சோழர் வரலாறு : Chola History in Tamil

தமிழக வரலாற்றிலேயே சோழர்களின் வரலாறு ஒரு பொற்காலமாகும். சோழர்களின் வரலாற்றை  நான்கு பிரிவுகளாக பிரிக்கலாம்.  அவை சங்க காலத்திற்கு முற்பட்ட சோழர்கள்,  சங்ககாலச் சோழர்கள்,  இடைக்காலச் சோழர்கள்,  பிற்காலச் சோழர்கள்.

சங்ககாலத்துக்கு முற்பட்ட சோழர்கள்

மனுநீதி சோழன்

மனுநீதி சோழன் திருவாரூரை தலைமையகமாக கொண்டு ஆட்சி செய்தவர்.  இவர் நீதி தவறாது ஆட்சி செய்தமையால்.  இவர் நீதியின் இருப்பிடமாக கருதப்பட்டார். இவர் காலத்தில் மணி ஒன்று கட்டப்பட்டு இருப்பதாகவும் அதை மக்கள் எப்பொழுது வேண்டுமானாலும் அந்த மணியை அடித்து  அரசரிடம் நீதி கேட்கும் முறை இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

ஒரு நாள் ஒரு பசுவின் கன்றைக்  அரசனின் மகன் தன் தேர் சக்கரத்தில் ஒரு பசுவின் கன்றை  தேரை ஏற்றி கொன்றுவிட்டான்.  இதைக் கேள்விப்பட்ட அரசன் தன் மகனை தேரை ஏற்றி  கொன்றான்.  இப்படியாக அந்த பசுவிற்கு நீதி வழங்கினான். இப்படியாக அரச நீதிக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவன் மனுநீதிச் சோழன் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது.  திருவாரூரில் உள்ள வீதி   விடங்கப் பெருமாள் கோயில் கல்வெட்டிலும் இந்நிகழ்ச்சி பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.  சேக்கிழார் பெருமானும் தமது பெரியபுராணத்தில் மனுநீதிச் சோழனது வரலாற்றை விளக்கிக் கூறியுள்ளார்.

சிபி

 சிபி சக்கரவர்த்தி  அக்காலத்தில் புகழ்பெற்ற சோழ மன்னர்களில் ஒருவர்.  இவர் தன்னிடம் அடைக்கலம் புகுந்த புறாவைக் காப்பாற்ற தன் சதையை அறிந்து வைத்து, இறுதியில் தானே துலா ஏறி நீதியை காப்பாற்ற  பாடுபட்டான் சிபி என சிலப்பதிகாரம் கூறுகின்றது.
 சங்ககாலச் சோழர்கள்

சங்ககாலச்  சோழ மன்னர்கள்

அவர்கள் ஆண்ட பகுதி காவேரி,  பெண்ணை,  பாலாறு,  வெள்ளாறு, கொள்ளிடம் ஆகிய ஆறுகள் பாயும் கவின்மிகு பகுதியாகும் அதாவது வேங்கடம் முதல் புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள வெள்ளாறு வரையுள்ள பகுதி ஆகும்.

உறையூரை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்த சோழர்,கரிகால்  பெருவளத்தான் காலம் தொட்டு புகாரையும் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தனர்.  உறையூர் பண்டைக்காலத்தில்  'உறந்தை' ,  கோழியூர் என்று வழங்கப்பட்டது.  

பட்டப்பெயர்கள்

கிள்ளிவளவன்,  சென்னி,  சேம்பியன் என்ற பெயர்களாலும் சோழர்கள் வழங்கப்பட்டன.  அதுபோல சோழ நாடு பல ஆறுகள் பாய்ந்து விளைச்சலை அதிகரித்ததால் அதனை நீர் நாடு,  புனல் நாடு என்றும் சிறப்பித்துக் கூறுவர்.

 சோழநாட்டின் தலைநகரங்களாக  பிறப்பிக்கப்பட்டுள்ள நகரங்கள் புகாரும்,  உறையூருமேயாகும்.  பெரும் நகரங்களாக காணப்பட்டவை புகார்,  உறையூர்,   அழுந்தூர்,  குடந்தை,  ஆவூர் முதலியன.  திருமாவளவனுக்கு பிறகு சோழ நாடு இரண்டு தலைநகரங்களாக உடைந்ததாக தோன்றுகிறது.

 உருவப்  பஃறேர்  இளஞ்சேட்சென்னி

கரிகாலனின் தந்தை இளஞ்சேட்சென்னி என்பது தெளிவு,  இளஞ்சேட்சென்னியின் படை வலிமையைப் பற்றி பல புலவர்கள் பாடிய பாடல்களே சான்று  பகரும்.

 கரிகாலன் 

தமிழ் இலக்கியங்களில் கரிகாலன் என்ற பெயரில் இரண்டு மன்னர்கள் குறிப்பிடப்படுகின்றனர். அவர்களில் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த கரிகாலனே திருமாவளவன் என்றும் கரிகால்பெருவளத்தான் என்றும்  புகழப்படுகின்றான்.  கரிகாலன் இளஞ்சேட் சென்னிக்கும் அழுந்தூர் வேள் மகளுக்கும்  பிறந்தவன்.  நாங்கூர் வேள் மகளை மணந்தார். கரிகாலன் என்பதுஆண் யானைகளுக்கு எமன் என்ற பொருளும் அல்லது கருகிய காலையுடையவன் என்ற பொருள்பட அமைந்தது கரிகாலன் ஆகும். நெடிய இமயம் முதல் படையெடுத்துக் கொடிய பல எதிரிகளைக் கொன்று குவித்து,  வாடிய தன் மக்களை பேணி,  காடு கொன்று நாடாக்கி,  குளம் தொட்டு வளம் பெருக்கி கோமகன் கரிகாலன்  பெயரை பற்றியும்,   காலத்தை பற்றியும்,   சில படைப்புகளைப் பற்றியும்,  தெளிவான முடிவுகள் காணப்படவில்லை.  சில வரலாற்று  அறிஞர்களிடம் முரண்பட்ட கருத்துக்கள் காணப்படுகின்றன. பன்னீராயிரம் சிங்களர்களை கொண்டு வந்து காவிரிக்கு கரை கட்டினான் என்பதால் இவனை ' பொன்னி கரை கண்ட பூபதி'  என்று மூவருலா சிறப்பிக்கின்றது. இவன் முதன ்முதலாக காவிரி நதியை தடுத்து கல்லணை கட்டிய பெருமை இவரையே சேரும்.

 பெயர்க்காரணம்

கரிய நிறமுடையதால் கரிகாலன்;  தீயின்  காரணமாக கால்   கரிந்து போனதால்  கரிகாலன் என்றும் கூறுவர்.  அவன் கால் கருகி போக காரணமாக இருந்தது அவன் தாயத்தாரே.  கரிகாலனின் தந்தை அவன் தாய் கருவுற்று இருந்த பொழுதே இறந்துவிட்டார்.  ஆகவே கரிகாலன் அரச பதவி ஏறாதிருக்க  சூழ்ச்சி நடைபெற்றது.  அவன் சிறுவனாக  இருந்தபோதே அவன் சிறை செய்யப்பட்டு,  சிறைச்சாலைக்குத்  தீ வைக்கப்பட்டது.  இறுதியில் தப்பிக்கும்போது கால் தீயில் கருகிவிட்டது.

களிப்பாகைக்கு   காலன் என்பதும்,  கரி  அதாவது  யானைகளுக்கு  காலன் என்பதும்,  பட்டத்துக் கரியால் (யானையால்)  மாலை சூட்டப்பட்டு மன்னனானான் என்பதும் சில கற்பனைகளை.

 பட்டத்து யானை  அரசனாக்கியது  என்பதை கீழ்க்கண்ட சில காரணங்களால் மறுத்து விடலாம்.

 1) பட்டத்து யானை புறப்பட்ட இடம் தோழர் தலைநகரிலிருந்து அல்லாமல்  கழுமலம் என்ற சேர நகரிலிருந்து என்று தெரிகிறது.  இது சோழ நாட்டு முறையா? 2)  கரிகாலன் பெயர் குறிப்பிடப்படாமல்,  பல மொழிகளில் பாடலில் ' விழுமியோன்'  எனக் கூறப்பட்டுள்ளது. 3)   சோழர் குலக் குறிப்பு ஏதும் காணப்படவில்லை. 4)  ஆட்சிப் பொறுப்பில் இருக்கும்  மன்னன்  இறந்துவிட்டாள்,  மாற்றான் ஒருவன் வலிமையோடு கைப்பற்றுவான் அல்லது அரசு  பாரம்பரியத்தில் வந்த அதே கிளை வீரன் ஒருவன் ஆட்சியை கைப்பற்றுவான்.  இவ்வாறு யானை கொண்டு மாலை போட்டு தேர்வு செய்யும் முறை ஐம்பெருங்குழு,  எண் பேராயம் தோன்றிய பிற்காலத்தில் எழுந்தது. 5) சிறை செய்த  தாயாத்தரோ,   மற்றையோரோ,  யானை கொண்டு தேர்வு செய்வதை தடுக்கவில்லையா?  போன்ற பல கேள்விகள்;  பட்டத்து யானை தேர்ந்தெடுப்பது  கரிகாலனை  அல்ல என்றும்,  அது வேறு ஒரு சேர நாட்டு மன்னனை என்றும் தெரிகின்றன.

 கரிகாலன் காலம்

கரிகாலன் காலத்தைப் பற்றி பல கருத்துக்கள் இருப்பினும்  அவன் காலம்  கி.மு60 முதல் கி-மு 20 வரை உள்ள இடைப்பட்ட காலமாகும்.  சேரன் செங்குட்டுவன் காலத்திய  கயவாகுவும் (கிபி 171 -  191)  ஆத்திரத்தை ஆண்ட சாதவாகன மன்னன் யக்ஞஸ்ரீயும் (கிபி 165 - 195)  நூற்றுவர்  கன்னர் எனச் சிலம்பு கூறுகின்றது.  இதன்மூலம் கரிகாலன் செங்குட்டுவனுக்கு முற்பட்டவன் எனலாம்.

 கரிகாலன் ஒருவனே

அகநானூறு,  புறநானூறு ஆகிய பாடல்களில் காணப்படும்  கரிகாலனும்  பொருநராற்றுப்படையில் குறிக்கப்பெறும் கரிகாலனும்  வெவ்வேறானர்  இன்று கருத்து தவறானது;  இருவரும் ஒருவரே;  சுருங்கக்கூறின் இரண்டு நூல்களிலும் குறிக்கப்படும் தந்தையின் பெயர் உருவப்  பஃறேர்  இளஞ்சேட்சென்னி என்பதாகும்.

கரிகாலனும் திருமாவளவன்

இளங்கோவடிகள்,  சிலப்பதிகாரத்தில் கரிகாலன்,  திருமாவளவன் என இரண்டு பெயர்களை குறிப்பிடுகிறார் அவை இரண்டும் ஒரே பெயர் உரியன என்பது சிலர் கருத்து,  இருப்பினும் ஒரு ஆசிரியர் தன் முழு நூலைப்  படைக்கும் பொழுது  இருவேறு பெயரிட்டு   குறிப்பிடவேண்டியதில்லை  என்பதால் இரு பெயர்களும்  ஒன்றே.

 கரிகாலனின் இமயப் படையெடுப்பு

கரிகாலன் பற்றிய செய்திகளை குறிப்பிடும் பொழுது,  அவன் இமயம் நோக்கி படையெடுத்து அங்கே  புலிக்கொடி நாட்டினான் என கலிங்கத்துப் பரணியில் ஜெயம் கொண்டான் குறிப்பிடுகின்றார்.  செயங்கொண்டார் காலத்தால் லெய்டன்   பட்டயங்களுக்குப்  பிந்தியவர்.  கரிகாலன் கட்டிய கல்லணை பற்றிய செய்தியை குறிப்பிடுகின்றன வென்றி,  அவன் இமய படையெடுப்பு காணப்படவில்லை.  ஆகவே திருமாவளவன் என்பவனே படையெடுத்தான் எனவும்;  அடியார்க்கு நல்லார்  கூறும் திருமாவளவன் தான் கரிகாலன்  எனவும் மொழிவது   ஏற்புடையதல்ல.

 மற்றைய போர்

வெண்ணிப் போரும், வாகை போரும் குறிப்பிடத்தக்கனவாகும்.  அவை இரண்டும் தொடர்  போர்களாகும்.  ஒன்பது  வேளிரும்,  சேரன், பாண்டியன்  ஆகியோருடன் ஒன்று கூடி நீடாமங்கலத்திற்கருகில்  உள்ள வெண்ணிவாசல் என்ற இடத்தில் எதிர்த்தனர்.  கரிகாலன் தனித்து நின்று அவர்களை புறமுதுகிட செய்தான்.  மீண்டும் எதிர்த்த 9  வேளிரின்  முரசு,  குடை மற்றும் தம் விருதுகளை வாகைப் பறந்தலை என்ற  போரில் விட்டு விட்டு ஓடும்படி செய்தான்.

 காவிரிக்கு கரைகட்டி  அரசு செலுத்திய பெருமை     கரிகாலனையே சேரும்.  எதிரிகள் மீது படையெடுத்து தோல்வியடைந்த வீரர்களை கரை கட்ட பயன்படுத்திக்  கொண்டான்.  இச்செய்திகளை பிற்காலத்திய சோழர்கால கல்வெட்டுகளும்,  தெலுங்கு சோழ செப்பேடுகளும்,  விக்கிரமசோழனுலா போன்ற மற்ற நூல்களும் தெரிவிக்கின்றன.

திருமாவளவன்

பெயரிலேயே செல்வத்தையும், வளமையையும் கொண்ட வனப்புமிக்க  அஞ்சா நெஞ்சம் பெற்ற அவனைப் பற்றி வெற்றி செய்திகளை பட்டினப்பாலை எடுத்துக்கூறுகின்றது.  சிறையிலடைக்கப்பட்ட திருமாவளவன் தன்னை மீட்டு அரியணை கைப்பற்றியதோடு தனக்கு எதிர்ப்பு தெரிவித்த  அருளாளர்,  வடவர்,  குடவர்,  ஒளியர்,  தென்னவர்,  பொதுவர்,  இளங்கோவன் முதலியோரை வென்று  தன்மதிப்பையும் வீரத்தையும் உயர்த்தினான்.  அத்துடன் நில்லாமல் இமயம் நோக்கி படையெடுத்து தன் புகழ் இமயமென  விளங்கச் செய்து அங்கே புலி கொடி  நாட்டி  வந்தான்.

குராப்பள்ளித்  துஞ்சிய  பெருந்திருமாவளவன்

உறையூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த இவன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியின்  நண்பனாவான்.  இவன் குராப்பள்ளித் துஞ்சியவன்  எனப்  பெயர் பெற்றான்.  இவனை பற்றி மருத்துவம் தாமோதரனார்,  பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாராட்டிப் பாடியுள்ளார்.

 குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்

 திருமாவளவனுக்கு பின் உறையூர், புகார் ஆகிய  தலைநகர்களில் இது வேறு  மரபு சோழர்கள் ஆட்சி புரிந்தனர்.  அவற்றில் உறையூரை ஆண்டவர்களில் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் முக்கியமானவர் ஆவார்.  மக்களைப் பேணிப் போற்றியும்,  எதிர்த்தோரை இரக்கமின்றி எது நெருப்பிட்டு தீக்கிரையாக்கி அளிப்பான் எனவும்  புலவர் பாடுகின்றனர்.  திருக்கோவலூரை ஆண்ட மலையமான்,  துளுவ நாட்டில் வாழ்ந்த கோசர் கூட்டத்தினரையும்,  பாண்டியன் மாறன் ஆகியோரை எதிர்த்து வெற்றி பெற்றான்.  அடுத்து சேரநாட்டின் தலைநகரான கருவூரை முற்றுகையிட்டு அளித்து இமயம் வரை வெற்றிபெற்ற  நெடுஞ்சேரலாதனையும் வெற்றி கொண்டான்.

 செங்கண்ணன்

வீரமும் சிவபக்தியும் ஒருங்கே  பெற்றவன் நன்னிலம்  வைகள், அம்பர் போன்ற இடங்களில் சிவாலயங்கள்  அமைத்து திருப்பணிகள் பல செய்தவன்., சேரமான்   கணைக் காலிரும்  பொறையை வென்று குடவாயில்  கோட்டத்துச் சிறை வைத்தான்.  அவன் நீர் பெற நானே மடிந்தான் என்பதனை புற பாடல் கூறுகின்றது.

 செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி

 வடுகரை அளித்து  வெற்றிபெற்றமையால்  இளஞ்சேட்சென்னி இப் பெயர் பெற்றான்.  பரதவர்களை அழித்து அமைதி ஏற்படுத்தினான்.  புலவர்களைப் போற்றும் கொடைத்  திறத்தினன்.

கோப்பெருஞ்சோழன்

நட்பிற்கு இலக்கணமாக வாழ்ந்த தோழன் இவனேயாவான். சேர,  பாண்டியர் வசம் சென்று புகும் முன்னரே வடக்கிருந்து  உயிர் துறக்க முயன்ற திண்மைமிக்க மன்னனாவான்.  நாவன்மை மிக்க பிசிராந்தையாரும் உடன் வந்து வடக்கிருந்தார்.

 நெடுங்கிள்ளி

நலங்கிள்ளி பெற்றிருந்த உறையூரை கைப்பற்ற நெடுங்கிள்ளி அவருடன் போர் தொடுத்து உறையூரை கைப்பற்றினார்.

   நெய்ங்தல  காணல் இளஞ்சேட்சென்னி

இவனைப் பற்றி ஊன்பொதி பசுங்குடையார் என்ற புலவர் பாடியுள்ளார்.

 நலங்கிள்ளி

தமிழ் வேந்தர்களின் பெருமையின்  சிறப்புடையோனாகத்  தரணியை ஆளத் துடித்து  மூவேந்தர்களில் முதன்மையாகவும் முன்னேற்றம் உடையவனாகவும்  விளங்க விரும்பியவன்.  இவன் புகாரைத் தலைநகரமாகக் கொண்டு வாழ்ந்தவன்.

  தூங்கெயில்  எறிந்தோன்

பகைவரும் கண்டு அஞ்சத்தக்க  அறிய காவலையுடைய தூங்கெயிலை  எழுந்தவன்  என்பதனால் இப் பெயர் பெற்றான்.  நத்தத்தனார்,  இளங்கோவடிகள்,  சீத்தலை சாத்தனார் முதலானோர் பாராட்டும் பண்பாளர் இவனேயாவான்.

 தித்தன்

உறையூரை தலைநகராகக் கொண்டு வாழ்ந்தவன்.  புலவர் பெருமக்களை அல்லது இல்லாதோர் பலருக்கு இன்முகம் காட்டி பல அரிய பரிசில்கள் வழங்கியவர்.

 கோப்பெருநற்கிள்ளி

  தித்தனின்  மகனான இவன்,  தந்தையை பிரிந்து ஆமூர் சென்று  தனிமையில் வாழ்ந்தான்.  பின்னர் உறையூரை தலைநகராகக் கொண்டு  வாழ்ந்தான்.

 இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி

 படைவலிமை மிக்க  பகைவர்களைப்  பல திசைகளில் அழித்து  வெற்றி பெற்று,  ராசசூய வேள்வியைச்  செய்ததினால் இப்பெயர்  பெற்றான்.  மந்தாரசேரல்  இரும்பொறை என்று சேர மன்னனை முள்ளூர் மன்னனின் உதவியுடன் வெற்றி பெற்றான்.  சேரமான் மாரி  வெண்கோவும்,  பாண்டியன் உக்கிர பெருவழுதியும் இவன்  காலத்தவர்களே.  அவ்வையார் இவர்களின் நாட்டை சிறப்பித்து போற்றியுள்ளார்.

 முடித்தலை கோப்பெரு நற்கிள்ளி,  வேற்பஃறடக்கைப்   பெருவிற்கிள்ளி,   மாவளத்தான் போன்றோர் மற்றைய சங்ககாலச்   சோழர்களாவர்.

 இடைக்காலச் சோழர்கள்

கிபி 300 முதல் கிபி 850 வரை சோழர்களின் வரலாற்றை ஒரு இருண்ட காலம் என அழைக்கலாம்.  இந்த காலகட்டத்தில் வாழ்ந்த சோழ மன்னர்களைப் பற்றிய செய்திகள் நமக்கு முறையாக கிடைக்கவில்லை. ஆனால் பல்லவர்,  சாளுக்கியர்,  பாண்டியர் முதலியோர்களின் பட்டயங்களில் இருந்து கிடைக்கும் சொற்ப தகவல்களை வைத்து இவர்கள் பற்றி சிறிது அறியமுடிகின்றது.

பிற்காலச் சோழர்கள் 

சோழர் வரலாற்றுக்குரிய மூலங்கள்

சோழர் ஆட்சி ஏறத்தாழ கிபி 9 ஆம் நூற்றாண்டில் இறுதியில் தொடங்கி பதின்மூன்றாம் நூற்றாண்டு முடிவடைந்தது.  எந்த நான்கு வருட காலம் தமிழகம் முழுவதிலும் உள்ள கோயில்களில் சோழர் கால கல்வெட்டுகள் பல்லாயிரக் கணக்கில் காணப்படுகின்றன.  தோழர்கள் நாடாண்ட  பொழுது பம்பாய்  மாகாணத்தை பிற்கால சாளுக்கியர்களும்  இராஷ்டிரகூடர்களும் ஆண்டனர்.  அவர்கள் சுடரோடு ஓயாது போரிட்டு வந்தனர். கோதாவரி கிருஷ்ணா ஆறுகளுக்கு இடைப்பட்ட வேங்கி நாட்டை சாளுக்கியர் ஆண்டு வந்தனர்.  சோழர்கள் அவர்களுடன் உறவு கொண்டு  மேலைச்  சாளுக்கியரை தாக்கிக்  வந்தனர்.  இவர்களுடைய கல்வெட்டுகள் சோழர் வரலாற்றை அறிய  பெருந்துணை செய்கின்றன.

 சோழப் பெரு நாட்டிலும்,  இலங்கையிலும் சோழர் காலத்தை வரையறுத்துக் கூறும் சிற்ப வேலைப்பாடும்.  கட்டடக் கலைத் திறனும் அமைந்த கோயில்களும் இருக்கின்றன.  தஞ்சை பெரிய கோயில் கங்கைகொண்ட     சோழேச்சுரம், இராசராசேச்சுரம் (தாராசுரம்),  திரிபுவன   விரேசுவரம்,  இலங்கை மாதோட்டத்திலுள்ள  இராசராசேச்சுரம்  முதலிய கோயில்கள் சோழர்  ஆட்சியையும் கலை வளர்ச்சியையும் உணர்த்தும் சிறந்த சான்றுகளாகும்.

 சோழர்கள் ஆண்ட அந்நெடுங்காலத்தில்  தமிழகத்து ஆறுகளுக்கும்,  ஊர்களுக்கும்,  பிற இடங்களுக்கும் தோழர்களின் பெயர்கள் இடப்பட்டன இராஜராஜேஸ்வரம்,  கங்கை கொண்டான்,  குலோத்துங்க சோழ நல்லூர்,  முடிகொண்டான் ஆறு,  வீரசோழன் ஆறு,  இராசராசன் வாய்க்கால்,  அகளங்கன் திருவீதி முதலியன.

 தமிழகத்தில் கிடைத்த  நாணயங்களுள் சோழர் நாணயங்கள் மிகப்பல.  அவற்றில் சேரர்க்குரிய  வில்,  பாண்டியர் குரிய கயல் ஆகிய இரண்டிற்கும் நடுவில்  சோழர்க்குரிய  புலி பெருமிதத்தோடு வீற்றிருக்கும் காட்சி சோழப் பேரரசர் என்பதை  தெரிவிப்பதாகும்.  சோழன் இராசராசன்,  இராசேந்திரன் குலோத்துங்கன் இவர்கள் நாணயங்கள் கிடைத்துள்ளன.

 சோழர் காலத்தில் தமிழகத்தில் கடற்படை சிறந்திருந்தது.   அப்படை கீழ்க் கடலில் தமிழகத்து  வணிகக் கப்பல்களுக்கு துணையாக இருந்தது.  சோழர்கள் சீனப்  பேரரசரோடு   வணிக உறவு கொண்டிருந்தனர்.  இராஜேந்திர சோழன் வெற்றியைக் குறிப்பிடும் தூண் பர்மாவில் காணப்படுகிறது.  சீன நூல்கள் சோழர் படை வலிமையையும்,  செல்வ வளத்தையும் பற்றி எழுதியிருக்கின்றன (foreign evidences)  இவ்வாறே  வங்க நாட்டின் வரலாற்றில்  இராஜேந்திரனது  வடநாட்டுப் படையெடுப்பை குறிக்கப்பட்டுள்ளது.

 சோழர் காலத்தில் செய்யப்  பெற்ற சைவத் திருமுறைகள் வைணவ நூல்கள்,  கம்பராமாயணம் என்ற நூல்களில் தோழரை பற்றிய குறிப்புகள் சில காணப்படுகின்றன.  வீரசோழியம்,  மூவருலா,  கலிங்கத்து பரணி,  தக்கயாகப் பரணி,  குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ்  என்ற நூல்களில் தோழர் வரலாற்றுச் செய்திகள் பல காணப்படுகின்றன.  இவை அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு சோழர் வரலாறு எண்ணம் கட்டடம் கட்டப்படுகிறது.

 சுற்றுப்புற நாடுகள்

பல்லவர்  கால  இறுதியில்,  இன்றைய பம்பர் மாகாணத்தையும் தட்சிண  பகுதியும் ஆண்டுவந்த இராட்டிரகூடர்கள் சோழர் காலத்திலும் சிறிது காலம் ஆண்டனர்.  அவர்களுக்குப் பிறகு அந்த நிலப்பகுதி மேலைச் சாளுக்கியரால் ஆளப்பட்டது.  ஒளர்களுக்கு ஓயாத தொல்லை கொடுத்தவர்கள் இவர்களே.  கிருஷ்ணர்  ஆற்றிற்க்கும் கோதாவரி ஆற்றிற்க்கும் இடைப்பட்ட நிலப்பகுதியை கேலி சாளுக்கியர் ஆண்டு வந்தனர்.  தமது  பேரரசின் வலிமை குன்றாது இருக்க முதற் பராந்தகன் முதலியோர்  இராட்டிரகூடருடன் மண உறவு கொண்டனர்.  அப்படியிருந்தும் இராட்டிரகூடர்கள் தோழர்களைத்   பகைத்தனர்.  முதலாம் இராசராசன் முதலியோர்  கீழைச் சாளுக்கிய ரோடு மண உறவு கொண்டனர்.  பிற்கால சோழர்கள் ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் தென்னிந்தியா முழுவதையும் ஒரு குடையின் கீழ் வைத்து ஆண்டனர்.  தென்னிந்திய வரலாற்றில் இவ்வாறு தென்னிந்தியா முழுவதையும்   ஆண்ட மரபு வேறு யாருக்கும் இல்லை.

 

விஜயாலய சோழன் (கிபி 846  முதல் 880)

பிற்கால சோழ அரசு உருவாக்கியவன். இவன் உறையூருக்கு அருகில் பாழையாறையிலிருந்து  ஆட்சி செய்த குறுநில மன்னராக இருந்தவர். இவர் பாண்டியனின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த முத்தரையர்களை வென்று தஞ்சையை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தார். இவன் முத்திரையர் வெற்றிச் சின்னமாக தஞ்சையில் நிசும்பசூதனி என்னும் பெயருடன் துர்க்கைக்கு கோயில் அமைத்தான்.  'தொண்ணூற்றாறு  புண்களை  மார்பில் கொண்டவன்'   என்று மூவருலா  இவனை புகழ்ந்து பேசும்.

 ஆதித்தன்  (கிபி 880  முதல் 907)

விஜயாலய சோழனின் மகனான ஆதித்தன் விஜயாலய சோழனுக்கு பிறகு மன்னரானார்.  கிபி 880  ஆம் ஆண்டு  நடைபெற்ற  திருப்புறம்பியம் போரால் பிற்கால சோழப் பேரரசுக்கு வழிகோலினார்.  இவர் தொண்டை நாடு,  கொங்கு நாடு,  தலைக்காடு  ஆகிய பகுதிகளை கைப்பற்றிசோழப் பேரரசு விரிவுபடுத்தினார் இவருக்கு கங்கர்கள் துணை நின்றனர்.  இளங்கோன் பிச்சி  பட்டத்தரசி ஆவாள். கன்னரதேவன்  மற்றும் பராந்தகனும் இரு பிள்ளைகள் அவர். இராஜகேசரி பட்டம் புனைந்த இவன் காலத்தில் தெற்கே சுசீந்திரம்,  குற்றாலம் வரை ஆட்சி புரிந்தான் என்று தெரிகின்றது.  இவன் காவிரியின் கரை முழுவதிலும் இருந்த சிவன் கோயில்களை புதுப்பிக்க தொடங்கினான்.

முதலாம் பராந்தக சோழன்  கிபி  (907 முதல் 958)

பராந்தகன் பாண்டியன் மீது படையெடுத்து பாண்டியன் இராஜசிம்மன் வென்றான்,  'மதுரை வென்ற கோப்பரகேசரி' எனப் பெயர் பெற்றான். தோல்வியுற்ற பாண்டியன் இலங்கைக்கு தப்பிச் சென்று அங்கே மணிமுடியையும்,  செங்கோலையும் இலங்கை வேந்தன் நான்காம் உதயணன் கொடுத்துவிட்டு சேர நாட்டை அடைந்தார்.  நான்காம் உதயணன் முடியையும் செங்குவளை  தர மறுக்கவே,  பராந்தகன் இலங்கை மீது படையெடுத்தான்.  ஈழத்தையும்  வென்றதனால்  இவன் ' மதுரையும் ஈழமும் கொண்டான்'  என்று 37 ஆம் ஆண்டு கல்வெட்டுகளில் போற்றப்படுகிறான்.  இலங்கை வேந்தன் செங்கோல் முடியுடன் ஓடிவிட்டான்.  பராந்தகன் ஏமாற்றத்துடன் திரும்பினான்.  பணப்பாடி (பாலாற்று வடக்கு பகுதி)  வைதும்பர் மரபினர் ஆண்ட  ரே நாண்டு  ஏழாயிரம் பகுதியை (கடப்பை,  கர்நூல்) வென்றார்.  இவர் பெற்ற பட்டங்கள்  வீர நாராயணன்,  மதுராந்தகன் இந்த படங்கள் குறிப்பிடத்தக்கவை. பராந்தகனுக்கு இராசதித்தன், கண்டராதித்தன்,  அரிகுலகேசரி,  உத்தமசீலி,  அரிஞ்சயன் என்ற ஆண் மக்களும்,  வீரமாதேவி,  அனுபமா,  என்னும் பெண் மக்களும் உண்டு.

இராட்டிரகூட  மன்னனை வென்று ' வீரசோழன்'  என்ற பட்டமும் பெற்றான்.  மற்றும் பண்டித வத்சலன்,  சங்கிராம ராகவன்,  இருமுடிச் சோழன் போன்ற பட்டங்களைப் பெற்ற இவன்,  தன்னை '  சிவனது பாதத் தாமரையில் உரையும் வண்டு,  எனக் கூறிக் கொள்கிறான். 

முதலாம் பராந்தக சோழன் போர்

மூன்றாம் இராசசிம்ம  பாண்டியனை கிபி 910ல்  இவன் தோற்கடித்தான்.  அப் பாண்டியன் இலங்கை மன்னனான ஐந்தாம்  காசிபனைத் துணைக்கு வேண்டினான்.  காசிபன் ஒரு பெரும்படையை சக்க  சேனாபதி தலைமையில் அனுப்பி பாண்டியனுக்கு  உதவினான்.  இருபடைகளும்   பராந்தகனை வெள்ளூர் என்ற இடத்தில் எதிர்த்தன.  ஆனால் அவைகள் தோற்கடிக்கப்பட்டன.   இப்போரின் போது பழுவேட்டரையர்,  கண்டன் அமுதன்,  கொடும்பாளூர் குறுநில  மன்னர் ஆகியோர் பராந்தகனுக்கு உதவி புரிந்தனர்.

 இரு வானர்களை   வல்லத்தில் தோற்கடித்து பராந்தகன் வெற்றி பெற்றான் என உதயேந்திரம் பட்டயங்கள் கூறுகின்றன.    இரு வானர்களை  பற்றிய பெயர்களில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் இரண்டாம் விஜயாதித்தன்,  இரண்டாம் விக்ரமாதித்தன் ஆகிய இருவரே என்று கூறலாம்.

 இராட்டிரகூடருடன்  நெருங்கிய வகையில் பராந்தகன் திருமண உறவு பூண்டான்.  தன் மகளான வீரமாதேவியை இந்திரன் மகனான  நான்காம் கோவிந்தனுக்கு திருமணம் செய்தான்  அவன் திறமையற்றவன்.  சாளுக்கியரின் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு தோல்விகண்டான்.  பின்னர் மூன்றாம் அமோக வர்ஷன் இராட்டிரகூட மன்னன்னான்.  கோவிந்தன் சோழநாடு வந்தான்.  அமோகவர்ஷன்  இறந்த பிறகு மூன்றாம் கிருஷ்ணன் இராஷ்டிரகூட மன்னனானான்.  ஆனால் மூன்றாம் கிருஷ்ணன் கங்க நாட்டு  புதுகனின்(அவன் தமக்கையின் கணவன்)  உதவியுடன்  சோழப் படையை தோற்கடித்தான்.  இதன் பின்னர் நான்காம் கோவிந்தனை பற்றி ஏதும் அறிய முடியவில்லை.   வாணரும் வைதும்பரும்  இராட்டிரகூடர் பக்கம் சேர்ந்தனர்.  இவ்வாறாக வடபகுதியில் இருந்த மன்னர்களும் குறுநில மன்னர்களும் சோழனை எதிர்க்க லாயினர்.  இச்சூழ்நிலையில் பராந்தகன் தனது மகன் இராஜாதித்தன் தலைமையில் ஒரு படையை திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திரு நாவலூரில்  இருக்கவைத்து,  வட எல்லையை,  பாதுகாத்தான் அவனுக்கு உதவியாக அரிகுலகேசரியும் அங்கேயே சென்று  தங்கினான்.  இவ்வாறு இருதரப்பினரும் தங்களது படைகளை பெருகிக்கொண்டே சென்றனர் இறுதியில் ஓர் தவிர்க்க முடியாததாயிற்று.  இருவருக்கும் தக்கோலம் என்ற இடத்தில் 949ல் போர் நடைபெற்றது.  அப்போரில் இரண்டாம் புதுகனின்   அம்பிற்கு  யானை மீதிருந்த  இராஜாதித்தன் கொல்லப்பட்டான்.

 கண்டராதித்தன்  கிபி (953  முதல் 956)

 கண்டராதித்தன் ஒரு சிறந்த சிவ பக்தன் ஆவான்.  இவன் பாடிய திருவிசைப்பா பன்னிரு திருமுறையின் ஒன்பதாம் திருமுறையில் அடங்கும்.  இவன் மனைவி செம்பியன் மாதேவி பட்டத்தரசி ஆவாள்.  இவர் சைவத்தில் பற்று மிக்கவராக  இருந்ததால் கோயில்கள் பலவற்றை கட்டினார்.  அறக்கட்டளைகள் பல ஏற்படுத்தினார் இவர் மகன் உத்தம சோழன் ஆவான்.  இவனுக்குப்பின் இவன் தம்பி அரிஞ்சயன் பட்டம் எய்தினான். ஒரு வருடமே ஆண்டாளன். வட ஆற்காடு மாவட்டத்தில் முதலாம் இராசராசன் இவர் நினைவாக  அரிஞ்சேசு வரம்  என்ற கோயிலைக் கட்டினார்.

 சுந்தரசோழன் அல்லது இரண்டாம்  பராந்தகன் II (கிபி 956  முதல் 973)

சுந்தர சோழன் என்ற பெயர் உடையவன் சேவூர்ப் போரில் வீரபாண்டியனை வென்றான்.  தொண்டை மண்டலத்தை வென்று விரிவாக்கினான்.  மகன் ஆதித்த கரிகாலன் சிறுவனாக இருந்தமையால்  சித்தப்பா உத்தம சோழன் (செம்பியன் மாதேவியின் மகன்)  அரசனானான்.  தொடர்ந்து ஆள வேண்டும் என்ற ஆசையினால் ஆதித்த கரிகாலனை கொன்றான் என்பர்.  மகனின் இரப்பினால் வருந்திய சுந்தர சோழன்,  காஞ்சி பொன்மாளிகையில் இறுதி நாட்களைக் கழித்து பொன்மாளிகை துஞ்சிய தேவன் எனப் பெயர் பெற்றான்.  சோழநாட்டை உலகம் போற்ற ஆண்ட ராஜராஜன் இவன் மகனாவான்.

உத்தம சோழன்  (கிபி 969-985)

மதுராந்தகன் என்னும்  பட்டப்பெயர் உடையவன்.  உத்தம சோழன் ஆட்சி சிறப்புகளுக்கு காரணமாக இருந்தவன் அம்பலவான்  பழுவூர்  நக்கன் என்பவன் ஆவான். சிறப்பு விக்ரமை சோழ மரியான்  என்ற பட்டத்தை உத்தமசோழன் வழங்கியமையினால் புலனாகும். பாண்டியரோடு போரிட்டு நாட்டை விரிவு படுத்தினான்.  உத்தம சோழன் உரத்தாயார் சோரப்பையார் பட்டத்தரசியவார். இவனுக்கு மதுராந்தகன்,  கண்டராதித்தன் என்னும் புதல்வர்கள் உண்டு.  இவன் மனைவியர் கோயில் கட்டும் பல நிபந்தங்களை வழங்கிய பெருமையை உடையவர்.

 இராசராசன் I  (கிபி 985-1016)

இராஜராஜன் காலம் முதல் பெரும்  மலர்ச்சியடைந்தது.  நாட்டின் எல்லைகள்   பெருக்கப்பட்டன  கடல் கடந்து படையெடுப்பு மேற்கொள்ளப்பட்டது கலைகளும் இலக்கியங்களும் முன்னேற்றம் கண்டன, சமயம் மிக உன்னத நிலையை அடைந்தது. ராஜராஜ சோழன்  இராசகேசரி,  அருண்மொழி,  மும்முடிச் சோழன்  முதலிய பட்டங்களை பெற்றவர்,  ஐப்பசி சதய நாளில் பிறந்தவன்.  மெய்க்கீர்த்திகளில் ' திருமகள் போல நில செல்வியும் இரட்டபாடி ஏழரை இலக்கமும்,  முந்நீர் பழந் தீவு பன்னி ராயிரமும், ஸ்ரீ இராசராச தேவருக்கு யாண்டு இருபத்தொன்பது' எனத் தொடங்கி முடியும் மெய்க்கீர்த்தி குறிப்பிடத்தக்கது. தென்பாண்டி நாட்டினை முதற்கண் வென்றன். பின் சேரரை வென்றான்.   சேரநாட்டு வெற்றியை மெய்க்கீர்த்திகள் " காந்தளூர்ச் சாலை கல மறுத்தருளிய " என புகழ்கின்றன. சேரர்களையும்  பாண்டியர்களையும்  வென்றமையினால் "தென்ன  பராக்கிரமன்"  எனும் பட்டத்தையும்  பெற்றான், கங்கபாடி,  தணிகைபாடி,  நுளம்பபாடி, சீட்புலி நாடு,  பாகி நாடு,  ஆகியவற்றை வென்றார்.  வேங்கி நாட்டைத் தன் அரசின் கீழ் கொண்டுவர  போர் எடுத்தான். விமலாதித்தனுக்குத்  தன் மகள் குந்தவையை மனம்  செய்து கொடுத்து கீழைச் சாளுக்கியர் பகையை தவிர்த்தான்.

இராசராசன் பெற்ற வெற்றிகளில் ஈழத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது (கிபி 1014).  அவன் வைத்திருந்த தலைசிறந்த கடற்படையே வெற்றிக்கு காரணம். ஐந்தாம் மகிந்தன் ஆண்ட  அனுராதபுரத்தை அளித்து,  பொலனருவாயை 'ஜனநாத மங்கலம்' என பெயரிட்டு,  இராசராசேசுவரம் என்ற கோயிலையும்  கட்டுவித்தான்.  திருவாலங்காட்டு செப்பேடு ஈழ வெற்றியை "போர்த் திறனில்  ராமனையும் விஞ்சியவன்" எனச்  சிறப்பிக்கிறது.  வெற்றி சிறப்புகளில் இரட்டபாடி ஏழரை,  இளக்கம், முந்நீர்ப் பழந்தீவு ஆகியவைகளும் குறிப்பிடத்தக்கன.  சிற்றரசர்களுள் பழுவேட்டரையர்,  வைதும்பராயர், இலாடராயர் குறிப்பிடத்தக்கவர்கள்.  பழுவேட்டரையருடன்  சோழர் மண உறவு கொண்டனர்.  சமயப் பற்று,  கலைத்திறனும் உடையவர்கள் சோழர்கள்.  தஞ்சையில்  எடுப்பித்த தஞ்சைப் பெருவுடையார் கோயில்,  கோயில் வரலாற்றில் குறிப்பிடத்தக்கது ஆகும்.  இதன் விமானம் ஒற்றை கல்லால் அமைக்கப்பட்டது ஆகும். இந்த கல் 80டன் எடையுடையது.  இக்கோவில் இறைவன் மீது கருவூர்த்தேவர் பாடிய திருவிசைப்பா ஒன்பதாம் திருமுறையில் அமைந்துள்ளது.

 பிறப்பு

இரண்டாம் பராந்தக சோழனுக்கும்  வானவன் மாதேவியருக்கும் ஐப்பசி திங்கள் சதய நன்னாளில் பிறந்த  இராஜராஜன் இயற்பெயர் அருண்மொழிவர்மன் என்பதாகும்.  இராஜகேசரி என்ற பட்டம் புனைந்த இவன் இராஜராஜன் என்று மூன்றாம் ஆட்சியாண்டு முதல் அழைக்கப்பட்டான்.

 மெய்க்கீர்த்தி

தன்னுடைய ஆட்சி காலத்தில் நடைபெற்ற வரலாற்று உண்மை நிகழ்ச்சிகளை விளக்கும்   மெய்க் கீர்த்தியை அகவற்பாவில் அமைத்து தன் கல்வெட்டுகளின் தொடக்கத்தில்  பொரிக்கும் முறையை இராஜராஜன் மேற்கொள்ள ஆரம்பித்தான்.  இராஜராஜனின் மெய்க்கீர்த்தி ' திருமகள்போல்'  என்று தொடங்கும்.  அவனது மெய்க்கீர்த்தி மூலம்  அவன் காலத்தில் நடைபெற்ற  போர் நிகழ்ச்சிகளை தெரிந்துகொள்ளலாம்.

காந்தளூர் சாலை போர்

காந்தளூர் சாலை எனப்படும் பகுதி தற்போது வலியசாலை என்ற பெயரில்   திருவனந்தபுரத்திலுள்ளது.  சேர நாட்டை பாஸ்கர ரவிவர்மன் என்பவன் ஆண்டு வந்தான்.  இராஜராஜ சோழன் அனுப்பிய  தூதுவனை அச் சேரமன்னன்  அவமதித்து,  அவனை உதகையில்  சிறையிலிட்டான் என்றும்,  அதனால் இராஜராஜன் போர் தொடுத்தான் என்றும் விக்கிரம சோழன் உலா மூலம் அறியலாம்.  இராஜராஜன் பெரும்படையுடன் பாண்டிய நாட்டைக் கடந்து  காந்தளூர் நோக்கி  சென்றான்.  அப்போது பாண்டியன் அமரபுயங்கன்  எதிர்ப்பு தெரிவிக்கவே அவனையும்  வென்று காந்தளூரில்  இருந்த சேரமன்னனது கலங்களை  அழித்து  வெற்றி பெற்றான். பின்னர் உதகை சென்று தூதுவனை விடுவித்து  அரும்பெரும் பொர் குவியலையும்,  களிற்று நிலைகளையும் கொண்டு வந்தான்.

 கொல்லம்

இரண்டாம் முறையாக சேர நாட்டின் மீது படையெடுத்துக்  கொல்லத்தை கைப்பற்றினான்.  கொல்லத்தையும்,  அதனைச் சார்ந்த கொடுங்கோளூரையும்  வென்றதால் கீர்த்தி பராக்கிரமன்  என்ற பெயர் பெற்றான்.

 குடமலை நாடு

தற்போது குடகு என வழங்கப்பெறும் குடமலை நாட்டை கொங்காள்வார் மரபின்  ஒருவன்  ஆட்சி செய்து கொண்டிருந்தான்.  இராஜராஜன் அவனையும் தோற்கடித்து  புறமுதுகிட வைத்தான்.

 கங்கபாடி,  நுளம்பப்பாடி,  தடிகைபாடி

சேலம் மாவட்டத்தில் வடபகுதியான  கங்கபாடி பகுதியை மேலை  கங்கர்கள் ஆட்சி செய்து வந்தனர்.  தழைக்காடு  அதன் தலைநகரம் ஆகும்.  கர்நாடக மாநிலத்தின் கீழ்ப்பகுதியையும், பல்லாரி மாவட்டத்தையும் கொண்ட  நுளம்பப்பாடியைப் பல்லவரின் ஒரு கிளையினரான நுளை நுளம்பர் ஆண்டுவந்தனர்.   இவ்விரு பகுதிகளையும்  எளிதில் கைப்பற்றி இறுதியில்  தடிகைபாடியையும் இராஜராஜன் கைப்பற்றினார்.  இதன் வெற்றிக்கு  இராஷ்டிரகூடர்கள் வலிமை குன்றி காணப்பட்டதே காரணமாகும்.

ஈழப் படையெடுப்பு 

 வடக்கே போர்புரிந்து வெற்றி வாகை சூடிய இராஜராஜன் இலங்கை மீது படையெடுக்க வேண்டியது தவிர்க்க முடியாததானது.  அப்பொழுது இலங்கையை ஆண்டுவந்த மன்னன் ஐந்தாம் மகிந்தன்  என்பவனாவான்.  அவன் பாண்டியனுக்கு உதவி புரிந்தான்  என்ற காரணத்தால் இராஜராஜன் தன் மைந்தன் இராஜேந்திரனைப் பெரும்படையுடன் அங்கு அனுப்பிப்  போர் புரிய வைத்தான்.  இராஜேந்திரனின் ஆற்றலுக்கு அஞ்சிய இலங்கை மன்னன் தென் பகுதியில் உள்ள ரோகண நாட்டிற்கு தப்பி  ஓடிவிட்டான்.  இதனால் இலங்கையின் வடபகுதி முழுவதும் எளிதாக கைப்பற்றப்பட்டு,  அதற்கு மும்முடி சோழமண்டலம் என பெயரிடப்பட்டது.  இலங்கையின் தலைநகரான அனுராதபுரம் அளிக்கப்பட்டது நாட்டின் நடுவிலிருந்த பொலன்னறுவா என்ற  நகரம் ஜனநாதமங்கலம் என்று பெயரிடப்பட்டது.  இலங்கையில் கிடைக்கும் கல்வெட்டு மூலம்,   சோழ நாட்டுத் தலைவன் ஒருவன் மாதோட்ட நகரத்தில் இராஜராஜேஸ்வரம் என்ற சிவாலயத்தினை எடுப்பித்து  அர்த்தயாம வழிபாட்டிற்கும் வைகாசி திருவிழாவிற்கும்  நிலதானம் அளித்தனன் என அறியலாம்.

 சாளுக்கியருடன் போர்

சத்தியாசிரயன் மேலைச் சாளுக்கிய மன்னனான இரண்டாம் தைலப்பனின் புதல்வன்.  தைலப்பனின் மறைவிற்குப் பின் இரட்டைபாடி ஏழரை இலக்கத்திற்கு  சத்தியாசிரயன் மன்னனானான்.  அவனை வென்று  நுளம்பப்பாடியை இராஜராஜன் கைப்பற்றினான். இப்  படையெடுப்பின் விளைவாக பெரும் பொருளை கவர்ந்து கொண்டு வந்த இராஜேந்திரனின் வீரர்கள் தாம் படமெடுத்த நகரங்களை கொளுத்தியும் வயதானவர் என்றும் பாராமல் கொலை செய்தும்,  சோழர் குல படையெடுப்பின் மாட்சியை குறைத்து விட்டனர்.

 வேங்கி நாட்டு போர்

வேங்கி நாட்டின் மீது  படையெடுப்பதற்கு முன்பு சீட்புலி நாடு,   பாகி நாடு ஆகியவற்றை கைப்பற்றி அவற்றைத் தன் நாட்டுடன் இணைத்துக் கொண்டான்.  பின்னர் வேங்கி நாட்டின் மீது படையெடுத்து சென்று ஜடா சோழ வீமனைப்  ஊரில் தோற்கடித்து,  தன்னிடம் அடைக்கலம் பெற்றிருந்த சக்திவர்மனை வேங்கி நாட்டின் மன்னனாக முடிசூட்டினான்.  ஆனால் ஜடா சோழர் வீமன் கலிங்க நாட்டு  மன்னனின் உதவியுடன் சக்திவர்மனை தோற்கடித்து காஞ்சி வரை படையெடுத்தான்,  இராஜராஜன்  பெரும் சீற்றமுற்ற  வீமனை காஞ்சியில் போரிட்டுக் கொன்று,  மீண்டும் சக்திவர்மனை வேங்கி நாட்டு மன்னன் ஆக்கினான்.  அதுமுதல் கீழைச் சாளுக்கியர்கள் நிலையாக ஆளத் தொடங்கினர்.   சக்தி வர்மனுக்கு பிறகு அவனது சகோதரன் விமலாதித்தன் இளவரசனாக பட்டம் சூட்டப் பெற்றான்.  இராஜராஜனின் இத்தகைய பரிவிற்கும் பாசத்திற்கும் முக்கிய காரணம் அவனுடைய புதல்வி குந்தவையை விமலாதித்தனுக்குத் திருமணம் செய்து கொடுத்திருந்ததே.

  கலிங்க நாடு

 கோதாவரியாற்றிற்கும் மகாநதிக்கும்  இடையே உள்ள கீழ்க்கடலைச் சார்ந்த பகுதியே கலிங்கமாகும். அப்பகுதியை  இமலாதித்தன் எனும் குலூதம வேந்தன் ஆண்டுவந்தான்.   இராஜேந்திரன் அவனைப்  போரில் வென்று,  மகேந்திரகிரியில் ஒரு வெற்றித் தூணை நிறுவினான்.

 முந்நீர் பழந்தீவு பன்னீராயிரத்தையும்

முந்நீர் பழந்தீவு பன்னீராயிரத்தையும் கைப்பற்றும் பொருட்டு இராஜராஜன் ஒரு பெரும் படையெடுப்பை மேற்கொண்டு, அரபிக் கடலில் உள்ள மாலத் தீவுகளை அடக்கி தன் பெருமையை நிலைநாட்டினான்.

எத்திசையும் வெற்றி பெற்று ஏற்றமிகு ஆட்சி செய்த இராஜராஜனின் ஆட்சியின் கீழ் பாண்டிய மண்டலம், சேர மண்டலம், தொண்டை மண்டலம் ஆகியஜெயம்கொண்ட சோழ மண்டலம், கங்க மண்டலம், கொங்கு மண்டலம், நுளம்பப்பாடி, கலிங்க நாடு, இலங்கையாகிய  மும்முடிச் சோழ மண்டலம் ஆகியவை இருந்தன.

 சிறப்புப் பெயர்கள்

இராஜராஜன் என்ற பெயரைத்  தவிர கூத்திறிய சிகாமணி,  உய்யக்கொண்டான்,  பாண்டிய குலசினி,  கேரளாந்தகன்,  சிவபாதசேகரன்,  சிங்களாந்தகன்,  மும்முடிச்சோழன்,  நிகரிலிச் சோழன்,  இராசமார்த்தாண்டன் போன்ற பல பெயர்கள் அவனுக்கு வழங்கப்பட்டிருந்ததைக்  கல்வெட்டுகளின் மூலம் அறியலாம்.  அப்பெயர்களை  தாங்கி பல ஊர்களும்,  ஆறுகளும்,  கோயில்களும் இன்றளவும் இருப்பதை நாம் காண்கிறோம்.

 இராஜராஜேஸ்வரம்

பல நாடுகளை கைப்பற்றி பெரும்புகழ் பெற்ற இராஜராஜன் தலைநகரிலே ஒரு பெரும் கோயில் கட்டினான்.   அங்கு காணப்படும் கல்வெட்டொன்றில் 'பாண்டியகுலாசனி  உள்நாட்டு தஞ்சாவூர் கூற்றத்து  நாம்  எடுப்பித்த திருக்கற்றளி இராஜராஜேஸ்வரம்'  என்று கோவில் அமைந்த இடம் கூறப்பட்டுள்ளது. இப் பெருவுடையார். கருவூர்த்தேவர் ஒரு பதிகம் பாடியுள்ளார்.  சைவத் திருமுறைகள் ஒன்பதனுள் சேர்க்கப்பட்டுள்ளது. 

 இராஜராஜனுக்கு  15 மனைவியர் இருந்தனர்.  அவர்கள் கோயில்களுக்கு தானமளித்த செய்திகளைப் பற்றி கூறப்பட்டுள்ளது.  அவர்களுள் உலக மாதேவியார் பட்டத்தரசி யாக இருந்தால்.  அபிமானவல்லி,  வில்லவன் மாதேவி,  வீரநாராயணி,  திரைலோக்கிய மாதேவி,  மீனவன்மாதேவி,  வானவன் மாதேவி போன்றோரின் கொடை சிறப்புகள் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.  கிபி 1012ல்  தன்னுடைய புதல்வனான மதுராந்தகனுக்கு இராஜராஜன் இளவரசு பட்டம் கட்டி,  இராஜேந்திரன் என்ற  அபிடேக  நாமம் சூட்டினான்.
 வளமையும்  வனப்புமிக்க தமிழகம்,  வலிமையும் வளர்ச்சியும் பெற்று,  புதுப்பொலிவும் பேரெழிலும்  கண்டு புது யுகத்தை படைத்து.  தமிழகத்தின் மாண்பினையும் கலை வளர்ச்சியையும் இன்றளவும் நிலைபெற்று பேச வழிவகுத்தவர் மாமன்னர் இராஜராஜ சோழன் ஆவார்.

இராஜேந்திரன் (கி.பி 1012-1044)

 இராஜராஜன் காலத்துக்குப் பிறகு  அவனது மகன் ராஜேந்திரன் ஆட்சி பொறுப்பேற்றனர்.  இவர் இராஜராஜன் காலத்திலேயே பல  போர்களில் பங்கு கொண்டார்.  இவர் 'பஞ்சவன் மாராயன்'  என்ற விருதையும் பெற்றுள்ளார். இவனது மெய்க்கீர்த்தி  திருமன்னி வளர  இருநில மடந்தையும்.எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியினல் இடைதுறை நாடு(ரெய்ச்சூர் பகுதி), பாணவாசி, கொள்ளிப் பாகை, மண்ணை கடகம்,  ஈழம்,  இரட்டபாடி,  ஏழரை இலக்கம் (சாளுக்கிய நாடு),  சக்கரக்கோட்டம் (பஸ்தர்), மாசுணி தேசம்(சிந்து மாகாணம்), தக்கணலாடம்(தஞ்சைப் பகுதி) வங்காளதேசம், உத்திரலாடம்(கங்கை பகுதி),  கடாரம்(பினாங்கு), சீர்விசயம் (சுமத்ரா தீவு),  இலங்கா சோகமும்,  இலாமுரி தேசம்(வட சுமித்ரா), ஆகிய நாடுகளை வென்றான் என்பதை அறிகிறோம். பராந்தகன் காலத்தில் ஈழத்தில் பெற முடியாமல் போன வீரபாண்டியனின் செங்கோலையும் மணிமுடியையும் இராஜேந்திரன் கிபி1018ல்  பெற்றமை குறிப்பிடத்தக்கது.  இராஜேந்திரனின் வெற்றிகளில் வடநாட்டு வெற்றி குறிப்பிடத்தக்கது.  தோல்வியுற்ற வட நாட்டு மன்னர் தலைகளில்கங்கை நீரை கொண்டுவரச் செய்து கங்கை கொண்ட சோழபுரம் என்னும் தலைநகரை உண்டாக்கினான்.  எரியும் கோயிலும் சோழகங்கன்,  கங்கை கொண்ட  சோழேச்சுவரம் எனும் பெயர்களினால்  விளங்கின.  கடல் கடந்து கடாரம் கொண்டமையினல் கடாரம் கொண்ட தோழன் என்றும் அழைக்கப்பட்டான்.  மனைவியருள்  திரிபுவன மாதேவி,  முக்கோக்கிழாள், வீரமாதி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்.  பிள்ளைகளாக இராசாதிஇராசன், இராசேந்திரன்,  வீரராசேந்திரன் ஆகியோரும் பெண்களாக  அருள்மொழி நங்கை,  அம்மங்கை தேவி ஆகியோரும் விளங்கினர்.

 பரகேசரி என்கின்ற பட்டம் பெற்று  அரியணையேறிய  இராஜேந்திரன் தன் தந்தையின் காலத்திலேயே பல போர்களில் ஈடுபட்டுப்  பெரும் வெற்றிகளை அடைந்து,  சோழப்பேரரசின் பெருமையையும் வலிமையையும் உயர்த்தினான்.  மதுராந்தகன் என்ற இயற்பெயர் கொண்ட இவனுக்கு இராஜேந்திரன்  என்ற அபிஷேக நாமம் சூட்டப்பட்டது.

இராஜேந்திரன் படையெடுப்புகள்

முதலாம்  இராஜராஜன் காலத்திலேயே பல போர்களில் ஈடுபட்டு வெற்றி வாகை சூடி,  சோழப் பேரரசின் பெருமையை  உயரச் செய்த ராஜேந்திரன் பல படையெடுப்புகளை மேற்கொண்டு  வடக்கே கங்கை வரையிலும் தெற்கே கடாரம் வரையிலும்.  அவனது வெற்றிகளை குறிப்பிடுகையில் பல மெய்க்கீர்த்திகள் அவனது மூன்றாம் ஆண்டு முதல் காணப்படுகின்றன.  அக்கல்வெட்டில்  இடைத்துறை நாடு,  வனவாசி,   கொள்ளிப்பாக்கை, மண்ணைக் கடக்கம் போன்ற ஊர்களை இராஜேந்திரன் வென்றான் எனக் கூறப்பட்டுள்ளது.  கிருஷ்ணா -  துங்கபத்திரை ஆறுகளுக்கு இடைப்பட்ட  பகுதியே  இடைத்துறை நாடு மற்றவை மேலைச் சாளுக்கியர் ஆட்சிக்கு உட்பட்டவை.  இப்போர்கள் இராஜராஜன் காலத்தில் நடைபெற்றவை என்பதால் இவனது ஆரம்பகாலத்தில் குறிக்கப்பட்டுள்ளன.

 ஈழ நாட்டுப் போர்

 ஈழ  மண்டலத்து போர் இவனது ஐந்தாம் ஆண்டில் நடைபெற்றது.  இராஜராஜனால்  தோற்கடிக்கப்பட்டு தென்பகுதிக்கு ஓடிய இலங்கை மன்னன் ஐந்தாம் மகிந்தன் இராஜேந்திரன் காலத்தில்  ரோகண நாட்டிலிருந்து  பெரும்படையுடன் மீண்டும் தோழர் வசமிருந்த இலங்கையின் வடபகுதியை கைப்பற்ற முயன்றான்.  ஆனால் இராஜேந்திரன்  அவனைத்  தோற்கடித்து,  இலங்கை அரசின் வழிவந்த சிறந்த அழகிய  முடியினையும்,  அவனது தேவியினுடைய அழகிய முடிவையும் கைப்பற்றியதோடு நில்லாமல்,  இலங்கை மன்னனிடம் பாண்டியர் அடைக்கலம் வைத்த சுந்தர மணிமுடியும் (முதலாம் பராந்தகன்  கைப்பற்ற நினைத்து முடியாமல் போன  கிரீடம்).  இந்திரனின் ஆழத்தையும் கைப்பற்றி மீட்டான்.  அஞ்சி ஓடிய மகிந்தனையும் சிறைப்படுத்தி  சோழ நாட்டிற்கு அனுப்பிவிட்டான்.  சோழநாட்டில் சிறைப்படுத்தப்பட்ட மகிந்தன்   பன்னீராண்டு  கழித்து மடிந்து  போயினான்  என்று கூறப்பட்டுள்ளது. கோனேரிபுரக்  கல்வெட்டின் மூலம் ஈழ மண்டலம் முழுவதும் சோழர் வம்சம்  ஆகியதை உறுதிப்படுத்தலாம்.

 சேர நாட்டுப் போர்

சேர நாட்டின் மீது படையெடுத்து சேர நாட்டினருக்கு வலி வலி வந்த மணிமுடியையும்,  நவரத்தின மாலையையும் கைப்பற்றிக்கொண்டான்.   பழந்தீவையும் கைப்பற்றிக்கொண்டு யாரும் நெருங்குதற்கரிய  அரண்மனையுடைய சந்திம தீவினில்  வைக்கப்பட்டிருந்த  செம்பொன் முடியையும் கவர்ந்து வந்தான் என கூறப்படுகின்றது.

 பாண்டிய நாட்டுப் போர்

பாண்டிய நாட்டுடன் போர்புரிந்து அங்கு ஓர் அரண்மனை எடுப்பித்து,  அதில் சோழ பாண்டியன் என்ற பட்டத்துடன் தன் மகனான சுந்தர சோழனுக்கு சடையவர்மன் சுந்தர சோழ  பாண்டியன் என்ற பெயர் சூட்டி,  அங்கிருந்து ஆட்சி புரிய வைத்தான்.  பின்னர் அவனுக்குச் சேர நாட்டையும் ஆட்சிபுரிய உரிமை வழங்கினான்.

மேலைச் சாளுக்கியருடன் போர்

கிபி1016 ஆம் ஆண்டுமேலைச் சாளுக்கிய மன்னன்ஐந்தாம் விக்கிரமாதித்தனின்தம்பியானஜெய சிங்கன் என்பவன் பட்டமெய்தினான். உடன்  தோழரிடமிருந்து  சில பகுதிகளை  படையெடுத்து,  வென்று தன் நாட்டுடன் இணைத்துக் கொண்டான்.   இராஜேந்திரன் பெரும்படையுடன் காஞ்சியிலிருந்து சென்று,  ஜெயசிங்கனை  மயங்கியில் வென்று,  பெரும்  மணித்திரளையும்  பொற்குவியல்களையும் கைப்பற்றிக்கொண்டு வெற்றியுடன் தன் நாடு திரும்பினான்.  பின்னர் இரட்டபாடி இலக்கத்தை வென்றான்.

 கீழைச் சாளுக்கியருடன் போர்

இராஜராஜனின் மருமகனான  விமலாதித்தனின் மகன்   இராஜராஜ நரேந்திரன் 1019 இல் பட்டம் எய்தினான்.  ஆனால் மேலை சாளுக்கிய மன்னன்  ஜெயசங்கன்,  தன் மாற்றாந்தாய் மகனான விஷ்ணுவர்த்த  விஜயாதித்தனை  மன்னனாக்கி அரசு நடத்த முயற்சி செய்தான்.  இறுதியில் நரேந்திரன்,  இராஜேந்திரனின் உதவியை   நாடினான்.  விக்கிரம  சோழிய வரையன் என்ற சோழ தளபதி தலைமையில் சென்ற சோழர் படை மேலைச் சாளுக்கியரைப்  புறமுதுகிடச் செய்ததோடு,  வடபகுதியில் மேலும் படையெடுத்து கங்கைவரை  போர் நடத்தியது இதன் காரணமாகவே படையெடுப்பு  நடைபெற்றதென்று  திரு சாஸ்திரி கூறுகிறார்.

கங்கை படையெடுப்பு

கங்கைப் படையெடுப்பில் சக்கரக் கோட்டமும்,  ஒட்டர தேசமும்,  கோசல நாடும் கைப்பற்றப்பட்டன.  பின்னர் தன்மபாலனுடைய   தண்ட புத்தியும்,   இரணசூரனது   தக்காண லாடமும்,  கோவிந்த சந்தனுக்குட்பட்ட   வங்காள தேசமும்,  மகிபாலன் ஆட்சி செய்த  உத்திர லாடமும் கைப்பற்றப்பட்டு சோழப் படைகள் கங்கை அடைந்தன.  கங்கை படையெடுப்பு பெரும் வெற்றியை தந்தது இராஜேந்திரனின் புகழும் உயர்ந்தது.

கங்கை நீரையும் பெறும் பொருளையும் கொண்டுவந்ததற்கு நினைவாக,  இராஜேந்திரனின் புதிய தலைநகரில் (கங்கை கொண்ட சோழபுரம்)  கங்கைநீர் கலக்கப்பட்ட சோழப்  கங்கப் பேரேரி  அமைக்கப்பட்டது.

கடாரம் கொண்டான்

இராஜேந்திரனின் கடாரப் படையெடுப்பு கிபி 1025ல் நடைபெற்றிருக்க வேண்டும்.  இத்தகைய நல்லுறவு மிக்க காலத்தில் இராஜேந்திரன்  கடாரத்துடன் போர் புரிய காரணம் என்ன என்று தெரியவில்லை.  இருப்பினும் சோழர்களின்  வாணிபத்திற்கு  ஸ்ரீ விஜய அரசு இடையூறு அளித்திருக்க வேண்டும் அல்லது தன் வலிமையை தென்னகத்தில் நிலைநாட்டிய இராஜேந்திரன் கடல் கடந்தும் தன் வல்லமையைக்  கொடிகட்டிப் பறக்க விட முயற்சி செய்து இருக்க வேண்டும்.  இக் கடார rபகுதியை  சோழன் வெற்றி கொண்டான் என்றபோதிலும் அவன் அதை நிரந்தரமாக தன்வசம் ஆக்கிக் கொள்ளவில்லை திறை மட்டுமே பெற்றான்.

 அப் படையெடுப்பின்போது  ஸ்ரீ விஜயம்,  பண்ணை,  மலையூர்,  மாயிருடிங்கம்,  இலங்ககோஷம்,  பப்பாளம், இலிம்,  பங்கம்,  இலாமுரி தேசம்,   நக்கவாரம்,   கடாரம் ஆகிய பகுதிகளைக் கைப்பற்றினான் என குறிப்பிட்டுள்ளது.  இப்பெயர்களை நோக்க  இவையாவும் மலேயாவிலும் சுமத்ராவிலும்,  அவைகளை சூழ்ந்த இடங்களிலும் அமைந்து காணப்படும் பகுதிகளாகவே உள்ளன அறியலாம்.

  இராஜேந்திரன் காலத்தின் இறுதியில்  அவனது மைந்தன் இராஜாதிராஜன் போர் புரிந்தான்.  முதலில் வேணாட்டு  மன்னனை வென்று அவனைக் கொன்றான்.  பின்னர் கூபக நாட்டு மன்னனையும், மூசிக  மரபைச் சேர்ந்த எலிமலைக்  அருகிலுள்ள இராம குடநாட்டு மன்னனையும்,  குழப்பம் விளைவித்த  சேர,  பாண்டியர்களையும் வென்றான் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன.

இராஜேந்திரன் சிறப்பு பெயர்கள்

முடிகொண்ட சோழன்,  உத்தம சோழன்,  விக்ரமசோழன்,  சோழேந்திர சிம்மன்,  கடாரம் கொண்டான்,  கங்கை கொண்ட சோழன் போன்ற  சில சிறப்பு பெயர்கள்  குறிப்பிடத்தக்கவை.   இப்பெயர்களை  தாங்கி பல கோயில்களும்,  ஆறுகளும் இன்றும் இருப்பதைக் காணலாம்.

 தலைநகர்

 தலைநகரம் நாட்டின் மத்திய பகுதியில் இருப்பதற்காக கங்கைகொண்ட சோழபுரத்தை இரண்டாவது தலைநகராக ஏற்படுத்தினான்.

 சோழ கங்கை பேரேரி

தலைநகருக்கும்  தலை நகருக்கு அருகிலுள்ள சிற்றூர்களுக்கும்,  குடிநீர் வசதி செய்யவும்,  நீர் பாசனம்  பெருகவும் தெற்கு வடக்கு 22 கிலோ மீட்டர் நீளமுள்ள சோழ கங்கப் பேரேரியை கங்கைகொண்ட சோழபுரத்தில்  தோற்றுவித்தான் என்பதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம்.  இவ்வேரி இன்று  பொன்னேரி என்று வழங்கப்படுகின்றது.

 சைவ சமய ஈடுபாடு

இராஜராஜனை போல சைவ சமய வளர்ச்சியில் இராஜேந்திரன் ஈடுபாடு கொண்டான்.  கங்கைகொண்ட சோழபுரத்தில் ஒரு புதிய,  பெரிய கோயிலை ஏற்படுத்திப் பல  நிவந்தங்களை அளித்தான்.   தில்லை  நடராஜருக்கு பல நிவந்தங்கள் அளித்தான்.  இவனது காலத்தில் சோழநாட்டில் பல கோயில்கள் கற்றளிகளாக மாற்றப்பட்டன.  தன்னுடைய   செய்வாசாரியாராக  இருந்த சர்வசிவ பண்டிதருக்கு ஆச்சார்ய  போகமாக  ஆண்டுதோறும் 2000  கலம்  நெல் அளித்துவந்தான்;  காளாமுக பிரிவைச் சேர்ந்த லகுலீச  பண்டிதருக்கும் பெரும் ஆதரவளித்தான்.

பௌத்த ( நாகை),  வைணவ  சமயங்களையும் (திருவரங்கம்)  இவன் ஆதரித்தான் என்பதைச்  சாசனங்கள்  தெளிவுபடுத்துகின்றன.

 இராஜேந்திரனுக்கு ஐந்து மனைவியர் இருந்தனர், அருள்மொழி நங்கை,  அம்மங்காதேவி என்ற இரு மகளிரும்,  சடையவர்ம சுந்தர சோழ  பாண்டியன் (மதுரையில் ஆண்டவன்)  மற்றும் இரண்டாம் இராஜேந்திர சோழன்,  வீரராஜேந்திர சோழன் என்ற புதல்வர்களும் இருந்தனர் என கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.

இராசாதிராசன்   (கிபி 1018-1054)

இவன் செய்த போர்கள் கல்யாணபுரம்,  கொப்பம் ஆகிய சாளுக்கியர் போர்களே  குறிப்பிடத்தக்கன.  கல்யாணபுர வெற்றியினால்  விசய ராசேந்திரன்  என்றும்,  துவார பாலகரை கவர்ந்து தாராசுரத்தில் வைத்த மையினால் கல்யாணபுர மெரித்துக் கொண்டுவந்த துவார பாலகர்  என்றும் அழைக்கப்படுகின்றார். இராசாதிராசன் கோபம் போரில் வீர மரணம் எய்தியமையினல் "யானை மேல் துஞ்சிய மன்னன்"  எனப் புகழப்படுகிறான். 

வீரராசேந்திரன்  (கிபி 1054-1069)

வீரராசேந்திரன்  சாளுக்கிய மன்னன் சோமேஸ்வரனை போரில் தோற்கடித்தான்.  தோற்ற சோமேசுவரன் துங்கபத்திரை நதியில் மூழ்கி மரணத்தை தழுவினார். வீரராசேந்திரன் கடாரத்தை வென்றான்.  இவனுக்கு சகல புவனசீரியன் மேதினி வல்லபன், பாண்டியகுலந்தாகன் முதலிய பட்டங்களைப் பெற்றார்.  இவனது பட்டத்தரசி அருமொழி. புத்தமித்திரர் இவனது பெயரில் வீரசோழியம் என்னும் இலக்கண நூல் இயற்றப்பட்டது. 

அதிராஜேந்திரன்(கிபி 1063-1070)

வீரராசேந்திரன் மறைவுக்குப் பிறகு அவரது மகன் அதிராஜேந்திரன் அரசரானார். இவர் வீரராசேந்திரன் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்.  இவர் காலத்தில்  சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் இடையேயான சண்டை உச்சக்கட்டத்தில் இருந்தது. இவர் சைவசமய சார்பாளராக அதிராஜேந்திரன் இந்த சமயச் சண்டையில் சிக்கிக் கொண்டார். இவர் வைணவ ஆச்சாரியரான ராமானுஜரை துன்புறுத்தியதால் இவரை கிருமி கண்டன் என்று அழைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.  இவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.  இதனால்  சோழ நாட்டில் வாரிசுரிமை போட்டி ஏற்பட்டது.  

 முதலாம் குலோத்துங்கன் (கிபி 1070-1120)

சோழநாட்டை ஆண்ட முதல் கீழைச் சாளுக்கிய மரபைச் சேர்ந்தவன். இவன் இராஜேந்திரன் மகள் அம்மங்கை தேவிக்கும் சாளுக்கிய இராசராச நரேந்திரனுக்கும் பிறந்தவன். இவன் செய்த போர்களில்  சாளுக்கியர்,  பாண்டியர்,  கலிங்கருடன் நடந்த போர் குறிப்பிடத்தக்கது.  குலோத்துங்கன் விக்கிரமாதித்தனுடன் போரிட்டான்.  இதன் விளைவாக மைசூர் சோழ நாட்டுடன் இணைந்தது.  பாண்டியர்கள் வென்று  பிரதிநிதிகளால் ஆளச் செய்தான். குலோத்துங்கன் கலிங்க நாட்டின் மீது இரு முறை படையெடுத்தான் (கிபி 1096-1110) ஆனந்த வர்மன் முடிவில் கருணாகரத் தொண்டைமான் என்ற படைத்தலைவனால் முறியடிக்க பட்டான். ஜெயம் கொண்டாரின் கலிங்கத்துப்பரணி இவன் புகழ் பாடும்.  குலோத்துங்கன் ஆட்சியில் நாடுகள் சுயாட்சி பெற ஆரம்பித்தன.  அவற்றுள் இலங்கையும்  வேங்கியும்  குறிப்பிடத்தக்கன. சீன நாட்டுடன் நல்லுறவை வளர்க்க, 1077ல் 72  உறுப்பினர்களைக் கொண்ட தூதுக் குழு  ஒன்றை அனுப்பினான். இதில் சிற்றரசர்களில்  கிளியூர் மலையமானும் நுளம்பரும் குறிப்பிடத்தக்கவர். இவன் சுங்கம் தவிர்த்த சோழன் என சிறப்பிக்கப்படுகிறான். இவர் பெற்ற விருந்துகளில் திருநீற்றுச் சோழன்,  திரிபுவன சக்கரவர்த்தி,  விஷ்ணுவர்தனன், ஜயதரன்  ஆகியவை குறிப்பிடத்தக்க பட்டங்களாகும். கொண்ட சோழபுரம் தலைநகரமாகவும் காஞ்சிப  ஆணைகளை தோற்றுவிக்கும் இடமாகவும் விளங்கின.  இவனது பட்டத்தரசி மதுராந்தகி.  மனைவியர்   தியாகவல்லி,  திரைலோக்கிய மாதேவி,  காடவன் மாதேவி,  அருள்மொழி நங்கை, ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்.  இவனது பிள்ளைகள்  இராசராசன்,  வீரசோழன்,  சோழகங்கன்,  விக்கிரம சோழன் ஆகியோரும்பெண் மக்களுள்  சூரியவள்ளியும்  அம்மங்கையும்குறிப்பிடத்தக்கவர்கள்.

கிபி 1070 ஆதி ராஜேந்திரன் மகப்பேறின்றி  இறந்ததினால், இராஜேந்திரன்  (விஷ்ணுவர்த்தனன்)  கங்கைகொண்ட சோழபுரத்திற்கு தன்னுடைய பெரும்படையுடன் வந்து(இராசகேசரி)  குலோத்துங்க சோழன் என்ற பெயருடன் முடிசூட்டிக் கொண்டு,  சோழப்  பேரரசையும், வேங்கி நாட்டையும் ஆளத்தொடங்கினாள்.

படையெடுப்புக்கள்

சக்கரக்கோட்டம்

 விஷ்ணுவர்தனனாக  வேங்கியில் ஆட்சி செய்து கொண்டிருந்த பொழுது கக்கரக்கோட்ட  மண்டலத்தில் ஆட்சி செய்துகொண்டிருந்த  தராவர்ஷனைப் போரில் வெற்றி கொண்டான்.

 சாளுக்கியர் போர்

 அச்சமயத்திலேயே  மேலைச் சாளுக்கியரோடும்  போர் நடத்தி வென்றான் என  தெரிகின்றது.  இப்போரில்  ஹொய்சாள மன்னன்  எரிபங்கனும்,  கடம்பகுல  மன்னனான   ஜயகேசியும்,  திரிபுவன மல்ல பாண்டியனும்,  தேவகிரி யதுகுல மன்னன்  சேவுணனும்  சாளுக்கிய விக்கிரமாதித்தனுக்கு  உதவி அளித்தனர்.  கோலார் மாவட்டத்திலுள்ள   நிங்கிலி  என்ற இடத்தில் நடைபெற்ற இப்போரில் குலோத்துங்கன் வெற்றி அடைந்ததோடு,  விக்கிரமாதித்தனை புறமுதுகிட செய்தான்.  மீண்டும் அதன் இடைப்பட்ட மணலூர், அளத்தி  போன்ற இடங்களில் புறங்கொண்டான்.  அளத்தியிலும்,   நவிலையிலும் காணப்பெற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகளைக்  கவர்ந்து கொண்டான்.  மீண்டும்  துங்கபத்திரையில்,  அவளது சகோதரன் ஜெயசிங்கனும் தோல்வியுற்று   புறஙம்காட்டினார்.  இவ்வாறு கங்க மண்டலம்,  கொங்கணம் குலோத்துங்கன் வசமாயின.

 பாண்டிய நாட்டுப் போர்

  மேலைச் சாளுக்கியர் நடைபெற்ற போருக்குப்பின் தென் பகுதியிலுள்ள   பாண்டியரை தாக்க  ஐந்து ஆண்டு காலம் தன்னை தயார்படுத்திக் கொண்ட குலோத்துங்கன் பாண்டியர்  ஐவரை வென்று,  அவர்களை  புறமுதுகிட்டு ஓடச் செய்தான்.

 வெற்றிபெற்ற குலோத்துங்கன் பல வெற்றி   தூண்களை நிறுவி,   முத்து  சலாபத்திற்குரிய  இடங்களையும்,  பொதியிற் கூற்றத்தையும்,   சைய மலையையும், கன்னியாகுமரி பகுதியையும் கைப்பற்றி,   பின்னர் அப்பகுதிகளை மீண்டும் அவர்களுக்கு அளித்து கப்பம் கட்டுமாறு பணித்தான்.

 சேர நாட்டு போர்

அதிராஜேந்திரன் காலத்தில் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்தி பாண்டியர் போல்  சேரர் தன்னாட்சி  பெற்று ஆட்சி செய்யத் தொடங்கினர்.  திருவனந்தபுரத்திலுள்ள  விழிஞம்,  காந்தளூர் சாலை,  கோட்டாறு ஆகிய இடங்களில் சேரரை வென்று திறை செலுத்துமாறு ஆணையிட்டு மீண்டும் தாயகம் திரும்பினார்.  அப்படையெடுப்பில்    காந்தளூர் சாலையில் கப்பற்படையை இருமுறை அழித்து,  கோட்டாற்றையும் தீக்கிரையாக்கினான்.

 கலிங்க படையெடுப்புகள்

குலோத்துங்கன் காலத்தில் இருமுறை கலிங்கர் படையெடுப்புகள் நடைபெற்றன என்பதை அறியலாம். கோதாவரியாற்றிகும் மகேந்திரகிரிக்கும் இடைப்பட்டவங்காளகடல் சார்ந்த பகுதி தென் கலிங்கம்,   என்று அழைக்கப்பட்டது.  அப்பகுதியில் சோழ அரச பிரதிநிதியாக குலோத்துங்கனின் புதல்வன் விக்கிரம சோழன் இருந்து வந்தான்.  அச்சமயத்தில் தென் கலிங்க வேந்தன் வீமன் தன்னாட்சி பெறும் பொருட்டு கலகம் செய்தான்.  இதனை அறிந்த விக்கிரம சோழன்  வேங்கியிலிருந்து பெரும்படையுடன் சென்று வீமனை  அடக்கி மீண்டும் தனக்குக் கப்பம் செலுத்த செய்தான்.

 கருணாகரத் தொண்டைமான்

இவனது 42ஆம்  ஆண்டு கல்வெட்டொன்று (கிபி 1112)  வட கலிங்க  போரை குறிப்பிடுகின்றது.,  கலிங்கத்துப் பரணியும் விளக்கமாக  கூறுகின்றது.   வட கலிங்கத்தை ஆனந்த்  வர்மன் ஆட்சி செய்து வந்தான்.  குலோத்துங்கனுக்கு இருமுறை திறை  கொடாதா காரணத்தினால் கருணாகரத் தொண்டைமான் தலைமையில் ஒரு பெரும் படையை அனுப்பி ஏழு  கலிங்கத்தையும் வென்று வரும்படி உத்தரவிட்டான்.  கருணாகரன் தலைமையில் சென்ற படைகள் பாலாறு,  குசைத்தலை,  பொன்முகரி ,  கொல்லி,  கோதாவரி,  பம்பா நதி, (வடபெண்ணை),   கௌதவி  ஆகிய ஆறுகளைக் கடந்து சென்றான்.  வடபகுதியில் செல்லும் வழி எல்லாம் காணப்பட்ட பல நகரங்கள் தீக்கிரையாயின.  ஆனந்த்வர்மனின்  படைகள் புறமுதுகிட்டு ஓடினர்.   பேரும் வெற்றி பெற்ற கருணாகரன் ஆயிரக்கணக்கான யானைகள்,  குதிரைகள்,   தேரகல்,  ஒட்டகங்கள்,  மணிகுவியல்கள்   ஆகியவற்றை கைப்பற்றி குலோத்துங்கனுக்கு பெருமை சேர்த்து நாடு திரும்பினார்.

 ஈழ நாட்டுப் போர்

ஆதி ராஜேந்திரன் மறைவிற்குப் பின் ரோகணத்திலிருநத  தங்கள் இளவரசனான விஜயபாகுவை அழைத்துவந்து கிபி 1073 முடிசூட்டி,  ஈழநாட்டின் மன்னர் ஆக்கினர்.  சோழப் படைகள் தமிழகத்திலிருந்து வந்தபோதிலும்,  விஜயபாகு பெரும்  அரண் அமைத்து பொலநறுவா,  அனுராதபுரம் ஆகிய  நகரங்களை தாக்கி சோழ படைகளை தோற்கடித்து,  ஈழ நாடு முழுவதையும் கைப்பற்றிக்கொண்டான்.  அதுமுதல் சோழர் ஆதிக்கம் அகன்றது என்று கூறலாம்.

  கங்க பாடியும் வேங்கி  நாடும்

1116 ஆம் ஆண்டில் தலைக்காடு கொண்ட அரசன் என்று தன்னை ஹொய்சாள  மன்னனான பிட்டிக  விஷ்ணுவர்த்தனன்   கூறிக்கொள்கின்றான்.  தலைக்காடு கங்க  பாண்டியனின் தலைநகரம் ஆகும்.  அதனை சோழர்களிடம் இருந்து கைப்பற்றினான்.  குலோத்துங்க சோழன் ஆட்சிக்கு வந்த பிறகு,  தன்  புதல்வனை அனுப்பி 1093 வரை ஆட்சி புரிந்து வந்தான்.  1093 முதல் 1118 வரை விக்கிரம சோழன் என்ற மற்றுமொரு புதல்வன் வேங்கியில்  ஆட்சி புரிந்தான் மேலும்,  வேங்கி நாட்டில் இருந்து சோழநாடு வந்தபொழுது வேங்கி நாடு பெரும் குழப்பத்துக்கு உள்ளாகியது.  அதனை பயன்படுத்திக் கொண்டு சாளுக்கிய விக்கிரமாதித்தன் வேங்கி நாட்டை கைப்பற்றி ஆட்சி புரியத் தொடங்கினார்.  இவ்வாறு ஈழமும்,  வேங்கி நாடும் குலோத்துங்கன் காலத்தில் சோழப் பேரரசு இடமிருந்து பிரிந்து சென்றன.

 சீனாவுடன் நல்லுறவு

கிபி 1077ல் 72 பேர்களைக் கொண்ட குழுவை சோழ நாட்டிலிருந்து சீனாவிற்கு அனுப்பியதாக சீனாவில் காணப்படும் குறிப்புகள் மூலம் தெரிகின்றது.

    கடாரத்துடன் தொடர்பு

கிபி 1090 கடாத்து மன்னன்  வேண்டிக் கொண்டதற்கு இணங்க நாகப்பட்டினத்திலிருந்து இராசராசப் பெரும் பள்ளி,  இராஜேந்திர சோழ பெரும்பள்ளி ஆகிய இரண்டு புத்த விகாரங்களுக்கும்  இறையிலியாகச்  சில ஊர்களை அளித்தான்.  ஆசிரியர் ஜெயம் கொண்டான் 'பரக்கு  மோதக்  கடாரமழித்த நாள்'  என்று கலிங்கத்துப் பரணியில்  குறிப்பிட்டிருப்பது இதற்கு தக்க சான்று.

 காம்போஜ நட்டுறவு

காம்போஜ (கம்போடியா)  நாட்டு மன்னன் ஹர்ஷவர்தன் குலோத்துங்கனுக்கு காட்சிப்பொருளாக காட்டிய கல்லை இவன் பெற்று வந்து தில்லை சிற்றம்பலத்தில் வைத்தான்.

   கன்னோசி நாட்டுடன் உறவு

கன்னோசி மன்னன்,  குலோத்துங்கன் காலத்தில் தமிழகம் வருகை புரிந்தார்.  மேலும் கன்னோசியினர் சூரிய வழிபாட்டிற்கு முக்கியத்துவம்  கொடுத்தது போலவே,  குலோத்துங்கனும் சூரியனுக்கு கோயில் எடுத்து அதற்கு குலோத்துங்க சோழ  மார்த்தாண்டாலயம் எனப் பெயரிட்டார்.

 சுங்கம் தவிர்த்த சோழன்

நாட்டின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு நாட்டில் நிலவிய சுங்க வரியை நீக்கினான்.  அதனால்  மக்கள் மனம் மிக மகிழ்ந்து 'சுங்கம் தவிர்த்த சோழன்'  என்று அழைத்தனர். ' சுங்கம்  தவிர்த்திருள் நீக்கு உலகாண்ட ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர்'  என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படுகின்றன.  கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர். " புவிராஜ ராஜ மனு முதலானோர் நாளில்  தவிராத சுங்கத்    தவித்தோன்" என்று கூறியுள்ளார்.

 நில அளவை

இவனது ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற மற்றுமொரு முக்கிய செயல்,  16 ஆம் ஆண்டில் நிலங்கள் அனைத்தும் உள்ளவாறு அளந்து நிலவரியை முறைப்படுத்தியதாகும்.

 சமய நிலை

இவனுடைய   சைவ ஈடுபாடு பற்றியே 'திருநீற்றுச் சோழன்' என்று போற்றப்படுகிறான்.  சூரிய  வழி பாட்டிற்காக இவனே முதன்முதலாக தமிழ்நாட்டில் சூரியனார்  கோயிலை கட்டுவித்தான்.  மற்றும் வேம்பற்றூர்   திருவியலூருக்கு  அடுத்த கற்கடேஸ்வரருக்குக்  கோயிலும் முன்மண்டபமும்;  கீழைப்பலூர்,  திருவைகாவூர்,  கோட்டாறு ஆகிய இடங்களில் கற்றதும் எழுப்பினான்.  வைணவ   விண்ணகரததிற்கும்,  பௌத்த பெரும் பள்ளிக்கும் பெரும் நில தானம்  செய்துள்ளான்.

  இவன் கங்கை கொண்ட சோழபுரத்தில் இருந்தும் முதன்முறையாக காஞ்சிபுரத்திலிருந்து ஆட்சி புரியத் தொடங்கினார்.

விக்ரம சோழன் (கிபி 1122-1135)

குலோத்துங்கனுக்குப் பிறகு விக்கிரம சோழன் ஆட்சிக்கு வந்தான்.  தில்லையை பல திருப்பணிகள் சிறப்புச் செய்தான். இவன் ஆட்சியில் 1125  ஆம் ஆண்டு கொடிய பஞ்சம் ஏற்பட்டது. இவர் பெற்ற விருதுகள்  தியாக சமுத்திரம், அகளங்கன் ஆகியவை குறிப்பிடத்தக்கன.  கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இவன் மீது விக்கிரம சோழன் உலா பாடியுள்ளார்.

 இரண்டாம் குலோத்துங்கன் II (கிபி 1133-1150)

இரண்டாம் குலோத்துங்கன் தில்லையில் முடிசூட்டிக் கொண்டான். பேர் அம்பலத்திற்கு  பொன் வேய்ந்தான். கோவிந்தராசன் பெருமானே கடலில் எறிந்தான்.  இவன் காலத்தில் சைவ வைணவ பூசல்கள் ஏற்பட்டன.  இவன் அனபாயன் என சிறப்பிக்கப்படுகிறான்.  ஒட்டக்கூத்தர் இவன் மீது குலோத்துங்கனுலா எனும் நூலை பாடியுள்ளார்.

 இரண்டாம் இராசராசன் ( கிபி 1146-1173)

 இரண்டாம் இராசராசன் காலத்தில்  உள்நாட்டு போர்கள் தோன்றின.  பராக்கிரம பாண்டியனும் குலசேகர பாண்டியனும் அரசுரிமைக்கு போராடினர்.  சிற்றரசர்களின் கை ஓங்கியது. இராஜராஜனின் ஒட்டக்கூத்தர்  இராசராச சோழனுலா எனும் நூலை பாடியுள்ளார்.  குடந்தையை அடுத்த தாராசுரத்தில்   இராசராசகேசுவரம் எனும் கோயில் கட்டினான்.

 இரண்டாம் இராசாதிராசன் II (கிபி 1193 1179)

இராசாதிராசன் காலத்தில்  குலசேகர பாண்டியன் பராக்கிரம பாண்டியனும் மதுரையை பெற போரிட்டனர்.  முதலில் குலசேகரன் வென்றான்.  சோழரின் உதவியினைப் மறந்ததால்  பராக்கிரம பாண்டியன் மகன் வீரபாண்டியன் மதுரையை பெற்றான்.  பாண்டியர் சிங்களர் படையெடுப்பினால் சோழ நாடு தொடர்ந்து போர்க்களமாக ஆயிற்று.

மூன்றாம் குலோத்துங்கன் III  (கிபி 1178-1214)

மூன்றாம் குலோத்துங்கன் சில அரசியல் காரணங்களுக்காக கிபி 1182 ஆம் ஆண்டில் வீர பாண்டியனை வென்று,   குலசேகரன் உறவினன் விக்கிரம பாண்டியன் அரியணை ஏறினார்.  சிங்களர் படை வீரபாண்டியனுக்கு உதவிய போதிலும் குலோத்துங்கன் அவற்றை முறியடித்தான்.  கொங்கு நாட்டை மீட்டான், காஞ்சி, கரூர்  ஆகியவற்றை கைப்பற்றினான்.  சடாவர்மன் குலசேகர பாண்டியன் சோழருக்கு அடங்காமையினாள்  மீண்டும் போரிட்டு வென்று,  'சோழ பாண்டியன்' என்ற விருது பெற்றான்.  திரிபுவன வீரன்,  தியாக வினோதன் என்றும் அழைக்கப்பட்டான்.  சோழர் ஆட்சியின் பெரும்பகுதி இவன் காலத்துடன் முடிவடைகிறது எனலாம்.  வடக்கு கடப்பாவும், தெற்கே குமரியும் இவன் நாட்டின் எல்லையாக விளங்கின.  சிற்றரசர்களாக மலையமான், சம்புவராயர், காடவராயர்,  அதியமான்,  தெலுங்குச் சோழர்,  வாணகோவரையர் முதலியவர்கள் விளங்கினர்.  இவனது பட்டத்தரசி  புவனம் முழுதுடையாள்.  குடந்தைக்கு அருகிலுள்ளதிருபுவனம் கோவில் இவனால் கட்டப்பட்டதாகும்.  இவன் காலத்தில் சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்)  தோற்றுவிக்கப்பட்டது எனக் கூறுவர்.

மூன்றாம் இராசராசன் III (கிபி 1216-1246)

இராசராசன் காலத்தில் பாண்டியர் செல்வாக்கு உயர்ந்தது.  மாறவர்மன் சுந்தரபாண்டியன் கிபி 1216ல் இராசராசனை வென்றான்.  இராசராசன் ஆட்சித் திறமையின்மையால்  தில்லையில் சுந்தரபாண்டியனை அடிபணிந்து நாட்டை பெற்றான்.  இதனால் சுந்தரபாண்டியன் " சோணாடு  வழங்கியருளிய சுந்தர பாண்டிய தேவர்"  என அழைக்கப்பட்டான்.  காடவராயன் கோப்பெருஞ்சிங்கன் இராசராசனை வென்று சிறைப்படுத்தினான்.  போசல நாட்டு  இரண்டாம் நரசிம்மன் இராசராசனை  மீட்டான்.  இவன் இழந்த காஞ்சி திருவரங்கம் பகுதிகளை மீட்டான்.  நாடு போர்க்களமானது.

 மூன்றாம் இராசேந்திரன் III (கிபி 1246-1279)

 சோழரின் செல்வாக்கை உயர்த்த எழுத்து வளமுடன் உறவு கொண்டான். போசள மன்னனாக வீர சோமேஸ்வரன் பட்டம் எய்தினான்.  தோழரே வெறுத்து எதிர்த்தான்.  காகதீய மன்னன் கணபதி என்பவனும் சோழ நாட்டை தாக்கினான்.  சடையவர்மன் சுந்தரபாண்டியன் நாட்டைக் எளிதில் கைப்பற்றும் நிலையில் சோழ நாடு உருவாயிற்று.  பாண்டியர் செல்வாக்கு உயர்ந்தது.  சோழப் பேரரசு குன்றியது.  பாண்டியரிடம் தோழர் சிற்றரசர்களாய் வாழ்ந்தனர்.