மங்கம்மாள் கிபி 1689 முதல் கிபி 1706 வரை Mangammal History in Tamil
ரங்க கிருட்ணருக்கு மரணத்துக்குப் பின் ஒரு மகன் பிறந்தான். அவனே விஜயரங்க சொக்கநாதர். மூன்று வயதான விஜயரங்கர் முடிசூட்டப்பட்டார். விஜயரங்கருக்காக, பாட்டியாராகிய மங்கம்மாள் பகர ஆளுநர் என்ற முறையில் நாட்டை ஆண்டு வந்தாள். ராணி மங்கம்மாள் பகர ஆட்சி வெளிநாட்டு, உள்நாட்டு கொள்கைகளுக்கு பெயர் பெற்றது.
எதிரிகளை பகைப்பதை காட்டிலும் அவர்களிடம் நட்பை கொள்வதே சிறந்தது என்ற கொள்கையுடையவன் ராணி. ஆகவே அரசி கோழை என்று பொருளல்ல. ஆண்மை கொண்ட பெண்; பெண்மையால் அரசியலில் வெற்றிக் கொடி நாட்டியவள். அவளுடைய வெளிநாட்டுக் கொள்கை மதுரைக்கு திடீர் அழிவைத் தரவில்லை. மாறாக அது மதுரையின் அறிவை சற்று தள்ளிப் போட்டது. அவளுடைய பெண்மையில் மயங்கிய பகைவரும் அவளுக்கு நண்பராயினர். ஆகவே மதுரைக்கு வந்த அழிவு தடுக்கப்பட்டது; உள்நாட்டு விவகாரங்களில் தலையிடப் போதிய சூழ்நிலையும் இதனால் ஏற்பட்டது. நாட்டு நடப்பு தக்கவாறு தம் கொள்கைகளை தீட்டினாள். போர் பிரகடனம் செய்யும் முன் எதிரியின் பலத்தையும் தம் பலத்தையும் ஒப்பு நோக்கினால். பல போர்கள் அவள் புரிந்தாலும், மதுரைக்கு அமைதி தந்தால், அவளுடைய ஆளுகையின் போது தான், முகலாயர் ஆதிக்கம் தக்காணத்திலும் விரைந்து பரவி வந்தது. 1693இல் திருச்சிராப்பள்ளியையும், 1697இல் தஞ்சையையும் ஜூல்பிகர்கான் தாக்கியபோது அரசி அவற்றைச் சாதுர்யமாக சமாளித்தாள். முகலாயரின் உயராண்மையைப் பெயரளவில் ஒப்புக்கொண்டாள். காலத்துக்குத்தக்க நடவடிக்கை மதுரையை முகலாயர் வசமிருந்து காப்பாற்றியது.
மைசூரின் படையெடுப்பு
இச்சமயம் மதுரை சிக்கதேவராயர் ஆண்டுவந்தார். அவர் ஆக்கிரமிப்பு கொள்கையில் நம்பிக்கை கொண்டு, மதுரையின் எல்லைகளைத் தாக்கினார். 1690 ஆம் ஆண்டளவில் அவர் சேலம் முதல் காவிரி வரை உள்ள பகுதிகளை கைப்பற்றி இருந்தார். அவர் மதுரையைத் தாக்க திட்டமிட்டிருந்தார். மதுரையின் வட எல்லையில் உள்ள தலைவர்கள் அவருக்கு அடிபணிந்தனர். திருச்சிராப்பள்ளி தளவாய் குமரய்யா தெரியலையே முற்றுகையிட்டார். திருச்சியைக் கைப்பற்றும் முன் வீடு திரும்புவதில்லை என்று அவன் சூளுரைத்திருந்தார். இச்சமயம் மராத்தியர் மைசூரை தாக்கினர். குமரய்யா படைகளை பின்வாங்கிக் கொண்டார். இவ்வாறு திருச்சியை மங்கம்மாள் காப்பாற்ற முடிந்தது.
திருவிதாங்கூருடன் தொடர்பு
ரங்ககிருஷ்ண முத்துவீரப்பரின் காலத்தில் திருவாங்கூரின் பகர ஆளுநர் ஊமயமை ராணி மதுரைக்கு அடங்கி நடந்தார். இரவிவர்மனின் பதவியேற்புடன் கொள்கையும் மாறிவிட்டது. கேரளா அரசன் தற்போது மதுரைக்கு கப்பம் கட்ட மறுத்தான். கட்டாயத்தின் பேரில் ஆண்டுதோறும் படை அனுப்பப்பட்டு திறை சேர்க்கப்பட்டது. கேரளத்தில் எட்டு வீட்டுப் பிள்ளைமாரால் ஏற்பட்ட பிரச்சனைகளால் இரவிவர்மனால் மதுரை படைகளுக்கு பதிலடி கொடுக்க இயலவில்லை. 1696 மதுரை படை கேரளத்திற்கு வந்தபோது, இரவிவர்மன் சூழ்ச்சித் திட்டம் ஒன்று தீட்டினார். ஒரே திட்டத்தில் மதுரை படைகளையும் தம் அமைச்சர்களையும் முறியடிக்கும் திட்டம் இது. படையெடுத்து வந்த படைகளுடன் உறவாடிக் கொண்டான். அவர்களில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி வைத்தான். அமைச்சர்களை கொல்ல மதுரை படை உதவி புரிவதாயின், தம் நாட்டில் ஒரு பகுதியை அதற்கு தருவதாக வாக்களித்தார். படையெடுத்து வந்தோர் இதற்கு இணங்கினர். கலகக்கார அமைச்சர்கள் நசுக்கப்பட்டனர். உள்நாட்டில் ஏற்பட்ட பிரச்சனை ஒருவாறு முடிந்தது. பின் கல்குளத்தில் தங்கியிருந்த மதுரை படைகளைத் தாக்கி விரட்டினான். எதிர்பாராத தாக்குதலுக்கு ஈடு செய்ய இயலாமல் தப்பி ஓடியது.
1697 நரசப்பைய்யன் என்ற தளவாய் படையுடன் திருவிதாங்கூருக்கு அனுப்பப்பட்டார். கேரளா அரசனை தண்டிக்கும் அனுமதியும் அவனுக்கு வழங்கப்பட்டது. போரில் நரசப்பைய்யன் வெற்றி பெற்றான். தடைபடுகிடந்த திறை மொத்தமாக பெறப்பட்டது. விலை மதிப்பிடவியலாப் குழுக்களும் அவருக்கு கிடைத்தன. அவற்றில் மிக முக்கியமானவை பீரங்கிப்படை பொருட்களே. அவை எண்ணப்பட்டு மதுரை, திருச்சி கோட்டைகளில் வைக்கப்பட்டன. வேலுப்பிள்ளை போன்ற வரலாற்றாளர் நரசபையன் படையெடுப்பை ஒப்புக்கொள்வதில்லை. ஆனால் இது உண்மை அல்ல என்று கூறுவதற்கில்லை.
தஞ்சை போர்
தஞ்சை மன்னன் ராஜி மதுரையின் எல்லைப் பகுதிகளை தாக்கி வந்தார். நட்புறவு மூலம் தஞ்சை படைகளை வெற்றி கொள்ள முயன்ற ராணி தோல்வியுற்றால். கிபி 1700இல் மதுரை தஞ்சை மீது போர் பிரகடனம் செய்தது. தஞ்சை படையை விரட்டும் பொறுப்பு தளவாய் நரசபையனுக்கு தரப்பட்டது. கொள்ளிடத்தை தாண்டிய மதுரை கடை தஞ்சையை அங்கங்கே முன்னறிவிப்பு இன்றி தாக்கியது. தஞ்சை தோல்வியுற்றது; நாடு கொள்ளையிடப்பட்டது. ஷாஜி மனம் பொருமினார். சேதத்தின் மூலமும் பணம் கொடுத்தும் ஷாஜி அமைதி உடன்பாடு செய்து கொண்டான். இதற்குப் பின் இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவு புதுப்பிக்கப்பட்டது.
ஆனால் மைசூரின் தொல்லை மதுரைக்கு இருந்த வண்ணமே இருந்தது. காவிரி நீரை தம் நாட்டுக்கு மாற்றும் நோக்குடன் மைசூர் அரசன் காவிரியின் குறுக்கே அணை கட்டினார். இது மதுரையையும் தஞ்சையையும் வெகுவாக பாதித்தது. காவிரி உலர்ந்து போயிற்று. பருவக் காற்றும் மழையும் பொய்த்துவிட்டது. நாட்டில் நீர்ப் பஞ்சம் ஏற்பட்டது. தஞ்சை, மதுரை அரசர்கள் இணைந்து மைசூரை தாக்க திட்டமிட்டனர். அதற்குள் காவிரி கரைபுரண்டு ஓடியது. அணைக்கட்டும் நாசமாகிவிட்டது. மைசூரின் திட்டங்களும் பாழாயின.
சேதுபதியின் தொடர்பு
கிழவன் சேதுபதி நாளுக்கு நாள் அரசியல் வானில் ஒலி விட்டுக்கொண்டிருந்தான். ரங்க கிருஷ்ணரின் காலத்தில் கிழவன் பெற்ற சலுகைகளால், இன்று மதுரையை எதிர்க்கத் துணிந்து விட்டான். திறை செலுத்துவதை நிறுத்திவிட்டான். தம் சுயாட்சியை வெளிவிடக் காலம் பார்த்திருந்தான். உள்நாட்டைப் பொறுத்தளவில் தன்னிச்சையாக ஆட்சி நடத்தினான். மேலும் 1700இல் சேதுபதி ஷாஜிக்கு வடை கொடுத்து உதவினான். இவை அனைத்தும் மதுரைக்கும் இராமநாதபுரத்திற்கும் இடையே பகையை வளர்த்தன. கிழவன் சேதுபதி மதுரையால் தாக்கப்பட்டான். 1702 இல் நரசப்பையன் தஞ்சை படையுடன் மறவர் நாட்டை தாக்கினான். மதுரை படையோ தோல்வியைத் தழுவியது. தொடர்ந்த போரினால் மதுரை படை வலுவிழந்து காணப்பட்டது. மறவர் படை எண்ணிக்கையில் அதிகமாக இருந்ததால், மதுரை மதுரை படை பீதியடைந்தது. மேலும் மறவர் படை கொரில்லா போர் முறையில் பயிற்சி உடையதாய் இருந்தது. மறவர் வீரம் மிக்கவர்கள்; அவர்களை அடக்குதல் எளிதன்று. அதற்குப்பின் கிழவன் மதுரையுடன் தமக்கு உள்ள தொடர்பை அறுத்துக்கொண்டு தன்னாட்சி ஏற்படுத்தினான். 1709 இல் அவன் தஞ்சை படைகளை வென்றான் அறந்தாங்கி கைப்பற்றினான். மங்கம்மாளின் முயற்சி வெற்றி பெறவில்லை அடங்கா கிழவன் அடக்கப்படவில்லை. அவருடைய மரணத்துக்கு முன் இராமநாதபுரம் தனி நாடாயிற்று.
கிறிஸ்தவருடன் தொடர்பு
இக்காலத்தில் கிறித்தவ சமயத்தால் பல பிரச்சனைகளை சமாளிக்க வேண்டி இருந்தது. பிரிட்டோ பலரை தன் சமயத்துக்கு மாற்றம் செய்தார்; அதன் பயனாக தம் உயிரையும் இழந்தார். மறவர் நாட்டில் தடிய தேவர் என்ற இளவரசனையும், வேறு சிலரையும் பிரிட்டோ சமய மாற்றினார். தம் மனைவி வழி உறவினராகிய தடிய தேவர் சமய மாறியது கேட்டு கோபம் கொண்ட கிழவன் திருச்சபைகளை அழிக்க உத்தரவிட்டான். பிரிட்டோவும் தோழரும் கைது செய்யப்பட்டனர்ச சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் ஓரியூருக்கு நாடுகடத்தப்பட்டனர்; அங்கு ஓரியூர் தேவனால் பிரிட்டோ கொல்லப்பட்டார். அவருடைய உடம்பு கொத்தி நொறுக்கப்பட்டு, கழுகுகளுக்கு போடப்பட்டது. பலமுறை தலையிட்டும் பிரிட்டோ காப்பாற்றப்படவில்லை. பிரிட்டோவின் மரணத்திற்கு பின் ஏறத்தாழ ஏழு ஆண்டுகள் வரை, அதாவது1700 வரை கிறிஸ்தவ எதிர்ப்பு ராமநாதபுரத்தில் இருந்து வந்தது. பிரிட்டோவின் மரணத்தையொட்டி ஓரியூர் தேவனும், அவன் அமைச்சனும் இறக்கவே, மக்கள் உள்ளங்களில் ஐயப்பாடுகள் ஏற்படத் தொடங்கின. சேதுபதி தாம் செய்த தவறுக்காக மனம் நொந்தார் என்று கூறப்படுகிறது. கிழவனுக்கு பெண் வடுகநாத தேவர் கிறிஸ்தவ சமய பிரச்சாரத்தில் தலையிடவில்லை. சமய மாற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருந்தது.
மதுரையை பொருத்த அளவில் கிறிஸ்தவர்களுக்கு சமய பாதுகாப்பு வழங்கப்பட்டது. மங்கம்மாள் கிறிஸ்தவர்களை சமத்துவத்துடன் நடத்தினார். சமயப் பிரச்சார காரணங்களுக்காக சிறை வைக்கப்பட்ட மெல்லோ பாதிரியார் விடுதலை செய்யப்பட்டார். போசேத் பாதிரியார் மங்கம்மாளால் வரவேற்கப்பட்டார். கிறிஸ்தவர்களுக்காக அவருடைய விண்ணப்பம் உற்று நோக்கப்பட்டு, கேட்டவை வழங்கப்பட்டன. அச்சலுகைகளை நரசப்பையன் அவையில் அறிவித்தார்.
நற்பணிகளுக்காக நாட்டு செல்வங்களை செலவழித்தார். கோயில், கொத்தளங்கள், கோட்டைவாயில்கள், மண்டபங்கள், வழிப்போக்கர் தங்கும் விடுதிகள், பயணியர் விடுதிகள் எழுப்பப்பட்டன. பழைய சாலைகள் செப்பனிடப்பட்ட புதியன போடப்பட்டன. தெருக்களின் மருங்குகளில் மரங்கள் நடப்பட்டன. பயணியர் விடுதிகள் ஆங்காங்கு சிறப்புடன் இயங்கிவந்தன. 1701இல் வெளியிடப்பட்ட ஒரு கல்வெட்டு உண்டி வழங்கும் சங்கத்திற்கு நிலம் விட்டதை கூறுகின்றது. மங்கம்மாள் பிராமணருக்கு அக்ரஹாரங்கள் அமைத்தார். தண்ணீர் தொட்டிகள் எழுப்புவதிலும், நீர் பாசனம் செய்வதிலும் தன் கவனத்தை செலவிட்டனர். 1687, 1704 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட உய்யக்கொண்டான் கால்வாய் அருகில் கிடைத்த. கல்வெட்டுக்கள் இதனை கூறுகின்றன.
மங்கம்மாள் துன்பச் சூழலில் இறந்தால் என்று நெல்சன் அறிவிக்கின்றார். தளபதி அச்சைய்யாடன் கொண்டிருந்த முறையற்ற தொடர்பால் தம் பெயரை இழந்தார். பேரன் வளர்ந்து வயதுக்கு வந்த போதும் ஆட்சிப் பொறுப்பை அவனிடம் ஒப்படைக்க தயங்கினாள். இதனால் மக்கள் அவளிடம் வெறுப்படைந்தனர். இறுதியில் அவள் கைது செய்யப்பட்டு, சிறையிலிடப்பட்டு, அங்கு இறந்தார். நெல்சனின் இச்சான்றுகளுக்கும் போதிய ஆதாரம் வேறில்லை. பாதிரியார்களின் கடிதங்கள் மங்கம்மாளின் மரணம் பற்றி எதுவும் கூறவில்லை. கல்வெட்டுகளின் படி அவள் 1706 இல் இறந்தார். அவள் பகர ஆளுனராக 18 ஆண்டுகள் மதுரை பகுதியை நிர்வகித்தார்.