புதிய கற்காலம் : Neolithic Age in Tamil

கண்டுபிடிப்புகள் 

பழைய கற்கால தமிழ்நாட்டு மக்கள்   புதிய கற்காலத்துக்கு நுழைய நீண்ட நெடுங்காலம் ஆயிற்று.  புதிய காலத்துக்கான தடயங்கள் செங்கல்பட்டு,  திருநெல்வேலி,  தென்னார்காடு,   வடஆற்காடு,  மதுரை, சேலம்,  திருச்சி,  பாண்டிச்சேரி ஆகிய மாவட்டங்களில் கிடைத்துள்ளன.  குறிப்பாக,  திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூரிலும்,  மதுரை மாவட்டம் பழனியிலும்,  சேலம் மாவட்டம் சேர்வராயன் மலைப் பகுதியிலும்,  புதுச்சேரியின்  அரிக்கமேட்டிலும்  கண்டெடுக்கப்பட்ட கருவிகளும்,  ஆயுதங்களும்,  பிற பொருட்களும் தமிழ்நாட்டில் புதிய கற்காலம்  பரவி இருந்ததை பறைசாற்றுகின்றன.  இக்கண்டுபிடிப்புகளுக்கும்  புரூஸ் புட்  பெரிதும் காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பதப்படுத்தப்பட்ட கற்கருவிகள் வாழ்க்கைக்குப்  பயன்படுத்தப்பட்ட காலமே புதிய கற்காலம் எனப்படும்.  பழைய கற்கால மக்கள் படிப்படியாக வளர்ச்சி பெற்றுப்  புதிய கற்கால மக்கள் ஆக மாறினார்.  பழைய கற்காலத்தின் இறுதியில் வாழ்ந்த மக்கள் தமது அறிவு வளர்ச்சி ஆகும் அனுபவத்தாலும் கற்கருவிகளை பயன்படுத்த அறிந்து கொண்டனர்;  பயிர்த்தொழிலை ஓரளவு தெரிந்து கொண்டனர்;  வேட்டை நாய்களை வளர்க்கத் தொடங்கினர்.  இவ்வகையில் இவற்றால் அவர்கள் புதிய கற்கால மனிதர்கள் மாறினர்.

 புதிய கற்கால மக்கள் நாய்களின் நுண்ணறிவை கண்டு வியந்து,  அவற்றைத்   தமது  வேட்டைக்கு உதவும்  விலங்குகளாக பழகிக் கொண்டனர்;  பின்பு ஆடு,  பசு,   எருது,  எருமை ஆகிய விலங்குகளையும் தம்முடன் வாழும்படி பழப்படுத்தினர்;  இவற்றின் மேய்ச்சலுக்காக பசும்  புல்வெளிகளில் வங்கி வாழலாயினர்;  இவற்றின் பாளையம்  இறைச்சியையும் தங்கள் உணவுப்பொருட்களாக கொண்டனர்.  இவ்வாறு இவ்விலங்குகளை  வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்ட அம்மக்கள்,  பசும் புல்வெளிகளில் தங்கி வாழலாயினர்;  பசும்புல் காய்ந்து விட்ட பிறகு,  அல்லது அவ்விடங்கள் பயனற்று போன பிறகு வேறு இடங்களுக்கு குடியேறலாயினர்.  அம்மாக்கள் ஆடு மாடுகளை வைத்துக்கொண்டு இருந்தமையால்,  அவற்றை பிறர் கவராதிருக்க,  ஒற்றுமையோடு கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தனர்.  அவர்களுக்கு பாதுகாப்பு தேவைப்பட்டது.  விலங்குகள் பெருகப் பெருகக் குடித்தனமும் பெருகலாயிற்று.  எனவே அவர்களுக்கு பொறுப்புணர்ச்சியும் மிகுதியாயிற்று.  ஆடு மாடுகளை மிகப் மிக அதிகமாக கொண்ட மனிதனுக்கு பெரிய பசும் புல்வெளி தேவைப்பட்டது.  அவன் நாளடைவில்  தம் கூட்டத்தினருக்கு  தலைவன் ஆனான்.

 இவ்வாறு பழைய மக்கள் ஆடு மாடுகளை மேய்த்துக்கொண்டு வாழ்ந்தபோதுதான் அரச பதவி தோன்றியது என்பதைத் தமிழ் சொற்கள் நன்கு விளக்குகின்றன.  கோ,   கோன்அல்லது கோனார் என்னும் சொற்கள். அரசனை குறிப்பவை  பெருகோ பெரிய அரசன்,  கோப்பெருந்தேவி அரசனுக்கு உரிய மூத்த மனைவி.  இத்தொடர்களில் வரும் கொல்எனும் சொல் அரசனை குறிப்பிடல் காண்க.  'கோன்', ' போனார்'  என்னும் சொற்கள் முல்லை நில  மக்களைக் குறிக்கும் சொற்களாக இன்றளவும் இருந்து வருகின்றன.  முல்லை நில மக்களுள் தலைமை  பெற்றவன்  'கோன்'  எனப்பட்டான்.  காலப்போக்கில் 'ஆர்  விகுதி சேர்க்கப்பட்டது. ' கோ'  வாழும் இல்லம் கோவில் (கோ+ இல்) எனப்பட்டது.  இச்சொல் நாளடைவில் மக்களுக்கு தலைவனாகிய கடவுள் உறையும் இடத்திற்கும் பெயராயிற்று.  கோ என்னும் சொல்லிருந்தா கோட்டை என்பது தோன்றிற்று.

 பயிர்த்தொழில்

புதிய கற்கால மக்கள் நெல்லையும் சோளத்தையும் பலவகை பருப்பு வகைகளையும்  பழங்களையும் பயிரிட அறிந்திருந்தனர். நெல் பயிரிடுவதற்கு நன்செய்நிலம் (நல்ல  உயர்ந்த  நிலம்)  தேவைப்பட்டது;  பிறவற்றை பயிரிட புன்செய் நிலம் (நீர் ஓரளவு குறைந்த இடம்)  தேவைப்பட்டது.  அம் மக்கள்  ஆறுகளில் வெள்ளம் வந்தபோது ஆற்று நீரை கால்வாய்கள் வாயிலாக வயல்களுக்கு கொண்டு சென்றனர்.  ஆற்று நீரால் நன்செய் நிலங்கள் பதப்படுத்தப்பட்டன.  கபிலை ஏற்றத்தால் புன்செய்நிலம் பலப்படுத்தப்பட்டது.  அவர்கள் கன்றுகளை  நட்டே வாழைகளை  பயிர் செய்தனர்.

இவ்வாறு புதிய கற்கால மக்கள் பயிர் தொழிலில் ஈடுபட்ட பிறகு நீர்நிலைகள் இருந்த இடங்களில் நிலைத்து வாழ தலைப்பட்டனர்.  பயிர் தொழிலுக்கு தேவையான கலப்பை வண்டி முதலியவற்றை செய்ய தச்சு தொழில் தோன்றி வளர லாயிற்று.  மக்கள் மண் சுவர்களை எழுப்பி வீடுகளை அமைத்துக் கொண்டனர்;  காய்ந்த சோளத்தட்டைகளை வீட்டுக்  கூரைகளாக  அமைந்தன.

 மக்கள் நெருக்கம்

புதிய கற்கருவிகள் தென்னிந்தியாவில் சேலம்,  அனந்தபூர்,  கர்நூல்,  பெல்லாரி முதலிய மாவட்டங்களில் பல இடங்களில் கண்டெடுக்கப்பட்டன.  மிகப்  பலவாகிய  கற்கால  கருவிகளையும் அவை காணப்பட்ட இடங்களையும் நோக்க,  புதிய கற்காலத்தில் மக்கள் தொகை மிகவும்  பெருகி இருந்திருத்தல் வேண்டும் என்பதை உணரலாம்.

மக்கள் தொகை பெருகப் பெருக,  காடுகள் அழிக்கப்பட்டன.  அவை அளிக்கப்பட்ட இடங்களில் மக்கள் குடியேறி வாழலாயினர். "கரிகாலன்  காடு கெடுத்து நாடாக்கினான்:  குளம் தொட்டு வளம் பெருக்கினான்"  என்னும்  பிற்கால தொடரில் அமைந்த தொழில் புதிய கற்காலத்திலும் ஏற்பட்டது.

 புதிய கற்கால கருவிகள்

பழைய கற்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கற்கருவிகளை  நன்கு பதப்படுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான புதிய கற்  கருவிகள் இக்காலத்தில் பயன்படுத்தப்பட்டன.  வழுவழுப்பான கற்களைக்கொண்டு பலவகை கருவிகள் செய்யப்பட்டன.  பழைய கற்காலத்தில் ஈட்டி இருவகைகளில் செய்யப்பட்டிருந்தன என்றால்,  புதிய  கற்காலத்தில் அவை மேலும் பல வகைகளில்  செய்யப்பட்டன.  மிக நுண்ணிய துளைகளை உடைய கல் மணிகள்,  பொத்தான்கள்,  மனித உருவங்கள்,  விலங்கு உருவங்கள், கோளிகள், தயிர்துக்கள்   முதலியன நயமான முறையில் புதிய கற்காலத்தில் செய்யப்பட்டன.  தானியங்களை உடைக்கும் இயந்திரங்கள்,  மாவு அரைக்கும் இயந்திரங்கள், கற்சட்டிகள் போன்ற பலவகை கல் பாத்திரங்கள்,    எழுதுகோல்கள் முதலியன இக்காலத்தில்  செய்யப்பட்டன.  ஆறுகளிலும் பிற இடங்களிலும் கிடைக்கும் கூழாங் கற்களை கொண்டு பொத்தான்கள்,  கோலிகள்,  தாயித்துக்கள் முதலியன செய்யப்பட்டன.

 இவையன்றி,  மரத்தால் செய்யப்பட்ட எண்ணிறந்த   கருவிகளும் அக்காலத்தில் பயன்பாட்டில் இருத்தல் வேண்டும்.  அவை எளிதில் அழிந்து விடக் கூடியவை,  ஆதலால் கற்கருவிகளை போல இன்று நாம் காணுமாறு இல்லை. இக் கற்கருவிகள்  எல்லாம் பண்டை மக்கள் வாழ்ந்த இடங்களுக்கு அண்மையில் உள்ள மலை கற்களைக்  கொண்டேன் செய்யப்பட்டவை.  புதிய கற்கால மக்கள் வாழ்ந்த இடங்களில் வேறு இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட கற்கள் இருந்தன;  அக்கறை கொண்டு செய்யப்பட்ட கருவிகளும் இருந்தன.  அக்கற்கள் அக்கருவிகளை செய்ய  வேறு இடங்களில் இருந்து வேண்டும் என்று கொண்டுவரப்பட்டவை என்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்;  அவை வேறு இடங்களில் இருந்து அக்கால வண்டிகளில் ஏற்றி கொண்டு வரப்பட்டிருக்கலாம் என்று எண்ணுகின்றனர்.   இஃது,   இப்பண்டைய மக்களின்  தொழில் முயற்சியையும்,  நுண்ணறிவையும்,  அவர்தம் வணிகத் தொடக்க நிலையையும் நன்கு உணர்த்த வல்லது.

 குடியிருப்பு

புதிய கற்கால மக்களின் குடியிருப்புகள் அழிந்துவிடத்  தகும் மண்,  மரம் தென்னை ஓலை,  பனை ஓலை,  சோளத்தட்டை ஆகியவற்றால் ஆனவை.  ஆதலால் அவை  நாம்  இன்று காணும்படி இல்லை.  பாதி உருண்டை வடிவிலான மேற்கூரைகளைக்  கொண்ட இக்காலச்   திரு குடில்களைப் போல அவை கட்டப்பட்டன கூரையின் உச்சியில் மழைநீர்  விழுவதை தடுக்கச்  சட்டி அல்லது மண்குடம்    கவிழ்த்தப்பட்டிருந்தது.   இச்சட்டி  அல்லது  குடமே நாளடைவில் பிற்கால கோவில்களில் கலசங்களாக மாறின என்று கூறலாம்.  ஓடுகள் அக்கால வழக்கில் இல்லை.  அக்காலத்தில் தேக்கு மரம் இந்தியாவில் மிகுதியாக இருந்தது.  தலைமக்களின் இல்லங்கள் தேக்கு மரத்தால் அமைந்திருக்கலாம்.  ஆதலால் குறிஞ்சி  நிலப்பகுதிகளில் தலைமக்கள் கோட்டைகள் அமைத்து வாழ்ந்தனர் எனக்  கொள்ளலாம்.

மட்பாண்டங்கள்

ஆனந்தபூர்,  கடப்பை,  கர்நூல்,  திருநெல்வேலி,  சேலம்,  புதுக்கோட்டை,  திருச்சிராப்பள்ளி முதலிய மாவட்டங்களில் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த இடங்கள் பல கண்டறியப்பட்டன.  அங்கு அவர்கள் பயன்படுத்திய மட்பாண்ட சிதைவுகளும் அகப்பட்டன.  அழகு செய்யப்படாத மட்பாண்டங்கள்,  அழகு செய்யப்பட்ட மட்பாண்டங்கள் என்று அவற்றை இரண்டாகப் பிரிக்கலாம்.  அழகு செய்யப்படாத பாத்திரங்கள் கரடுமுரடானவை,  வழுவழுப்பான,  பளபளப்பானவை,  நிறம்   பூசப் பெற்றவை என்று நான்கு வகைப்படும்.  அழகு செய்யப்பட்ட பாத்திரங்கள்  அச்சின்  துணை கொண்டு  செய்யப்பட்டவை,  கையால் செய்யப்பட்டவை,  நுண்ணிய கருவிகளைக் கொண்டு செய்யப்பட்டவை என மூன்று வகைப்படும்.  இப்பாத்திரங்களின்  அடிப்பகுதியிலுள்ள நிறம் இன்றளவும் மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 இப் புதிய கற்கால  மக்களால் செய்யப்பெற்ற தாழிகள்,  சட்டிகள்,  பொம்மைகள் பலவகைச்  சிறிய கிண்ணங்கள் வட்டத் தட்டுகள்,  விளக்குகள் முதலியன அவர்கள் வாழ்ந்த  இடங்களிலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.  குயவர்  பானை செய்யும்  சக்கரம் கண்டுபிடிப்பதற்கு முன்பே,  இப்புதிய கற்கால மக்கள் பல கோணங்களை உடைய மட்பாண்டங்களை செய்ய அறிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  மட்பாண்டங்கள் போலவே வீட்டு வேலைகளுக்குப் பயன்படும் (மரத்தட்டு,  மத்துப் போன்ற)  மரக்கறிகள் இருந்தன என்று கருதுதல் பொருத்தமாகும்.

தொழில்கள்

பெண் மக்கள் இக்காலத்தை போலவே ஆடவர்க்கு அவர்தம் தொழிலில் உதவி புரிந்தனர்; சமையல் தொழிலையும் நடத்திவந்தனர். பலவகை  கற்கருவிகள் அக்காலத்தில் வழக்கிலிருந்தது நோக்க,  மக்கள் பலவகைத்  தொழில்களில் ஈடுபட்டிருந்தனர் என்பது தெரிகிறது.    மர தச்சரும்,  கல் தச்சரும் மிகப்  பலராகத் தேவைப்பட்டனர் என்பது தெரிகிறது.   இவ்விருவருக்கும் நல்ல வருவாய் கிடைத்தது என்று கூறலாம்.

 தற்காலத்திலும் தென்னிந்தியாவிலும் பருத்திச் செடிகள் பயிரிடப்பட்டன.  ஆடைகளைப் பதப்படுத்தும் கற்கருவிகள்  கிடைத்திருத்தலை நோக்க,  புதிய கற்கால மக்கள் தங்கள் ஆடைகளை மிருதுவாக்கினார் என்பது  தெரிகிறது.   பருத்தி ஆடைகளை நெய்து வந்ததோடு    அம்மக்களில் சிலர் கம்பளி ஆடைகளையும் நெய்து வந்தனர். குறும்பாடுகளை   வளர்த்து கம்பளி ஆடைகளை செய்தவர் குறும்பர் எனப்பட்டனர்.

 தோல் பதனிடும் கற்கருவிகள்  கிடைத்திருப்பதை பார்க்க,  புதிய கற்கால மக்கள் விலங்குகளின் தோல்களை பதப்படுத்தி தமக்கு வேண்டும் பலவகை பொருட்களை செய்து கொண்டனர் என்பதை அறியலாம்.  ஆடு மாடுகளை வளர்த்த மக்கள் முல்லை நிலத்தார்;  விலங்குகளை  வேட்டையாடிய மக்கள் குறிஞ்சி நிலத்தார்;  இவர்கள் இருவரிடமிருந்து தான் விலங்குகளின் தோள்களை வாங்க வேண்டும்.  எனவே,  அக்காலத்தில் ஐவகை நிலங்களும் வணிகத்தில் தொடர்பு கொண்டனர் என்று கருதுதல் பொருத்தமாகும்.  புதிய கற்கால மக்களின் கருவிகளில்  சில நாணயங்களாகவும் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று கருதும்படி மிகச் சிறிய கல் நாணயங்கள் கிடைத்துள்ளன.  இவற்றை நோக்க,  அக்காலத்தில் நாணய  மாற்று வழக்கில் இருந்தது என்று கருதுதல் தகும்.

 ஆடை அணிகள்

 புதிய கற்காலத்தில் பருத்தி ஆடைகளே மிகுதியாக பயன்பட்டன.  எனவே,  பழைய கற்காலத்தின் பயன்படுத்தப்பட்ட தோலாடையும் மரவுரியும் சிறப்பு நிகழ்ச்சிகளின் போது மட்டுமே உடைக்கப்பட்டன.  பருத்தி பயிரிட்டவர் பல வகை நிறங்களை கண்டறிந்தனர்.  மட்பாண்டங்களில் பல  நிறங்களை  சேர்த்து ஆடை  நெய்தனர்;  மஞ்சள்,  நீலம்,  சிறப்பு இம்மூன்றையும் மிகுதியாக பயன்படுத்தினர்.
 அம்மாக்கள் நுண்ணிய வேலைப்பாடு அமைந்த கல் மணிகளையும்,  பொத்தான்களையும் சங்காலும் எலும்பாலும் ஆகிய எலும்புகளையும் அணிந்து வந்தனர்.  அவை என்றும் பலரா அணியப்படுகின்றனவே ஆகும்.  இவை புதிய கற்கால மக்கள் வாழ்ந்த இடங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன.  பெண்களை குறிக்கும் மண் பொம்மைகள் சில சேலம் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.  தலைமயிர் சிறிய பல வளையங்களாக சுருட்ட பெற்று தலைமீது சுற்றி வைக்கப்பட்டிருந்தது.  இவ்வளையல்கள் மீது உயரமான சீப்புகள் செருகப்  பெற்றிருந்தன.  இதிலிருந்து அக்கால பெண்மணிகளின் அலங்காரச்  சிறப்பை ஒருவாறு அறியலாம்.

 மக்கட் பிரிவு

புதிய கற்கால மக்கள்  பல தொழில்களைச் செய்தார்கள் அல்லவா?  ஒவ்வொரு தொழிலை செய்தவரும் நாளடைவில் ஒரு பிரிவினராக மாறினர்;  அவர்களுக்கென சில பழக்கவழக்கங்கள் நாளடைவில் அமைந்தன.  அவரவர் வாழ்ந்த இடம் பற்றியும் தொழில் பற்றியும் பின்பற்றிவந்த பழக்கவழக்கங்கள் பற்றியுமே நாளடைவில் அம்மக்களிடையே பிரிவுகள் உண்டாயின.  இவை தொழில் பற்றி உண்டான பிரிவுகளைத் தவிரப்    பிறவி பற்றி உண்டான பிரிவுகள் அல்ல.   இப்பிரிவுகளுக்கும்,  பிற்காலத்தில் தமிழகம் புகுந்த பிரம்ம,  சத்திரிய,  வைசிய,  சூத்திரர் என்னும்  நான்கு  வருணங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

 கலை வளர்ச்சி

வெப்பம் மிகுந்த தமிழகத்தில் மண் பலவகை நிறங்களை இயற்கையாகவே பெற்றுள்ளது.  இந்தப் பல நிறங்களில்  உள்ளத்தை பறிகொடுத்த புதிய கற்கால மக்கள்,  ஒரே மட்பாண்டத்தில் செய்ய பலவகை நிற மண்ணை பயன்படுத்தினர்;  மற்றவர்களுக்குத்  தகுந்த அளவிற்குச்  சூடு கொடுத்து அப்பாடல்களில் பல நிறங்கள் அமைய செய்தனர்; சிவப்பு,  மஞ்சள்,   பழுப்பு  நீலம்,  ஆனந்து முதலிய நிறப் பொருட்களை தூளாக்கி களிமண்ணோடு கலந்து பலவகை மட்பாண்டங்களைச் செய்தனர்.  பலநிற கற்களை பல இடங்களில் இருந்து கொணர்ந்து தமக்கு வேண்டும் அழகிய பொருட்களாக தெரிந்து கொண்டனர்;  சில குகைகளின் மேற்கூரைகளில் இக்  இக் கற்களைக் கொண்டு ஓவியங்கள் தீட்டினார்.  வேட்டையாடும் காட்சிகளை காட்டும் ஓவியங்கள் சில தைமூர் மலைத்தொடரில் உள்ள குகைகளில் காணப்பட்டன.  தற்காலத்திலும் இப் பல நிற கற்கள் இப்பண்டை மக்கள் வாழ்ந்த இடங்களிலிருந்து எடுக்கப்பட்டன.  சில மட்பாண்டங்கள் மீது இலைகளை குறிக்கும் ஓவியங்களும் காணப்பட்டன.  நன்கு சித்தரிக்கப்பட்ட மட்பாண்டம் ஒன்று குடிவாடாவில்  கிடைத்தது.  அது  தானியங்களை வைப்பதற்கென்று செய்யப்பட்ட பெரிய  மட்பாண்டம் ஆகும்.  சித்தரிக்கப்பட்ட வளையல்கள் கிடைத்துள்ளன.   சங்கர் வளையல்கள்,  இந்த வேலைப்பாடுகளோடு காணப்படுகின்றன.  இன்றும் இந்திய மாதர் தம்  வீடுகளின் உன் புறங்களில் சுவர்களிலும் பல நிறங்களை அழகு படுத்துவதைக் காணலாம்.  இப்பழக்கம் புதிய கற்காலத்தில் இருந்து வாழையடி வாழையாக வருவதாகும்.

இறந்தவரை புதைக்கும் முறை

பெரிய தாழியில் இறந்தவர் உடல் சார்ந்து இருக்கும் நிலையில் வைக்கப்பட்டது; அத்தாழியில்  சிறிதளவு மணல் இடப்பட்டது;  அதன்மீது ஒரு தட்டில் அரிசி முதலிய தானியங்கள் சிறிதளவு வைக்கப்பட்டன.  இறந்தவர் பயன்படுத்திய கற்கருவிகள் அத் தாழியின்  பக்கங்களில் வைக்கப்பட்டன.  உடலை விட்டு பிரிந்த ஆவி மீண்டும் வருமாயின்,  அதற்குத்  தேவையாகவே அரிசி முதலியவையும்,  கருவிகளும் அவ்வாறு வைக்கப்பட்டன.  பின்பு தாலி நிறைய மணல் இடப்பட்டது. பின்னர் தாழி  ஒரு மண்மூடி கொண்டு  மூடப்பட்டது.  இவ்வளவு ஆனபிறகு தாழி   வைக்கப்பட்ட குழி  ஒரு கற்பனையால்  மூடப்பட்டது.  பின்னர் மிகுதியான மடல் இடம்பெற்று,  மற்றுமொரு முட்டை வடிவுடைய கற்பலகை அம் மணல் மீது வைக்கப்பட்டது. அக்கற்   பலகையை சுற்றிலும் ஒரு முழ  உயரமுள்ள செங்குத்தான கற்கள் நடப்பட்டன.  இத்தகைய  புதையிடங்கள்  24 அல்லது அவற்றிற்கும் ஏற்பட்டவையாக ஒரு பகுதியில் காணப்பட்டன.  அவற்றைச்  சுற்றிலும் செங்குத்தான கற்கள் வட்ட  வட்ட வடிவில் நடப்பட்டுள்ளன. இப்பகுதி ஒரே குடும்பத்தினர் புதைக்கப்பட்ட இடமாக இருக்கலாம்.  இத்தகைய இடங்கள் பல புதுக்கோட்டைச் சீமையில் மிகப் பலவாக இருக்கின்றன.   இப்பகுதிகள் உயர்ந்து காணப்படுகின்றன.  தாழியின் உயரம்  நான்கு அடி;  அகலம் மூன்றரை அடி.  சிலர தாழிகளின் மேற்புறத்தில் அழகிய கோடுகள் காணப்படுகின்றன.  சுமைதாங்கி போன்ற உருவில் அமைந்த கல்லறைகள் (Megatithic tombs)  பெல்லாரி,  கோவை மாவட்டங்களில் பரவலாக இருக்கின்றன.  இவற்றிற்கு அடியில் நிலத்தில் இறந்தவர் உடல்கள் பழங்காலத்தில் புதைக்கப்பட்டன.  சேலம் மாவட்டத்தில் குடிசை வீடு போன்ற அமைப்புடைய தாழிகள் கண்டறியப்பட்டன.

 மொழி

புதிய கற்காலத்தில் விந்திய மலைப் பகுதி தவிர மற்ற இந்திய பகுதிகளில் பண்டைய திராவிட மொழிகள் பேசப்பட்டு வந்தன என்பது ஆராய்ச்சியாளர் கருத்தாகும்.  வட இந்தியாவில் வாழ்ந்த புதிய கற்கால மக்களும் திராவிட இன   மொழிகளையே  பேசி வந்தனர்.  இன்றுள்ள வட இந்திய மக்களால் பேசப்படும் மொழிகள் இலக்கண அமைப்பில் திராவிட மொழிகளையே  ஒத்துள்ளன.  இந்த ஒற்றுமையைப்  பால்,  எண்,  வேற்றுமைகள்,  பெயரெச்சங்கள்,  காலங்கள்,  வினைச் சொற்கள், பெரும் மாற்றங்கள்,  வாக்கிய  அமைப்பு இவற்றைக் கொண்டு நன்கு அறியலாம்.  வட இந்தியாவில் வடமொழிக்  கால் கொண்ட பிறகு,  அங்கிருந்த பண்டை மொழிகள் வடமொழியின் சாயலை ஏற்றன. 

தமிழகத்துப்  கற்கால மக்கள் திராவிட மொழிகளை பேசினர்.  பழைய கற்கால மக்களே  படிப்படியாக வளர்ச்சி பெற்றுப்  புதிய கற்கால மக்களாக   மாறினரே தவிர,  எந்த அயல் நாட்டிலிருந்தும் இங்கு வந்தவர் அல்லர். எனவே,  அவர்தம் மொழியும் இந்நாட்டில் தோன்றி வளர்ந்த திராவிட மொழிகளை என்பது  பொருத்தமாகும்.  

 வாழ்க்கை நிலை

புதிய கற்காலத்தில் இந்நாட்டு மக்களின் மூதாதையர் மூளையின் வேலையை மேலும் கூர்மையாக்கிக் கொண்டனர்.  கல்லில் கலைவண்ணம் கண்டனர்!  கரடுமுரடாக இருந்த கற்கருவிகளை    வழவழபப்பாக்கினர்.  இக்கருவிகளில் தனித்தன்மையுடன் இனம்காணப்பட்ட  உளிகளும்,  இவையன்றி பல  தாழிகளும் கண்டெடுக்கப்பட்டன.  இவையாவும் மக்கள் வேட்டையாடுதலை படிப்படியாகக்  குறைத்துக் கொண்டு  நிலையாக ஓரிடத்தில் தங்கியிருந்ததை காட்டுகின்றன.  நிலத்தை பயிரிட்டு விவசாயம் செய்ய  கற்றுக்கொண்டனர்.  விலங்குகளை பழக்கித் தங்களது தேவைக்குப்  பயன்படுத்திக்கொள்ள துவங்கினர்.  வேட்டையாடி,  ஓடியாடி உணவு தேடிய காலத்திலிருந்து ஓரிடத்தில் குடியமர்ந்து வேளாண்மை பெருக்கத்தில் ஈடுபட்டது மாபெரும் நாகரிகப்   முன்னேற்றமாகும்.  உற்பத்தி பெருக்கத்தால் பண்டமாற்றம் ஏற்பட்டது.  பண்டமாற்று முறை வர்த்தகத்துக்கு வழிவகுத்தது.  புதிய கற்கால மக்கள் நகர நாகரீகம் நோக்கி நகரத் தொடங்கினர்.  தமிழக வரலாற்றில் பொருளாதாரப்  புரட்சி நடந்துகொண்டிருக்கையில் நகரத்தை மையமாகவும் வாணிபப்  பொருளாதாரத்தை அடிப்படையாகவும் கொண்ட சிந்துவெளி போன்ற நகர நாகரீகம்  தமிழகத்தில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார் வே. தி.  செல்வம்.  தமிழ்நாட்டில் புதிய கற்காலம் கி-மு 10 ஆயிரத்திலிருந்து கி-மு 5000 வரை இருந்திருக்கக்கூடும்.