சிம்மவிஷ்ணு (கிபி 575 - 600) : Simhavishnu

சிம்மவிஷ்ணு தமிழகம் முழுவதையும் பல்லவர் ஆட்சியில் கொண்டு வரவேண்டும் என்ற  தொலைநோக்குடன் செயல்பட்டவர். சிம்ம வர்மனின் மகனான சிம்மவிஷ்ணு களப்பிரர்களை தொண்டை மண்டலத்திலிருந்து விரட்டியடித்து களப்பிரர்களின் ஆட்சிக் முடிவு கட்டினார்.  இவரே பல்லவர்களை பேரரசர் ஆவதற்கான அடித்தளத்தை அமைத்தார். 

பிற்கால காஞ்சி பல்லவர்களின் ஆட்சி  சிம்மவிஷ்ணுவின் காலத்திலிருந்து தொடங்கியது  எனக் கூறலாம்.  சிம்மவிஷ்ணு ஆட்சி காலத்தில் இருந்து பல்லவ மன்னர்களின்   குடிவழி பட்டியல்  தெளிவாக கிடைத்திருப்பதால் இம்மன்னர்களின் ஆட்சி கணிப்பை சுலபமாக அறிந்துகொள்ள முடிகின்றது.  கங்க மன்னன்    துர்வினிதன் (கிபி 605)  கீழைச் சாளுக்கிய அரசன் விஷ்ணுவர்தன் (கிபி 614)  பல்லவ சிம்ம விஷ்ணு ஆகிய மூவரும் ஒரே காலத்தில் வாழ்ந்து வந்தார்கள் என்ன அவந்தி சுந்தரி  கதாசாரம்  கூறுகின்றது. ஆகையால்  சிம்மவிஷ்ணு கிபி 615 ஆம் ஆண்டு வரை  ஆட்சி புரிந்து இருக்கலாம்  எனவும் நம்பப்படுகிறது.  ஆனால், பொதுவாக  பெரும்பான்மையான வரலாற்று ஆசிரியர்கள்,  இவர் கிபி 575 ஆம்  ஆண்டிலிருந்து 600 ஆம் ஆண்டுவரை ஆட்சி செய்தார் என கூறுகின்றார்கள்.

இவர் களப்பிரரையும் சேர,  தோழா,  பாண்டிய மன்னரையும்,  மாளவரையும், சிங்களவரையும்  வென்று வாகை சூடினான் என்று காசக்குடிச் செப்பேடுகள் கூறுகின்றன. சிம்ம விஷ்ணுவின் உருவம், இவருடைய  பட்டத்தரசிகள் இருவரின் உருவமும் மாமல்லபுரத்தில் புடைப்போவியங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன.

களப்பிரர்  ஆட்சிக்கு முடிவுகட்டல்

சிம்ம விஷ்ணுவின் முதல் முக்கிய சாதனைசங்ககாலத்தில் முடிவுக்குகொண்டு வந்த களப்பிரர் ஆட்சிக்குமுடிவு கட்டியதாகும். களப்பிரர் தொண்டை மண்டலத்திலிருந்து  களையெடுக்கப் பட்டனர்.  இதன்மூலம் களப்பிரரின் வட தமிழ்நாட்டு ஆதிக்கம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

சிம்மவிஷ்ணு  கட்டிடக் கலையிலும் அதிக ஆர்வம் கொண்டிருந்தார் இவர் மகாபலிபுரத்தில் குன்றைக் குடைந்து  குகைக் கோயிலை எழுப்பினர்.  இக்கோயிலில் இவர் தனது இரு மனைவியரோடு  காட்சியளிக்கும் புடைப்புருவச் சிலை இன்றும் உள்ளது பாப்பா இருக்காங்கசிலையின் கீழ் ஸ்ரீ சிம்மவிஷ்ணு போதாதிராஜன் என்று பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.  ஆதிவராகர்  குடைவரைக் கோயில் சிம்மவிஷ்ணுவால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் தமிழ்நாட்டில்  முதல் முறையாக செங்கல் சுண்ணாம்பு மரம் உலோகம் போன்ற அழியக்கூடிய கட்டுமான பொருள் இன்றி  அறியாத கற்கோயிலை கட்டும் கலையை துவக்கி வைத்த பெருமை சிம்மவிஷ்ணுவையே சேரும்.

சிம்மவிஷ்ணு இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றினார்.  இவர் காலத்தில் பாரவி, தண்டின்  போன்ற புகழ்மிக்க சமஸ்கிருத புலவர்கள் அவரது அரசவையை  ஆதரித்தனர்.  பாரவியின் கீராதாா்ஜூனியம் என்ற நூல் அக்காலத்தில் பெரும்புகழ் பெற்றது. கவ்யாதா்ஷா என்ற சமஸ்கிருத அலங்கார நடை கவிதை  இலக்கியவாதிகளின் மத்தியில்  மிகவும் புகழ் பெற்று விளங்கியது.

தமிழ்நாட்டின் முதல் பல்லவ பேரரசு தோற்றுவித்தவர் சிம்மவிஷ்ணு.  பல பரிணாமங்களை கொண்ட ஒரு சகலகலா வல்லவனாக விளங்கினார்.  இவரது தொலைநோக்கு சிந்தனையும் திறமையான  நடவடிக்கையும்  பல்லவ பேரரசு உருவாக காரணமாக விளங்கியது.