ராஜேந்திர சோழன் கிபி 1014 முதல் 1044 வரை Rajendra Chola History in Tamil
இராசராசனின் ஒரே மகன் இராசேந்திரன். இவரது இயற்பெயர் மதுராந்தகன். இராசராசன் ஆட்சிக் காலத்திலேயே இவர் பட்டத்து இளவரசராக பிரகடனம் படுத்தப்பட்ட உடன் கிபி 1012 ஆம் ஆண்டில் இராசேந்திரன் என்று அழைக்கப்பட்டார். தாத்தா சுந்தர சோழனை (இரண்டாம் பராந்தகன்) போன்று அழகும். தந்தை இராசராசனின் போன்று ஆளுமையும் பெற்ற இராசேந்திரன் தந்தையுடன் இணைந்து ஆட்சி நடத்தினர். எனவே இவரது ஆட்சி 1012 லிருந்தே துவங்குவதாக கொள்வது மரபாக உள்ளது. தந்தையும், மகனும் சோழநாட்டை கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சி செய்தனர். இக்காலகட்டத்தில் சோழப்பேரரசின் சிறப்பும், செல்வாக்கும் உச்சகட்டத்தை எட்டியது.
கிபி 1012 ஆம் ஆண்டிலிருந்து கிபி 1014 ஆம் ஆண்டு வரை இளவரசு பட்டம் பெற்று தந்தைக்கு உதவி புரிந்து வந்த இளவரசன் கிபி 1014 ஆம் ஆண்டில் அரச பதவியை பெற்றான். இவன் ஆட்சிக்கு வந்தபோது சோழப் பேரரசு இன்றைய தமிழ் மாநிலத்தையும், ஆந்திர மாநிலத்தின் தென்பகுதியையும், கர்நாடக மாநிலத்தின் ஒரு பகுதியையும் இலங்கையையும் தன்னகத்தே கொண்டதொரு கீர்த்தி வாய்ந்த பேரரசாக இருந்தது எனலாம். இப் பேரரசை மேலும் ராஜேந்திரன் விரிவுபடுத்தியது " பூர்வதேசமும், கங்கையும் கடாரமும் கொண்ட கோப்பரகேசரிவர்மன்" என்று கல்வெட்டுகள் புகழ்ந்து கூறுகின்றன.
சோழர்களுக்கும் மேலைச் சாளுக்கியர்களுக்கும் இடையே இருந்த போராட்டம் தொடர்ந்தது. வேங்கி அரசன் விமலாதித்தனுக்கும் அவனுடைய முதல் மனைவியான குந்தவை பிராட்டிக்கும் (இராஜேந்திர சோழனின் தங்கை) பிறந்த இளவரசன் நரேந்திரனுக்கும் விமலாதித்தனின் இரண்டாம் மனைவியாகிய மகாதேவியின் மகனான ஏழாம் விசயாதித்தனுக்கும் இடையேவங்கி அரசியல்வாரிசு உரிமைப் போர் தொடங்கியது. மேலைச்சாளுக்கிய அரசனாகியஇரண்டாம்ஜெயசிம்மன் ஏழாம் விசயாதித்தனை ஆதரித்தான், ஆகையால் அவ்அன்பரசன் துங்கபத்திரை கடந்து பல்லாரி மாவட்டத்தையும், கங்கபாடியையும் கைப்பற்றினான். இராசேந்திர சோழன் தன்னுடைய உறவினரான இராசராசநரேந்திரனுக்கு உதவி செய்ய முன் வந்தார். ஆகையால் சோழப் படைகள் இராய்ச்சூர் மாகாணத்தின் மேல் படையெடுத்தான். முசாங்கி அல்லது மாங்கி என்னுமிடத்திலும், வேங்கி நாட்டில் மற்றும் பல இடங்களிலும் ஏழாம் விசயாதித்தனை சோழப் படைகள் முறியடித்தன. இராசராச நரேந்திரன் வேங்கி நாட்டு மன்னனாகப் பதவி ஏற்றான். மேலும் சோழப் படைகள் கலிங்கரோடும், ஓட்டரோடும், தெலுங்கரரோடும் , போர் புரிந்ததாக தமிழ், கன்னட கல்வெட்டுக்கள் கூறுகின்றன.
இராஜேந்திர சோழனது வட நாட்டுப் படையெழுச்சி வேங்கி நாட்டிற்கு வடக்கிலிருந்து தொடங்கியது எனலாம். விசாகப்பட்டினம் மாவட்டத்திற்கு வடமேற்கு உள்ள சக்கரக் கோட்டத்தை ராஜேந்திர சோழன் கைப்பற்றினான். சோழப் படையால் கைப்பற்றப்பட்ட மதுரை மண்டலம், நாமனைகோணம் பொழுதுபோக்கு, பஞ்சப்பள்ளி ஆகியவையும் கக்கரக்கோட்ட மண்டலத்தில் இருந்திருத்தல் வேண்டும் எனத் தெரிகின்றது.
பின்னர் ஆதி நகரில் இருந்த இந்திரா நாதன் என்பவனை வென்று ஒட்டதேயமும் கோசல நாடும் கைப்பற்றப்பட்டன. அதன் பின்னர் தர்மபாலனுடைய தண்டபுத்தியும் (வங்காளத்தின் ஒரு பகுதி) இரண சூரனது தக்காண லாடமும் (பீகாரின் ஒரு பகுதி) , கோவிந்த சந்தனுக்குரிய வங்காள தேசமும், மகிபாலன உத்ரலாடம் (வங்காளத்தின் ஒரு பகுதி) வெற்றி கொள்ளப்பட்டன. இவற்றின் பின்னர் சோழப் படை கங்கைக் கரையை அடைந்ததாக மெய்க்கீர்த்தி கூறுகிறது.
இப்படையெழுச்சியின் பயனாக வேங்கி முதல் வங்கம் வரை இருந்த அரசர்கள் சோழ அரசுக்கு பணிந்தனர். கங்கை நீரை கொண்டுவந்ததற்கு அடையாளமாக இராஜேந்திரனின் புதிய தலைநகரில் கங்கைநீர் கலக்கப் பெற்று சோழகங்கப் பேரேரி அமைக்கப்பட்டது.
தவிர அலை கடல் நடுவில் பல களஞ்செலுத்தி இராசராசன் கடாரம் கொண்ட செய்தியையும் அவனுடைய 13 ஆம் ஆண்டில் வரையப்பெற்ற மெய்க்கீர்த்தியால் அறிய முடிகிறது. இப்படையெழுச்சி கிபி 1025 ஆம் ஆண்டிற்கு முன் நடந்திருக்க வேண்டும். இராசேந்திரனின் படைகள் ஸ்ரீ விசயத்தின் சக்கரவர்த்தியான சுமித்திரனுடனும் மலேயா தீவிலுள்ள அவனது சிற்றரசர்களுடனும் போர் புரிந்தனர். இப்படையெடுப்பிற்கான காரணம் அறிய முடியவில்லை. சோழப்பேரரசின் கடல் ஆதிக்கத்தை ஒப்புக்கொண்ட பிறகு ஸ்ரீ விசயத்து அரசன் மீண்டும் தன்னாட்சி உரிமை பெற்றதாக தெரிகிறது. சுமத்திரா தீவில் 1088 ஆம் ஆண்டில் பொறிக்கப்பெற்ற தமிழ் கல்வெட்டு ஒன்று தென்னிந்தியாவிற்கும், விசயத்திற்கும் நடைபெற்ற வணிகத் தொடர்பை உணர்த்துகின்றது. கிபி 1015 ஆம் ஆண்டில் சோழப்பேரரசின் ஆகிய இராசராசன் இடமிருந்து, என்ன கிபி 1033 ஆம் ஆண்டில் இராசேந்திர சோழன் இடமிருந்தும், சீனாவிற்கு தூதுக் குழுக்கள் வந்ததாக சீனாவிலுள்ள சொங்கு மரபு வழிக் குறிப்பொன்று கூறுகின்றது.
பாண்டிய சேர நாடுகளில் இராஜேந்திர சோழனுடைய ஆட்சியில் ஏற்பட்ட அரசியல் கலகங்கள், இவனுடைய மூத்த மகனும், இளவரசனும் ஆகிய இராசாதிராசன் என்பவனால் அடக்க பெற்றது. கிபி 1041 ஆம் ஆண்டில் இலங்கையில் அரசு வகுத்த விக்கிரமபாகு, சோழர்களுடைய தலைமை ஆட்சியை உதவி தள்ளுவதற்குச் செய்த கலகத்தை இராசாதிராசனே அடக்கவேண்டியிருந்தது. விக்கிரமபாகுவிற்கு பிறகு இலங்கையில் பெரியதொரு அரசியல் குழப்பம் தோன்றியது. பாண்டிய நாட்டு சிற்றரசர்களும் கன்னோசி நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த ஜெகதிபாலன் என்ற, தலைவனும் சேர்ந்துகொண்டு சோழப் பேரரசை எதிர்த்தனர். ஆனால் அவர்கள் செய்த கலகங்கள் அடக்க பெற்று அமைதி ஏற்பட்டது.
புகழ்பெற்ற போர்கள்
இலங்கைப் படையெடுப்பு
இராஜேந்திரன் தனது தந்தை இராசராசனிடம் இருந்து சோழ நாட்டுடன் பல நாடுகளில் பகையையும் சேர்ந்தே பெற்றார். இவரது தன்னாட்சி துவங்கியபின் தந்தையை முன்மாதிரியாகக் கொண்டு தனது மகன் முதலாம் இராசாதிராசனுக்கு பட்டத்து இளவரசனாக பட்டம் சூட்டினார் 1018 ஆம் ஆண்டு. அதிலிருந்து இருவருமே இணைந்து ஆட்சி செய்தனர் சோழ சாளுக்கிய பகையை போன்றே தோழர்- சிங்களருக்கு இடையேயான விரோதமும் தொடர்ந்தது.
இராசராசன் இலங்கையின் வடபகுதியை தனது ஆதிக்கத்தின் கீழ்கொண்டு வந்த போதிலும், பாண்டிய மன்னன் ராஜசிம்மன் இலங்கை மன்னனிடம்ஒப்படைத்த அரச சின்னங்களைப் கைப்பற்ற முடியவில்லை.மேலும் இலங்கை மன்னன்ஐந்தாம் மகிந்தன் சோழனிடம் இழந்த பகுதிகளை மீட்பதில் முனைப்பாக இருந்தார். எனவே இரண்டு காரணங்களுக்காக இராசேந்திரன் இலங்கை மீது படையெடுத்தார்.இலங்கை முழுவதையும்கைப்பற்றிசோழ நாட்டுடன் இணைப்பது, பாண்டிய மன்னன் ஒப்படைத்த அரச சின்னங்களை அடைவது.
மேற்கண்ட இரண்டு நோக்கங்களையும் நிறைவேற்றும் பொருட்டு இராசேந்திரன் மூன்றாவது ஆட்சியாண்டில் 1017 ஆம் ஆண்டில் இலங்கை மீது படையெடுத்தார். இப்போரில் இலங்கை மன்னன் ஐந்தாம் மகிந்தன் தோற்கடிக்கப்பட்டார். தோற்கடிக்கப்பட்ட இலங்கை அரசன் கைது செய்யப்பட்டு சோழ நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாண்டிய மன்னன் ஒப்படைத்த அரச சின்னங்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றின் மூலம் இராசேந்திரன் இரண்டு நோக்கங்களும் நிறைவேறின. இருப்பினும் சிங்களவர் மகிந்தவின் மகன் தாசப்பா தோழர்களுக்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டார். அக்கிளர்ச்சி ஒடுக்கப்பட்டது. இலங்கையில் சோழர் ஆதிக்கம் மூன்றாம் குலோத்துங்க சோழன் காலம் வரை நீடித்தது.
பாண்டியருடன் போர்
இராசராசனின் பாண்டிய நாட்டு படையெடுப்பு முழு வெற்றி பெறவில்லை. தோழர் மீதிருந்த பாண்டியர் வகை வளர்ந்ததேயன்றி குறையவில்லை. சுயமரியாதையும், சுதந்திர உணர்வுமிக்க பாண்டியர் சோழர் மேலாதிக்கத்தை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இக்கிளர்ச்சியை ஒடுக்கவும், பாண்டிய நாட்டில் சோழர் ஆட்சியை உறுதிப்படுத்தவும் இராசேந்திரன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தார். பாண்டியர் படை தோற்கடிக்கப்பட்டது. பாண்டிய நாடு மதுரையைத் தலைநகராகக் கொண்ட மண்டகப்பட்டு, இராஜேந்திரனின் மகள் இளவரசன் இராசாதிராசன் அதன் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவருக்கு ஜடாவர்மன் சுந்தர சோழன் பாண்டியன் என்ற பட்டப்பெயர் வழங்கப்பட்டது.
சேரருடன் போர்
பாண்டியர்களைப் போன்று சேரர்களும் சோழர்களின் மேலாதிக்கத்தை ஏற்க வில்லை. எதிர்த்த வண்ணம் இருந்தனர். இவர்களது எதிர்ப்பை முறியடிப்பதற்காக இராசேந்திரன் சேர நாட்டின் மீது போர்தொடுத்தார். கடுமையான போருக்குப்பின் சேரநாடு பணிந்தது. சேர நாடு மதுரையில் இருந்த சோழ ஆளுநரின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.
சாளுக்கிய போர்கள்
மேலை சாளுக்கிய போர்
இராசராசன் ஆட்சிக் காலத்தில் மேலை சாளுக்கிய மன்னன் சத்தியாசிரயன் தோற்கடிக்கப்பட்டு சோழர் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டது. சத்தியாசிரயனுக்குப்பின் ஆட்சிக்கு வந்த (கிபி 1015) தந்தை இழந்த பகுதிகளை மீட்க முற்பட்டார். எனவே இராசேந்திரனின் மேலைச்சாளுக்கிய நாட்டின் மீது படையெடுத்தார். சோழர் படையும் மேலைச் சாளுக்கிய படையும் முசங்கி என்ற இடத்தில் சந்தித்தன. சோழர் படைவென்றது. மேலைச்சாளுக்கிய நாட்டில் மீண்டும் சோழர் ஆதிக்கம் உறுதி செய்யப்பட்டது. அதேபோன்று துங்கபத்திரை ஆறு சோழ நாட்டுக்கும் மேலைச்சாளுக்கிய நாட்டுக்கும் எல்லையாக நீடித்தது.
கீழை சாளுக்கிய போர்
மேலைச் சாளுக்கிய மன்னன் இரண்டாம் ராஜசிம்மன் இராசேந்திரனிடம் தோற்றாலும் கீழை சாளுக்கிய விவகாரத்தில் தலையிடுவதை நிறுத்தவில்லை. கீழை சாளுக்கிய நாட்டில் வாரிசுரிமை போராட்டம் நடந்ததை வாய்ப்பாகக் குண்டு இரண்டா இராசசிம்மன் அதில் தலையிட்டார். வெங்கி வேந்தன் விமலாதித்தன் இறந்தபின் இரண்டாம் விஜயாதித்தனுக்கும், இராஜராஜ நரேந்திரனுக்குமிடையே வாரிசுரிமை போட்டி ஏற்பட்டது. விமலாதித்தன் மகனான ராஜராஜ நரேந்திரன் சோழநாட்டு குந்தவைக்கு பிறந்தவன். குந்தவை இராசேந்திரனின் சகோதரி எனவே அவர் தனது தங்கை மகனை ஆதரித்தார். இரண்டாம் ராஜசிம்மன் இரண்டாம் விஜயாதித்யன் பக்கம் இருந்தார். இப்போராட்டத்தில் இராசேந்திரனின் ராணுவ உதவியோடு ராஜராஜ நரேந்திரன் இரண்டாம் விஜயாதித்தனை தோற்கடித்து கீழைச் சாளுக்கிய நாட்டின் மன்னரானார். இரண்டாம் ராஜசிம்மன் கீழை சாளுக்கிய நாட்டை கைப்பட்ட மேற்கொண்ட மற்றுமொரு முயற்சியும் முறியடிக்கப்பட்டது (கிபி 1035). இராசேந்திரனின் தொடர் போர்களால் இரண்டாம் ராஜசிம்மனையும் அவரை ஆதரித்த குறுநில மன்னர்களையும் தலைதூக்க விடாமல் செய்து கன்னட நாடு முழுவதையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார். முடிகொண்ட சோழன், ஜெயசிம்ம சாரபன், மன்னை கொண்ட சோழன், இரட்டபாடி கொண்ட சோழன், நிருப்பதிவாகரன் போன்ற விருதுப் பெயர்கள் அவரது வெற்றிகளுக்கான அங்கீகாரங்கள் ஆகும். சாளுக்கியப் போர்களில் விளைவாக இராசேந்திரன் இடம் ஏராளமான செல்வம் குவிந்தது.
கங்கை படையெடுப்பு
வடநாட்டு வெற்றி
மேற்கு மற்றும் கீழைச் சாளுக்கியர்களை சோழ பேரரசின் கீழ் கொண்டு வந்த இராசேந்திரன் தனது கவனத்தை வடநாட்டின் மீது திருப்பினார். கங்கை பள்ளத்தாக்கு வரை செல்லத் திட்டமிட்டார். இராசேந்திரன் தலைமையிலான சோழர் படை கோதாவரி வரை சென்று முகாமிட்டது. அதற்கு காரணம் அவருக்கு பின்னால் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாக தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதேயாகும். எனவே, அவர் கோதாவரிக் கரையில் தங்கிக்கொண்டு சோழர் படையை அவர் திட்டமிட்டபடி வடக்கு நோக்கி அனுப்பினார்.
இராசேந்திரன் தளபதியின் தலைமையிலான சோழர் படை கோதாவரியை கடந்து பஸ்தார், ஒரிசா வழியாக மேற்கு வங்காளத்தை அடைந்தது. அப்போது வங்காளத்தை ஆட்சி செய்த தர்மபாலரையும், மகாபாலரையும் தோற்கடித்து சோழப் பேரரசின் கீழ் கொண்டு வந்தார். அதன்பின் சோழர் படை கங்கைக்கரை சென்று அங்கு ஆட்சி செய்த மன்னரையும் வென்ற பின்னர் கங்கை ஆற்று நீரை எடுத்து கொண்டு வந்து கோதாவரி கரையில் முகாமிட்டிருந்த இராசேந்திரன் உடன் சேர்ந்துகொண்டது. அதன்பின் இராசேந்திரன் தலைமையில் சோழர் படை புதிதாக உருவாக்கிக்கொண்டிருந்த கங்கைகொண்ட சோழபுரம் சென்றது.
கங்கை படையெடுப்பின் விளைவாக. வடநாட்டில்வெற்றி கொள்ளப்பட்ட பகுதிகள்நடைமுறை காரணங்களுக்காகசோழ நாட்டுடன் இணைக்கப்படவில்லை. எனினும் சோழப் பேரரசின் வலிமையை உணர்த்தின. தமிழர்கள்வங்காளத்தில் குடியேறி சேனா ஆள்நிலப் பகுதி உருவாவதற்கான அடித்தளம் இடப்பட்டது. அதேபோன்று மிதிலையில் குடியேறிய தமிழர்கள் அங்கு கர்நாடகுலம் தோன்ற காரணமாக இருந்தனர். தமிழர்கள் வட இந்திய பகுதிகளில் குடியேறியதைப் போன்றே வட இந்திய சைவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து தங்கினர். கங்கையிலிருந்து கொண்டுவரப்பட்ட நீர் இராசேந்திரன் நிர்மாணித்த புதிய நகரில் கங்கை என்ற குளத்தை வெட்டி அதில் கங்கை நீரைக் கலந்தனர். கங்கை படையெடுப்பு சோழர் வரலாறு பொன் முத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்று சிறப்புமிக்க நினைவு கூறத்தக்க நிகழ்வாகும்.
கடாரம் படையெடுப்பு
இராசேந்திரனின் கடாரம் படையெடுப்பு அவரது கடற்படை படையெடுப்புகளில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது இராசேந்திரன் ஆதிக்கம் செலுத்த விரும்பினார். மலேயா தீபகற்பம், சுமத்திரா, ஜாவா மற்றும் அதன் அன்மை தீமைகள் ஸ்ரீ விஜயப் பேரரசின் கீழ் இருந்தன. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான கடல்வழி ஸ்ரீ விஜய மன்னரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. ராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழப் பேரரசு கும் ஸ்ரீவித்யா பேரரசுக்கும் இடையே நல்ல உறவு இருந்தது. தமிழ்நாட்டிலிருந்து சீனாவுக்கு வர்த்தக தூதுக் குழுக்கள் அனுப்பப்பட்டன. ஆனால் இராசேந்திரன் ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் சோழப் பேரரசு கும் ஸ்ரீ விஜயப் பேரரசிற்கும் இடையேயான தொடர்பில் விரிசல் விழுந்தது. அதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுவது. இராசேந்திரனின் பேரரசு விரிவாக்கம், சோழர் சீன வர்த்தக பெருக்கத்துக்கு ஸ்ரீ விஜய பேரரசு குறுக்கே நின்றது. எனவே ராஜேந்திரன் ஸ்ரீவிஜய பேரரசின் மீது படையெடுத்தார் (1025). ஸ்ரீவித்யா பேரரசுக்கு உட்பட்ட கடாரம்(சுமத்ரா) மற்றும் ஸ்ரீவிஜய பேரரசின் தலைநகர் கைப்பற்றப்பட்டது. ஸ்ரீவிஜய சங்ரம விஜயோதுங்கவர்மன் கைது செய்யப்பட்டார். சுமத்ரா படையெடுப்புகளும், மலேயாவை வெற்றி கொண்டதும் இராசேந்திரனின் சோழப் பேரரசின் வெளிநாட்டு விரிவாக்கத்துக்குப் புதிய பரிமாணத்தை கொடுத்தது. மலேயாவும், சுமத்ரா சோழப் பேரரசின் ஆட்சிக்குட்பட்ட சோழர்களால் நிர்வகிக்கப்பட்டன.
ஆட்சி கால சாதனைகள்
இராசேந்திரன் ஆட்சிகால சாதனைகள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட பொறிக்கப்பட்டு நிலைத்து நிற்பவை. காலத்தால் அழிக்க முடியாதவை. வரலாற்று முக்கியத்துவம் மிக்கவை. தந்தை இராசராசன், மகன் இராசேந்திரனும் சோழநாட்டை தொடர்ந்து கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் ஆட்சி செய்தனர். இராசேந்திரன் அவரது 30 ஆண்டுகால ஆட்சியின் போது தந்தைக்கு இணையாக சாதனைகள் செய்தார். அவரது சாதனைகளில் குறிப்பிடத்தக்கவை வருமாறு.
சோழப் பேரரசின் எல்லையை விரிவுபடுத்தினார் இவரது வெற்றிகளை குறிப்பதற்காகவே முடிகொண்டான், கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், பாண்டித சோழன், வீர ராஜேந்திரன், சோழேந்திரசிம்மன் போன்ற விருதுப் பெயர்களை சூட்டிக்கொண்டான். வடநாட்டு வெற்றிக்குப் பிறகு தலைநகரத்தை தஞ்சையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்திற்கு மாற்றினார். இது தஞ்சைக்கு நிகரான மாற்று தலைநகராக திகழ்ந்தது. விவசாய விரிவாக்கம் அக்கறை கொண்ட இராசேந்திரன் கங்கைஸ கொண்ட சோழபுரத்தில் சோழகங்கம் என்ற பெரிய ஏரியை கட்டினார்.
புதிய தலைநகரத்தில் கங்கைகொண்ட சோழேச்சுவரம் என்ற சிற்பக்கலைக்கு புகழ்பெற்ற சிவாலயத்தை எழுப்பினார். சைவராக இருந்தும் சமய சமத்துவத்தை கடைபிடித்தார் கங்கைக் கரையில் வாழ்ந்த சமணர்கள் காஞ்சியில் குடியேறுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார். சிறந்த சிந்தனையாளர், தரமான படைப்பாளி, சிவபெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவர், தன் பிள்ளைகளுக்கு சிறந்த ஆட்சி பயிற்சி அளித்தார். அவரது மகன்கள் மூவரும் ஒருவர் பின் ஒருவராக ஆட்சிக்கு வந்தனர், இவரது நிர்வாகம் சிறந்த உதாரணமாக விளங்கியது, வெளிநாடுகளுடன் குறிப்பாக சீனாவுடனான வர்த்தகத் தொடர்பை மேம்படுத்தினார்.