்றவுடன் நாம் அனைவருக்கும் நினைவிற்கு வருவது நாகூர் தர்கா. நாகூர் தர்கா இஸ்லாமிய துறவி ஹஸ்ரத் மீருன் சுல்தான் சையத் சகாப்துல் ஹமீது (ஹசரத்மியன்) அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அவர் இஸ்லாமிய மார்க்கத்தை கூறும்பொழுது இஸ்லாமிய மார்க்கம் கடவுளின் தந்தையையும் மனித சகோதரத்துவத்தையும் போதிக்கிறது என்றார். அவர் தனது சீடர்களை பரவலாக அனுப்பி தீர்க்கதரிசி புனிதர் முகமது நபியின் செய்தியை மக்களிடம் கூறினார். இப்படி இறை பணி ஆற்றியவர் கிபி 1558இல் தனது அறுபத்தி எட்டாவது வயதில் கடவுள் அடி சேர்ந்தார். இவருடைய சமாதிதான் தற்போதைய நாகூர் தர்கா. இங்கு ஆண்டுதோறும் நாகூர் ஆண்டவருக்கு நடக்கும் தந்தூரி திருவிழா உலகப் புகழ் பெற்றது. அப்போது உலகம் முழுவதிலுமிருந்து பக்தர்கள் திரண்டு வருவார்கள். இது ஒரு கடலோர நகரம் மற்றும் வியாபாரம் முக்கியத்துவம் வாய்ந்த நகரம். தொலைபேசி: 04635-250117.
கோடியக்கரை
கோடியக்கரை நாகப்பட்டினத்திலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதன் மற்றொரு பெயர் பாயிண்ட்காலிமர் என்று அழைக்கப்படுகின்றது. இந்த வனவிலங்கு சரணாலயம் 312.17 ஹெக்டேருக்கு பரந்து விரிந்துள்ளது. இங்கு பாலூட்டி வகையை சார்ந்த புள்ளிமான், கடுங்கரடி, குரங்குகள் போன்றவையும், நாரை, கூழைக்கடா போன்ற நீர் பறவைகளையும். கடல் ஆமை, நட்சத்திர ஆமை விரியன் பாம்பு, போன்றவைகளையும். சில சமயங்களில் டால்பின், கடல் சிங்கம், கடற்பசு போன்ற நீரில் வாழ்பவையும் பார்க்கலாம். அதோடு இங்கு பவளப்பாறைகள் உருவாவதையும் இங்கு பார்க்கலாம். தொலைபேசி: 04365-253092.
தரங்கம்பாடி
தரங்கம்பாடி என்றாலே நம் நினைவுக்கு வருவது டச்சுக்காரர்களின் கோட்டை. டச்சுக்காரர்கள் இங்கு கிபி1620ல் இங்கு கரை இறங்கினர். இங்கு கோட்டையை பாதுகாக்க கடற்கரை ஓரத்தில் காப்பரண்கள் கட்டியுள்ளனர். சோழமண்டலக் கடற்கரையில் டச்சுக்காரர்களுக்கு என்று இருந்த ஒரே வர்த்தக மையம் இதுதான். டச்சுக்காரர்களின் வணிகம் இக்கோட்டையில் நடந்து வந்தது. கிபி 1845ல் இந்தக் கோட்டையை ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கும் வரை அவர்கள் வசமே இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு அரசு ஊழியர்கள் மற்றும் இராணுவத்துறை பணியாளர்களுக்கான பொதுப்பணித்துறை மாளிகையாக 1977 வரை பயன்பட்டது. அதே ஆண்டு காப்பிடப்பட்ட நினைவுச்சின்னமாக இதை தமிழக அரசு ஆவணத்துறை அறிவித்தது. இது நாகப்பட்டினத்திலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
டச்சு ஆளுநர் மாளிகை
டச்சு ஆளுநர் மாளிகை கிபி 1784 இல் டச்சு நாட்டு ஆளுநர் ஒருவர் இந்த மாளிகையில் தங்கினார். அதனால் இந்த மாளிகையை டச்சு ஆளுநர் மாளிகை என அழைக்கப்படுகின்றது.
டச்சுக் கோட்டை
டச்சுக்கொட்டைக் கிபி 1920இல் டச்சுக்காரர்களால் கட்டப்பட்டது. இந்த கோட்டை டச்சுக்காரர்களின் கட்டடக் கலையின் சிறப்பை எடுத்துக்கூறுகிறது. இந்த கோட்டை தற்போது தமிழக ஆவண காப்பாக துறையின் பொறுப்பில் உள்ளது. இதில் ஒரு அருங்காட்சியகமும் உள்ளது. இந்த அருங்காட்சியகத்திற்கு வெள்ளிக்கிழமை விடுமுறை.
நாகப்பட்டினம் கடற்கரை
இந்த கடற்கரை பழமையான கடற்கரைகளில் ஒன்று. இங்கு வருவார்கள் வாலிபால் கட்டுமர சவாரி போன்ற விளையாட்டுகளில் ஈடுபடலாம்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை காவிரி ஆற்றங்கரையில் உள்ள இந்த ஊரைச் சுற்றி மாயூரநாதசுவாமி கோயில், பரிமள ரங்கநாதர் சுவாமி கோயில், காசி விசுவநாத சுவாமி கோயில், புனுகேஸ்வரர் கோயில், வதனேஸ்வரர் கோயில், அய்யாரப்பர் கோவில் என்று ஏராளமான கோயில்கள் உள்ளன.
பூம்புகார்
பூம்புகாரில் மற்றொரு பெயர் காவிரிப்பூம்பட்டினம். இது முன்காலத்தில் சோழர்களின் துறைமுகப்பட்டினமாக இருந்தது. இந்த ஊர் காவிரி கடலும் சங்கமிக்கும் இடமாகும்.சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள கோவலனும் கண்ணகியும் இந்த ஊரில் தான் வாழ்ந்தவர்கள். வரலாற்றைக் கூறும் வகையில் இங்கு சிலப்பதிகார கலைக்கோயில் சிற்பங்கள் சிலப்பதிகாரத்தின் முக்கிய காட்சிகளை கண்முன் நிறுத்துகின்றன.
சீர்காழி
சீர்காழியில் உள்ள சிவன் கோவில் தமிழகத்திலேயே அதிக சக்தி வாய்ந்த கோயிலாக கருதப்படுகிறது. ஞானசம்பந்தர் இந்த ஊரில்தான் பிறந்தார் புகழ்பெற்ற கர்நாடக சங்கீதப் பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் இந்த ஊரில் தான் பிறந்தார்.
டவுன் கேட்வே
இது கிபி1792ல் டச்சுக்காரர்களால் டச்சு கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்ட தலைவாசல். பின்னர் இதை ஏ.எஸ்.ஐ மாற்றி அமைத்தது.
தில்லையாடி வள்ளியம்மை நினைவகம்
தில்லையாடி வள்ளியம்மை இந்திய சுதந்திர சுதந்திரப் போராட்டத்திற்காக பாடுபட்ட மிகச்சிறந்த தலைவர்களுள் ஒருவர். இவர் சிறு வயதிலேயே சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்றார். இவரைப் பற்றி மகாத்மா காந்தியடிகள் கூறும் பொழுது "வள்ளியம்மை தேசபக்தியின் மொத்த திரு உருவம். இந்த பெண்ணின் திருவுருவே எவரின் மனதிலும் தேசபக்தன் ஞானத்தீயை ஒளிர செய்துவிடும்" என்று கூறுகிறார். தில்லையாடி வள்ளியம்மை 22.2.1914 ல் இறந்தார். இவர் நினைவாக 13-8-71 தில்லையாடி கிராமத்தில் இவர் நினைவகம் திறக்கப்பட்டது. இதில் இவரின் வரலாறு, புகைப்பட காட்சிகள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. இங்கு ஒரு நூலகமும் உள்ளது.
திருக்கண்டியூர்
விடுதலைப் போரின் முக்கிய போராட்டமான உப்பு சத்தியாகிரகம் இங்குதான் அரங்கேறியது. திருக்கண்டியூரில் உள்ள பிரம்ம ஸ்ரீ கந்தீஸ்வரர் மற்றும் ஹர்சவிமோசன பெருமாள் கோயிலின் சிலைகள் மற்றும் சிற்ப வேலைபாடுகளை சிறப்பு பெற்றவை.
வேதாரண்யம்
வேதாரண்யத்தின் மறுபெயர் திருமறைக்காடு. இங்கு நடைபெறும் பௌர்ணமி திருநாள் மிகவும் சிறப்புடையது. இது ஜூலை-ஆகஸ்ட் மற்றும் ஜனவரி- பிப்ரவரி ஆகிய மாதங்களில் இங்கு நடைபெறும்.
வேளாங்கண்ணி
வேளாங்கண்ணி மாதா கோயில்
வேளாங்கண்ணி மாதா கோவில் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் அனைத்து மதத்தினரையும் அரவணைத்து ஆரோக்கியத்தை அள்ளித் தரும் ' ஆரோக்கியம் மாதா' அன்னை மரியாளின் இந்த திருச்சபை நெடு மாடம் இரண்டு கட்டுக்கள் கொண்டது. ஒன்றில் இயேசு பிரானின் சொரூபம் உள்ளது. மற்றொன்றில் குழந்தை ஏசுவை ஏந்தியபடி துயர் தீர்க்கும் தாயாக தூய மாதா எழுந்தருளியுள்ளார். தொலைபேசி: 04365-263423, 263512.
திரு அருங்காட்சியகம்
ஆரோக்கிய மாதா கோவிலுக்கு எதிரே இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இங்கு பக்தர்கள் அன்னைக்கு காணிக்கையாக தரும் அரிய பொருட்கள் உள்ளன. புதிய விவிலியத்தின் முக்கிய நிகழ்வுகள் இரு பக்கங்களிலும் சித்தரிக்கப்பட்டுள்ளன.
சீயோன் சர்ச்
சீயோன் சர்ச் புதிய ஏற்பாட்டிலுள்ள தெய்வீக மலையின் பெயர் உருவான சர்ச். இந்த சர்ச் கிபி 1782ல்கட்டப்பட்டு பின்னர் கிபி 1782 ல் புதுப்பிக்கப்பட்டது.