மதுரை நாயக்கர் வரலாறு : Madurai Nayakar History in Tamil

மதுரை நாயக்கர் வரலாறு  (கிபி 13  முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை)

 கிபி 1310ல் ஏற்பட்ட  முகமதியர் படையெடுப்பினால்  தமிழகம் அச்சத்திற்கும் குழப்பத்திற்கும் உள்ளாகியது.  மேலும் தக்காணத்தே பிஜப்பூர்,  அகமத் நகர், பீதர், பீடார்,  கோல்கொண்டா எனும் 5  பாமினி அரசுகள் தோன்றி ஆண்டனர்.  சைவ வைணவ சமயங்கள் பொலிவிழந்தன. கோயில்கள் இடிக்கப்பட்டன,  பொருட்கள் கொள்ளை போயின.  முகமதியச்  சமய வெற்றியினை  தகர்க்கவும்  சைவ வைணவத்தை மீண்டும் பொலிவு பெறச் செய்யவும்,  இந்து தர்மத்தை காக்கவும்,  கிபி 1336ல்  புக்கர், ஹரிஹரர்  என்ற சகோதரர்கள் துங்கபத்திரையிண்  தெற்கே  ஆணைக் குந்தியில் விஜயநகர பேரரசு தோற்றுவித்தனர்.

குமார கம்பண்ணன்

 முதலாம் புக்கரின்   மகன் குமார கம்பண்ணன்  விஜயநகர பிரதிநிதியாக விளங்கிய சிறந்த படைத் தலைவர்.  தெற்கே படையெடுத்து,  மதுரை,  தொண்டை நாடு முதலான பகுதிகளை கைப்பற்றினார்.  இந்த வெற்றிக்கு மன்னனின் போர்த்திறனும் அமைச்சர்களின் அறிவாற்றலும் பெரும் பங்கு வகித்தனர்.  சைவமும் வைணவமும் புத்துணர்ச்சி பெற்றன.

 முகமதியர் ஆதிக்கம்  தெற்கே தடுத்து நிறுத்தப்பட்டது.  இந்து ஆலயங்கள் புதுப்பிக்கப்பட்டன  மற்றும்  விரிவாக்கப்பட்டன.  கம்பணனின் மனைவி கங்காதேவி எழுதிய  'மதுரா விசையம்' என்னும் நூலில் அக்கால அரசியல்,  சமுதாய மாற்றங்கள்  முதலியன விரிவாகக் கூறப்பட்டுள்ளன.  செஞ்சி,  தஞ்சை,  மதுரை ஆகியவை விஜயநகர பேரரசால் ஆளப்பட்டன.  தெலுங்கு மொழி செல்வாக்குப் பெற்றது. கிருஷ்ணதேவராயரின் விஜயநகர பேரரசில்  நாயக்க மன்னர்கள் தலைசிறந்து விளங்கினர்.

விசுவநாத நாயக்கர்  கிபி 1529-1564

மதுரை, நெல்லை,  சேலம்,  நாஞ்சில்  முதலிய பகுதிகளை ஆண்டார். விஸ்வநாதர் வெற்றிக்கெல்லாம் பெரும் காரணமாய் திகழ்ந்தவர் காஞ்சி அரியநாத முதலியார் ஆவார்.  விஜய நகர பேரரசின் கீழ் குறுநில மன்னர்களும்  ஆட்சி புரிவதற்கு  ஏதுவாக72  பாளையப்பட்டுகள் ஏற்படுத்தப்பட்டன.  இப்பாளையபட்டுகளை ஏற்படுத்திய பெருமை அரியநாத முதலை அழுக்கு சேரும்.  பாளையப்பட்டுகளில் எட்டயபுரம்,  பாஞ்சாலங்குறிச்சி,  புதுக்கோட்டை முதலியவை குறிப்பிடத்தக்கன.  மதுரை மீனாட்சி கோயில்,  ஸ்ரீரங்கம் கோயிலும்,  திருச்சி தெப்பக்குளம் புதுப்பிக்கப்பட்டன.  விசுவநாத நாயக்கர் மக்கள் போற்றும் விசுவாசமன்னராக திகழ்ந்தார்.

கிருஷ்ணப்ப நாயக்கர்  கிபி 1564-1572

 கிருஷ்ணப்ப நாயக்கர்  கிபி 1565ல்  ஏற்பட்ட தலை கோட்டை யுத்தம் முக்கியமானது.  இது விஜயநகரப் பேரரசுக்கும் பாமினி சுல்தான்களுக்கும் ஏற்பட்ட போராகும்.  இதனால் விஜயநகர பேரரசு குன்ற ஆரம்பித்தது.  நாயக்கரும் வரி கொடாது உரிமைக்குரல் எழுப்பினர்.  அதுபோல் தன்னை எதிர்த்த தும்பிச்சி நாயக்கரை வென்றார்.  பாளையங்கோட்டைக்கு அருகிலுள்ள கிருஷ்ணாபுரம் என்ற  பெருமாள் கோவிலைக்  கட்டினார்.

வீரப்ப நாயக்கர்  கிபி 1572  முதல் 1595

வீரப்ப நாயக்கர் காலத்தில் கோட்டைகள் விரிவாக்கப்பட்டன.  திருச்சியிலும் அருப்புக்கோட்டையிலும் புதிய கோட்டைகள் கட்டப்பட்டு விரிவாக்கப்பட்டன.  இராஜ கோபுரங்கள்  நூற்றுக்கால்,  ஆயிரங்கால் மண்டபங்கள் கட்டப்பட்டன.  மண்டபங்கள் மன்னர்களின் பெயர்களை பெற்று விளங்கின.  வீரப்ப நாயக்கர் காலத்தில் மேனாட்டார்,  குறிப்பாக கிறிஸ்தவர் வருதலும், தங்குதலும், தம் கொள்கைகளை பரப்புதலும் ஏற்பட்டன.  

இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர்  கிபி 1595-1601

வீரப்ப நாயக்கர் எடுத்து  இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர்  ஆட்சிக்கு வந்தார்.  இவர் காலத்தில் தளவாய் அரியநாதர் மறைந்தார் என்பர்.

முத்துக் கிருஷ்ணப்ப நாயக்கர்  கிபி 1601-1609

மறவர்களிடையே பூசல்கள் நிகழ்ந்தன.  சொத்துக்கள் பறிபோயின.  சடையக்கத் தேவரைச்  சேது மன்னராக்கி நாடு காத்தார். இராமநாதபுரத்தில் அமைதியை ஏற்படுத்தி  இராமேஸ்வரம் முதலிய  கோவில்களுக்கு மானியம் வழங்கினர்.  இராபர்ட். டி.  நொபிலி  என்ற இத்தாலிய நாட்டு பாதிரியார் வருகை தந்தார்.  தூய வாழ்வினால் கிறிஸ்தவ உபதேச மொழிகளை மக்களிடையே பரப்பினார்.  குறிப்பாக உயர்ந்த மக்களை அல்லது சமூகத்தைக்  கிறித்தவ இயக்கத்தில் சேர்த்தார்.

 முத்துவீரப்பர் I கிபி 1609-1628

விஜயநகரப் பேரரசை எதிர்த்தவர்.  செஞ்சி நாயக்கரும் வீரப்ப நாயக்கரும்  கப்பம் கட்ட மறுத்தனர்.  தஞ்சை நாயக்கரை எதிர்க்கத்  தலைநகரை திருச்சிக்கு மாற்றினார்.  பாளையக்காரர்கள் கப்பம் கட்ட மறுத்ததால் போர்கள் பல ஏற்பட்டன.

திருமலை நாயக்கர்  கிபி 1628-1659

திருமலை நாயக்கர் நாயக்க மன்னர்களின் மிகச் சிறந்தவர்.  மதுரை தலை நகராகி கொண்டவர்.  சுயாட்சிக் கொள்கையை பரப்பினார்.  மைசூர் போர் இவர் காலத்தில் பெரும் போராயிற்று. தளவாய் இராமப்பையன்  இவர் வெற்றிகளுக்கு பலமாக இருந்தார்.  மறவர் நாட்டில் சண்டைகள் சகோதரர்களுக்கு இடையே நடந்ததினால் அந்நாட்டை மூன்றாகப் பிரித்து இரகுநாத தேவர்,  நக்க தேவர், தம்பி தேவர் ஆகியோர்களை ஆள செய்தார்.

விஜயநகர பேரரசிற்கும்,  நாயக்கருக்கும் பகைமை வளர்ந்தது.  இதனால் பாமினி சுல்தான்கள் கை ஓங்கியது.  மதுரை,  செஞ்சி,  தஞ்சை,  வேலூர் முதலியன தாக்கப்பட்டன.  நாடுகள் சுல்தான்கள் வசமாகின.  வேலூர் அரசர் சிரங்கர் திருமலை நாயக்கர் மீது படையெடுத்தார்.  கோல்கொண்டா சுல்தானால் சிரங்கர் தோற்றார். மைசூர் போர்களில் மூக்கறுப்பு போர் குறிப்பிடத்தக்கது.  இரகுநாத சேதுபதி திருமலை நாயக்கருக்கு துணையாக இருந்து மைசூர் வீரர்களை தன் வலிமையால் தோற்கடித்தார். திருமலை நாயக்கர் காலத்தில் போர்த்துக்கீசியர் டச்சுக்காரர்கள் ஆகியோர் வணிகத்தையும்,  தம் சமயத்தையும் பரப்பினர்.  திருமலை நாயக்கர் மதுரையில் பல விழாக்களை வருடம் தோறும் கொண்டாட செய்தார். அவற்றுள் நவராத்திரி விழா குறிப்பிடத்தக்கது.  மதுரையில் திருமலை நாயக்கர் மஹாலை கட்டினார். பல சத்திரங்களைக்.  குமரகுருபரர் இவர் காலத்தில் வாழ்ந்தவர்.

இரண்டாம் முத்துவீரப்பர்

இரண்டாம் முத்துவீரப்பர் 1659ல் பதவியேற்றுசில மாதங்களை ஆண்டார்.

சொக்கநாத நாயக்கர்  கிபி 1659-1682

சொக்கநாத நாயக்கர் சிறந்த வீரராக விளங்கினார்.  இவர் காலத்தில் முதலமைச்சர், செயலாளர்,  படைத்தலைவர்  ஆகியோர் நாட்டாட்சிக்குத் தீமை செய்தனர்.  மக்களை துன்புறுத்தி வரிவசூல் செய்தனர்.  மன்னர் இவர்களை அடக்கி நாட்டை காத்தார்.  புதுக்கோட்டை மானாமதுரை முதலிய பகுதிகளை வென்றார்.  செஞ்சியை  கைப்பற்றினார்.  தஞ்சை அரசர் விஜயராகவ நாயக்கர் மகளை மணக்க விரும்பினார்.  தஞ்சை மன்னர் மறுத்ததால் போர் ஏற்பட்டது.

பின் தஞ்சையில் அழகிரி நாயக்கர் பதவியேற்றார்.  அழகிரிக்கு பின் செங்கமலதாஸ் ஆண்டான்.  தஞ்சையில் குழப்பமும் போட்டியும் மிகுந்தது.  பிஜப்பூர் சுல்தான் ஏகோஜி படைத் தலைவரால் தஞ்சை கைப்பற்றினர்.  பின் ஏக் கோஜியே தந்தையே ஆண்டார்.  இவ்வாறு மராட்டியர் ஆட்சி தஞ்சையில் நிலைத்தது.  ஏகோஜி முறைகேடாக ஆண்டவனால்,  சிவாஜி சாந்தாஜியைஅனுப்பி வென்றான்.  சொக்கநாதர் மக்களால் மதிக்கப்படவில்லை.  இவருக்குப் பின் முத்துலிங்க நாயக்கர் ஆண்டார். படைத்தலைவன் ருஸ்தும்கான் இதை எதிர்த்தார்.  இராமநாதபுரத்தை ஆண்ட கிழவன் சேதுபதி சொக்கநாதருக்கு இறுதிவரை உதவி செய்தான்.  சொக்கநாதர் ஆட்சியில் மக்கள் துன்புற்றனர்.  போர்கள் ஓயவில்லை.

 மூன்றாம் முத்துவீரப்பர் III  கிபி 1682-1689

ராணி மங்கம்மாள் மகன். தந்தை சொக்கநாதர் இவர் ஆட்சி காலத்தில் மதுரை நான்காக பிரிக்கப்பட்டு சிக்கராயர் (மைசூர்),  சாம்பாஜி (செஞ்சி),  ஏக்கோஜி (தஞ்சை),  சேதுபதி(இராமநாதபுரம்)  ஆகிய நால்வரால் ஆளப்பட்டது.  இத்தகைய சூழ்நிலையில்மதுரையை வென்றார்.  மக்களின் நன்மதிப்பை பெற்றார். ஒருவனுக்கு ஒருத்தி என்னும் முறையில் வாழ்ந்து காட்டிய உத்தமர்.  இவர் காலத்தில் போர்த்துக்கீசியர் செல்வாக்கினை அடைந்தனர்.  அந்தனர் உயர்ந்த பதவிகளை பெற்றனர்.  சாதிகள் பெருகின.

இராணி மங்கம்மாள்  கிபி 1689-1706

முத்துவீரப்பரின் மகன் விஜயரங்க சொக்கநாதர் சிறுபிள்ளையாய் இருந்தமையால்,  இராணி மங்கம்மாள்(பாட்டியார்)  நாடாண்டால். அக்காலத்தில் டெல்லியில் முகலாய பேரரசு அவுரங்கசீப்பால் ஆளப்பட்டது.  இராணி மங்கம்மாளுக்கு  மைசூரும், தஞ்சையும்  பகை நாடுகளாக விளங்கின. அவுரங்கசீப் சுல்பிகார் கான்  என்ற படைத்தலைவன் மூலமாய் கப்பம் பெற்று வருமாறு அனுப்பினார்,  இராணி மங்கம்மாள் தஞ்சை,  மைசூரை  எதிர்க்க உதவும் எனக் கருதி முகலாய பேரரசிற்கு கப்பம் செலுத்தினார்.  திருவாங்கூர் மன்னன் கப்பம் கட்ட மறுக்கவே,  1697ல்  இராணி மங்கம்மாள் தளவாய் நரசப்பையன் என்பவரால் ஒரு எடுக்க செய்து திருவாங்கூர் மன்னனை வென்றார்.  அவ்வாறு தளவாய் நரசப்பையன் பேராற்றலால்  தஞ்சை,  மைசூர் பகுதிகளையும் வென்றார்.  சேதுபதி,  மங்கம்மாள் ஆட்சியில் செல்வாக்கை பெற்றார்.  போர்கள் பல நிகழ்ந்தன.  சேதுபதி மறவர் சுயாட்சியை நிறுவினர்.  மங்கம்மாள் எச்சமயத்தையும் சமமாய் நடத்தினார்.  அற நிலையங்களை ஏற்படுத்தினார்.  மக்கள் போற்றும் சிறந்த அரசியாய் விளங்கினார்.

விஜயரங்க சொக்கநாதர்   கிபி1700-1732

நாட்டு ஆட்சியில் பற்றற்றவராக திகழ்ந்தார்.  இவர் சமயப்பற்றும் சமயப்பணியும் இவரைப் பெரிதும் ஆட்கொண்டிருந்தது.  கோயில்களை காப்பதும்,  கட்டுவதும்  தம் அரசின் கொள்கையாக கருதினார். மேலும் இவர் காலத்தில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது.  மக்கள் துன்புற்றனர்.  அரசியலில் ஒழுங்கீனங்கள் வளர்ந்தன.  சேலம்,  கோவை முதலிய பகுதிகள் தனியாக பிரிந்து.  மறவர்கள் சுயாட்சி பெற்று 36  ஆண்டுகளுக்கு மேலாக ஆண்டனர்.

 மீனாட்சி அம்மாள்  கிபி 1732-1736

சொக்கநாத நாயக்கரின் மனைவி மீனாட்சிக்கு மகப்பேறு இல்லாமையினால் தானே ஆண்டாள். திருமலை நாயக்கர் மரபில் வந்த விஜயகுமார்ணைச் சுவிகாரம் எடுத்துக் கொண்டார். இவர் ஆட்சி காலத்தில் கர்நாடக நவாப்புகள்  பல போர்களை செய்தனர்.  பங்காரு நாயக்கர் மீனாட்சிக்கு பகையாய் விளங்கினார். இதைப் பயன்படுத்தி சந்தாசாகிப்  கிபி 1736ல்  மீனாட்சிக்கு சாதகமாக இருப்பது போல்முதலில் பங்காரு நாட்டின் மீது படையெடுத்து வென்றான்.  கங்காருவின் திண்டுக்கலை கைப்பற்றியதும் மீனாட்சி சிறை செய்தான்.  அவமானம் தாங்காத அரசி  விஷ அருந்தி மாண்டாள்.  மீனாட்சி அரசியுடன் 200  ஆண்டுகள் ஆண்ட நாயக்கர் ஆட்சி முடிவு பெறக்  கருநாடகத்தில் நவாபுகள் ஆட்சி  ஓங்கியது.