புதுக்கோட்டை தொண்டைமான்கள் கிபி 1661 முதல் கிபி 1807 வரை : Pudukkottai Thondaiman History in Tamil

தமிழ்நாட்டில்  கிபி பதினேழாம் நூற்றாண்டில்  3 வம்சங்கள் தமிழ்நாட்டு அரசியலில் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தின.  இராமநாதபுரம் சேதுபதி,  சிவகங்கை சீமை,  புதுக்கோட்டை தொண்டைமான் வரலாற்றைப் பற்றி பார்ப்போம்.

தொண்டைமான் மன்னர்களின் தோற்றம்

தொண்டைமான் மன்னர்கள் பூர்வீகத்தில்,  திருப்பதி மலையில் வாழ்ந்த கள்ளர் மரபினர் ஆவார்.  கிபி பதினைந்தாம் நூற்றாண்டில்,  விஜயநகர் நாயக்கர் ஆட்சி  ஏற்பட்டதன் விளைவாக,  இவர்கள் நாட்டின் தெற்கு பகுதிகளுக்கு குடியேறினர்.  இவர்கள் முதலில் 'திருச்சி  அன்பில்'  ஊரில் குடியேறினர்.  இவர்களில் 'கறம்பக்குடி'   பகுதி  கள்ளர்கள் நாட்டை  ஆள்பவராக  இருந்தனர்.  ஆகவே அவர்கள் ' தொண்டைமான்கள்' என்று அழைக்கப்பட்டனர்.   கிபி 1639ம்  ஆண்டில் விஜயநகர பேரரசரான மூன்றாம்   வெங்கடராயர் கரம்பக்குடி வழியாக வந்தபோது,  அவரது யானைகளுள் ஒன்றுக்கு மதம் பிடித்துவிட்டது. அப்போது   தொண்டைமான் வம்சத்தை சார்ந்த 'ஆவுடைராய தொண்டைமான்' விரைந்து சென்று  அந்த யானையை அடக்கினார்.  இதனால் மகிழ்ச்சியடைந்த விஜயநகர மன்னர் தொண்டைமானை சிற்றரசன் ஆக்கினார்.  அவருக்கு ராய ராக்ஷத்த,  நாயே வச்சிடு,  ராய மன்னிடுராய  என்ற பட்டங்களை அழித்து,  அரசர்களுக்கு உரித்தான அம்பாரி யானை,  முரசு யானை,  சிங்கமுக பல்லாக்கு ஆகியவற்றை வைத்துக்கொள்ள அனுமதி அளித்தார்.  பிறகு இவர்கள் புதுக்கோட்டை பகுதியை ஆண்டனர்.

ரகுநாதராயத் தொண்டைமான் கிபி 1661 முதல் கிபி 1730 வரை

இவர் புதுக்கோட்டை தொண்டைமானின் 'முதல் அரசர்'  ஆவார்.  இவர் கிபி 1661 இல் பொறுப்பேற்றார்.  இவர் தஞ்சை  அச்சுத  விஜயராகவ  நாயக்கரின்  போர்களில் கலந்து அவருக்கு வெற்றியை தேடி தந்தார்.  ஆகவே,  தஞ்சை நாயக்கர் அவருக்கு ஒரு பெரிய ' ராமபாணம்'  என்ற வாளை அளித்தார்.  மதுரையில்  இராணி  மங்கம்மாளுக்கு 'ருஸ்தம்கான்'  என்பவனால் தொல்லை இருந்தது.  ஆகவே அவரை அடக்க புதுக்கோட்டை ரகுநாதராயத்  தொண்டைமான் உதவியை  நாடினார்.   ரகுநாதனும்,  மங்கம்மாளுக்கு உதவி செய்து,  அவரை ருஸ்தம்கான்  பிடியில் இருந்து காப்பாற்றினார்.  இதற்கு நன்றியாக இராணி மங்கம்மாள்,   ரகுநாத ராயத் தொண்டைமானை,  பன்னிரண்டு  கள்ளர்  குடிகளுக்கு தலைமையாக இருக்கும் உரிமையையும்,  திருச்சியில் ' அரசு காவலராக'  இருக்கும் உரிமையையும் கொடுத்தார்.   இராமநாதபுரம் கிழவன் சேதுபதி,  தொண்டைமானின் வீரத்தை கேள்விப்பட்டு, தன்னுடைய  படைக்கு  தலைவராக்கிக் கொண்டார்.  தொண்டைமானும்,  இராமநாதபுரம் சேதுபதி பல போர்களில் உதவியதால்,  அவரை புதுக்கோட்டைப் பகுதிகள்  முழுவதற்கும் மன்னராக செய்தார்.

 விஜயரகுநாதராய தொண்டைமான்  கிபி 1730 முதல் 1769 வரை

இவருடைய காலம் தமிழ்நாட்டு வரலாற்றின்  மிகவும் சிக்கலான காலமாகும்.  மதுரையில்,  மீனாட்சி அரசிக்கு எதிராக  பங்காரு திருமலை நாட்டை ஆளும் உரிமையைக் கேட்டுப்  போரிட்டார்.  அதற்கு உதவியாக புதுக்கோட்டை தொண்டைமானும்  உதவினார்.  ஆனால் அதே நேரத்தில்,  ஆற்காடு நவாப் தோஸ்த்  அலியின் அறுகின் மருமகன் சந்தாசாகிப்,  மீனாட்சிக்கு உதவி வந்தார்,  எனவே சந்தாசாகிப்,  புதுக்கோட்டையை தாக்கி ' திருக்கோகர்ணம்'  என்ற இடத்தில் பெரும் சேதம்  விளைவித்தார்.

இதற்கடுத்து  தஞ்சை மராத்திய படையெடுப்பை இரகுநாதராயத் தொண்டைமான்  சந்தித்தார்.  அப்போது மராட்டிய மன்னராக விளங்கிய  ஏகோஜி தன்னுடைய தளபதி  'ஆனந்த ராவின்'   தலைமையில்  புதுக்கோட்டையைத்  தாக்கினார்.  ஆனால்,  தொண்டைமான் வீரத்துடன் போராடி,   தஞ்சை படைகளை விரட்டிவிட்டார்.

 அதன்பின் மதுரை அரசி  மீனாட்சியை  விஷம் குடிக்க வைத்து விட்டு மதுரையை ஆண்ட சந்தா சாகிப்பின் மீது பூனா  மராத்தியர்கள்   படையெடுத்தனர்.  அப்போது தொண்டைமான் பூனா மராட்டியர்களுக்கு உதவி புரிந்து சந்திப்பை  எதிர்த்தார்.  பிறகு,   நிசாம்,  தமிழ்நாட்டின் மீது படை எடுக்கும் பொழுது,   நிசமுக்கு பக்கபலமாக தொண்டைமான் நின்றார்.

 மேலும் இவருடைய காலத்தில் ஆங்கில பிரெஞ்சு போர்கள் நடைபெற்றன.  அதில்,  முகமது அலியும் ஆங்கிலேயர்களும் ஒருபக்கம் இருந்தனர்.  சந்தா சாகிபும்,   பிரெஞ்சுக்காரர்களும் மற்றொரு பக்கம் இருந்தனர்.  இந்த அணியில் புதுக்கோட்டை தொண்டைமான் ஆங்கிலேயர்கள் அணியில்  நின்று போரிட்டார்.  மைசூர் மன்னர் ஆங்கிலேயர்களை எதிர்த்து திருச்சியில் முற்றுகையிடும் போது,  தொண்டைமான் கோட்டையில் இருந்த வீரர்களுக்கு போர்க்கருவிகளையும்,  உணவுப் பொருட்களையும் அனுப்பி வைத்தார்.  மைசூர் அரசர்,  புதுக்கோட்டை தொண்டைமானை பயமுறுத்தி உணவுப் பொருட்கள் அனுப்புவதை தடைசெய்தார்.  ஆனால் தொண்டைமான் தொடர்ந்து ஆங்கிலேயர் சார்பாகவே  நின்றார்.  இதனால் ஆங்கில கவர்னர் '  ஜார்ஜ்  பிகாட்'  மிகவும் மனமகிழ்ந்து தொண்டைமானை கம்பெனியின் ' நேசமான நண்பராக'  ஆக்கிக் கொண்டான்.  பிறகு புதுக்கோட்டை படைகள் ஆங்கிலேயருடன் சேர்ந்து,  பிரெஞ்சுப் படைகளை  எதிர்க்கவும், மாயுப்கானை எதிர்க்கவும்,  கான்சாகிப்பை  எதிர்க்கவும் உதவி புரிந்தார்.

 இவர் பல போர்களை செய்தாலும்,   தர்ம பணிகளையும் செய்து வந்தார்.  இவர் தன்னுடைய அவையில் ராஜகுரு ஒருவரை நியமித்தார்.  அவரின் ஆலோசனையின்படி,  நவராத்திரி விழாவை கொண்டாடவும் செய்தார்.  இவர் பல சத்திரங்களைக் கட்டினார்.  'அம்மன் காசு'  என்ற நாணயத்தை வெளியிட்டார்.

 இராயரகுநாத தொண்டைமான்  கிபி 1769 முதல் கிபி 1789 வரை

இவருடைய காலத்தில்,  தஞ்சாவூர்  மன்னர் துல்லாஜி,  இராமநாதபுரத்தின் மீது படையெடுத்தார்.  ஆகவே இராமநாதபுரம்,  தொண்டைமானிடம் உதவி கேட்டது.  தொண்டைமானும் இராமநாதபுரம் தாக்கப்பட்டால்,  அடுத்து நம்  மீதும் தாக்குதல் நடக்கும் என்று கேலரி உதவ தீர்மானித்தார்.  இதற்காக நவாபு படைகளையும் சேர்த்துக் கொள்ள கேட்டார்.  ஆனால் நவாபின் படைகள் இராமநாதபுரத்திற்கு உதவ  வரவில்லை.  ஆகவே தொண்டைமானும் தன்னுடைய படைகளை அனுப்புவதை நிறுத்திவிட்டார்.
நவாபு முகமது அலிக்கு நீண்டகாலமாகவே தஞ்சாவூர் மீது பகை இருந்தது.  எனவே ஆங்கிலேயரின் உதவியுடன்,  தஞ்சாவூரை தாக்கினார்.  இந்தப் படையெடுப்பில் புதுக்கோட்டையும்,  நவாபுடன் சேர்ந்துகொண்டது.  நவாப் இதற்காக மகிழ்ச்சி அடைந்து.  புதுக்கோட்டை படை செலவுக்காக,  பட்டுக்கோட்டையின்   ஒரு பகுதியிலிருந்து வரி வசூல் செய்யும் உரிமையை அளித்தார்.

 ஹைதர் அலியும் தொண்டைமானும்

ஹைதர் அலி தமிழ்நாட்டுக்குள் படையெடுத்து வரும் பொழுது,  தொண்டைமார் அவருக்கு உதவவில்லை.  இதனால் ஹைதர் அலி,  புதுக்கோட்டையில் மீது தாக்குதலை செய்தார்.  ஆனால் தொண்டைமான் போராடி ஹைதர் அலியின் படைகளை விரட்டிவிட்டார்.  மேலும் தஞ்சாவூரில்  ஹைதர் அலி பிடித்திருந்த இடங்களை மீட்டுத் தந்தார்.  இதற்காக ஆங்கிலேயர்கள் மகிழ்ந்து,  தொண்டைமானுக்கு இரண்டு துப்பாக்கிகள்,  300 வெடிகுண்டுகள் மற்றும் வெடிமருந்துகளை பரிசாக அளித்தனர்.

 பிறகு திப்பு  தமிழ் நாட்டின் மீது    வடை எடுக்கும்  பொழுது,  தனது தந்தை  ஹைதரை போலவே,  தொண்டைமானை தன் பக்கம் இழுக்க முயற்சி செய்தார்.  மேலும் தொண்டைமானிடம்,  தஞ்சாவூர்,  இராமநாதபுரம்,  அரவக்குறிச்சி ஆகிய பகுதிகளை தொண்டைமானுக்கு வழங்குவதாக ஆசை காட்டினார்.  ஆனால் தொண்டைமான் ஆங்கிலேயர்களுக்கே  உதவினார். 

 ராஜா விஜயரகுநாத தொண்டைமான்  கிபி 1784 முதல் கிபி 1807 வரை

இவர் கிபி 1789 இல் பதவியேற்றார்.  பொதுவாக தொண்டைமான்கள் மன்னராக பதவி ஏற்கும்போது.  நவாபிற்கு காணிக்கை செலுத்துவார்கள்.  இது 'நஸார்'  என்று அழைக்கப்பட்டது.  இதை ரகுநாத தொண்டைமான் பதவியேற்ற போது,  ஒரு இலட்சியம் ரூபாயை நவாபுக்கு  காணிக்கை செலுத்தினார்.  ஆனால் நவாபு,  ஒரு ' இலட்சம் பகோடா'  தங்க காசுகள் கேட்டார்.  முடிவில் நவாபுக்கு 75000 பகோடாக்கள் செலுத்தி,  அரசு உரிமையைப் பெற்றார்.

இவரது காலத்தில்,  நவாபுக்கும்  இவருக்கும் இருந்த அரசியல் நிலையில் மாறுதல் ஏற்பட்டது.  புதுக்கோட்டை மன்னர்,  ஆற்காடு நவாபின் ஒரு பங்குதாரராக ஆக்கப்பட்டார்.  அதன்படி இவர் 1500 குதிரைகள் கொண்ட ஒரு படையை வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.  மேலும் புதுக்கோட்டை 'ராஜா' என்ற பட்டத்தையும்  பெற்றார்.  திப்பு சுல்தான் திரும்பவும் ஆங்கிலேயர்களை எதிர்க்கும் பொழுது,  ஆங்கிலேயர்கள் சார்பாக உதவி புரிந்தார்.

புதுக்கோட்டை சீமை நிர்வாகம்

புதுக்கோட்டை ஆங்கில அரசுக்குகட்டுப்பட்ட நிர்வாக அமைப்பாக இருந்தாலும், ஆங்கிலேயர்களின்நேரடி அதிகாரம்இங்கு ஏற்படவில்லை. நவாபுகள்அரசு கலைக்கப்பட்டு, தஞ்சாவூர் அரசுகள் கலைக்கப்பட்டாலும், புதுக்கோட்டை அரசு கலைக்கப்படாமல் இருந்தது.  இது ஒரு சுதேசி அரசாகவே இருந்தது.

ஆங்கிலேயர்களின் ஆட்சிமுறையை,  புதுக்கோட்டை அரசு பின்பற்றியது.  அது    5  தாலுகாகளாகவும்,  தாலுக்கா பல  மாகாணங்களாகவும்,  மாகாணம் பல கசப்பாக்களாகவும்,  கசப்பா பல கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருந்தன.  அரசு அலுவலர்கள் ' சாவடிகள்'  (கச்சேரி)  என்ற அலுவலகத்திலிருந்து பணிகளைச் செய்தனர்.  ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு ' கர்ணம்'  நியமிக்கப்பட்டார்.

  நீதி நிர்வாகம்

நகரில் நீதியை பராமரிக்க ' கொத்தவால்'  எண்ணம் அலுவலர் நியமிக்கப்பட்டார்.  அவரது அலுவலகம் கொத்தவால் சாவடி என்று அழைக்கப்பட்டது.

பொருளாதாரம்

விவசாயமே பிரதான வருவாய் தரும் தொழிலாக இருந்தது.  இதன் விலை நிலங்கள் இனாம்,  அயன் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டது.  அயன் நிலங்கள் வாரப்பட்டு  என்றும்,    தீர்வைப்பட்டு  இன்றும் பிரிக்கப்பட்டன.  வாரப்பட்டு  நிலம் ஆமானி,  சுவாமி போகம்  என இருவகைகளாக பிரிக்கப்பட்டது.   அமானி   நிறங்கள் அரசின் நேரடி பொறுப்பிலும், சுவாமி போக   நிலங்கள் நிலக்கிழார்கள் பொறுப்பிலும் விடப்பட்டன.

 அம்மன் காசு

இது,  ராஜா விஜயரகுநாதத்  தொண்டைமான் ஆட்சி செய்த கிபி 1730 காலங்களில் வெளியிடப்பட்டது.  இது ஆரம்பத்தில் பண்டிகைக்காக வெளியிடப்பட்டது.  பிறகு ஏழை மக்கள்   பயனுக்காகவும் வெளியிடப்பட்டது.

 பண்டிகைகள்

புதுகோட்டை தொண்டைமான்கள் ' தசரா'  பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.  இது பத்து நாட்களுக்கு நடைபெற்றது.  இந்த பத்து நாட்களிலும் தொண்டைமான் அரசர் பிராமணர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு படி அரிசியும்,  நான்கு அம்மன் காசுகளும் வழங்கினார்.

 இலக்கியம்

தொண்டைமான்கள் தெலுங்கு மொழியை ஆதரித்தனர்.  ஆகையால் தெலுங்கு மொழியில் பல  காவியங்கள் எழுதப்பட்டன.  இராயரகுநாத தொண்டைமான்  (கிபி  1769 -  1789 வரை)  ஒரு புகழ்வாய்ந்த கவிஞராக இருந்தார்.  இவர் ' பார்வதி பரிநயமு', ' கவிஜனோன்னி  வாணி'  என்ற இரண்டு காவியங்களை  எழுதியுள்ளார்.  இவருடைய அரச சபை புலவர் ' வெங்கண்ணா'  என்பவராவார்.
 தமிழ் மொழியில் பல கும்மி பாடல்கள் எழுதப்பட்டன.  அவைகள் சிவந்தெழுந்த பல்லவன்,  பிள்ளைத்தமிழ்,  சிவந்தெழுந்த பல்லவராயன் உலா போன்றவைகளாகும்.

 கட்டிடக்கலை

ரகுநாதராயத் தொண்டைமான் (கிபி 1686 - 1730 வரை) குடுமியான் மலை  குகைக் கோயில் உள்ள மண்டபத்தை கட்டினார்.  மேலும் இவர்,  ஆவூரில் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் கட்ட உதவினார்.  காட்டுபாபள்ளி வாசல் ஒன்று இவர் காலத்தில் கட்டப்பட்டது.