முதலாம் நரசிம்மவர்மன் கிபி 630 முதல் கிபி 668 Narasimhavarman History in Tamil

மகேந்திர வர்மன் இறந்த பிறகு அவனுடைய மகன் கிபி 630  ஆம் ஆண்டில் அரச பதவி ஏற்றார்.   தந்தையின் கலைப்பணியை மேலும் முன்கொண்டு சென்றார்.  சிம்மவிஷ்ணு முதலாம் மகேந்திரவர்மன் நரசிம்மவர்மன் ஆகிய மூவரும் ஒரே பேரரசு  பேரதிக்க  நேர்கோட்டில் பயணித்தவர்கள்.  மூவரும் தொண்டை மண்டலத்தை பல்லவப் பேரரசு 90 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து ஆட்சி செய்துள்ளனர்.  வரலாற்றில் மூன்று தலைமுறைகள் தாத்தா,  தந்தை,  பேரன் தொடர்ந்து திறமையுடன் ஆட்சி செய்வது அதிசயத்தக்க அத்தியாயமாகும்.  இவர்களது பங்களிப்புகள் பெருமை கூறியவை. பல்லவ  அரசர்களுக்குள் மிகச் சிறப்பு வாய்ந்த பேரரசன் நரசிம்மவர்மன்.  தந்தையைப் போலவே இவனும் பல பெயர்களை சூட்டிக்கொண்டான்.  மாமல்லன்,   ஸ்ரீபரன்,   ஸ்ரீமேகன்,  ஸ்ரீநிதி,  இரணஜயன்,   அத்யந்தகாமன், நயனன் குரூ  ஆகிய சிறப்புப் பட்டங்களை சூட்டிக்கொண்டான்.

இவனுடைய ஆட்சியில் நான்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன (1)  கிபி 642,  643 ஆண்டுகளில் வாதாபியை கைப்பற்றியது, (2)  ஈழநாட்டு படையெடுப்பு, (3) சீன யாத்திரிகர் யுவான் சுவாங்கின் காஞ்சி  விஜயம், (4)  மகேந்திரவர்ம தொடங்கப்பட்ட கட்டிடக்கலையை தொடர்ந்து பேணி வளர்த்த பெருமை.

 போர்கள்

மகேந்திர வர்மன் காலத்தில் தோன்றிய பல்லவ சாளுக்கிய பகைமை நரசிம்மவர்மன் காலத்தில் வளர்பிறை போல வளர்ந்தது.  புலிகேசி,   பல்லவர்களை அடக்கும் நோக்கத்துடன்,  பல்லவர்களுக்குக்  கீழே இருந்த ராயலசீமாவில்லிருந்த  சிற்றரசனான பாணர்களத்  தாக்கினான்.  இப்பகுதியை கைப்பற்றியபின் காஞ்சியை நோக்கி தன் படைகளை செலுத்தினான். ஆனால்   நரசிம்மவர்மனுக்கும்  புலிகேசிக்கும் நடந்த மூன்று போர்களிலும் நரசிம்மவர்மன் வெற்றி அடைந்தான். 

மணிமங்கலம் போர்

முதலாம்   மகேந்திரவர்மனை போன்றே  முதலாம்  நரசிம்மவர்மனும்  போர்ப்பிரியர். தந்தை போட்ட போர் பாதையில்  விரைந்து பயணித்தவர்.  இவரது ஆட்சி காலத்தில் நடைபெற்ற போர்களில் மணிமங்கலம் போர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.   புள்ளூர் உள்ளலூர்ப்  ஊரில் வெற்றி பெற முடியாத  சாளுக்கிய மன்னர் இரண்டாம் புலிகேசி,  அடிபட்ட புலியை போன்று மீண்டும் காஞ்சி  கைப்பற்றும் நோக்கோடு பல்லவ நாட்டின் மீது படையெடுத்தார் (கிபி 642).. காஞ்சிக்கு 20 மைல் கிழக்கே உள்ள மணிமங்கலத்தில் சாளுக்கியப் அடையும்,  பலவபடையும் நேருக்கு நேர் மோதின.  இம்மோதலில் முதலாம் நரசிம்மவர்மனின் தலைமையிலான பல்லவர் படை இரண்டாம் புலிகேசியின் சாளுக்கிய படையை தோற்கடித்தது.  மீண்டும் தோல்வி அடைந்த இரண்டாம் புலிகேசி வாதாபி நோக்கி திரும்ப வேண்டியதாயிற்று.

 மணிமங்கலம் போரில் தோல்வியுற்றுப்  புறமுதுகிட்டுத்  திரும்பிய சாளுக்கிய படையை நரசிம்மவர்மனின் படைத்தளபதி பரஞ்சோதி துரத்திச் சென்று சித்தூர் மாவட்டத்தில் இடைமறித்துத்  தோற்கடித்தார்.  இதன்பின் பல்லவர் படை சாளுக்கிய நாட்டுக்குள்  நுழைந்து அதன் தலைநகர் வாதாபியை கைப்பற்றியது.   பல்லவர் படையை எதிர்கொண்ட இரண்டாம் புலிகேசி கொல்லப்பட்டார்.  வாதாபி அளிக்கப்பட்டது கொள்ளையடிக்கப்பட்டது.   கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் காஞ்சிக்கு கொண்டுவரப்பட்டன.  நரசிம்மவர்மனின் வெற்றியை  கொண்டாடும் வாதாபியின் வெற்றித்துண்   எழுப்பப்பட்டது.  பல்லவ   பேரரசன் வாதாபி கொண்டான்,  மாமல்லன் என்ற பட்டப் பெயர் சூட்டிக் கொண்டார்.

 இலங்கைப் படையெடுப்பு

பல்லவ சாளுக்கிய போரின்போது இலங்கை மன்னன்  காசிபனின்  மகன் இளவரசன் மானவர்மன்  பல்லவ மன்னன் முதலாம் நரசிம்மவர்மன் உடனிருந்து உதவி செய்தார்.  இலங்கை மன்னன் காசிபன்  இறந்தபின்  இலங்கையில் ஏற்பட்ட வாரிசுரிமை போராட்டத்தின் போது  இளவரசன் மானவர்மன் பல்லவ மன்னனின் உதவி நாடி  காஞ்சி வந்தார்.  கடற்படை போரில் வல்லவரான மானவர்மன்  எதிராக நடைபெற்ற போரில் பல்லவ மன்னன் கடற்படைக்கு பேருதவியாக இருந்தார்.  அதுமட்டுமல்ல.  அவரும் பல்லவ படைத்தளபதி பரஞ்சோதியும் நரசிம்மவர்மனின் இருப்போர் கரங்களாக இருந்து செயல்பட்டனர்.  எனவே,  மானவர்மன்   இலங்கை மன்னராக வேண்டுமென்ற எண்ணத்தில் மானவர்மமனுக்கு உதவ முன்வந்தார் நரசிம்மவர்மன்.  செய் நன்றி மறவா பல்லவ மன்னன் தனது கடற்படையை இலங்கைக்கு அனுப்பினார்.  முதல் படையெடுப்பு  தோல்வியில் முடிந்தது.  இரண்டாம் படையெடுப்பு பல்லவ தரை,  கடற்படை ஒரு சேர ஒத்துழைத்ததால்  வெற்றி அடைந்தது. நரசிம்ம வர்ம பல்லவனின் இலங்கை வெற்றி சிறப்புடன் வரலாற்று அறிஞர்கள் போற்றப்படுகிறது.

 பல்லவர் பாண்டியர் போர்

தமிழ்நாட்டின் வடக்கில்  பல்லவரும் தெற்கில்  பாண்டியனும் கிட்டத்தட்ட  ஒரே காலத்தில்  எழுச்சி பெற்றனர்.  சிம்மவிஷ்ணு,  மகேந்திர வர்மன், நரசிம்மவர்மன் போன்று பாண்டியர்கள் கடுங்கோன்,  மாறவர்மன் அவனி சூளாமணி,  சேந்தன்,  அரிகேசரி மாறவர்மன் ஆகியோர் பாண்டிய நாட்டின் பலமிக்க மன்னர்களாகத் திகழ்ந்தனர்.  அவர்களும் தெற்குப் பகுதியில் களப்பிரர்களை வென்று ஆட்சியை கைப்பற்றினர்.  சேர நாட்டையும்  வென்று பாண்டிய  மண்டலத்துடன் இணைத்துக் கொண்டனர்.  தென் தமிழ்நாட்டில் பாண்டியர் பலமிக்க சக்தியாக உருவெடுப்பதை பல்லவரும்,  வடதமிழ்நாட்டில் பல்லவப் பேரரசு விரிவாக்கத்தில் ஈடுபடுவதை பாண்டியனும் விரும்பவில்லை.  தென்னாடு முழுவதையும் தங்களது மேலாதிக்கத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்த நரசிம்மவர்மன் தனது சமகாலத்து பாண்டிய மன்னன் அரிகேசரி மாறவர்மனை வெற்றிகொண்டு பாண்டிய மண்டலத்தை தொண்டை மண்டலத்துடன் இணைக்க திட்டமிட்டார்.  இத்திட்டத்தை முறியடிக்க முயன்றதன் விளைவே பல்லவ பாண்டிய போர்.

 பாண்டிய  பேரரசன் அரிகேசரி மாறவர்மன்  சோழருடன்  மண உறவு  கொண்டிருந்தமையால்,  முன்னமேயே   பல்லவர்களை  சோழர்கள் பாண்டியன் பக்கம்  சேர்ந்தனர்.  சேரநாட்டை வென்றதால் சேரரின் ஆதரவும் அவர்களுக்கு இருந்தது.  களப்பிரர்கள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.  நரசிம்மவர்மன் இரண்டாம் புலிகேசியை ஒழிப்பதில் தீவிரமாக இருந்தார்.  இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு  பாண்டியன் அரிகேசரி  மாறவர்மன் சோழர் மற்றும்  சேரருடன் கூட்டு சேர்ந்து  பல்லவருக்கு எதிராக போர் தொடுத்தார் பல்லவர் எல்லைப்படை சங்கரமங்கை என்ற இடத்தில்  தோற்கடிக்கப்பட்டது.  இதையறிந்த நரசிம்மவர்மன் இரண்டாம் புலிகேசி க்கு எதிரான வாதாபி படையெடுப்பை  தளபதி பரஞ்சோதி இடம் ஒப்படைத்துவிட்டு,  தெற்கு நோக்கி சென்று பாண்டியர் படையை புறங்கண்டதாகக் கூறப்படுகிறது.  எனினும் பாண்டியர் படை பல்லவர் படையை தோற்கடித்ததாகப்    பட்டைய செப்பேடு சான்றுகள் பதிவு செய்துள்ளன.

 பல்லவன் கங்கர் போர்

கங்க குலத்தவர்  இக்ஷவாகு ஆந்திர  இக்ஷ்வாகு   பரம்பரையை சேர்ந்தவர்கள்.  மைசூரின் பெரும்பகுதி இவர்கள் வசம் இருந்தது.   கங்காரும்   சாளுக்கியரும் மண உறவு கொண்டவர்கள்.  இரண்டாம் புலிகேசி இறந்தபின்  அவரது மூன்று மகன்களில்  ஆதித்த வர்மனுக்கும்,  விக்கிரமாதித்தனுக்கும் இடையே வாரிசுரிமை போராட்டம் எழுந்தது.  அப்போது விக்ரமாதித்தன் கங்க மன்னன் துர்விநீதன்  ஆதரவை கூறினார்.  அதைப் போன்று  ஆதித்த வர்மன் பல்லவ மன்னன் முதலாம் நரசிம்மவர்மனின் துணையை நாடினார்.  ஏனெனில் சாளுக்கிய நாடு பல்லவரின் மேலாதிக்கத்தின் கீழ் இருந்தது எனவே,  சாளுக்கிய வாரிசுரிமை போராட்டத்தில் பல்லவ மன்னன் பங்கேற்க வேண்டியதாயிற்று.  கங்க மன்னன் துர்விநீதன்   துணையுடன் களமிறங்கிய  சாளுக்கிய இளவரசன்  விக்ரமாதித்தன் வெற்றி  பெற்றார்.  ஆதித்த வர்மனை ஆதரித்த பல்லவர் படை தோல்வியை தழுவியது இத்தோல்வி வாதாபியை தலைநகராகக் கொண்ட  சாளுக்கிய நாட்டின் மீது இருந்த  பல்லவர் ஆதிக்கத்தை  முடிவிற்கு கொண்டுவந்ததோடு,   நரசிம்மவர்மனின் புகழுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.   இது தோல்வியே பல்லவ பேரரசின்  சரிவுக்கான  விதையை விதைத்தது எனலாம்.

 பட்டப்பெயர்கள்

தந்தை மகேந்திரவர்மனை போன்றே  மகன்  நரசிம்மவர்மனும்   பட்டப் பெயர்களை  பெற்றார்.   இவர் மாமல்லர்,  அனுப்தகாமா, அபுமுகா,   குணபார,  சத்தியசந்தா,  புருஷோத்தமா,  சதுரமல்லா,  சேதகாரி,   சித்திரக்காரபுலி,  சங்கீர்ணசதி, விசித்திர சித்தா  ஆகிய பட்டப்பெயர்களை சூடிக்கொண்டார்.

முதலாம் நரசிம்மவர்மனின் சாதனைகள்

 முதலாம்  மகேந்திரவர்மனை போன்று நரசிம்மவர்மனும் வெளிநாட்டு வணிகத்தில் விரிவுபடுத்தவும்,  வெளிநாட்டு வர்த்தக கப்பல்கள் தங்கிச் செல்லவும் வேண்டிய வசதிகளை செய்தார்.  இதன் விளைவாக மல்லைத்   துறைமுகத்தை பாதுகாத்து,  பலப்படுத்தி,  விரிவுபடுத்தி மாமல்லபுரம் என்ற துறைமுகத்தை உருவாக்கினார்.  மாமல்லபுரம் உலகப் புகழ்பெற்ற  வணிக நகரம் ஆயிற்று.

 கலையும் கட்டிடக்கலையும்

தந்தையின் கலை வழியில் சென்ற நரசிம்மவர்மன்,  குடைவரை கோயில்களின்   கட்டடக்கலையை மேம்படுத்தினான்.  திராவிட கட்டிடக்கலையைத்   தழுவி இருந்தது அவன் கட்டிய கட்டடங்களின் கலை அமைப்பு.  மகாபலிபுரத்தில் அவன் பாறைகளைக்  குடைந்தெடுத்து  கட்டிய கோவில்களை இன்றும் கூட பார்க்கலாம்.  புகழ்பெற்ற மாமல்லபுர ஒன்பது கல் ரகங்கள் இவனால் எடுக்கப்பட்டவை.  இவைகள் பஞ்சபாண்டவர்களுக்கும்,  திரௌவுபதி,  விநாயகப் பெருமானுக்கும் கட்டப்பட்ட கோவில்கள்.  கல் தூண்களின் அடிப்பகுதியில் அமர்ந்திருக்கும் பாணியில்   சிங்க உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.   இதுவே  கட்டிடக்கலை அமைப்பு முறையில் இவன் செய்த ஒரு மாறுதல் ஆகும்.   நரசிம்மவர்மனுக்கு  முன்  கல்தூண் உச்சியில் சிற்ப வேலைப்பாடு அமைந்த புதுக்கம்  இருக்க மாட்டா;  பின்பு வேலைப்பாடமைந்த  சுருள் வார்ப்பாடுள்ள  உருவங்கள் இணைக்கப்பட்டன.

மாமல்லபுரம் கோயில்கள்

 முதலாம் நரசிம்மவர்மன் மாமல்லபுரத்தை ஒரு துறைமுகப்பட்டினமாக மட்டுமல்லாமல் அதை ஒரு சிற்பக்கலைக் கூடமாக ஒரு மாற்றம் செய்தார்.  அவர்  மாமல்லபுரத்திலுள்ள குன்றுகளைக் குடைந்து குகைக் கோயில்கள்  எழுப்பினார்.  இங்கு அவர்  மலைகளை செதுக்கி திறந்தவெளி பாறைகளில் புடைப்புச் சிற்பங்கள் வடித்து புதுமைகளைப் புகுத்தினார்.
 முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் கோயில்களை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம் அவையாவன.   கற்சிற்ப கோயில்கள்,  ஒற்றைக்கல் கோயில்கள்,  குடைவரை கோயில்கள்.  மகிஷாசுரமர்த்தினி மண்டபம்,  வராக மண்டபம்,  திருமூர்த்தி மண்டபம் ஆகியவை குடைவரை  கோயில்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்.  பஞ்ச பாண்டவர் ரதம் திரௌபதி ரதம், தர்மராஜ ரதம்,    பீமர் ரதம்,  அர்ஜுனன் ரதம்,  சகாதேவன் ஆகியவை ஒற்றைக்கல் கோவிலுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்.  கோவர்த்தன மலையை  கண்ணன் சுமந்து நிற்கும் காட்சி,  அர்ஜுனன் தவக்கோலம் காட்சி போன்றவை திருப்பதி கோயிலுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும்.  இவற்றில் புராதன கதைகளை சிற்பங்களாக  வடித்துள்ளார்.  இவைகள் அனைத்தும் முதலாம் நரசிம்மவர்மனின் சிற்பக்கலை சாதனைகளாகும்.

 சீனப் பயணி யுவான் சுவாங் குறிப்புகள்

கிபி 640 ஆம் ஆண்டளவில் சீன பயணி யுவான்சுவாங் காஞ்சிக்கு வருகை புரிந்தார்.  பல்லவ நாட்டு மக்களைப் பற்றியும் கோவில்களைப் பற்றியும்,  இயற்கை அமைப்பைப் பற்றியும் பௌத்த சமயத்தின் சரிவு காலத்தைப் பற்றியும்,  காஞ்சியைச் சுற்றியுள்ள   பகுதிக்கு 'திராவிடர்'   எனும் பெயர் இருந்தது என்பதை பற்றியும்  யுவான்சுவாங்கின் குறிப்புகளில் காணலாம். அவரது பயண குறிப்புகளில் காஞ்சிபுரம் சிறப்பிடம் பெற்றுள்ளது.   அவரது பயணக்குறிப்பில் காஞ்சிபுரம் நகரம்  ஆறு மைல் சுற்றளவு கொண்ட பெருநகரமாக காட்சியளித்தது.  அந்த நகரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட புத்த மடாலயங்கள் இருந்தன.  இவற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்த துறவிகள் வாழ்ந்து வந்தனர்.  இவை மட்டுமின்றி இங்கு பல்வேறு சமயங்களைச் சார்ந்த கோவில்களும் இருந்தன.     திகம்பர  சமணசமயம் செல்வம் செல்வாக்கு பெற்றதாக  இருந்தது.   காஞ்சிபுரம் மக்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்.  காஞ்சிபுரத்திற்கு கிழக்கே உள்ள  புத்த மடாலயங்கள் அறிஞர்கள் சந்திக்கும் இடமாக இருந்தது.