திருமலை நாயக்கர் வரலாறு கிபி 1623 முதல் 1659 வரை Thirumalai Nayakar History in Tamil

மதுரை நாயக்கரில் பெரும் புகழும் பேரும் தேடியவர் திருமலையே.  திருமலை 1623 இலிருந்து நாட்டை ஆளத் தொடங்கினார்.  அவருடைய ஆட்சி 30 ஆண்டுகள் நீடித்தன.  அவ்வாறு 1659 இல் முடிவடைந்தது என்று  மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன.   திருமலையின் ஆட்சி முப்பது ஆண்டுகள் நீடித்தது  என்றாள்,  அவருடைய மரணம் கிபி 1659 இல் ஏற்பட்டது  என்றால், அவர்  இடி 1629 இல் தான்  அரியணை ஏறி இருக்க  முடியும். ஆனால் அவருடைய ஆட்சி 1623 தொடங்கியது என்றார் அவருடைய ஆட்சியின் முடிவு 1653 இல்  ஏற்பட்டிருக்க வேண்டும்.  மாறாக அவருடைய ஆட்சியில் முடிவு 1659 இல் ஏற்பட்டிருக்கிறது.  அவ்வாறாயின் 1623 இல் இருந்து  1628 வரை திருமலை என்னவாக இருந்தார்,  தனது அண்ணன் வயது முதிர்ச்சி அடைந்த காரணத்தால் திருமலை ஆட்சிப் பொறுப்பை ஏற்று இருக்கலாம்.  ஆனால் அவர் தன் தமையனின் மரணத்திற்குப் பின்னரே  முடிசூட்டிக் கொண்டிருக்க  வாய்ப்புள்ளது.  ஆகவே 1623 முதல் 1678 வரை பெயரளவில் மன்னராகவும்,  1528 முதல் 1659 வரை மன்னர் திருமலை மதுரையை ஆண்டிருக்கலாம்.

 வெளிநாட்டுக் கொள்கை ( பேரரசுடன் போர்)

திருமலை விஜயநகர பேரரசின் மேலாண்மை மதித்து நடந்தார் என்று இரண்டாம் வேங்கடரின்  கூனியூர் பட்டயங்கள் அறிவிக்கின்றன.  பெயரளவில் மட்டுமே திருமலை  விஜயநகர பேராண்மையை ஒப்புக்கொண்டார்.  திருமலை முழு சுதந்திரத்தை  விரும்பியே  திட்டங்களை தீட்டினார் என்று சேசு   சங்கத்தாரின் கடிதங்கள் கூறுகின்றன.   கப்பம் கட்டுவதை கூட திருமலை விரும்பவில்லை.  திருமலையின் திட்டங்கள் காலம்பார்த்து பாயும் புலி பதுங்கி கிடந்தன.  1641 இல்  இரண்டாம் வேங்கடர் மறைந்தார்.  1642 இல் மூன்றாம் சிங்கர் விஜயநகர பேரரசர் ஆனார்.   புலி பாயும் காலம் வந்துவிட்டது.  இரண்டாம்  வேங்கடருக்கு நேர்மாறான  கொள்கைகளை உடையவர் மூன்றாம்  சீரங்கர்.  மதுரை பொறுத்தளவில்   சீரங்கர்  விரோதியாகவே தோன்றினார்.  பரம்பரை உரிமைகளை மனதில் கொண்டு,   சீரங்கர்  1645இல்  மதுரையை  தாக்கினார்.  தஞ்சை  செஞ்சி நாயக்கரின் உதவியுடன்  திருமலை  சீரங்கர் எதிர்த்தார்.  தஞ்சை நாயக்கர்  இவ் உடன்பாட்டை  இரகசியமாக  பேரரசருக்கு அறிவித்தார்.  தஞ்சை நாயக்கர் துரோகம் செய்த காரணத்தால்,  திருமலை கோல்கொண்டா சுல்தான் உதவியை நாடினார்.  மிர் ஜம்லா  தலைமையிலான  கோல்கொண்டா படைகள்  பேரரசின் கீல் எல்லைகளைத்  தாக்கினர்.  பேரரசை  காப்பாற்றுவதன் பொருட்டு,  மதுரையை விடுத்து,  பேரரசு வேலூருக்கு ஓடினார்.  சீரங்கர்  முதலில் முகமது அலி வென்றார்.  மேலும் சுல்தான்   வேலூரைத்   தாக்கவே, செயலற்றுப் போன பேரரசர்  செய்வதறியாது திகைத்தார்.  ஆகவே அவர் நாயக்கரின் உதவியை நாடினார்.  அவருடைய இம்முயற்சி பயன் தரவில்லை என்று புரோயென்ஸா  பாதிரியாரின் கடிதம் கூறுகின்றது.  மேற்கொண்டு வெற்றி பெற இயலாது என்பதை உணர்ந்த பேரரசர்  தஞ்சை காடுகளுக்குச் சென்று,  பின் மைசூரில் அடைக்கலம் புகுந்தார். 
 வேலூரை கைப்பற்றிய கோல்கொண்டா சுல்தான்  செஞ்சியை முற்றுகையிட்டான்.  இதைக்கேட்டு பீதியடைந்த தஞ்சாவூர் மன்னன்  தன் நாட்டை   மாற்றானிடம் ஒப்படைத்தார்.  இதனால்  பீதி அடையாத திருமலை  கோல்கொண்டா  சுல்தானை முறியடிக்க,  பீஜப்பூர்  சுல்தானுடன் சேர்ந்து கொண்டார்.  பிஜப்பூர் சுல்தானின்  உதவியுடன் திருமலை  செஞ்சியை கைப்பற்ற புறப்பட்டார்.  முற்றுகை நீண்டு நடந்த போதிலும்,  மதுரைக்   படையால் வெற்றி பெற இயலவில்லை.  முடிவில் இரு சுல்தான்களும் ஒப்பந்தம் செய்து கொண்டனர்.   பிஜப்பூரின்   எதிர் செயலும்,  மதுரை    படை இடையே ஏற்பட்ட பிரிவினையும் தமிழ்நாட்டில் நாயக்கரின் செல்வாக்கை பாதித்தன.  செஞ்சி முகமதியர்  கைவசம் ஆயிற்று.  திருமலைக்கு உதவ முன்வந்து பிஜப்பூர் செஞ்சிக்கு மன்னரானார்.  செஞ்சிக்கு பின் முகமதியர்  தஞ்சையையும்,  மதுரையையும் தாக்கினர்,  கொள்ளையடித்தனர்.  இறுதியில்  தஞ்சை,  மதுரை நாயக்கர் முகமதியருக்கு அடிபணிந்தனர்.  கள்ளரின் உதவி பெற்ற திருமலை முகமதியரை துரத்தி இடித்தார் என்றும் கூறப்படுகிறது.  அவர்கள் செஞ்சிக்கு  ஓடி ஒளிந்து கொண்டனர் என்றும் கூறப்படுகிறது.  முகமதியரின் செயல்கள் ஓய்ந்தபின் மூன்றாம் சீரங்கர்  மைசூரின் உதவியுடன்  பேரரசை திரும்பப் பெற முயன்றனர்.    போர்கொள்ளைகளைப் பங்கிடுவதில் ஏற்பட்ட வேறுபட்டால்,  பீஜப்பூர்  சுல்தானும்,  கோல்கொண்டா படைத்தலைவன்    மிர்ஜாம்லாவும்    பகைவர்களயினர்.  இதனைப் பயன்படுத்திய  சீரங்கர் வேலூரை கைப்பற்றினார்.  1652இல்  வேலூரே  விஜயநகர பேரரசு  ஆயிற்று.

சீரங்கரின் இச்செயல்  திருமலைக்கு     வெறுப்புட்டியது.  மீண்டும் திருமலை    வேலூரையும்,   மைசூரையும் தாக்குமாறு பீஜப்பூர்  சுல்தானை வேண்டினர். ' நாட்டைக்  காப்பாற்றவல்ல   நரசிங்கருக்கு  உதவி செய்யாமல் திருமலை மீண்டும் முகமதியருக்கு உதவி செய்தார்;  உதவிக்கு மைசூரை அழைக்காமல் அதனை தாக்குமாறு முகமதியரை  தூண்டினார்'  என்று புரொயெஸா  பாதிரியா் கூறுகிறார்.  இம்முடிவு பொருத்தமானதே.  பேராசிரியர் சத்தியநாத ஐயர்  திருமலையின் செயல்களை ஆமோதித்தார்.   சீரங்கனும்  மைசூரும்  முகமதியரை விட திருமலைக்கு பகைவர்கள்.  1653இல்  பிஜப்பூர் படைகள்  மைசூரையும் வேலூரையும்  தாக்கின.   சீரங்கன்   பிஜப்பூர் தளபதி கான் முகமததோடு  அமைதி உடன்பாடு செய்துகொண்டார்.  சந்திரகிரி கோட்டையையும்,  சுற்றுப்புறங்களையும்     சீரங்கன் பிஜப்பூருக்கு வழங்கினார்.

 திருமலையின் இச்செயல் அவருடைய சுயநலத்திற்கு சிறந்த எடுத்துக் காட்டு என்று கருதப்படுகிறது.   வேலூரைத் தாக்க  இரண்டாம் முறையாக பிஜப்பூர் சுல்தானை  திருமலை   அழை்திருக்கக்கூடாது;  இச்செயல்  அவருடைய அரச துரோகத்தை காட்டுகிறது என்று பேராசிரியர் எஸ். கே.  ஐயங்கார் கருதுகிறார்.  ஆனால் பேராசிரியர் சத்தியநாத ஐயர்  திருமலையின் இச்செயலை துரோகமாக கொள்ளவில்லை.  அந்நியரை  விஜய நகர் மீது முதலில் ஏவிய சீரங்கரைபோன்று திருமலை துரோகி அல்ல.  அன்னியர் பேரரசுக்கு உட்பட்ட  நாடுகளை தாக்கும்போது,   அந்நாடுகளை காப்பாற்ற வேண்டிய  சீரங்கரோ,  அவர்களுடன் இணைந்து அந்நாடுகளை தாக்கும்போது ஏன் அப்படி பட்ட பேரரசுக்கு அடங்கி நடக்க வேண்டும்?  எவ்வகையிலும்   சீரங்கர் திருமலைக்கு  பயன்படாத நிலையில்  ஏன் திருமலை   சீரங்கருக்கு்த்  திறை செலுத்த வேண்டும்? இந்நிலையில்  மதுரைப் படை  தாமே இயங்கி வந்தது.   தம் படை பலத்தை நம்பியே அந்நியரை எதிர்த்தது. தம்  வருவாயை நம்பியே   போர்களில் ஈடுபட்டது .  ஆகவே திருமலை பேரரசருக்கு உதவுவதாக  நடித்துக் காட்ட விரும்பவில்லை.  வேலூரே  பேரரசன் என்ற அளவுக்கு குறைக்கப்பட்ட பின் ஒரு பேரரசர் ஏன் அப்படிப்பட்ட பேரரசருக்கு மற்றவர்களின் கீழ்ப்படிவு எப்படி கிடைக்கும்.

 பீஜப்பூர் சுல்தான் சீரங்கனுக்கு  நீண்டநாள் எதிரி.  1653 இல்  சந்திரகிரியைக்  கைப்பற்றிய கோல்கொண்டா சுல்தானும்  சீரங்கனுக்கு பகைவன்  ஆகினான்.  இருதலைக்கொள்ளி    எரும்பாகிய  சீரங்கன் முகலாயர் உதவியை  நாடினார்.  உதவி நாடிய சீரங்கனுக்கு  உதவி ஏதும் கிடைக்கவில்லை.  நண்பர்களும் விரோதி ஆயினர்.  ஒரு காலத்தில் அடிபணிந்து ஆண்ட  ஆளுநர்களும் உதவி செய்யவில்லை.  காலத்தின் விளையாட்டால்  அல்லலுற்ற சீரங்கன் சிற்றரசர்களால் தூக்கி எறிந்து விளையாடப்பட்ட  பந்தாகினார்.  சந்திரகிரி,  வேலூரிலிருந்து விரட்டப்பட்ட சீரங்கனுக்கு  பேரரசில்லை,  அரியணை இல்லை.  அவன் 1658 இல் சந்திர கிரியைவிட்டு  மைசூருக்கு சென்றார்.  அங்கு 1672 இல் இறந்து விட்டான். சீரங்கனின்  மரணத்துடன் விஜயநகர பேரரசும்  மறைந்துவிட்டது.
 பேரரசிடமிருந்து முழு சுதந்திரத்தை  பெற விழைந்து போராடிய முதல் மதுரை நாயக்கர் திருமலை என்று நெல்சன் கூறுகின்றார்.  இதனை பேராசிரியர்கள் சத்தியநாதைய்யரும்  ஒப்புக்கொள்வார்.  இதனை ஏற்றுக்கொள்வதில்லை.  ஏனெனில் திருமுன் முத்துவீரப்பர் முயன்று தோற்றார்.  1610 எல்லாம் மைசூரின்   இராய உடையார்  சுதந்திரம் வெளியிட்டு கொண்டார்.  சுதந்திரம் பெற்ற அரசன் என்ற வகையில் அவர் சீீரங்கப்பட்டினத்தைக்  கைப்பற்றிக் கொண்டார்.  இதனை  கல்லெழத்துக்களும்,  சேசு  சங்கத்தாரின் கடிதங்களும் வலியுறுத்துகின்றன.

மைசூர் போர்

 மெக்கன்சி கைப்பிரதிகள் மைசூருக்கும் மதுரைக்கும் ஏற்பட்ட போரை கூறுகின்றன.  மைசூர் மன்னன்  சாமராய உடையார்  திண்டுக்கல் பகுதியைக் கைப்பற்ற  வேண்டி,    ஜராசூ  நந்திராயா  என்பவரின் தலைமையில் படைகளை ஏவினார்.   மதுரையின் தளவாயாகிய  இராமப்பைய்யனும்,  கன்னிவாடியின்  பாளயக்காரராகிய    ரங்கண்ண  நாயக்கரும் இணைந்து,  மைசூர் படைகளை விரட்டி அடித்தனர்.   தமிழ்நாட்டின் எல்லையில் இருந்து அவர்களை விரட்டி அடித்த மதுரை படை,  மைசூரின் தலைநகரை  முற்றுகையிட்டதாக கூறப்படுகிறது.  மதுரை தளவாய் புகழின் உச்ச நிலைக்கு  எட்டினார்.

திருவிதாங்கூர் படையெடுப்பு

ராமராய வித்தலர் திருவிதாங்கூரின் திருவதி அரசரை வென்றார். திருவதி அரசர் இதே நகருக்கு அடிபணிந்து, திறை செலுத்தி வந்தார். மதுரை நாயக்கருக்கும் அடங்கி நடந்தார். திருமலையின் காலத்தில் இவ்வுறவு பாதிக்கப்பட்டது. திருவிதாங்கூரின் உன்னி கேரள வர்மன் என்ற மன்னன் மதுரைக்கு கப்பம் கட்டதவறினான். கப்பம் கட்ட மறுத்ததால் கோபம் கொண்ட திருமலை, திருவிதாங்கூர் நோக்கி படை எடுத்தார். மதுரைக்கு தளவாய் இராமப்பையன் தலைமை தாங்கினார். இராமப்பையன்  திருவிதாங்கூர் மன்னரை முறியடித்தான் என்று 1635   திருவதி  மன்னன் வெளியிட்ட   கல்லெழுத்தும்,  இராமப்பையன் அம்மானையும் கூறுகின்றன.  திருவிதாங்கூர் மன்னர்கள் மதுரைக்கு திறை செலுத்தும் சிற்றரசர்களாயினர்.  இதனை ஜான் நியூகாப்  பின்  குறிப்புகள் சுட்டுகின்றன.

 சேதுபதி களுடன் உறவு

 இராமநாதபுரம் சேதுபதிகள் மதுரை  நாயக்கருக்கு அடங்கிய சிற்றரசர்களே.  ஒழுங்காய் மதுரைக்கு  திரையும் செலுத்திவந்தனர்  கிபி 1673இல் கூத்தன்  சேதுபதி(Kuttan)  சேதுபதி இராமநாதபுரத் தலைவரானார்.  அவருக்குப்பின் இரண்டாம்  சடையத்தேவர்  பதவி பெற்றார்.  இவர் ' தளவாய் சேதுபதி'  என்ற இறுதிப்  பெயரால் அறியப்பட்டார்.   இரண்டாண்டுகால ஆட்சிக்கு பின் திருமலைக்கும்,  தளவாய் சேதுபதிக்குமிடையே  வேறுபாடு ஏற்பட்டது.   தளவாயின் முறையற்ற தம்பி மறவர் நாட்டுத் தலைவராக விழைந்தார்.  திருமலை,  தம்பியின் வேண்டுகோளுக்கு இணங்கினார்.   திருமலைக்கும் தளவாய்க்கும் இடையே போர் மூண்டது.  அவைக்  குறிப்புகள் வேறு காரணங்களை கூறுகின்றன.    மதுரைக்குத்  தளவாய் அடங்கவில்லை;  திரை ஒழுங்காய் செலுத்தவில்லை என்பனவே அவை.  இராமப்பைய்யனும்,    ரங்கண்ணநாயக்கனும்  இணைந்து மறவர் நாட்டைத் தாக்கினர்.  சேதுபதி கைது செய்யப்பட்டார்.  போர்த்துக்கீசியரின் உதவியுடன் மட்டுமே சேதுபதியை  திருமலையின் படைகள் கைது செய்ய இயன்றது.  இப்போரில் இராமப்பையன் இறந்ததாகவும் கூறப்படுகிறது.   கிபி 1638இல் வெளியிடப்பட்ட ஒரு  கல்வெட்டு இராமப்பையன் கோவாவுக்கு தூதராக சென்றார் என்று அறிகின்றது.  ஆகவே இராமப்பையன் இப்போரில் மாண்டதாக கூற இயலவில்லை.  திருமலை இப்போரில் பெரு வெற்றி பெற்றார்.  தம்பி இராமநாதபுரத்தின் மன்னரானார்.

 மறவர் நாட்டில் அரசுரிமைப் போர் முடிந்தபாடில்லை தம்பியின்  ஆட்சியில் மக்கள் வெறுப்படைந்தனர்.  தளவாய் சேதுபதியின் மருமக்களாகிய ரகுநாதரும்  நாராயணரும் தம்பியை எதிர்த்து கலகம் செய்தனர்.  தம்பி,  திருமலையின் உதவியை  நாடினர்.  மறவர் நாட்டின் அடிப்படை கலகக் காரணத்தை  உணர்ந்த திருமலை  தளவாயை விடுவித்து,  மன்னராக மாற்றினார்.  கிபி 1642 இல் தளவாய் சேதுபதியை  தம்பி கொன்றான்.   பின்னர் திருமலை சேதுபதி நாட்டை மூன்று பகுதிகளாக பிரித்தார், ரகுநாதரும்  அவருடைய தம்பி தணக்கத்தேவரும்,  தம்பியும் பங்காளிகளாகினர்.  சேதுபதி நாட்டின் ஒற்றுமைக்கு இது ஓர் விளைவித்தது.  தம்பியும்,  தணக்கதேவரும்  இறந்து போகவே,  ரகுநாதர்  சேதுபதியானார்.  அவர் நாயக்கருக்கு அடங்கி நடந்தார்.  நாயக்கருக்கு படை, பொருள் உதவிகள் புரிந்தார்.  முகமதிய படைகளை விரட்டுவதிலும்,  பாளையக்காரர்களை   அடக்குவதிலும் இவருக்கு பெரும் பங்குண்டு.  இவ்வுதவிக்காக  முத்து செல்வத்தில் பங்கு வழங்கப்பட்டார். ' நாட்டுக் காவலர்'  என்ற விருதும் வழங்கப்பட்டது. ' திருமலை சேதுபதி'  என்ற பட்டப்பெயரும் அவருக்கு வழங்கப்பட்டது.

மூக்கறுப்பு போர்

திருமலை பிஜப்பூர் சுல்தானுடன் கொண்டிருந்த நட்புறவை மைசூரின் அரசனாகிய  கந்திரவ   நரசராயன் விரும்பவில்லை. ஆகவே  திருமலையைத் தாக்கத்  தகுந்த காலத்தை நோக்கி இருந்தார். பிஜப்பூர் படைகள்  மைசூரை விட்டு வெளியேறியதும்,  மதுரையைத் தாக்க தகுந்த தருணம்  கிட்டியது. மதுரையைத் தாக்குமாறு  தளவாய் ஹம்வீர  என்பவர் அனுப்பப்பட்டார்.  கிபி 1656 இல் சத்தியமங்கலம் பகுதி தாக்கப்பட்டு,  கைப்பற்றப்பட்டது.  அப்படை மதுரை நோக்கி அனுப்பப்பட்டது. மதுரைக்கு செல்லும் வழியில் அகப்பட்டோர் மூக்குகள் அரியப்பட்டன.  இவ்வேலையில்  திருமலை நோய்வாய்ப்பட்டிருந்தார்.  பாளையக்காரர்களுக்கும் உறவு  கொண்ட பிற மன்னர்களுக்கும் செய்தி அனுப்பப்பட்டது.  இரகுநாதசேதுபதி மட்டும் வேண்டுகோளுக்கு இணங்கினார்.  25000 படைகளுடன் சேதுபதி மதுரையை நோக்கி வந்தார்.  திருமலை சேகரித்த 35000 வீரர்களுடன் மறவர்களும் சேர்ந்து மதுரையை காத்து நின்றனர்.  மைசூர் படைகள் திண்டுக்கல் பகுதிக்கு விரட்டியடிக்கப்பட்டனர். திண்டுக்கல் அருகில் நிகழ்ந்த போரில் இருதரப்பினரும் ஏறத்தாழ 12 ஆயிரம் வீரர்கள் இழந்தனர்.  சேதுபதியின் இவ்வீரச்செயலை பாராட்டி ' திருமலை சேதுபதி'  என்ற விருது அவருக்கு வழங்கப்பட்டது.  பல நன்கொடைகளும் வழங்கப்பட்டன;  வேறு பல சலுகைகளும் சேதுபதிக்கு தரப்பட்டன.

   மதுரையை  காப்பாற்றிய பெருமை  சேதுபதிக்கு ஒட்டுமொத்தமாக கர்நாடக ஆளுநர் வரலாறு தருகின்றது.  மைசூரை  எதிர்த்து  பிறிதொரு படையெடுப்பு மதுரை நடத்தியதாகப்  பாதிரியார்களின் கடிதங்கள் அறிவிக்கின்றன.  இப்படையெடுப்பின் தலைவர் யார் என்று குறிப்பிடப்படவில்லை.  திருமலையின் இறுதிக்காலத்தில்,  திருமலையின்  இளவலாகிய  குமார முத்தும்,   ரங்கண்ண நாயக்கரும் சேர்ந்து மைசூர் மீது படையெடுத்ததாக மெக்கன்சி கைப்பிரதிகள் அறிவிக்கின்றன.  மதுரையிலிருந்து  மைசூர் படையை விரட்டியது  மேற்கு உரியவர்கள் என்றும் இக்கைப்பிரதிகள்  சுட்டுகின்றன.  மைசூரில் மதுரை வீரர்களால்  முக்கருப்பு நிகழ்த்தப்பட்டது.  மதுரைப் படைகள்  நஞ்சங்கூடு   வரையிலும் முன்னேறிச் சென்று,  அன்று  மைசூர் படைகள் செய்த அதே மூக்கறுப்பு நிகழ்ச்சி நடத்தினர்.   இப்போரின்  இறுதிக்குள் திருமலையும் இறந்துவிட்டார்.

ஐரோப்பியருடன்  உறவு

தமிழகத்தில் உறைந்திருந்த ஐரோப்பிய வர்த்தக சங்கங்கள் விவகாரங்களில் தொடக்கத்திலிருந்து திருமலை தலையிடவில்லை. ஆனால் போர்ச்சிகீசியருக்கும் டச்சுக்காரர்களுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. இருவருக்கும் இடையே நிகழ்ந்த சண்டைகளில். திருமலை நடுநிலை வகித்தார். தளவாய் சேதுபதியைக் கைது செய்வதில் போர்த்துக்கீசியர் பேருதவி புரிந்தனர். இவ்வுதவியை மதித்து, போர்த்துக்கீசியருக்கு திருமலை சில சலுகைகளை வழங்கினார். இதனால் கோபமுற்ற ஆலந்தியர் திருமலையை வெறுக்கத் தொடங்கினர். கிபி 1648 இல் போர்ச்சிகீசியருக்காக திருமலை  ஆலந்தியரை  காயல்பட்டினத்தில் இருந்து விரட்டினார்.   பழிக்குப் பழி தீர்க்க திட்டமிட்ட ஆலந்தியர்,  திருச்செந்தூர் கோயிலை கைப்பற்றி,   அதன் படை களஞ்சியமாக மாற்றினார்.  தூத்துக்குடியை  தாக்கினர்.   கிபி 1658 இல் தூத்துக்குடி ஆலந்தியரால்  கைப்பற்றப்பட்டது.  அங்கு தங்கியிருந்த போர்ச்சிகீசியர்  விரட்டப்பட்டனர். ஆலந்தியரின்  ஊடுருவலைத்  தடுக்க திருமலை முயற்சியையும் மேற்கொண்டதாக தெரியவில்லை.  கடலோரப் பகுதிகளை ஐரோப்பியருக்கு,  விட்டுக் கொடுத்து அவர்கள் அளித்த திறையுடன்  மனத்திருப்தி அடைந்திருக்க வேண்டும்.

தலைநகர் மாற்றம்

அவைக் குறிப்புகளும்,  பாதிரியார் கடிதங்களும் திருமலை  தலைநகரை திருச்சியிலிருந்து மதுரைக்கு  மாற்றியதாக  அறிவிக்கின்றன.  தலைநகர் மாற்றத்திற்கு அறிஞர் பல  காரணங்களைத்   தருவர்.  மதுரை மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் மண்டைச்சளி நோயை நீக்குவார் என்ற மூடநம்பிக்கையில் தலைநகரை மாற்றினார் என்று சிலர் கருதுவர்.  திருச்சிராப்பள்ளி முடிந்தது நடுவில் அமைந்திராக் காரணத்தால்   தலைநகரை மதுரைக்கு மாற்றினார் என்பர் மற்றும் சிலர்.  இப்புவியில் அடிப்படையிலான கருத்து பெரும்பாலும் பொருந்துவதாக உள்ளது.  திருச்சிராப்பள்ளி தாக்குதலுக்கு அண்டையில்  இருப்பதை பலரும்  உணர்ந்தனர்.  மத்தியில் அது அமையாத காரணத்தால்,     முடிநாட்டை  கண்காணிப்பது கடிதம்.  மதுரையின் வீழ்ச்சி,  முடி நாட்டின் வீழ்ச்சியைக் குறிக்கும்.  ஆகவே திண்டுக்கல் பகுதியை பலப்படுத்தவும்,  மதுரையை  வளப்படுத்தவும்  வேண்டி தலைநகரை திருமலை மாற்றினார்.  மேலும் அன்றைய மதுரை தமிழகப்  பண்பாட்டின் பிறப்பிடம்,  உறைவிடம்;  மதுரையிலிருந்துதான்  மற்ற பகுதிகளுக்கு தமிழ்ப்   பண்பாடு பரவி வந்தது.  முடிந்தபின் நடுப்பகுதி மதுரையே.  மதுரை இந்து சமயத்தின் நல்ல பண்புகளையும்,  தத்துவங்களையும் கொண்டு இயங்கிய பகுதி,  மத்தியில் இருந்தபடி இதர பகுதிகளை கண்காணிக்கலாம்  என்று திருமலை எண்ணியிருப்பார்.

 இந்து சமயத்தில் தளராத நம்பிக்கை உடையவர் திருமலை. ஆகவே அவர் பல  சமய சீர்திருத்தங்களை செய்துள்ளார்.  அவற்றில் தலையாயது சித்திரை திருவிழாவாகும்.  தெப்பத் திருவிழா,  தேர் திருவிழா போன்ற விழாக்களை ஒழுங்குபடுத்தினார். நவராத்திரி திருவிழாவை  நடத்துமாறு திருமலை சேதுபதிக்கு அனுமதி வழங்கினார்.  கோயில்கள் பல புதுப்பிக்கப்பட்டன;  பல பழுது பார்க்கப் பட்டன;  இன்னும் பல செப்பனிடப்பட்டன.  பல கோயில்கள்,  சத்திரங்கள்,  மண்டபங்கள்,  வழிப்போக்கர் விடுதிகள்  கட்டப்பட்டன.  கோயில்களுக்கு பல தானங்கள்,   வரியிலா  நிலங்களும் மானியமாக விடப்பட்டன.  தெப்பக்குளங்கள் பல வெட்டப்பட்டன.  அவற்றில் மிக பிரசித்தி பெற்றது மாரியம்மன் தெப்பக்குளம் ஆகும்.  புதுமண்டபம் அல்லது வசந்த மண்டபம் அவரால் கட்டப்பட்டது.  திருமலையின்  புகழை  அழியாது  காத்து நிற்பது அவர்  கட்டியெழுப்பிய மஹால் ஆகும்.  இது இந்திய முஸ்லிம் கலைகளில் இணைவின் எடுத்துக்காட்டு.  மதுரையில் ஊக்கப்படுத்த,  சௌராஷ்டிரா பகுதியில் இருந்து பல தொழிலாளரை அழைத்து,  மதுரையில் குடியேறினர்.  திருமலையிடம்  சௌராஷ்டிரா மக்கள் அதிக சலுகைகள் பெற்றனர். 

 திருமலையின் காலத்தில்  இதர இனத்தார்கள் ஒடுக்கப்பட்டனர்.  குறிப்பாக நாடார் இனத்தைச்   சேர்ந்தோரும்,  மறவர்களும்   ஒடுக்கப்பட்டதாக சான்றுகள் உள்ளன.  ஆகவே திருநெல்வேலிப் பகுதியில் இருந்து அவருக்கு எதிர்ப்பு இறந்த வண்ணமே இருந்தது.  அவருடைய காலத்தில் பல நாடார்கள் முகமதியர் வசப்பட்டு முஸ்லிம்களாகியினர்  என்று  செவிவழி செய்தி கூறுகின்றது.  மறவர்களை திருமலை சேதுபதி மூலம் அடக்கி வைத்திருந்தார்.  இசை நாட்டியக்  கலைகளை ஆதரித்தார்.    தம்  அவையில் பல நாட்டிய மாதர்களை வைத்திருந்தார்.

 கோயில்களில் நாட்டியமாடி,  பாட்டிசைத்து,  பக்தி பாசுரங்களையும் பதிகங்களையும் பாடும் தேவதாசிகளை வைத்திருந்தார்.  ஸ்ரீரங்கம் கோயிலில் புது பணிகள் செய்தார் மண்டபங்களைக் கட்டி எழுப்பினர்.  மதுரை வீரன் என்ற ஒரு மாவீரன்(இன்று தெய்வமகன்)  என்று வழிபடப்படும் திருமலையின் காலத்தில்  வாழ்ந்து வந்ததாக மதுரைவீரன் அம்மானை அறிவிக்கின்றது.  திருமலையின் தளவாயாக இருந்து  பெரும்புகழ் தேடிய இராமப்பையன் மீது பாடப்பட்டதே  இராமப்பய்யன் அம்மானை.  திருமலை சிறந்த போர்வீரன் ஆட்சியாளர்,  இராஜதந்திரி.   மதுரை நாயக்கர் நாடு அவர் காலத்தில் அதன் உச்சநிலையை எட்டியது.