முதல் பாண்டிய பேரரசு : First Pandyan Dynasty in Tamil
சங்க காலத்திற்குப் பின் களப்பிரர்கள் தமிழ் நாட்டின் மீது படையெடுத்த காலத்தை ' களப்பிரர்கள் இடையாட்சிக்காலம்' கிபி 300 முதல் 600 வரை என்று குறிப்பிடலாம். ஒழுங்கான அரசன் இல்லாத காலமாக இருந்ததால் இக்காலத்தை' இடை ஓய்வு' அதாவது பேரரசு இல்லாத இருண்ட காலம் என குறிப்பிடலாம். பாண்டியர்கள் எவ்வாறு களப்பிரர்களை தோற்கடித்தார்கள் என சரியான தகவல்கள் கிடைக்கவில்லை. செப்புப் பட்டயங்களில் சிலவற்றில் இது சம்பந்தமாக சில செய்திகள் தான் கிடைக்கின்றன. கிபி ஆறாவது நூற்றாண்டின் கடைசி பகுதியே கிபி 570 ஆம் ஆண்டிற்குப் பின் பாண்டிய மன்னர் கடுங்கோன் (kadugon) களப்பிரர்களை பாண்டிய நாட்டை விட்டுத் துரத்தினான் என்றும், அந்த காலத்தில் பல்லவ அரசர் சிம்மவிஷ்ணு அவர்களை சூலகத்திலிருந்து விரட்டினான் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் நம்புகிறார்கள்.
முதலாவது பாண்டியன் பேரரசு கிபி 575 முதல் 966 வரை
முதலாவது பாண்டிய பேரரசின் வரலாறு சிறப்பாக வேள்விக்குடி, சிவரமங்கலம், சின்னமனூர் முதலிய செப்புப்பட்டயங்கள் மூலம் நமக்கு கிடைக்கிறது.
கடுங்கோன் கிபி 590 முதல் 620 வரை அல்லது கிபி 575 முதல் 600 வரை
'களப்பிரர்கள் இடை ஆட்சிக்காலத்தின் போது ஆட்சி செய்த பாண்டிய அரசர்களைப் பற்றிய செய்திகள் கிடைக்கவில்லை. ஆகையால் பாண்டி அரசு ஒரு சிற்றரசு போல தொடர்ந்து ஆட்சி செய்து வந்தது என நம்பலாம். ஆகையால் களப்பிரர்களை பாண்டிய நாட்டிலிருந்து விரட்டிய பாண்டிய மன்னன் கடவுளின் முன்னோர்களைப் பற்றி நமக்கு தகவல் கிடைக்கவில்லை. வேள்விக்குடி செப்புப்பட்டயம் களப்பிரர்களை கடுங்கோன் துரத்தியடித்த செய்தியை தவிர, மற்ற அவருடைய முன் வரலாற்றை பற்றி குறிப்பிடப்படவில்லை. மற்றொரு கடுங்கோன் பற்றி இறையனார் அகப்பொருள் விளக்கவுரையில் செய்திகள் கிடைக்கின்றன. ஆனால், முதல் சங்ககாலத்தின் இறுதிக் காலத்தில் ஆட்சி செய்த கடுங்கோனும் முதலாவது பாண்டிய அரசு அமைத்த கிபி ஆறாம் நூற்றாண்டு கடுங்கோனும் வேறுபட்ட அரசர்கள். வேறுபட்ட இவ்விரு அரசர்களுக்கும் பெயரில்தான் ஒற்றுமை. கடுங்கோனைப் பற்றி முடிவான செய்திகள் கிடைக்கவில்லை. சில சிற்றரசர்களை தோற்கடித்தார் என்றும், அவர்களுடைய செல்வாக்குள்ள பகுதிகளை அழித்தார் என்றும் வேள்விக்குடி செப்பு பட்டயம் கூறுகின்றது.
மாறவர்மன் அவனி சூளாமணி கிபி 620 முதல் 645 வரை
கடுங்கோனுகுப்பின் அவனுடைய மகன் மாறவர்மன் அவனி சூளாமணி 20 ஆண்டுகளுக்கு மேல் பாண்டிய நாட்டை ஆட்சி செய்தார். இவருடைய ஆட்சியை பற்றி தெளிவான குறிப்புகள் கிடையாது. மாறவர்மன் என்னும் சிறப்புப் பெயரை இவருக்குப்பின் ஆட்சிக்கு வந்த பெரும்பான்மையான பாண்டிய பேரரசர்களும் சூட்டிக் கொண்டார்கள். முதலாவது பாண்டிய பேரரசுகள் சமஸ்கிருத மொழி பட்டையப் பெயர்களை சூட்டிக் கொண்டார்கள். ஆனால் சங்க காலப் பாண்டியர்கள் தமிழ்மொழி பெயர்களைத்தான் சூட்டிக் கொண்டார்கள்.
சேந்தன் அல்லது ஜெயந்தன் கிபி 645 முதல் கிபி 670 வரை
சேந்தன் எனும் பெயரின் சமஸ்கிருத வடிவம் ஜெயந்தன். இவர் 25 ஆண்டுகள் ஆட்சி செய்தார். இவரின் மற்றுமொரு பெயர் ' வானவன்'. பொதுவாக சேரர்கள் தான் ' வானவன்' எனும் பெயரை சூட்டிக் கொள்வார்கள். ஆகையால் சேந்தன் சேரர்களை தோற்கடித்து இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. திருநெல்வேலியில் உள்ள மலையடி குறிச்சி பகுதியில் ஒரு குடைவரைக் கோவில் இவர் ஆட்சி காலத்தில் செதுக்கப்பட்டது. இவனை ' செங்கோற் சேந்த' என்றும் ' வேந்தர் வேந்தன்' என்றும் வேள்விக்குடி சாசனம் கூறுகிறது.
சேந்தனின் இறுதி ஆட்சிக்காலத்திலே சீன யாத்திரிகர் யுவான்சுவாங்் காஞ்சிபுரம் நகரத்திற்கு வந்ததாக நம்பப்படுகிறது. யுவான்சுவாங் பாண்டிய நாட்டை பற்றிய செய்திகளைத் தம் வரலாற்று குறிப்பிலே பதிவு செய்திருக்கிறார். காஞ்சியில் இருந்த போது பாண்டிய நாட்டு மன்னர் இறந்ததாகத் தாம் கேள்விப்பட்டதாக யுவான்சுவாங் கூறுகிறார். ஆனால் இக்கருத்தை நீலகண்ட சாஸ்திரி ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். இவர் காஞ்சிக்கு வந்ததே நம்பக்கூடிய செய்தியாக எடுத்துக்கொள்ள முடியாது என நா. சுப்ரமணியம் கூறுகிறார்.
அரிகேசரி மாறவர்மன் நல்லது அரிகேசரி பராங்குசன் கிபி 670 முதல் 700 வரை
அரிகேசரி மாறவர்மன் சேந்தனுக்குபின் ஆட்சியில் அமர்ந்தான். ஆனால் இவன் வேந்தனுடைய மகன் எனக் கூறுவதற்கு சான்றுகள் இல்லை. வேள்விக்குடி, சிறிய சின்னமனூர் செப்புப் பட்டயங்களில் இவனுடைய பெயர் அரிகேசரி மாறவர்மன் என்றும், பெரும் சின்னமனூர் செப்புப்பட்டயத்தில் அரிகேசரி பராங்குசன் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் இவனுக்கு வழங்கிய பெயர் 'கூன் பாண்டியன்' என்பதாகும்.
பல்லவர்களையும், தோழர்களையும் அரிகேசரி மாறவர்மன் தோற்கடித்த செய்திகள் கிடைக்கின்றன. இவன் பல்லவர்களைத் தோற்கடித்ததாகவும், நெய்வேலி, சங்கரமங்கை பகுதிகளைக் கைப்பற்றியதாகவும் பெரும் சின்னமனூர் பட்டயங்களில் இருந்து அறிகிறோம். வேள்விக்குடி செப்புப் பட்டயங்களில் இருந்து பாழி, நெய்வேலி, உறையூர், செந்நிலம் ஆகிய பகுதிகளில் வெற்றி வாகை சூடினான் எனும் குறிப்புகள் கிடைக்கின்றன. சோழர்களின் பண்டைய தலைநகரமான உறையூரை மட்டும் இவன் கைப்பற்றவில்லை. சோழர் இளவரசி மங்கையர்க்கரசியையும் மணம் புரிந்து கொண்டான். இவன் காலத்தில் தொடங்கிய சோழர்களின் சரிவுக்காலம், முதலாம் ஆதித்திய தோழர் ஆட்சிக்காலம் (கிபி 871 முதல் 907) வரை ஏறத்தாழ இருநூறு ஆண்டுகள் நீடித்தது. இவன் ஆட்சியில் தான் பாண்டியரின் ஆதிக்கம் பாண்டிய நாட்டின் எல்லையையும் கடந்து பல திக்குகளிலும் பரவியது. சேரரும், சோழரும், பரவர் போன்ற குறுநிலத் தலைவர்களும், இவனுடைய ஆட்சிக்குட்பட்டு இருந்தனர். இதன் காரணமாக இக்காலத்தை பாண்டியரின் 'முதல் பேரரசு காலம்' என நீலகண்ட சாஸ்திரி கூறுகிறார்.
அரிகேசரி மாறவர்மன் முதலாம் நரசிம்மவர்மன் பல்லவன் காலத்தில் ஆட்சி செய்து வந்தான் என நம்பப்படுகிறது. திருஞான சம்பந்தரும் முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தலைவராக பணிபுரிந்த சிறுத்தொண்டரும் இவருடைய காலத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது. தொடக்கத்தில் சமணராக இருந்த போதிலும், பிறகு சம்பந்தர் தொடர்பு மூலம் இவன் சைவ சமயத்தை தழுவினார். 'ஹிரண்யகர்பம்', ' துலாபாரம்' போன்ற சடங்குகளை செய்து முடித்தார். செய்வ இலக்கியமான திருவிளையாடல் புராணத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் சிவனடியார்களில் அரிகேசரி மாறவர்மனும் ஒருவர். திருவிளையாடற் புராணம் இவனை ' நின்றசீர் நெடுமாறன்' எனக் குறிப்பிடுகிறது. நாயன்மார்களில் இவனும் ஒருவன் என சுந்தரமூர்த்தி நாயனார் வழங்கிய திருத்தொண்டர் தொகை குறிப்பிடுகிறது. இவனது ஆட்சிக் காலத்தை பாண்டிய நாட்டின் சைவசமய மறுமலர்ச்சி காலம் எனக் கூறலாம். பாண்டிய நாட்டில் பௌத்த மதம் தொலைந்து பௌத்த மடங்கள் அறிவு நிலையை அடைந்து விட்டன. நூற்றுக்கணக்கில் இந்து கடவுளின் கோவில்கள் நிறைந்திருக்கின்றன என யுவான்சுவாங் குறிப்பிடுவதையும் நாம் மறுக்க முடியாது.
கோச்சடையான் ரணதீரன் கிபி 709 முதல் 730 வரை
எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரியணையேறிய கோச்சடையான் ரணதீரன் அரிகேசரி மாறவர்மனின் மகனாவான். இவன் ஓர் பெரிய போர் வீரன்; பாண்டிய நாட்டின் அண்டை பகுதிகளைக் கைப்பற்றினான். மேலை தக்காணத்தில் உள்ள மராட்டிய இனக்குழுவினரை மங்கலாபுரத்தில் தோற்கடித்தான் என வேள்விக்குடிச் சாசனம் கூறுகிறது. மங்கலாபுரம் என்பது பாண்டிய நாட்டுப் பகுதியா, அல்லது திருச்சி மாவட்டத்திலுள்ள கொள்ளிடத்தின் வட கரையில் இருக்கும் பகுதியா அல்லது கருநாடகத்தில் உள்ள மங்கலாபுரமா என்பது வரலாற்று ஆசிரியர்கள் உறுதியாகக் கூற முடியவில்லை. ஏனென்றால் இதற்கு வேறு துறை சான்றுகள் இல்லை.
'கருநாடகன்', 'ரணதீரன்' எனும் விருதுகள் இவன் சாளுக்கியரைத் தோற்கடித்ததை ஐயமின்றி உணர்த்துகின்றன. 'கொங்கர் கோமகன்' என்றும் இவனை அழைப்பதால், இவன் கொங்கு நாட்டையும் கைப்பற்றி இருக்கலாம். ' 'கருநாடகன்' என்பதால் கொங்கு நாட்டையும் கடந்து ' கர்நாடக பகுதியின் மேல் படையெடுத்திருப்பான் எனக் கூறலாம். 'வானவன், 'சேம்பியன்' ,'சோழன்' என இவனை அழைப்பதால் இவன் சேர, சோழ அரசன் மீது மேலாதிக்க உரிமை பெற்றிருந்தான் இடவும் கூறலாம்.
செங்கோடு, புதாங்கோடு (இரண்டும் சேரநாட்டு பகுதிகளாக இருக்கலாம்) போர்களிலும், பாண்டிய நாட்டில் தென்கோடியில் உள்ள மருதூர் போரிலும் இம்மன்னன் வெற்றி வாகை சூடினான்.
இம்மன்னன் காலத்தில் தான் சுந்தரமூர்த்தி நாயனாரும். சேரமான் பெருமாளும் மதுரைக்கு வந்தனர். இவன் சேரமான் பெருமானின் மகளைத் திருமணம் செய்து கொண்டான். தனது புதல்வியைச் சோழ இளவரசனுக்கு மனம் செய்தித்தான். இம்மன்னன் சைவ சமயத்தைப் பேணி வளர்த்தான்.
அரிகேசரி பராங்குச மாறவர்மன் அல்லது முதலாம் இராசசிம்மன் கிபி 730 முதல் கிபி 768 வரை
கோச்சடையன் ரணதீரனின் மகனான அரிகேசரி பராங்குச மாறவர்மன் தந்தையைப் போல ஒரு பெரும் வீரன் ஆவான் பல வெற்றிகளைப் பெற்றார். இவன் ஆதிகாலத்தில் தான் நந்திவர்ம பல்லவ மன்னன், சாளுக்கிய அரசனான இரண்டாம் கீர்த்திவர்மன், விக்ரமாதித்யன், சுங்க அரசனான ஸ்ரீ புருஷன் முதலியவர்கள் ஆட்சிபுரிந்தார்கள். இம்மன்னன் அடைந்த வெற்றிகளில் சிறப்பானது பல்லவர்கள் தோற்கடித்ததே யாகும். ஸ்ரீவரமங்கல செப்பேடு இவனை 'பல்லவ பஞ்சணன்' அல்லது பல்லவர்களை அளித்தவன் என்று சிறப்பு பெயர் அழைக்கின்றது. வேள்விக்குடி செப்பேடும் இதை உறுதிப்படுத்துகிறது. நெடுவயல், குறுமடை, மண்ணிக்குறிச்சி, திருமங்கை, பூவாளூர், கொடும்பாளூர், குழம்பூர் முதலிய இடங்களில் பல்லவர்களைத் தோற்கடித்தான். இறுதியாக கும்பகோணத்திற்கு அருகேயுள்ள நந்திபுரத்தில் பல்லவ மன்னர் எதிர்த்தான். அச்சமயத்தில் பல்லவ படைத்தலைவன் உதயசந்திரன் படைகளுடன் நந்திபுரத்திற்கு வந்து பல்லவ மன்னனை விடுவித்தான் என்ற செய்தியை உதயேந்திரம் செப்பேடு கூறுகின்றது.
மேலும் இம்மன்னன் கொங்கு நாட்டைக் கைப்பற்றினர். மேலைக் கங்க அரசன் ஸ்ரீ புருஷனை தோற்கடித்து, அவனுடைய மகளை மணம் புரிந்து கொண்டான். வெண்பை என்னும் இடத்தில் இவன் மேலைச் சாளுக்கியர் களையும் தோற்கடித்தான். கூடல் அல்லது மதுரை, வஞ்சி, உறையூர் பகுதிகளின் மேல் ஆதிக்கம் செலுத்திய இவ்அரசனை ஒரு பேரரசன் என்றே அழைக்கலாம்.
பெரியாழ்வார், அவரது மகள் ஆண்டாள், நம்மாழ்வார், அவரது சீடர் மதுரகவி இந்நால்வரும் இம்மன்னன் காலத்திலும், நெடுஞ்சடையன் பராந்தகன் காலத்தில்( 8ஆம் நூற்றாண்டு) வாழ்ந்தவர்கள் என நம்பப்படுகிறது.
நெடுஞ்சடையன் பராந்தகன் அல்லது முதலாம் வரகுணன் கிபி 778 முதல் 815 வரை
முதலாம் ராஜசிம்மனுக்குப் பிறகு அவருடைய மகன் நெடுஞ்சடையன் பராந்தகன் ஆட்சிக்கு வந்தான். இவ்வேந்தனைப் பற்றியும் இவனது முன்னோர்களைப் பற்றியும், பல அரிய செய்திகள் அளித்த வேள்விக்குடி சாசனம், இம்மன்னனின் மூன்றாவது ஆட்சியாண்டின் போது இம்மன்னரால் வழங்கப்பட்டது. தனது 17 ஆம் ஆட்சியாண்டில் ஸ்ரீவரமங்கலச் சாசனத்தை அளித்தான். இம்மன்னனது திருச்சியிலும், ஆனைமலையிலும், கழுகுமலையிலும், அம்பாசமுத்திரத்திலும் காணலாம். இக்கல்வெட்டுக்களும், சென்னை பொருட்காட்சி சாலையில் உள்ள சாசனங்களும் இம்மன்னரைப் பற்றியும், பாண்டிய நாட்டைப் பற்றியும் பல செய்திகளை கொடுக்கின்றன.
இவன் தனது ஆட்சித் தொடக்கத்தில் காவிரிக்கரையில் உள்ள தஞ்சைக்கு அருகில் பெண்ணாடகத்தில் பல்லவர்களை தோற்கடித்த செய்தியே சிறப்பானது ஸ்ரீ வரமங்கள செப்பேடு மேலும் பாண்டியன் பெற்ற சில வெற்றிகளைப் பற்றி கூறுகின்றது. பாண்டியனை எதிர்த்து கொங்கு நாட்டானாகிய அதியன் போர் செய்தான் என்றும் அவனுக்கு உதவியாக சேரனும் பல்லவனும் வந்தபோது அம்மூவரையும் பாண்டியன் வென்றான் என்றும் சாசனம் கூறுகிறது. ஆயிரவேலி, ஆயிரூர், புகழியூர் ஆகிய இடங்களில் அதியமான் தோற்கடிக்கப்பட்டு, மதுரையில் சிறை வைக்கப்பட்டான் என்றும் கூறப்படுகிறது.
தமது எதிரிகளை வேலூர், விண்ணம் ஆகிய பகுதிகளில் தோற்கடித்தான். தென் திருவாங்கூரில் உள்ள வேணாட்டையும் கைப்பற்றினான். ஆரணால் சிறந்து விளங்கிய விழிஞத்தை அழித்தான். வேணாட்டை ஆய்வேல் என்னும் ஆய்க்குடியினர் ஆண்டுவந்தனர்.
ஆய்வேளிர்களைக் கண்காணிக்கும் நோக்கத்துடன் திருநெல்வேலி பகுதியில், இப்பொழுது உக்கிரன்கோட்டை என வழங்கப்படும் பழைய கரவந்தபுரம் அல்லது களக்குடி என்ற ஊரில், பெரும் கோட்டை கட்டி அங்கே ஒரு பெரும் காவற்படையும் வைத்தான். இக்கோட்டையை அழிந்த நிலையில் இன்றும் காணலாம்.
'வரகுணன்' என்று கூறப்படும் இம்மன்னன், தனது முன்னாள் அரசர்களைப் போல சைவ சமயத்தை பின்பற்றவில்லை. ஆனால் வைணவ சமயத்தை தழுவி 'பரம வைஷ்ணவன்' என்றும் பெயரை சூட்டிக் கொண்டான். பெரியாழ்வார் இவன் காலத்தில் தான் வாழ்ந்தார். கொங்கு நாட்டிலே காஞ்சிவை என்னும் இடத்தில் திருமாலுக்கு ஒரு பெரிய கோயிலை கட்டினான்.
இரண்டாம் வராதுன்னு கிபி 815 முதல் 835 வரை
நெடுஞ்சடையனுக்குப்பின் இரண்டாண்டுகள் இரண்டாம் ராஜசிம்மன் ஆட்சி புரிந்தான் தி.வி. சதாசிவ பண்டாரத்தார் கூறுகிறார். இரண்டாம் ராஜசிம்மன் இறந்தபிறகு அவனுடைய மகன் வரகுணன் ஆட்சி செய்தான். அவனால் வெளியிடப்பட்ட பல கல்வெட்டுக்கள் சோழமண்டலத்தில் கிடைத்திருக்கின்றன. இவை ஆட்சி காலத்தின் போது சோழ நாடு பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது என கூறப்படுகின்றது. அம்பாசமுத்திரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாம் வரகுணனின் கல்வெட்டிலிருந்து தொண்டை மண்டலம் அவன் ஆட்சிப்பகுதியாக இருந்திருக்க வேண்டுமென சிலர் கருதுகின்றனர். இவன் சைவ சமயத்தை பின்பற்றினான். சிவனடியார் மாணிக்கவாசகர் அமைச்சராக பணிபுரிந்தார் என சிலர் கருதுகிறார்கள். பட்டினத்தாரும் இவன் காலத்தில் தான் வாழ்ந்து வந்தார்.
ஸ்ரீ மணிமாறன் ஸ்ரீ வல்லபன் கிபி 835 முதல் கிபி 862 வரை
ஸ்ரீ மணிமாறன் ஸ்ரீவல்லபன் கிபி 815 முதல் 862 ஆண்டுகளின் இடையே ஆட்சி புரிந்தார் என கே. வி. ராமன் கூறுகிறார். ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன், நெடுஞ்சடையன் பராந்தகன் மகன் என்றும், அவனை நெடுஞ்செழியனுக்கு பின் கிபி 815 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தான் என்றும், மேற்சொன்ன இரண்டாம் இராசசிம்மன், இரண்டாம் வரகுணன் எனும் புதிய அரசர்களை தேவையில்லாமல், சாசனத்தில் கூறாததை, சதாசிவ பண்டாரத்தார் புகுத்துகிறார் என்றும், அக்கருத்து தவறு என்றும் இவர் மேலும் எடுத்துரைக்கிறார்.
ஸ்ரீ மாறன் ஸ்ரீவல்லபன் காலத்திலும் பாண்டிய பல்லவப் போர்கள் தொடர்ந்து நடைபெற்றன. வெற்றி தோல்விகள் மாறி மாறி வந்தன. கடலூனர் அல்லது ஆனூர் என்னுமிடத்தில் நடந்த போரிலும் ஸ்ரீ மாறன் வெற்றி பெற்றான் என தளவாய்புரச் செப்பேடு, சின்னமனூர் செப்பேடும், பாகூர்ச் செப்பேடும் கூறுகின்றன. பல்லவர், சோழர் கங்கர் தேர்ந்த கூட்டுப் படையை குடமூக்கு போரில் ஸ்ரீமாறன் முறியடித்தான்.
ஆனால், வடஆற்காடு மாவட்டத்தில் வந்தவாசி தாலுகாவிலுள்ள தெள்ளாறு போரிலும் கிபி 855, கும்பகோணத்திற்குத் தென்புறமாக ஓடும் அரிசிலாற்றங்கரைப் போரிலும், பல்லவர்கள் பாண்டியர்களை தோற்கடித்தார்கள். தெள்ளாற்றுப் போரில் பல்லவ மூன்றாம் நந்திவர்மன் வெற்றியடைந்ததால் தொண்டை மண்டலத்திலிருந்து பாண்டியர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அரிசிலாற்றங்கரைப் போரில் நந்திவர்மனுடைய மகனான நிருபதுங்கவர்மன் வெற்றி அடைந்ததா பாண்டியர்கள் ஆட்சிக்குட்பட்டிருந்த பல சோழநாட்டு பகுதிகளைப் பல்லவர்கள் கைப்பற்றினார்கள். விழிஞப் போரிலே ஸ்ரீ மாறன் சேரர்களை தோற்கடித்தான்.
ஈழத்தில் முதல்சேனன் கிபி 131 முதல் 851 ஆட்சி செய்துகொண்டிருந்த காலத்தில் ஈழத்தின் மீது பாண்டியர்கள் படையெடுத்தனர் என்று இலங்கை வரலாற்று நூலான மகாவம்சம் கூறுகின்றது. மகாதலிதா என்னுமிடத்தில் பாண்டியர் பெரும் வெற்றி கண்டனர். சிங்கள நாட்டு இளவரசன் மகிந்தன் தற்கொலை செய்து கொண்டான். பாண்டிய படை ஈழத்து தலைநகரை கைப்பற்றி அங்கிருந்த புத்தகங்களிலிருந்து விலையுயர்ந்த பொருட்களை வீதியாக எடுத்துச் சென்றது என்றும், இதனால் இலங்கை தனது பெரும் செல்வங்களை இழந்து என்றும், மகாவம்சம் கூறுகின்றது. இறுதியில் ஒரு ஒப்பந்தப்படி ஓடி மறைந்த ஈழ நாட்டரசன் சேனனுக்கு மீண்டும் ஆட்சிப் பொறுப்பு வழங்கப்பட்டது.
ஆனால், ஈழ நாட்டரசன் இரண்டாம் சேனன் காலத்தில் (கிபி 842 முதல் 847 வரை) இலங்கை அரசன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்தான். தோல்வியுற்ற பாண்டிய அரசனும், அவனுடைய மனைவியும் உயிரிழந்தனர். (சுமார் கிபி 862 ஆம் ஆண்டில்), இலங்கை அரசனுடன் ஒன்று சேர்ந்து போர் புரிந்த மாய பாண்டியன் முடி ஆட்சி பெற்றான் என மகாவம்சம் கூறுகிறது. மாய பாண்டியனும், ஸ்ரீ மாறனின் முதல் மகனான வரகுணனும் ஒருவரே என சிலர் கருதுகிறார்கள்.
ஸ்ரீ மாறன் பெற்ற வெற்றிகளைக் தெரிவிக்கும் சின்னமனூர் செப்பேடு 'குன்னூரிலும், சிங்களத்தும், விழிஞத்தும் வாடாத வாகை சூடி' என்று முதலில் குறிக்கின்றது. 'பரச்சக்ர கோலாகலன்', ' அவனிபசேகரன்' என்ற பட்டங்கள் ஸ்ரீ மாறனின் வீரச்செயல்களையும் வெற்றிகளையும் குறிக்கின்றன.
இரண்டாம் வரகுணன் கிபி 862 முதல் 885 வரை
தமது ஆட்சியின் முதற்பகுதியில் வராது போர்கள் எதுவும் மேற்கொள்ளவில்லை. ஆனால் பிற்பகுதியில் தன் தந்தையிடமிருந்து பல்லவர்கள் பரித்துக்கொண்ட பகுதிகளை மீட்கும் நோக்கத்துடன் பல்லவர்களுடன் போர்புரிந்து தோல்வியுற்றான். பல்லவ அரசன் அபராஜிதன், கங்க அரசன் முதலாம் பிருதிவிபதி, சோழ அரசன் ஆதித்தன் ஆகிய மூவரும் கூட்டு சேர்ந்து பாண்டிய அரசன் வரகுணவர்மனை எதிர்த்தனர். இடவையிலும், அதன் அருகிலுள்ள ஊர்களிலும் போர்கள் நடந்தன. இறுதியில் கிபி 885 ஆம் ஆண்டில்(சிலர் 880 ஆம் ஆண்டு எனக் கூறுகின்றனர்) கும்பகோணத்திற்கு வடமேற்கு ஐந்து மைல் தொலைவில் உள்ள திருப்புறம்பியம் என்னுமிடத்தில் பாண்டியன் முறியடிக்கப்பட்டார். பல்லவ அரசனுக்கு துணை நின்று போராடிய கங்க அரசன், இப்போரில் உயிர் நீத்தான். வரகுண பாண்டியன் சோழநாட்டில் தன் கைப்பற்றிய பகுதிகளை இழக்கும்படி நேர்ந்தது. இதனால் பாண்டியர் வலிமை குன்றியதுச பாண்டிய பேரரசின் சரிவுக்காலம் தொடங்கியது. அபராஜிதன் வெற்றி வாகை சூடிய போதிலும், பல்லவ ஆதிக்கம் சோழநாட்டில் குன்றத் தொடங்கியது. ஆகையால் திருப்புறம்பியம் போரே ஆதித்திய சோழனின் எழுச்சிக்கு அடிகோலியது எனக் கூறலாம்.
பராந்தக வீரநாராயணன் கிபி 860 முதல் 905 வரை
இவன் வரகுணனின் மற்றொரு தாய்வழிப் பிறந்த உடன் பிறந்தவன் ஆவான். சோழ குலத்து இளவரசி, வானவன் மாதேவி இவனது பட்டத்தரசி ஆவாள். தனது ஏழாம் ஆண்டு ஆட்சி காலத்தில் தளவாய்புரச் ஆசனத்தை வழங்கினான்.
இவனது வெற்றிகளை சாசனம் விரிவாகக் கூறுகின்றது. செந்நிலத்தில் தன் அன்னையையும்(வரகுணன் அல்ல), கரகிரியில் (அக்காலத்தில் களக்குடி அல்லது களவந்தபுரம் என்றும், இன்று உக்கிரன்கோட்டை என்றும் அழைக்கப்படுகிறது) கரகிரி அல்லது களக்குடி பாண்டியர்களின் சிறப்பு படைத்தளமாக விளங்கியது. பெண்ணாடக நகரை அளித்தான் என்று கூறப்படுவதால் வரகுணன் காலத்தில் இழந்த சோழநாட்டை மீண்டும் கைப்பற்ற, இவ்வரசன் முயன்றான் என தெரிகிறது.
தன் தந்தையாகிய ஸ்ரீவல்லபனை போன்று இவனும் வைணவனாவான். பல பிரம்மதேயங்கள், தேவ தானங்கள் செய்தான்.
இரண்டாம் இராசசிம்மன் கிபி 900 முதல் 920 வரை
இவன் பராந்தக வீரநாராயணனுக்கும், சேரநாட்டு வானவன் மகா தேவிக்கும் பிறந்தவன். இவன் ஆட்சியின்போது முதலாவது பாண்டிய ஆட்சி குன்றத் துவங்கியது எனக் கூறலாம். தன் 16 ஆம் ஆட்சியாண்டில் சின்னமனூர் பெரிய செப்பேடுகளை வழங்கினான்.
உப்பிலி மங்களத்தில், இவனுடன் யார் போர்புரிந்தார் எனத் தெரியவில்லை. வஞ்சி மீது இவன்படையெடுத்தது மட்டுமல்லாமல், கோனை வைப்பூரிலும் தோற்கடித்தான். தோழருக்குப் பக்க உறுதுணை நின்ற கொடும்பாளூர் முத்தரயருடன் போரிட்டான்.
சுமார் கிபி 915 ஆம் ஆண்டில் வெல்லூர் போரிலே இலங்கை மன்னனின் படை உதவியுடன் போர் புரிந்த இராசசிம்மனை, முதலாம் பராந்தக சோழன் தோற்கடித்தான். இலங்கை மன்னர்களுக்குள் குழப்பம் ஏற்பட்டது இலங்கையின் உதவி மீண்டும் பாண்டியனுக்கும் கிடைக்கவில்லை. ஆகையால் தன் தாய் வானவன் மகாதேவியின் பிறந்த நாடாகிய சேர நாட்டிற்கு சென்று தங்கி இருந்தான் என மகாவம்சம் கூறுகின்றது. பின் இவனைப் பற்றிய செய்திகள் எதுவும் தெரியவில்லை. பாண்டிய அரசை அழித்த பராந்தக சோழன், வெல்லூர்ப் போருக்கு முன்பே ' மதுரை கொண்ட கோப்பரகேசரி' எனும் விருதுப் பெயரை கிபி 910ஆம் ஆண்டில் சூட்டிக்கொண்டான். இதன்மூலம், சோழராதிக்கம் பாண்டிய நாட்டில் பரவத்துவங்கியது என முடிவாக கூறலாம்.
வீரபாண்டியன் கிபி 946 முதல் 966 வரை
முதலாவது பாண்டிய பேரரசின் கடைசி அரசன் இவன்; இராசசிம்மனின் மகன்; சோழர்கள் திருடர்களிடம் தோல்வியடைந்து கொண்டிருக்கும்போது, தோழர்களே தோற்கடித்து, சோழர்கள் கைப்பற்றிய பாண்டிய நாட்டுப் பகுதிகளை மீண்டும் கைப்பற்றினான். இவனால் தோற்கடிக்கப்பட்ட சோழ அரசனின் பெயர் தெரியவில்லை. ' சோழன் தலைக் கொண்ட வீரபாண்டியன்' என தன்னை அழைத்துக் கொண்டான். சுமார் 20 ஆண்டுகாலம் தன் ஆட்சியை நிலைபெறச் செய்தான். இறுதியாக சோழ இளவரசன் இரண்டாம் ஆதித்தனால் முறியடிக்கப்பட்டு பாண்டிய அரசை இழந்தான்.
சோழர்கள் ஆட்சி, பாண்டிய நாட்டில் பரவிய பிறகு சில பாண்டிய சிற்றரசர்கள், சோழர்களுடன் போர் புரிந்ததாக தெரிகிறது. ஆனால் பாண்டியர்கள் வெற்றியடையவில்லை. அமரபுஜங்கன் எனும் பாண்டிய அரசன் இராசராச சோழனுடன் போர்புரிந்து தோல்வியுற்றதாக திருவேலங்காடுச் செப்பேடு கூறுகின்றது.
இராசராச சோழன் காலத்தில்தான் பாண்டிய நாடு முழுமையும் சோழர் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. இராசராசன் 'பாண்டியன் குலாசனி' என்ற விருதை ஏற்றான். அவனது மகன் இராஜேந்திரன் காலத்தில் கிபி 1018 ஆம் ஆண்டில் பாண்டிய நாட்டை ஆள்வதற்குச் சோழ பாண்டியன் என்ற பிரதிநிதி முதன்முறையாக நியமிக்கப்பட்டதைத் திருவெண்காடுச் செப்பேடு தெரிவிக்கின்றது.