அந்தமான் தீவுகள் அல்லது போர்ட் பிளேர்  சுற்றுலா இடங்கள் Andaman In Tamil

 அந்தமான் இந்திய திருநாட்டின் யூனியன் பிரதேசங்களில் முக்கியமானது.  அந்தமான்  தீவுகளை அந்தமான் என்று மட்டும் சொல்லாமல் அந்தமான் நிக்கோபார் தீவுகள் என்றே சொல்ல வேண்டும்.

   அமைவிடம்

 அந்தமான் நிக்கோபார் தீவுகள் என்பவை இரண்டு பெரிய தீவு கூட்டங்கள்.   இவை வங்காள விரிகுடாவில் 92 பாகை முதல் 94 வரை கிழக்கு தீர்க்க கோட்டிற்கும் 6 பாகை முதல் 14 பாகை வரை வட அட்ச கோட்டிற்குள்ளும்   அமைந்துள்ளன.

 பரப்பளவு

 அந்தமான் தீவுக்கூட்டங்கள் இன் பரப்பளவு 6408 சதுர கிலோமீட்டர்.  நிக்கோபார் தீவு கூட்டங்களின் பரப்பளவு 1841 சதுர கிலோமீட்டர்.  மொத்த பரப்பளவு 8249 சதுர கிலோமீட்டர்.

 தலைநகர்

 அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரம் போர்ட் பிளேர்.

 அண்டை நாடுகள்

 அந்தமான் நிக்கோபார்  தீவுகளின் வடக்கில் வங்காளதேசம் மியான்மர் நாடுகளும்.  தெற்கில் இந்தோனேசியாவும் மேற்கில்  தாய் நாடாகிய இந்தியாவும் கிழக்கில் மியான்மர்,  தாய்லாந்து நாடுகளும் அண்டை நாடுகளாகும்.

தாய்நாட்டில் இருந்து இதன் தொலைவு

 அந்தமான் நிக்கோபார் தீவுகள் சென்னையிலிருந்து 1190 கிலோமீட்டர் தொலைவிலும்,  கொல்கத்தாவிலிருந்து 1255 கிலோமீட்டர் தொலைவிலும்,  விசாகப்பட்டினத்தில் இருந்து 1200  கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளன.

  தட்பவெப்ப நிலை

 இங்கு ஆண்டு முழுவதும் வெப்பமண்டல காலநிலை நிலவுகின்றது.  குறைந்த அளவு வெப்பநிலை  23 டிகிரி செல்சியஸ்.  உயர்ந்த அளவு வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ். ஈரப்பதம் சற்று அதிகம்.  70 முதல் 90 விழுக்காடு ஈரப்பதம் நிலவுகின்றது.  எப்பொழுதும்  இதமாக வீசும்  பதமான காற்று;  மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும் காலநிலை;  ஆண்டு சராசரி மழையளவு 3000 மில்லி மீட்டர்.  மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை மேற்கு  பருவக்காற்றால் மழை பெய்கிறது.  நவம்பர் முதல் ஜனவரி வரை வடகிழக்குப் பருவக் காற்றால் மலைப்பொழிவு ஏற்படுகின்றது.

 காடுகள்

 அந்தமான்  நிக்கோபாரில் எங்கு நோக்கினும் வெப்பமண்டல காடுகள்.  இத்தீவுகளின் மொத்த பரப்பளவில் 92% நிலப்பரப்பில் காடுகள் செழித்து வளர்ந்துள்ளன.  விண்ணைத் தொடும் மரங்களும் குன்றுகளும் நிறைந்துள்ளன.  மண்ணைத் தொடும் மழை மேகங்கள் உலா வருகின்றன.

 சமவெளிகள் இல்லை நில அமைப்பு

 ஆழியில் மிதக்கும் அழகிய தீவுகள். கவர்ச்சியூட்டும் கன்னித் தீவுகள்.  இந்தியாவின்  கிழக்கில் தனிமையில் தத்தளிக்கும் தங்கத் தீவுகள்.  தீவுகள்,   திட்டுகள்,  குன்றுகள், பாறைகள் என தீவுகளின் எண்ணிக்கை 572 வடக்கு  கிழக்காக  குமார் சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவுக்கு சங்கிலித் தொடர் போல அமைந்துள்ளன.  மியான்மரில் இருந்து இந்தோனேஷியா வரை தொடர்ச்சியான குன்றுகளின் உச்சியில் அமைந்த நிலப்பகுதி.  தீவுகளில் நில அமைப்பு உயர்ந்தும் தாழ்ந்தும்  காணப்படுகின்றது. பெரிய சமவெளிகள் இல்லை.  மலைகள் உறுதியற்ற பாறைகளால் ஆனவை.  மலைப் பாங்கான நிலம் என்றாலும் கற்கள்  இன்றிக் காணப்படுகின்றது.   மண் மிருதுவாய் உள்ளது.

  மண் வகைகள்

 அந்தமான் நிக்கோபாரிலல் செம்மண்,  சற்று மஞ்சள் நிற மண்,  மணல்,  குறுமணல்,  சுண்ணாம்பு மண்,  சரளை மண் என பலவகை காணப்படுகின்றன.

தீவுகளின் எண்ணிக்கை

 அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மொத்த எண்ணிக்கை 572.  அந்தமானில் 544 தீவுகளும் நிக்கோபாரில் 28 தீவுகளும் உள்ளன.

 மக்கள் வாழும் தீவுகள்

 எல்லாத் தீவுகளிலும் மக்கள் வாழ்வதில்லை.  தீவுகள் திட்டுகள்,  குன்றுகள்,  பாறைகள் என்பனவற்றில் சற்று  வசதியுள்ள தீவுகளில் மட்டும்தான் மக்கள் வாழ இயலும்.  அதிலும் நீர் வசதி,  மண்வளம்,  துறைமுக வசதி இல்லாத பகுதிகளிலும்  போக்குவரத்துக்கு எட்டாத பகுதியிலும் மக்கள் குடியேற்றம் இல்லை. எனவே  36 தீவுகளில் மட்டும்தான் மக்கள் வாழ்கின்றனர்.

 வனவளம்

 அந்தமான் நிக்கோபார் தீவுகள் வனவளம் நிறைந்தவை.  மொத்த பரப்பளவில் 7467 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் காடுகள் காணப்படுகின்றன.  இவற்றில் 200 வகை மரங்கள் வளர்கின்றன.  44 வகை மரங்கள் வீடு கட்டவும்.  29 வகை மரங்கள் ஒட்டுப்பலகை,  தீக்குச்சி முதலியன செய்யவும் பயன்படுகின்றன.

 கடல்வளம்

  இத்தீவுகளின் கடலுக்கடியில்  முத்து போல் ஒளிரும்  டர்போ கிளிஞ்சில்,   டிரோகஸ்  கிளிஞ்சில்.  நாட்டிலஸ் கிளிஞ்சில் மற்றும் மீன்கள்,  ஆமைகள் முதலியன ஏராளமாக கிடைக்கின்றன.  ஆண்டுதோறும் பல நூற்றுக்கணக்கான  டன் கிளிஞ்சல்கள் எடுத்து,  கொல்கத்தாவுக்கு ஏற்றுமதி  செய்கிறார்கள்.  ஒரு டன்  கிளிஞ்சளை  எடுத்து சுத்தம் செய்தால் 25 விழுக்காடு இறுதிப் பொருள் கிடைக்கிறது.

 கனிமவளம்

 எரிவாயு, எண்ணெய் சேமிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  1978-இல் நீலத்தீவு, ஹாவ்லாக் தீவு அருகே எண்ணெய்த் துறப்பனப் பணி சோதனை ரீதியில் மேற்கொள்ளப்பட்டது.  பின்னர்,  வணிகரீதியில் அவற்றை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.  தங்கம் இருப்பதாக அறிந்து அதனை கண்டுபிடிக்க ஆய்வுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.  வேறு கனிமங்கள் இல்லை.

 நீள அகலம்

 அந்தமான் நிக்கோபார் தீவுகள் வடக்கில் லாண்ட்  ஃபால்  தீவிலிருந்து  தெற்கு இந்திரா முனை வரை 700 கிலோமீட்டர் நீளம் கொண்டவை.  தீவுகளின்   அகலம் ஒன்றுபோல் இல்லை எனினும் சராசரி அகலம் இருபது கிலோ மீட்டர் என கணக்கிடப்பட்டுள்ளது.  இவை மிகவும் குறுகலான தீவுகள்.

 தாவரம்

 இயற்கை தாவர மிக்கது,  பசு மரக்காடுகள் 92 விழுக்காடு. கழிமுகத்தில்  மாங்குரோவ் மரங்கள்.  110 வகையான வண்ண மலர்கள்,  நூற்றுக்கணக்கான மூலிகைகள் நிறைந்துள்ளன.  150-வகையான தாவரங்களும் விலங்குகளும் அழிவின் விழிம்பில் நின்று கொண்டு இருக்கின்றன.

 கடலடி உயிரினங்கள்

  தீவுகளின் ஓரங்களில் ஆழமான கடல்;  அதில் 1200 வகை மீன் இனம்;  350 வகை கடல் தாவரங்கள், 1000 வகையான சங்குகள்,  சிப்பிகள்,  கிளிஞ்சல்கள் மற்றும் திமிங்கலம்,  டால்ஃபின்,  கடற்பசு போன்றவற்றின் அற்புதக் காட்சிகள் வண்ண மீன்கள்,  பவளப்பாறைகள் நிறைந்த பகுதி.  இது மகாத்மா காந்தி கடலடி தேசிய பூங்கா என அறிவிக்கப்பட்டுள்ளது.

 பறவை

  இத்தீவு பறவைகளின் சொர்க்கம் எனலாம்.  இங்கு 246 வகை  பறவைகளில் 39  வகை அழிவின் விளிம்பில் இருக்கின்றன.  மெகா பேர்டு,  ஹாார்ன்பிள்,  அந்தமான் டீல்,  நிக்கோபார் புறா என பறவைகள் நம் நினைவுகளோடு பறந்து கொண்டே இருக்கும்.

 சுற்றுலா காலம்

 ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மே மாதம் வரை.

 எப்படி வருவது

 கப்பல்,  விமானம் எதிரி  வரலாம்.  சென்னை, கொல்கத்தா,  விசாகப்பட்டினம் மூன்று  நகரங்களிலும் இருந்து கப்பலில் வரலாம்.  மாதந்தோறும் மூன்று முறை கப்பல்  பயணமாகும்.  ஆனால் விசாகப்பட்டினத்தில் இருந்து மாதத்தில் ஒருமுறைதான் கப்பல். 

 நுழைவு விதிமுறைகள்

 இந்தியர்கள் வருவதற்கு நுழைவு உரிமை தேவையில்லை.  எனினும் நிக்கோபார் தீவுகள் பழங்குடியினர் வாழ்கின்ற பகுதிகளுக்குச் செல்ல துணை ஆணையரிடம் நுழைவு உரிமை பெறவேண்டும்.  ஆனால்,  அயல் நாட்டவர்  போர்ட் பிளேருக்கு  வந்ததும் நுழைவு உரிமை அலுவலகத்தில் அனுமதி பெறவேண்டும்.  அயல்நாட்டவர் முப்பது நாட்கள் தங்கலாம்.  தேவைப்பட்டால் மேலும் 15 நாட்கள் அனுமதியை நீட்டிக்கலாம்.  டெல்லி கொல்கத்தா, மும்பை,  சென்னை விமான நிலையங்களில் அனுமதி பெறலாம்.

  தங்கும் அனுமதி

 பழங்குடியினர் வாழும் பகுதிகளில் இரவு நேரத்தில் சுற்றுலா பயணிகள் தங்க முடியாது.    தென் அந்தமான்,  நடு அந்தமான்,  சிறிய அந்தமான்,  நீல்தீவு, ஹேவ்லாக்  தீவு, நீளத் தீவு,  பாராடாங்,  வடவழி தீவு, டிக்லிப்பூர்,  மகாத்மா காந்தி தேசிய கடல் பூங்கா,  வண்டுர்  முதலிய இடங்களில் தங்குவதற்கு அனுமதி தேவை.  பாரன்  தீவில் பகலிலும் இறங்குவதற்கு அனுமதி தேவை.  எனினும், சிங்தீவு,  ராஸ் தீவு நற்கொண்டம் தீவு  இன்டர்வியூ தீவு சகோதரர் சகோதரி தீவுகள் முதலிய இடங்களில் பகலில்  தங்கலாம்.

 

அந்தமான் சுற்றுலா இடங்கள் Andaman Tourist Places in Tamil

 போர்ட் பிளேயரில் பார்க்க வேண்டிய இடங்கள் Port Blair Tourist Places in Tamil

தேசிய நினைவுச் சின்னம் செல்லுலார்  சிறைச்சாலை

 தேசிய நினைவுச் சின்னமாகத் திகழும் செல்லுலார்  சிறைச்சாலை1906 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.  விடுதலை போராட்ட  வீரர்களை தனிமைச் சிறையில் வைக்க தனி அறைகள் இருந்தன.  இச்சிரையில்  ஏழு பிரிவுகளும் அவை சந்திக்கும்  மை கோபுரமும் அமைந்திருந்தன.  இப்பொழுது மூன்று பிரிவுகள் மட்டுமே எஞ்சியுள்ளன.  தனித்தனிக் கீரைகளில் நீண்டு  நெடிந்து  வெல்லும் தாழ்வாரம் அதன் மாபெரும் தோற்றம்.  துருபிடித்து உதிர்ந்து கொண்டிருக்கும் சரித்திரக் கதை சொல்லும் சிறைக் கதவுகளும்  உண்டு.  விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை இன்றும் அறிய வாய்ப்பளிக்கிறது.  விடுதலையை விரும்பும் ஒவ்வொரு இந்தியருக்கும் திருத்தலமாக விளங்குகிறது.  இதில் ஒரு கலைக் கூடம்.  புகைப்பட வளாகம்,    ராஸ் தீவின் அறிய புகைப்படங்கள்  பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

 விடுதலைப் போராட்டத்தின் கதை ஒலி ஒளி காட்சியாக சித்தரிக்கப்படுகிறது.  இதர இந்தி மொழியில் மாலை 6 மணிக்கு ஆங்கில மொழியில் இரவு 7.15  மணிக்கும் கண்டுகளிக்கலாம்.

 மெரினா பூங்கா

 நேதாஜி விளையாட்டு அரங்கத்திற்கு எதிர்புறத்தில் அமைந்துள்ளது.  பகலில் கண்ணைக்கவரும்  வண்ணப்பூக்கள் இரவில் மனதை மயக்கும் ஒளிவிளக்குகள்;  இவற்றுடன் கவி தாகூர் நேதாஜி ஆகியோரின் உருவச்சிலைகள் விடுதலைப் போராட்டத்தின் நினைவுத்தூண் மற்றும் இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஏவுகணை முதலியவற்றைக் காணலாம்.  சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு  மையமும் உள்ளது.

 நீர் விளையாட்டு வளாகம்

 பழைய அபர்டீன்   படகு துறையின் அருகில் உள்ளது.  இந்து பாதுகாப்பு மிக்க விளையாட்டுகள்,  சாகச விளையாட்டுக்கள்,  நீர் சறுக்கல்,  இரட்டைக்  படகுகள்,  விரைவு படகு,  கண்ணாடி அடித்தளம் கொண்ட படகுகள் உள்ளன.  பவளப்பாறைகள் மூழ்கிக் கிடக்கும் கப்பல் முதலியவற்றையும் காணலாம்.  உப்புநீர் குளியலுக்கு ஏற்ற குளம்,  காலை,  மாலை  உலாவும்  வசதி, அறைகள்,  சிற்றுண்டிச் சாலை வசதிகளும் உள்ளன.

 அபர்டீன் போர் நினைவு சின்னம்

அந்தமான் நீர் விளையாட்டு வளாகத்திற்குள் அபர்டீன்  போர் நினைவுச்சின்னம் அமைந்துள்ளது. 1859  நம் மண்ணில் கால் வைத்த அந்நிய ஏகாதிபத்திய  வாதிகளான ஆங்கிலேயரை எதிர்த்து  அந்தமானியர்  போரிட்டனர்.  இது அபர்டீன்  போர் என சிறப்பிக்கப்படுகிறது.  இப்போரின் நினைவாக எழுப்பப்பட்ட காண வேண்டிய ஒன்று.

 நீர்வாழ் உயிர் காட்சியகம்

 மீன்வளத் துறைக்கு சொந்தமானது.  மெரினா  பூங்காவை ஒட்டி அமைந்துள்ளது.  நீர் தாவரங்கள் விலங்குகள்,  மீன்கள் முதலியவற்றை கண்ணாடி நீர் தொட்டிகளில் வைத்துள்ளனர்.  இந்திய கடல்,  வங்கக்கடல்,  பசிபிக் கடல் பகுதிகளில் வாழும் உயிரினங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

 காந்தி பூங்கா

 தில்தமன் என்ற ஏரிக்கரையில் எழில் கொஞ்சும் பூங்கா காந்தி பூங்கா.   போர்ட் பிளேர் வெற்றி மலை முருகன் கோவில் செல்லும் வழியில் அமைந்துள்ளது.  ஒரு காலத்தில் போர்ட் பிளேயர்  நகருக்கு நீ எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட தில்தமன்  குளம் இந்த பூங்காவுக்குள் உள்ளது.  ஜப்பானிய ஆலயத்தின் மாதிரி வடிவமும் காந்தியடிகள் சிலையும் வைக்கப்பட்டுள்ளன.  ஏரிக்கரையை சுற்றிலும் பூத்துக்குலுங்கும் பூந்தோட்டம் அமைக்கப்பட்டிருக்கின்றது. குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு  வசதிகள் வடக்கு விளையாட்டு வசதிகள் உள்ளன.

 மானுடவியல் அருங்காட்சியகம்

 அதுல் ஸ்மிருத்தி  சமிதிக்கு அருகில் உள்ளது.  கற்கால  மாந்தரின் வாழ்க்கையை சித்தரிக்கும் ஓர் அரிய காட்சியகம்.   இத்தீவுகளின்  ஆதிவாசிகள் பயன்படுத்திவரும்  கருவிகளும்  ஆயுதங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.  அறிய ஒளிப்படங்களும் ஓவியங்களும் உள்ளன.  ஆதிக்குடிகள் பற்றி அருமையான குறிப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

 சாமுந்திரிகா அருங்காட்சியகம்

 டெலானிப்பூர்  என்ற இடத்தில் அமைந்துள்ளது. அந்தமான் பீல் ஹவுஸ்   மாளிகைக்கு எதிர்ப்புறத்தில் உள்ளது.  கடல் வாழ் உயிரினங்கள் தாவரங்கள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது.  கிளிஞ்சில்கள்,   பவளப்பாறைகள் வண்ண மீன்கள்  காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

 இந்திய உயிரியல் ஆய்வு அருங்காட்சியகம்

  போர்ட் பிளேயரில்,  டெலினிப்பூர்   அந்தமான் டீல்ஹவுஸ் என்ற சுற்றுலாப்பயணிகள் மாளிகைக்கு மிக அருகில் உள்ளது.  இதில் ஓர் ஆய்வகமும் உள்ளது.  விதவிதமான கடற்பஞ்சு,  பவளங்கள் வண்ணத்துப்பூச்சிகள்,  பூரான்கள் பற்றிய ஆய்வு  நூலகமும் உள்ளது.  எல்லா பணி நாட்களிலும் பார்வையிடலாம்.

   வனத்துறை அருங்காட்சியகம்

அய்டோ  விலங்கு காட்சியகத்திற்கு அருகில் உள்ளது.  அந்தமான் காடுகளில்  நடைபெற்றுவந்த பணிகளை விளக்கும் மாதிரிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.  புகழ்பெற்ற  படாக்,  மார்பில்,  பியூமா,  கர்ஜன் போன்ற வெப்ப மண்டல காட்டு மரங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.  விடுமுறை நாட்கள் தவிர பிற நாட்களில் காணலாம்.

 குறு விலங்குகள் பூங்கா

அய்டோ தமிழ் பள்ளியை அடுத்துள்ளது.  தீவுகளின் அழியும் நிலையில் உள்ள பறவைகளும் விலங்குகளும் காக்கப்பட்டு வருகின்றன.  புள்ளிமான்,  முதலை,  மலைப்பாம்பு,   ஹார்ன்பில் பறவை முதலியவற்றைக் காணலாம்.  திங்கட்கிழமை தோறும் விடுமுறை.

அந்தமான் சுற்றுலா தளங்கள் Places to visit in Andaman in Tamil

சாத்தம் தீவு

   ஆர்க்கிபால்டு பிளேர் காலடி வைத்த  தீவு.  குடியேற்றத்திற்கு முகாம் இடப்பட்ட முதல் தீவு.  சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது.  போர்ட் பிளேரின் பழைய துறைமுகம்.  இன்று  அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இரண்டாவது பெரிய துறைமுகம்.  இரண்டாம் உலகப்  போரில் குண்டு வீச்சுக்கு   இலக்கான தீவு.  இந்தத் தீவை இணைப்பதற்கு முன்பு மரப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது.  இப்பொழுது சிமெண்ட் பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது.  ஆசியாவிலேயே மிகப்பெரிய மர ஆலை இங்குதான் அமைந்துள்ளது.  மிகவும் சுறுசுறுப்பான   படகுத்துறையும் உள்ளது.

 இராஸ் தீவு

 ஆங்கிலேயர்கள் காலத்தில்  அவர்களது மையச் செயலகம்  இருந்த தீவு. எல்லா வசதிகளும் கொண்டு விளங்கிய அற்புத நகரம். ஆனால் இன்று இடிபாடுகளுக்கு உள்ளன தலைமை ஆணையரின் வீடு,  அரசு மாளிகை,  திருச்சபை,  மருத்துவமனை, அச்சுக்கூடம்,  நடன கூடம்,  நீச்சல் குளம் பாடிவீடு,   எல்லீஸ் விளையாட்டுத்திடல்,  அங்காடி வளாகம் என அரை கிலோ மீட்டர் பரப்பளவில் அழிந்த நிலையில் காணப்படுகின்றன.  அந்தமானிய  இனத்தவருக்கு அமைக்கப்பட்ட அந்தமான் இல்லம் தரைமட்டமாகக்  கிடக்கின்றது.  ஜப்பானியர் காலத்தில் நேதாஜி இத்தீவின் அரசு மாளிகையில் தங்கியிருந்தார்.  இப்பொழுது கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ளது.  சாமுத்திரிகா கண்காட்சியகம் ஒன்று உள்ளது.  புதன்கிழமை தவிர பிற நாட்களில் இத்தீவை  காணலாம். பீனிிச்சசுபே  படகுத் துறையிலிருந்து பத்து நிமிட நேர படகு பயணத்தில் இத்தீவை அடையலாம்.

  வைப்பர் தீவு

  அய்டோ துறைமுகத்திற்கு  எதிர்புறம் அமைந்துள்ளது.  1789 இல் இத்தீவுக்கு வந்த ஆர்க்கி பால்ட் பிளேரின் கப்பல் வைப்பர் என்பதை நினைவு கூறும் வகையில் வைப்பர் தீவு என பெயரிடப்பட்டுள்ளது. பினிக்சுக் குடாவில் இருந்து நாள்தோறும் மாலை 3 மணிக்கு செல்லலாம்.  பெரிய குற்றங்கள் புரிந்தவர்களையும் குடியிருப்பு விதிமுறைகளை மீறி அவர்களையும் இத்தீவின் திறந்தவெளி  சிறையில் வைத்திருந்தனர்.  பட்டினி போராட்டம் நடத்திய நானிகோபால்,  நந்தலால்,  புலின் தாஸ்  போன்றோர் இத்தீவில் தண்டிக்கப்பட்டனர்.  இந்தியாவிலேயே மிகப்பெரிய தூக்குமேடை  இங்குதான் இருந்தது.  இந்திய கவர்னர் ஜெனரல் லார்டு  மேயோவை  கொன்ற  ஷேர் அலி  தூக்கிலிடப்பட்டது இத்தீவில் தான்.  பூரியை ஆண்ட பேரரசர்  சிங்தேவ் இத்தீவில்தான்  ஆயுள் தண்டனை அனுபவித்தார்.  ஆங்கிலேயர்கள் கால சிறைச்சாலை தூக்குமேடை முதலியவற்றை இன்றும் காணலாம்.  திறந்தவெளி  சிறைக்கைதிகளை ஒருவரோடு ஒருவரை பிணித்துப்போட்ட  ஜெயின் கேங்க் முறை இத்தீவில் தான் நடைமுறைப்படுத்தப்பட்டது.

 கார்பிஸ் கோவ்

  போர்ட் பிளேயரின் தெற்கில் சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மிக அழகிய கடற்கரை.  பட்டுப்போன்ற   மணலும் பசுந்    தென்னை  பூந்தென்றலும் துள்ளி வரும்  வெள்ளலைகளும்  மறக்க முடியாதவை.  கடலில் நீராடும் வசதி, துணிகள் மாற்றிக்கொள்ள தனி இடம் சாப்பாட்டுக்கடை தங்கும் வசதி அனைத்தும் உள்ளன.  கார்மெண்ட்ஸ் கடற்கரையில் எதிரில் உள்ள சின்னஞ்சிறிய தீவு பாம்பு தீவு.  ஆனால் பாம்புகள் இல்லை.   அந்தமானியர்  இல்லத்தின் பொறுப்பாளரான கார் வித் பாதிரியாரின் பெயரில் கார்பின் பாதிரியாரின் பெயரில் கார்பிஸ் கோவ் (முனை) என அழைக்கப்படுகின்றது.

 சிடியாடாப்பு

 சிடியா டாப்பு  பறவைகளின் தீவு என்று பெயர்.  போர்ட் பிளேயரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவு  தென் அந்தமான்   தீவின் தெற்குக்  கடைசியில் உள்ள  ஓரிடம்.  பசுமை   குன்றா மாங்குரோவ் காடுகள்ச   முண்டா பகார்டு  என்ற  சுற்றுலா மையம்,  கடற்கரை, பறவைகள் பாடும்  இனிய கீதம் முதலியன இவ்விடத்தின் தனிச்சிறப்பாகும்.  இத்தீவை ஆக்கிரமிக்க வந்த ஜப்பானியர் கால்வைத்த முதல் இடம்.

 மகாத்மா காந்தி தேசிய கடல் பூங்கா

  தென் அந்தமான்  வண்டூரில்  அமைந்துள்ளது.  திறந்தவெளி  கடல் கழிமுகங்கள்,  சிறிதும் பெரிதுமான 15 தீவுகள் முதலியன இப்பூங்காவில் அடங்கும்.  இதன் பரப்பளவு 281.5  சதுர கிலோமீட்டர்.  இது  போர்ட் பிளேயரிலிருந்து  29 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

 மாங்குரோவ் காடுகள்,  வெப்பமண்டல பசுமைமாறா காடுகள் அழகிய கடற்கரைகள் கவர்ச்சியூட்டும் பவளப் பாறைகள், பலவண்ண  கடல் மீன்கள் தாவரங்கள் நிறைந்துள்ள கவர்ச்சியூட்டும்  இடம்.

 இங்கிருந்து ஜோலிபோய்,  ரெட்ஸ்கின்  சுற்றுலா தீவுகளுக்கு செல்லலாம்.  கடலடிப் பவளப்பாறைகள்  மீன்கள் முதலியவற்றை பார்ப்பதற்கு கண்ணாடி அடித்தள  படகுகளில் பயணம் செய்யலாம்.  கடலுக்குள் மூழ்கியும்  நீந்தியும்  கூட இவற்றைக் காணலாம்.  இங்கு செல்வதற்கு சுற்றுலா ஏற்பாடுகள் உள்ளன.   கடற்பூங்காவிற்குள்  நுழைய கட்டணம் உண்டு.

சிங்  தீவு

  போர்ட் பிளேயரில்ருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  இத்தீவு பறவைகளின் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  வானளாவிய மரங்கள்,  பரவசமூட்டும் பவளப்பாறைகள் வடக்கு சிங் தீவையும்   சிங் தீவையும் இணைக்கும் எழில்மிகு மணல் மேடு என  இத்தீவின் சிறப்பை அடுக்கிக் கொண்டே போகலாம்.  கடலில் மூழ்கி கடற்தாவரங்கள் மற்றும் உயிரினங்களை காணும் வசதியும் உண்டு.

 கோலின் பூர்

   தென் அந்தமான்  திருர் கிராமத்திற்கு அருகில் உள்ளது.  போர்ட் பிளேயரில் இருந்து 36 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது  இங்குள்ள கடற்கரையின் அழகையும் கதிரவன் மறையும் காட்சியையும் காண்பதற்கு மக்கள் அடிக்கடி செல்கின்றனர்.

 சிப்பிகாட் பண்ணை

  அந்தமானில் முதன் முதலில் ஏற்படுத்தப்பட்ட வேளாண் பண்ணை.  போர்ட் பிளேயரில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.  இலவங்கம்,  ஏலக்காய்,  ஜாதிக்காய்,  மிளகு,   கறிப்பட்டை,  தேங்காய், பாக்கு போன்ற பணப்பயிர்கள்  வளர்த்து காட்டப்படுகின்றன.  ஆய்வுப் பணிகளும் நடைபெறுகின்றன. CARI   என்னும்  மத்திய வேளாண் ஆய்வு நிலையம் இதன் அருகில் உள்ளது.

  மவுண்ட் அரியட்

   தென் அந்தமானின் மிக உயர்ந்த மலை உயரம் 365 மீட்டர் போர்ட் பிளேயரில் இருந்து 55 கிலோமீட்டர் சாலை வழியாக சென்றால் இவ்விடத்தை அடையலாம்.  படகு மூலம் சென்றால் 15 கிலோமீட்டர்  கடந்ததும் இவ்விடம் சென்று அடைய முடியும்.  ஆங்கிலேயரின் ஆட்சியின் போது தலைமை ஆணையரின் கோடைக்கால அலுவலகம்  இயங்கியது அரியட் குன்றில்தான்.  இதனஅடிவாரத்தில் ஹோப்டவுன்  படகுத்துறை உள்ளது.  இம்மலை  முகட்டிலிருந்து சூரியன் மறையும் காட்சியை காண ஆயிரம் கண்கள் வேண்டும்.  அரியட் குன்று  தேசிய  பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ளது.  அரிய பறவைகள் விலங்குகள் வண்ணத்துப்பூச்சிகள் முதலியவற்றையும் காணலாம். 

 மது பன்

 அரியட் குன்றின் வடக்கில் உள்ளது.  போர்ட் பிளேயரில் இருந்து கடல்வழியாக 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  அழகு கடற்கரை அரிய பறவைகள் விலங்குகள்,  வண்ணத்துப்பூச்சிகள் மற்றும்  யானைகளை காணலாம்.

 நீல் தீவு

 அந்தமானின்  காய்கறி கூடை எனக் கூரத்தக்கது.  பசுமையான காடுகளும் வெண்மணல் கரையும் நெஞ்சைவிட்டு நீங்காதவை.  போரிலிருந்து போர்ட் பிளேயரில் இருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.  எங்கு  மொழியினரின் கிராமிய வாழ்க்கை இயற்கையோடு இணைந்து இருக்கின்றது.

 ஹேவ்லாக் தீவு

   போர்ட் பிளேரிலிருந்து  50 கிலோமீட்டர் நாள்தோறும் படகுகள் சென்று  வருகின்றன.  ராதா நகர்,  விஜயநகர் கடற்கரைகள் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கக்கூடிய மையங்களாக திகழ்கின்றன. 

 நடு அந்தமான்

 வட வழித் தீவு

 வட வழித் தீவு  தனிமையில் இனிமை காண வேண்டும் ஆனாலும் சரி துள்ளி விளையாடும் டால்பின் மீன்களை காண வேண்டுமானாலும் சரி ஏகாந்தமான சூரிய ஒளி  குளியலாடவேண்டுமானாலும் சரி ஏற்ற இடம் வடவழித்தீவு  போர்ட் பிளேயரில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  போர்ட் பெயரிலிருந்து நேர்வழி போக்கு வரவு இல்லை. நீளத்தீவு  அல்லது எராட்டாவிலிருந்து  தனியார் படகுகளை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு வெல்லலாம்.  இரவு தங்க வசதி இல்லை.

நீளதீவு

 போர்ட் பிளேயரில் இருந்து 82 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  வாரம் நான்கு நாள் படகுப் போக்குவரத்து உண்டு.  மாசற்ற கடற்கரை,  காய்த்துக் குலுங்கும் தென்னந்தோப்பு சித்தி அருகே உள்ளது.  நிளத்திலிருந்து லாலாஜி  குடா என்பதற்கு 15 நிமிடங்கள் ஆகும்.  இரவில் தங்குவதற்கு கூடாரங்கள் அமைத்துத் தரப்படுகிறது.

பாராடாங் தீவு 

  அந்தமான் இணைப்பு சாலையில் அமைந்த ஒரு முக்கிய தீவு.   தென் அந்தமானுக்கும் வட அந்தமானுக்கு பாலமாக  விளங்குகின்றது. போர்ட் பிளேயரில் இருந்து  சாலை மறியல் 100 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.  இத்தீவின் கழிமுகத்தில் மாங்குரோவ் காடுகள் இயற்கையின் அற்புத படைப்புகளில் ஒன்று.  எரிமலை தற்கும் சேறும் சகதியும் நிறைந்த குழம்பு அவ்வப்பொழுது வெளிப்படுவதை இத்தீவில் காணலாம்.

  இரங்கத்

 அந்தமான் நிக்கோபார் தீவுகளின் இரண்டாவது நகரம் என சொல்லலாம்.  போர்ட் பிளேயரில் இருந்து சாலை வழியில் இதன் தொலைவு 170 கிலோமீட்டர் கடல் வழியில் 90 கிலோமீட்டர்,  புகழ்பெற்ற கந்தன் மலை வேலாயுதசாமி கோயில் இங்கு தான் இருக்கின்றது.  இங்கிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கட்பெர்ட்   குடா கடல் ஆமைகளின் சரணாலயம் கரையில் வந்து முட்டையிடும்  ஆமைகள் இங்கு டிசம்பர் முதல் பிப்ரவரி வரை  முட்டையிடும் காலமாகும்.  இங்கு ஆம் குஞ்சு கடற்கரை பஞ்சவாடி நீர்வீழ்ச்சி எனப்  பொழுதுபோக்கு மையங்கள் பல உள்ளன.

 வட அந்தமானில்

 மாயாபந்தர்

 இயற்கை அழகுடன் கடற்கரை வசதிகள் நிறைந்த இடம்.   நடு அந்தமான்  தீவின்  வடக்கு கடைசியில் அமைந்துள்ளது.   போர்ட் பிளேயரில் இருந்து 242 கிலோமீட்டர் சாலை  வழியாகவோ 157 கிலோமீட்டர் கடல் வழியாகவோ  சென்றால்  மாயாபந்தரை அடையலாம்.  இங்குள்ள  அவிஸ் தீவு,  கர் மாடாங் கடற்கரை புகழ்பெற்றவை.  இங்கிருந்து  உப்பங்கழி முகம் வழியாக  சென்றாள் காலிகாட்  மற்றும்  டிக்லிபூரை  அடையலாம்.

டிக்லிப்பூர்

 வட அந்தமானின் தலைமையகம்,   சுற்றுச்சூழலோடு இயைந்த ஏற்ற சுற்றுலாவுக்கு ஏற்ற நாட்டுப்புற சூழல்.  போர்ட் பிளேயரில் இருந்து  சாலை மார்க்கமாக 290 கிலோமீட்டர்.  கடல்வழியாக 185 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.  கடல்மட்டத்திலிருந்து குமார் 732 மீட்டர் உயரமுள்ள சேடல்பிக்  சிகரம் உள்ளது.  கல்பாங் என்ற ஜீவநதி இங்கிருந்து உற்பத்தியாகிறது.   நெல்,  ஆரஞ்சு,  காய்கறி,  பயிறு வகை,  பருப்பு வகை,  வாழை,  கரும்பு முதலியன அமோகமாக விளைகின்றன.  இங்குள்ள காளிப்பூர்.   லமியா குடா  கடற்கரைகள் குறிப்பிடத்தக்கவை.  சந்தடி மிக்க நகர வாழ்க்கையில் இருந்து ஓய்வெடுக்க  சிறந்த ஊர்.  ஏரியல் குடாவின் துறைமுகமும் ஸ்மித்   தீவும் இங்குதான்  இருக்கின்றன.

 பாரன் தீவு

 உயிருள்ள எரிமலை தீவு.  200 ஆண்டுகள் உறங்கிய  எரிமலை.  1991இல் திடீரென குமரி கொண்டு வெடித்தது.  பின்னர்1994 - 95 இல் மீண்டும் .  இத்தீவின் சுற்றளவு 3 கிலோமீட்டர். இதன்  மையப்பகுதியில்  எரிமலை  குழம்பை கக்கும் தளை ஒன்று உள்ளது.  சுற்றுலா பயணிகள் இதில் இறங்க முடியாது.  படகுகளில் பயணித்த வாரே சுற்றிப்பார்க்கலாம்.  போட் பிளேரிலிருந்து  139 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

 சிறிய அந்தமான்

 ஹட்பே  தலைமையகம்.  போர்ட் பெயரிலிருந்து  120 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.  ஹட்கு டாவில் அமைந்துள்ள செயற்கைத் துறைமுகம் அதற்கு இணையாக விளங்கும் 1200 மீட்டர் நீளமுள்ள  அலைதடை (Break Water)  அணையும் புகழ் பெற்றவை.  1600 ஹெக்டேர் நிலப்பரப்பில் செம்பனை தோட்டம் உள்ளது.  அந்தமான் பழங்குடியில்  ஓர் இனமான ஓங்கே இனம்  இங்குள்ள துகாங்க்ரீக்  என்ற இடத்தில் அரசால் குடியமர்த்த பட்டுள்ளது.  துகாங்   எண்ணம் என்னும் கடற்பசு இங்கு வாழ்கின்றன.  நெல்,  கரும்பு,  வாழை,  காய்கறி விளைச்சலுக்கு பெயர் பெற்ற ஊர்களும் உள்ளன.  ஸ்ரீலங்கா தமிழர்களும் நிக்கோபாரிகளும் கிழக்கு பாகிஸ்தானியரும் சிறிய அந்தமான் தீவில் குடியேற்றப்பட்டுள்ளனர்.  இங்குள்ள யானை சவாரி புதிய அனுபவத்தைத் தரும், நீர்வீழ்ச்சிகளும் உள்ளன.

 நிக்கோபார் தீவுக்கூட்டங்கள்

 நிக்கோபார் மாவட்டத்தில் முக்கிய தீவுகள் 28.  பரப்பளவு 1841 சதுர கிலோமீட்டர்.  10 டிகிரி கால்வாய்  அந்தமானையும் நிக்கோபாரையும் இரு பிரிவுகளாகப்  பிரிக்கின்றது.  தென்னை  கமுகு,  வாழை முதலியன தாராளமாக வளர்கின்றன.  சிறிய நிக்கோபார் தீவில் வாடும் கருங்குரங்குகள் நண்டுகளை தின்கின்றன.  நிக்கோபார் புறா,  மெகாபோட்,  மலைப்பாம்புகள் முதலியவற்றையும் காணலாம்.   இத்தீவுக் கூட்டங்களில்  உலகின் அழகிய இயற்கை துறைமுகங்களில் ஒன்றான நன்கவுரி துறைமுகம் அமைந்துள்ளது.  இந்தியாவின் பெண் தோழியிடம் என்றழைக்கப்படும் இந்திரா முனையும் இத்தீவுக் கூட்டங்களில்  தான் உள்ளது.

  கார்நிகோபார்

  போர்ட் பிளேயரில் இருந்து 270 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள தீவு.  கப்பலில் 16  மணி நேரம் பயணம் செய்தால் இத்தீவை சென்று அடையலாம்.  கடல்மட்டத்திலிருந்து இரண்டு மீட்டர் உயரத்தில் தான் இத்தீவு அமைந்துள்ளது.  இது நிக்கோபார் மாவட்டத்தின் தலைமையகம்.  ஆயர் ஜான் ரிச்சர்ட்சன் என்பவரின் சொந்த ஊர் இத்தீவில் தான் உள்ளது.  செயற்கைத் துறைமுகம் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது.  தேன்கூடு போன்ற குடிசைகளை காணலாம்.

  கட்சால்  தீவு

 போர்ட் பிளேயரில் இருந்து 425 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.   கிழக்கு குடா,  மேற்குக் குடா, ஜுலா என்ற இடங்களில் அழகிய கடற்கரைகள் உள்ளன.   மில்டேரா  ஊரை சுற்றிலும் இறப்பர் மரங்கள் அடர்ந்த அரசுக்கு சொந்தமான ரப்பர்   தோட்டமும் இருக்கிறது.  ராணி  சங்கா வின் பிறப்பிடம் இதுதான்.   கிபி 2000  ஜனவரி முதல் நாளில் முதல் சூரிய உதயத்தை கண்டது கற்றால் தீவுதான் கட்சால் தீவுதான்.

 பெரிய நிக்கோபார்

 தெற்காசியாவின் முக்கியமான வணிக வழியில் அமைந்துள்ள தீவு.  கட்டுப்பாடற்ற துறைமுகமாக மாற்றப்பட இருந்து பாதுகாப்பு முக்கியத்துவம் கருதி முயற்சி கைவிடப்பட்டது.  போர்ட் பிளேயரில் இருந்து 540 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.  இங்கு  சோம்பென்  என்ற பூர்வீகக் குடியினர் வாழ்கின்றனர்.  வற்றாத ஜீவநதி  கலாத்தியா  இத்தீவில் ஓடுகிறது.  அந்தமான் தீவுகளின்  இரண்டாவது  தெற்கு முனை இதுதான் இன்று இந்தியாவின் தென்கோடியில் உள்ள இடம்.