செஞ்சி நாயக்கர் கிபி 1490 முதல் கிபி 1600 வரை : Gingee History in Tamil

செஞ்சி,  தமிழக வரலாற்றில்,  கிபி பதினைந்தாம் நூற்றாண்டில்  இருந்து இருபதாம் நூற்றாண்டு வரை முக்கிய இடம் வகித்தது.  இது கீழை நாடுகளின்' டிராய் நகரம்  போலக் கருதப்பட்டது.  இது விஜய நகர காலத்தில்,  குமார கம்பணா தமிழ் நாட்டு படையெடுப்பின் போது, ' துண்திர'  இராஜ்ஜிய தலைநகரமாக இருந்தது.  பிறகு அச்சுத தேவராயர்  செஞ்சியை ஒரு  நாயக்கர் பிரிவாக மாற்றினர்.  அவருடைய ஆட்சிக் காலத்தில்,  நெல்லூரிலிருந்து காவிரி வரையிலான பகுதிகள்,  செஞ்சி நாயக்  என்றழைக்கப்பட்டது.

செஞ்சியின் வளர்ச்சி

'வையப்ப  நாயக்கர்'  என்பவர்,  செஞ்சியின் ' முதல் நாயக்கர்'   ஆவார்.  இவருடைய காலம் கிபி 1,490 ஆகும்.   இவரை தொடர்ந்து '   பெத்த கிருஷ்ணப்ப  நாயக்கர்'  என்ற துபாகி  கிருஷ்ணப்ப நாயக்கர்   செஞ்சி மன்னரானார் (கிபி 1490 முதல் கிபி ஆயிரத்து 520 வரை).  இவர் செஞ்சியில் சந்திரகிரி மற்றும் ராஜகிரி  கோட்டைகளை பலப்படுத்தினார்.  வராக நதியில் ஒரு அணைக்கட்டில்,  சிறுகடம்பூர்  குளத்தில் வந்து   அதன் நீர் விழும்படி செய்தார்.  மேலும் இவர் திருக்கோயிலூர்,  ஸ்ரீமுஷ்ணம்,  சிறுக்கடம்பூர்  ஊர்களில் கோயில்களைக் கட்டினர்.  செஞ்சியில் தர்ம ராஜாவுக்கும், திரௌபதிக்கும்  கோயில்கள் கட்டினர்.  அதன் நிர்வாகத்தை ' கோன்'  வகுப்பை சார்ந்த ஒருவரிடம் ஒப்படைத்து,  அதிலுள்ள 'முதல் மரியாதை'  அனைத்தும்,  திரௌபதி அம்மனுக்கு செய்ய வேண்டும் என்று சட்டம் போட்டார்.  இவருக்கு ராஜ குருவாக  இருந்தவர் சக்கரவர்த்தி 'சக்ரயாகம்  சேஷாத்திரி ஐயங்கார்' ஆவார்.

துபாகி கிருஷ்ணப்ப  நாயக்கருக்கு பின்பு,  'அச்சுத ராமச்சந்திர நாயக்கர்' (கிபி 1520 முதல் 1540 வரை)  செஞ்சியின் மன்னரானார்.  இவர் திருவண்ணாமலையில் கோபுரம் கட்டும் பணி களையும்,  நான்கு  சுற்றுச் சுவர் கட்டும்  வேலையையும் ஆரம்பித்தார்.  மேலும் அவர் திண்டிவனத்தில் ஒரு விஷ்ணு கோயிலையும்,  நெடுங்குன்றம் ஒரு கோபுரத்தையும் கட்டினார்.

 அச்சுத ராமச்சந்திர  நாயக்கரை தொடர்ந்து, ' முத்தையாலு நாயக்கர்' (கிபி 1540 முதல் 1550 வரை)  என்பவர்  செஞ்சி மன்னரானார்.  இவர் திருவண்ணாமலை கோபுரத்தைக் கட்டி முடித்தார்.  மேலும்,  வெங்கடரமணா சுவாமி கோயில் ஒன்றையும் கட்டினார்.

 இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர்

முத்தையாலு விநாயகரைத் தொடர்ந்து, 'வெங்கடப்ப நாயக்கர்'  என்ற இரண்டாம் கிருஷ்ணப்ப நாயக்கர் (கிபி 1570 முதல் 1600 வரை)   செஞ்சி மன்னரானார்.  இவர்,  செஞ்சி நாயக்கர் பரம்பரையில் முக்கியமானவர் ஆவார்.  இவர் தன்னுடைய சாதியத்தை பல சிறிய நாயக்கர்களுக்கு பிரித்துக் கொடுத்தார்.  இவர்,  விஜயநகர மன்னர் முதலாம் வேங்கட விற்கும்,  தஞ்சை நாயக்கர் இரகுநாத நாயக்கர் இருக்கும் சமகாலத்தவர் ஆவார்.  இவர் சிறுவயதாக இருக்கும்  பொழுது,  அவருடைய மாமா அவரை சிறைப்பிடித்து வைத்தார்.  அதிலிருந்து தப்பி அவர் செஞ்சி நாயக்கர் ஆனார்.

 இவருடைய காலத்தில்  செஞ்சி நகரமானது  போர்ச்சுக்கல்  நாட்டின் ' லிஸ்பன் நகரத்தை'  விட  பெரியதாக இருந்தது என்று இயேசு திருச்சபைப் பாதிரிமார்     பாதர்  amendment பிமெண்டா'  என்பவர் குறிப்பிடுகிறார்.  செஞ்சி கோட்டையை மிகவும் பலம் வாய்ந்ததாக கட்டிக்கொண்ட இவர்,  செஞ்சியிலும்  சிதம்பரத்திலும் அரண்மனைகளை ஏற்படுத்தியிருந்தார்.  இவர் பிராமண  வைதீகராக  இருந்தார்.  இவருடைய அரண்மனையில் 200க்கும் மேற்பட்ட பிராமணர்கள் இருந்தனர்.  இவர்கள் மன்னரை தீய சக்திகள் எதுவும் பாதித்துவிடக் கூடாது என்பதற்காக,  அடிக்கடி அரண்மனையில் மழைநீரை தெளித்துக் கொண்டிருந்தனர். 

 கலாச்சார பணிகள்

இவர் பெரிய சமயப் பொறை உடையவராக இருந்தார்.  கிறிஸ்தவர்களை எல்லா மன்னர்களும் வெறுத்து ஒதுக்கும் போது,  இவர் அவர்களுக்கு தமது  நாட்டில் முழு ஆதரவையும்  தந்தார்.   'இயேசு  திருச்சபையினர்'  என்ற கத்தோலிக்க துறவிகளுக்கு முழு ஆதரவு அளித்தார்.  அவர்களுக்கு அதிக  நன்கொடைகள் வழங்கியதுடன்,  அவர்களுக்கு திருச்சபைகள் கற்றுக்கொள்ள அனுமதி வழங்கினார்.  சமணர்களை கோயில் கட்டிக் கொள்ள அனுமதித்ததுடன்,  சைவர்களை திண்டிவனத்தில் ஒரு கோயில் கட்டிக் கொள்ள அனுமதி தந்தார்.  ஆனால்  அதே நேரத்தில்,  வைணவ மதத்திற்கு ஆதரவு அளித்து,  அதன் குரு திருமலை தட்டாச்சாரியார்க்கும்  மதிப்புடன் பரிசு வழங்கினார்.  இவர் சமண வணிகர் ஒருவர் சித்தாமூரில்  கோயில் கட்டிக் கொள்ள அனுமதி வழங்கினார்.  மேலும் இவர் திண்டிவனத்தில் ஒரு சிவன்  கோயிலையும்,  செங்கோட்டையையும் கட்டினர்.  இவர் விருத்தாச்சலம் கோபுரத்தையும், அம்மன் சன்னதி மண்டபத்தையும் கட்டினார்.

அரசியல் தோல்வி

இவர்,  விஜயநகர மன்னர் முதலாம்  வேங்கடாவை எதிர்த்தார்.  அவருக்குத் தர வேண்டிய பணத்தையும் கட்டத்தவறினார்.  ஆகவே போச்சுடா,  முதலாம் வெங்கடப்பா ஸ்ருதி மீது படையெடுத்தார்.  இந்த படையெடுப்பில்,  அதிக நம்பிக்கை கொண்ட கிருஷ்ணப்ப நாயக்கர்,  மன்னருடன் போரிட்டார்.  ஆனால் அதில் தோல்வியடைந்து  சிறை கைதியானார்.  தஞ்சாவூர் இரகுநாத நாயக்கர் சிபாரிசின் பேரில் விடுதலையானார்.  இதற்காக கிருஷ்ணப்ப நாயக்கர்,  தன் மகளை இரகுநாத  நாயக்கருக்கு திருமணம் செய்து வைத்தார்.

 வெளி நாட்டவர்கள்

 செஞ்சி கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில்தான்,  வெளிநாட்டவர்கள் பலர்,  தமிழ் நாட்டுக்கு வருகை புரிந்தனர்.  இவர் டச்சுக்காரர்களுக்கு ' தெங்கம் பட்டினத்தில்'   கோட்டையை கட்டிக்கொள்ள அனுமதி அளித்தார்.  ஆனால்,  போர்ச்சுகீசியர்கள்,  விஜயநகர மன்னர் முதலாம்   வேங்கடாவிடம் செல்வாக்குப் பெற்று,  டச்சுக்காரர்களை விரட்ட கிருஷ்ணப்ப  நாயக்கருக்கு உத்தரவு அளித்தார்.  ஆனால் கிருஷ்ணப்ப நாயக்கர் அதற்கு சம்மதிக்காமல் இருந்தார்.  பிறகு,  விஜய நகர மன்னரின் கெடுபிடிகளுக்கு பயந்து,  டச்சுக்காரர்களை விரட்டினார்.  ஆனால் டச்சுக்காரர்கள்,  மீண்டும் முழு பலத்துடன் திரும்பி,  மன்னரிடமும்,  செஞ்சி நாயக்கர் இடமும் அனுமதி பெற்றனர்.  அதன்மூலம் 'திருப்பாப்புலியூர்'  என்ற இடத்தில் கோட்டை கட்டிக்கொள்ள அனுமதி பெற்றனர்.  இவர்  'கிருஷ்ணா பட்டினம்'  என்ற நகரத்தை நிர்மாணித்தார்.

இவருடைய காலத்தில் விஜயநகரத்தில் ' உள்நாட்டுப் போர்'  ஏற்பட்டது.  இவர் வேங்கட மன்னர்,  வாரிசாக நியமித்து மூன்றாம்  ஸ்ரீரங்காவை  விஜயநகர மன்னராக ஏற்றுக் கொள்ளவில்லை.  ஆகையால் விஜயநகர அரியணை போட்டியில்,  விஜயநகர அரச சபை பிரபு ஜக்கராயருடன் சேர்ந்து  கொண்டு விஜயநகர  மன்னரை ' தொப்பூர்'  என்ற இடத்தில் எதிர்த்தார்.  ஆனால் அதில் தோல்வி அடைந்தார்.

  செஞ்சியின் வீழ்ச்சி

 இவருக்கு பின்பு ' வாதப்ப நாயக்கர்', ' அப்பய்ய நாயக்கரும்'   செஞ்சியை ஆண்டார்கள்.  ஆனால் அவர்கள் முக்கிய மற்றவர்கள் அவர்.  விஜயநகரத்தின் மூன்றாம் ஸ்ரீரங்கன் மன்னராக இருந்தபோது,   செஞ்சியின்  கடைசி நாயக்கர்,  மதுரை நாயக்கரின் தூண்டுகோலால் எதிர்த்தார்.  ஆனால் விஜயநகர மன்னன் மூன்றாம் ஸ்ரீரங்கா,  பிஜப்பூர் சுல்தான் படைகளுக்கு அஞ்சு மைசூர் தப்பிச் சென்றுவிட்டார்.  எனவே,  செஞ்சி,  பிஜப்பூர்  படைகளின் கையில் கிபி 1648 விழுந்தது.

 கிபி 1648 இல்,  கோல்கொண்டா சுல்தான் மீர்  ஜிம்லா  செஞ்சியைக்  கைப்பற்ற நினைத்தார்.  ஆகவே செஞ்சி,  விஜயுடன் சேர்ந்து கோல்கொண்டாவை தாக்க திட்டமிட்டது.  இதற்கிடையில்,  கோல்கொண்டா படைத்தலைவர்,  மீர்ஜும்லா,  பிஜப்பூர் படைத்தலைவர் முஸ்தப்பா   காகூனுடன்  ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டு கோல்கொண்டா சென்றுவிட்டார்.  பிறகு பீஜப்பூர் படைத்தலைவர் முஸ்தபா,  செஞ்சியை முற்றுகையிட்டார்.  கடைசியில்  பிஜப்பூர்  கான்- இ-கானன்  என்பவர்,  செஞ்சி கோட்டையை கைப்பற்றினார்.  இத்துடன் செஞ்சி நாயக்கர்களின் அரச வம்சம் முடிவுற்றது.

 கட்டிடக்கலை

இக்காலத்தில் செஞ்சிக்கோட்டை,  செஞ்சி நாயக்கர்களின் கட்டிடக்கலைக்கு ஒரு சான்றாக உள்ளது.  வேலூரின் ஜலகண்டேஸ்வரர்  கோயிலில் உள்ள  கல்யாண மண்டபமும்,  செஞ்சி நாயக்கர்களின்  கட்டிட கலைக்கு ஆதாரமாகும்.   'செங்கம்'  என்ற இடத்தில்,  வேணுகோபால பார்த்தசாரதி கோயில் கட்டப்பட்டது.  இதில் இராமாயண காட்சி  ஓவியங்களும் உள்ளன.    செஞ்சியில் வெங்கட ரமணா  கோயில் கட்டப்பட்டது.  அதில் கோபுரங்களும், மண்டபங்களும்  அமைக்கப்பட்டுள்ளன.