சேலம் மாவட்டம் : Salem in Tamil

சேலம் என்றால் நம் நினைவுக்கு வருவது சேலத்து மாம்பழம் ஆகும். அது மட்டுமின்றி  சேலம் ஜவ்வரிசி உற்பத்திக்கும், பாக்சைடு தனிமம்,  லாரி கட்டுமானம்,  கைத்தறி நெசவு,  இரும்பு தொழிற்சாலை,  போன்றவற்றிற்கும் புகழ்பெற்றது. இந்நகரம் பெயர்  சேலம் என்பதற்கு கல்வெட்டின்படி மலை சூழ்ந்த நகரம் சேலா அல்லது ஷல்யாஎன்ற வார்த்தையில் இருந்து தான் சேலம் என்று பெயர் மாறி இருக்க வேண்டும். தமிழ் மூதாட்டி அவ்வை பிறந்த ஊர் என்பது இவருக்கான மற்றொரு தனிச்சிறப்பு.  சேலம் நகரில் வடக்கே நாகர் மலை,  தெற்கில் சீரக மலை,  மேற்கில் காஞ்சனமாலை,  கிழக்கில் கொடுமலை  ஆகிய மலர்கள் நிலத்தை சூழ்ந்துள்ளன. சேலம் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தளமாக ஏற்காடு,  மேட்டூர் அணை,  சங்ககிரி கோட்டை மட்டும் சேர்வராயன் மலை போன்ற பகுதிகள் மிகப் பெருமளவு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக உள்ளது. சேலம் சென்னையிலிருந்து 334  கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

சேலம் சுற்றுலா இடங்கள் Salem Tourist Places in Tamil

ஏற்காடு

சேலத்தில் உள்ள முக்கியமான சுற்றுலாத்தலமாக  ஏற்காடு விளங்குகிறது. இது ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படுகின்றது.  இங்கு பெரிய ஏரி, பொட்டானிக்கல் கார்டன்,  படகு குழாம், கிளியூர் அருவி,  லேடீஸ் சீட்,  பகோடா பாயிண்ட்,  சேர்வராயன் காவேரி அம்மன் கோயில்,  பொய்மான் கரடு  போன்றவை ஏற்காட்டில் உள்ள முக்கியமான பார்க்க வேண்டிய பகுதிகள் ஆகும்.

ஜமா மசூதி

ஜமா மசூதி  சேலம் மாவட்டத்தின் இதே பகுதியில் அமைந்துள்ளது.  இது மணிமுத்தாறு தென் கரையில் அமைந்துள்ளது. இந்த மசூதியை  மைசூரை ஆண்ட மாவீரன் திப்பு சுல்தான் கட்டப்பட்டது.  ஆங்கிலேயே அரசு இந்த மசூதிக்கு கிபி 1880-ல்  மானியம் வழங்கியது. தொலைபேசி: 0427-2267227.

திருமங்கலம் கைலாசநாதர் கோயில்

திருமங்கலம் கைலாசநாதர் கோவில் கைலாசநாதர் மற்றும் சிவகாமியோடு கோயில் கொண்டு உள்ளார். இது பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.  இக்கோயில் கிபி 17-ஆம் நூற்றாண்டில் கட்டி முதலி அரச பரம்பரையினரால் விரிவாக்கம் செய்யப்பட்டது.  மும்முடிச் சோழன் அவனைத்தொடர்ந்து  சீயாழி என்னும் அரசனும் பழைய கோவிலைப் புதுப்பித்து திரு விழாக்கள் நடத்தினர்.  இக்கோயில் முழுவதையும் கட்டியவர் வணங்காமுடி ஆகும்.  மேற்கு பார்த்த இக்கோயிலைச் சுற்றி பெரிய கற்சுவர்  306 அடிக்கு 164 அடி அளவில் அமைக்கப்பட்டுள்ளது.  இந்தச் சுவர் 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறப்படுகின்றது.  ஆலயத்தின் தலை வாசல் கோபுரம் 90 அடி உயரத்தில் ஐந்து அடுக்குகளைக் கொண்டது.சக்கரங்கள் பொருத்திய ரதத்தை யானைகளும் குதிரைகளும் இழுத்து செல்வதாக இக்கோபுரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆகஸ்டு-செப்டம்பர்,  பிப்ரவரி-மார்ச்  மாதங்களில் மாலை சூரிய கதிர்கள் நுழைவு வாயில் கோபுரம் வழியாக மண்டபத்துக்குள் நுழைந்து கைலாசநாதர் மீது விழும்.

மேட்டூர் அணைக்கட்டு

மேட்டூர் அணைக்கட்டு உலகின் மிகப் பெரிய அணைக்கட்டுகளில் ஒன்று. இது1934-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இதன் மொத்த நீளம்1700  மீட்டர்கள்.  இங்குள்ள மேட்டூர் நீர் மின் திட்ட  உற்பத்தி மிகவும் பெரியதாகும்.  இங்குள்ள பூங்கா நீர்மின் திட்ட ஆலைப்பகுதிகள், மலையின் மற்ற எல்லா பகுதிகளும் இணைந்து மேட்டூர் அணையை ஒரு சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது.  

சங்ககிரி கோட்டை

சங்ககிரி கோட்டை  சங்ககிரி மலை மீது அமைந்துள்ளது.  இக் கோட்டையின் உட்புறத்தில் 6 கோட்டைகள்,  5 கோயில்கள், 2 மசூதிகள்  ஆகியவை உள்ளன. இந்தக் கோடையில் திப்பு சுல்தானும்,  தீரன் சின்னமலையும் பயன்படுத்திய போர் ஆயுதங்கள்,  கைத்துப்பாக்கிகள், ஆபரணங்கள் ஆகியவை இங்கு உள்ளன.  நகரி கோட்டைக்கு செல்லும் வழியில் செயின்ட் ஆண்டனி தேவாலயம் உள்ளது.