சென்னை மாவட்டம் அல்லது சென்னை சுற்றுலா இடங்கள் Chennai in Tamil
சென்னை தமிழ்நாட்டின் தலைநகரம் மற்றும் இந்தியாவின் முக்கியமான நான்கு பெருநகரங்களில் ஒன்றாகும். சென்னை தென்னிந்தியா பண்பாட்டின் தலைநகரமாகவும் விளங்குகிறது. இதன் தனிச்சிறப்பாக கருதக்கூடிய திராவிட நாகரிகத்தின் தொட்டிலாக விளங்குகிறது. சென்னை தென்னக கட்டிடக்கலை, இசை, நாட்டியம், நாடகம், சிற்பக்கலை மற்றும் கனரக தொழில்களின் உற்பத்தி கேந்திரமாக திகழ்கிறது. சென்னை மாநகரத்தின் பரப்பளவு 174 சதுர கிலோமீட்டர் ஆகும்.
சென்னை வரலாறு Chennai History in Tamil
தமிழ்நாட்டின் தலைநகரமாக விளங்கும் சென்னை பண்டைய தொண்டை நாட்டின் ஒரு பகுதியாகும். இப்பகுதி தொண்டையர் என்ற திரையரின் கீழும், பின் பல்லவ மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. கிபி 9ஆம் நூற்றாண்டில் பல்லவர்களின் வீழ்ச்சியை அடுத்து, சென்னைப் பகுதிகள் தஞ்சைச் சோழர்களின் ஆட்சியில் வந்தனர். முதலாம் இராஜராஜ சோழன் காலத்தில் (கிபி 985 - 1016) தொண்டை மண்டலம் ஜெயம் கொண்ட சோழ மண்டலம் என அழைக்கப்பட்டது. பிற்கால சோழ மன்னர்கள் காலக் கல்வெட்டுகள், திருவெற்றியூர், திருவேற்காடு, திருவான்மியூர் முதலிய சென்னை நகர் பகுதிகளில் உள்ள பல கோயில்களில் உள்ளன.
கிபி 13 ஆம் நூற்றாண்டில் சோழர்களின் ஆதிக்கம் வீழ்ச்சியுறவே, சென்னை பகுதிகள் சம்புவராயர், மதுரை பாண்டிய மன்னர்கள் ஆட்சியில் வந்தன. கிபி 14ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சி ஏற்பட்டது. இதை எடுத்து விஜயநகர மன்னர் புக்கரின் மகன் குமார கம்பணன் தொண்டைமண்டல பகுதிகளை வென்றார் (கிபி 1361). இது முதல் சென்னை பகுதிகள் விஜயநகர அரசின் ஆட்சியின் கீழ் வந்தன.
சென்னை சுற்றுலா இடங்கள் Chennai Toruist Places in Tamil
அண்ணாநகர் கோபுரம் அல்லது தூபி
அண்ணாநகர் தூபி சென்னை பூங்காக்களில் உள்ள தூபிகளில் மிகப் பெரியது. அண்ணாநகர் பூங்காவில் உள்ள இதன் படிகட்டுகள் சுருள் வடிவில் அமைந்துள்ளன. இதன் மேலிருந்து சென்னை நகரத்தின் அழகை கண்டு ரசிக்கலாம். பார்வை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை.
பிர்லா கோளரங்கம்
பிர்லா கோளரங்கம் அரைக்கோள வடிவில் அமைந்துள்ளது. இது முழுவதும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது,. ஆகையால் இங்குள்ள தொலைநோக்கி மூலம் வானத்தில் நிகழ்கின்ற நிகழ்வுகளை தெளிவாக காட்டுகின்றது. அதுமட்டுமல்லாமல் வானவியல் நிகழ்வுகள் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் பாவனையாக இங்கு நிகழ்த்திக் காட்டப்படுகின்றது.
அமீர் மஹால்
அமீர் மஹால் ஆர்காட் நவாப் அரச பரம்பரைக்கு சொந்தமானது. இது 14 ஏக்கர் பரப்பளவில் இந்த மாளிகை கட்டப்பட்டுள்ளது. கடந்த 1798 ஆம் ஆண்டு கட்டப்பட்டு, 1870ல் அரச குடும்பத்தாரின் மாளிகை ஆயிற்று. இவ்விடத்தை பார்வையிட உரிய அனுமதி பெற்று வர வேண்டும். பார்வை நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. தொலைபேசி:044-28485861.
கன்னிமாரா பொது நூலகம்
கன்னிமாரா பொது நூலகம் தேசிய நூலகங்களில் ஒன்றாகும். இதில் ஏராளமான புத்தகங்களும், பருவ இதழ்களும், சேமிப்பில் உள்ளன. இதிலுள்ள நூற்றாண்டு விழா கட்டிடம் நூலகத்தின் மேலும் ஒரு சிறப்பாகும். இங்கு தொடுதிரை கணினி வசதி செய்து தரப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும். முகவரி: பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை - 600008. பார்வையாளர் நேரம்: காலை 9 மணி முதல் மாலை 7.30 மணி வரை. தொலைபேசி:044-28193751.
கூவம் ஆறு
கூவம் ஆறு தற்பொழுது துர்நாற்றத்திற்கு பிரபலமாக இருந்தாலும் முற்காலத்தில் திருவல்லிக்கேணி ஆறு என்று எல்லோராலும் சிறப்பாக அழைக்கப்பட்டு சுத்தமாக ஓடியது. கூவம் ஆற்றின் குறுக்கே ஏழு பலன்கள் கட்டப்பட்டுள்ளன. இது மெரினா கடற்கரையின் வடக்குப் பக்கத்தில் இது கடலோடு சங்கமிக்கிறது. முற்காலத்தில் இந்த ஆற்றின் சிறப்பை பற்றி பக்தி இலக்கியமான தேவாரம் குறிப்பிட்டுள்ளது.
எலியட்ஸ் கடற்கரை
சென்னையின் தெற்கு பகுதியில் அமைதியான இந்த கடற்கரை பயணிகளுக்கு ஓய்வும் உற்சாகமும் அளிக்கும் இடம். இதன் அருகே உள்ள இலட்சுமி கோயில் மற்றுமொரு சிறப்புவாய்ந்த இடமாகும். ஒரு கோபுரத்தின் கீழ், எட்டு வெவ்வேறு கோலத்தில் லட்சுமி இங்கு அருள் அளிக்கிறாள். புனித மாதா கோவில் போன்றும் எங்கு உள்ளது.
செயிண்ட் ஜார்ஜ் கோட்டை
தமிழகத்தில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட இந்தக் கோட்டை, சென்னை வரலாற்றின் ஒரு நினைவுச் சின்னமாக விளங்குகிறது. இதைச் சுற்றி அகழி ஒன்று உள்ளது. இது அரைவட்ட வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாநில சட்டசபை, தலைமைச் செயலகம், ராணுவ மற்றும் தொல்லியல் துறை அலுவலகங்கள் என்று பெரிய பரப்பளவில் இந்தக் கோட்டை வீற்றிருக்கிறது. பார்வை நேரம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை. தொலைபேசி 044-25665566.
கொடி மர மேடை
புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள இந்தக் கொடி மேடை இந்தியாவின் கொடி மேடைகளில் மிக உயரமானது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கொடி மேடை, காலத்தின் பல மாற்றங்களை கடந்து இப்பொழுதும் கம்பீரமாக நிற்கிறது. தினமும் காலையில் இந்த கொடிமரத்தில் கொடி ஏற்றப்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை மாநகரத்தின் மற்றுமொரு அடையாளமாக கருதப்படுவது சென்னை உயர்நீதிமன்றம். இது 1892 ஆம் ஆண்டு இந்திய - இஸ்லாமிய கட்டிட பாணியில் கட்டப்பட்டது. நமது நாட்டில் இரண்டாவது பெரிய நீதிமன்ற வளாகமாக இது கருதப்படுகிறது. பாரிமுனை அருகாமையில் இந்த நீதிமன்றம் அமைந்துள்ளது.
சென்னை பல்கலைக்கழகம்
சென்னை பல்கலைக்கழகம் 1857 தொடங்கப்பட்டது. இந்தியாவின் கல்வித்துறையில் இப்பொழுது ஒரு முன்னணி இடத்தை வகிக்கும் இந்த பல்கலைக்கழகம் 146 ஆண்டுகளுக்கு முன்பு லண்டன் பல்கலைக்கழகத்தை முன்மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்டது. மேலும் இப்பல்கலைக்கழகம் 1857-ஆம் ஆண்டு இந்திய சட்டவியல் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டது. இதில் சட்டம், மருத்துவம், அறிவியல், கலை பாடல்கள் ஆகிய நான்கு துறைகள் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றுள்ளன. முதல் ஆட்சிமன்ற குழு 1857- 58ல் நியமிக்கப்பட்டு சட்ட திட்டங்கள் வகுக்கப்பட்டன. அமைவிடம்: சேப்பாக்கம், அண்ணா நினைவகம், எதிரே சென்னை -600005. நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. தொலைபேசி: 044- 22351137.
கலாசேத்திரா
இந்திய பாரம்பரிய நாட்டியம் மற்றும் இசை கற்பிக்கும் ஆய்வு நிலையம். மறைந்த ருக்மணிதேவி அருண்டேல் அவர்களால் 1936ல் இக்கலைக்கோயில் உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டின் பரத நாட்டியம் மற்றும் இதர நாட்டிய வகைகளை இளம் கலைஞர்கள் கற்பதற்கு ஊக்கமளித்து இதன் மூலம் அவற்றை மீளுருவாக்கம் செய்யும் நோக்கத்துடன் திருமதி ருக்மணி தேவி இந்த நிலையத்தை துவக்கினார். மேலும் இங்கு பலவகை கலைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, பசுமையான சூழலில் பழங்கால குருகுல முறையில் கற்றுத்தரப்படுகிறது. அமைவிடம்: திருவான்மியூர் சென்னை - 600041. தொலைபேசி: 044-24521169.
கலங்கரை விளக்கம்
மெரினா கடற்கரையின் தெருக்கோடியில் இந்த உயரமான கலங்கரை விளக்கம் நிறுவப்பட்டுள்ளது. மாலை வேளைகளில் பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் இக் கலங்கரை விளக்கம் மெரினாவில் தங்க மணல் பரப்புக்குச் செங்குத்தான வாளிப்பு அழகை அள்ளி வழங்குகிறது. கடற்கரையின் வலதுபக்கத்தில் நவீன நீச்சல் குளம் உள்ளது. மேலும் கடலோரத்தில், மீனவர்கள் கட்டுமரங்களில் மீன்பிடிக்க செல்வதை கண்டுகளிக்கலாம். இவற்றைப் பார்த்து உங்கள் மனபாரம் நீங்கி நம்பிக்கை பெறலாம். தொலைபேசி: 044-24985598.
மெரினா கடற்கரை
சென்னை என்றதும் நம் அனைவருக்கும் நினைவில் வருவது மெனி மெரினா கடற்கரை ஆகும். இது வங்காள விரிகுடா கடலில் இந்த நீண்ட கடற்கரை அமைந்துள்ளது. உலகத்தின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரினா 13 கிலோ மீட்டர் நீளத்துக்கு மிதந்து செல்கிறது. மாலை நேரத்தில் காலார நடந்து சென்றால் கடற்காற்று இதம் மெய்மறக்கச் செய்யும். தவிர இக்கரையில் தமிழ் அறிஞர்கள், விடுதலை வீரர்கள் மற்றும் காவிய மாந்தர்கள் போன்றோருக்கு அற்புத வேலைப்பாடுள்ள சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. உழைப்பாளர் சிலை கூட்டு உழைப்பு, ஊக்கம், உடல் உழைப்பின் அருமை ஆகியவற்றை எடுத்துக்காட்டுகிறது. இப்பகுதியில் கடலில் குளிப்பது ஏதுவானது அல்ல.
போர் வெற்றி நினைவுச் சின்னம்
மெரினா கடற்கரைச் சாலையில் இந்த நினைவுச்சின்னம் அமைந்துள்ளது. முதல் உலகப்போரில் நேச நாடுகள் அடைந்த வெற்றியையும், பின்னர் இரண்டாவது உலகப் போரில், நாட்டை காப்பதற்காக உயிர் நீத்த சென்னை ராஜ்தானியைச் சேர்ந்தவர்கள் இங்கு நினைவு கூறப்படுகிறார்கள்.
டவுட்டன் ஹால்
கல்லூரி முதல்வர்கள், பதிவாளர் மற்றும் பொருளாளர் அலுவலகங்கள் உள்ள இந்தக் கட்டடம் 200 ஆண்டுகள் பழமையானது.
நேப்பியர் பாலம்
மெரினா கடற்கரையில் இருந்து தலைமைச் செயலகம் செல்லும் வழியில் கூவம் ஆற்றைக் கடப்பதற்கான பாலம் அது. ஆங்கில ஆட்சியில் அப்போதைய ஆளுநர் நேப்பியர் அவர்களால் 1869 ஆம் ஆண்டு இந்த பாலம் கட்டப்பட்டது. முதலில் இது இரும்பு கிராதிகளால் ஆன ஒடுக்கமான பாலமாக தான் இருந்தது. பின்னர் 1943ஆம் ஆண்டு ஆர்தர் ஹோப் அவர்களால் அகலம் ஆக்கப்பட்டு காங்க்ரீட் இடப்பட்டு பொதுமக்கள் போக்குவரத்துக்கும் அனுமதிக்கப்பட்டது. ஆங்கிலேயரின் பொறியியல் ஆற்றலுக்கு அத்தாட்சியாக திகழ்கிறது. அதேபோன்று இன்னொரு பாலமும் அதன் அருகில் தமிழக அரசால் கட்டப்பட்டது.
வட்டார இருப்புப்பாதை காட்சிசாலை
இந்த அருங்காட்சி சாலை சென்னை ஐ.சி.எப்.பில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில், இயற்கைச் சூழலில் அமைந்துள்ளது. இதில் 2 உட் புறகாட்சிக்கூடம், திறந்தவெளி அரங்கமும் உள்ளன. உட்புறக் காட்சிக் கூடத்தில் ஏராளமான சிறு காட்சி அமைப்புகள், வகை மாதிரிகள், புகைப்படங்கள், அட்டவணைகள் ஆகியவை இந்திய ரயில்வே துறையின் வளர்ச்சியையும் மேம்பாட்டையும் எடுத்துக் காட்டுகின்றன. இளையவர்கள் முதியவர் வரை இந்த காட்சி சாலை உற்சாகப்படுத்தி ஆர்வம் தரக்கூடியது. இங்கு ஒரு சில பொம்மை ரயில்கள் மட்டுமல்ல 50 ஆண்டுகள் பழமையான ரயில் பெட்டிகளும் உள்ளன. அமைவிடம் நியூ ஆவடி ரோடு, ஐசிஎப் பஸ் நிறுத்தம் அருகில் சென்னை - 600038. பார்வை நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. தொலைபேசி: 044-26146267.
ராஜாஜி மண்டபம்
மாவீரன் திப்புசுல்தான் அவர்களை ஆங்கிலேயரை வெற்றி கொண்டதை கொண்டாடும் விதமாக இந்த விருந்தினர் மாளிகை கட்டப்பட்டது. உயர்ந்து செல்லும் இதன் அகலமான படிக்கட்டுகளை கடந்து போனா, இதழ் அகலமான மண்டபம் வரவேற்கும். மூதறிஞர் ராஜாஜி அவர்களின் பெயரில் அமைந்துள்ள இந்த கட்டிடம் பொது நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்தவர் மறைந்த மூதறிஞர் ராஜாஜி. அமைவிடம்: ஓமாந்தூரார் அரசினர் தோட்டம், இந்து நாளிதழ் கட்டிடம் எதிர்புறம், அண்ணா சாலை, சென்னை - 600002. தொலைபேசி: 044-25365635.
பிரம்மஞான சபை
அமெரிக்காவைச் சேர்ந்த ப்ளாவட்ஸ்கி சீமாட்டி மற்றும் கலோ, ஆல்காட் ஆகியவர்களால் நிறுவப்பட்டது. மதம் மற்றும் தத்துவம் குறித்த ஆய்வுகளுக்காக இவர்கள் இதை நிறுவினர். பின்னர் 1892 சென்னை அடையாற்றில், அடர்த்தியான அமைதியான இயற்கை சூழலுள்ள இடத்துக்கு இது மாற்றப்பட்டது. எல்லாவற்றையும்விட இந்த இடத்தில் உள்ள அடையாறு ஆலமரம் உலகப் புகழ் பெற்றது. பல நூற்றாண்டுகளைக் கண்ட இந்த ஆலமரம் இங்கு சீரும் சிறப்புமாக உயிர்ப்புடன் இருக்கிறது. இதனுடைய கிளைகள் விழுதுகள் 40,000 சதுர அடிகளை தழுவிச் செல்கின்றன. இங்குள்ள நூலகத்தில் அரிய புத்தகங்கள் பல பாதுகாக்கப்படுகின்றன. பார்வை நேரம்: காலை 8.30 முதல் 10 மணி வரை. அடுத்து 2 மணி முதல் 5 மணி வரை. ஞாயிறு விடுமுறை தொலைபேசி: 044-24912474.
ரிப்பன் மாளிகை
இம்மாளிகை இந்திய தன் ஆட்சியின் தந்தை என்று போற்றப்படுகிறார் ரிப்பன் பிரபுவின் பெயரால் அழைக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி மன்ற அதன் ஆட்சிக்குழு இம்மாளிகையில் இயங்குகின்றன. சென்னை மாநகர தந்தை இப்பொழுது மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அமைவிடம்L பூங்கா மின் இரயில்நிலையம் எதிர்ப்புறம், சென்னை - 600003 நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. தொலைபேசி: 044-25384510, 25384670.
சுற்றுலாத் துறை வளாகம்
எட்டு கிரவுண்ட் நிலத்தில் 9000 சதுர அடியில் சுற்றுலாத்துறைக்கான ஒரு வளாகத்தை ஓமாந்தூரார் அரசினர் தோட்டத்தில் தமிழக அரசு சுற்றுலாத்துறை உருவாக்கி உள்ளது. பல்வேறு மாநில அரசுகளின் சுற்றுலாத்துறை அலுவலகங்கள் இங்கு உள்ளன. இங்கு சுற்றுலா ஏற்பாடுகள், தகவல்கள் ஆகிய அனைத்தும், கிடைக்கும். அமைவிடம்: வாலாஜா சாலை, (கலைவாணர் அரங்கம் அருகில்) திருவல்லிக்கேணி, சென்னை - 600005 தொலைபேசி: 044-25388785.
டைடல் பூங்கா
அமெரிக்காவிலுள்ள சிலிக்கான் பள்ளத்தாக்கு தமிழ்நாட்டின் பதில் முகமே சென்னை டைடல் பூங்கா. நவீன வசதிகளுடன், பல பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின், அலுவலகங்கள் மையம் கொண்டது இந்த பூங்கா வளாகம். மேலும் இங்கு, டேபிள் டென்னிஸ், பில்லியர்ட்ஸ, டென்னிஸ் போன்ற விளையாட்டு வசதிகள், இருப்பதால் வால்வின் தருணங்கள் ஆர்வம் ஊட்டுவதாக இருக்கும். வங்கி வசதி சேவையை கனரா வங்கி நிறைவு செய்கிறது என்றால் ஹிக்கின் பாதாம்ஸ் புத்தகக் காட்சி சாலை 'புத்தக பிரியர்களுக்கு' விருந்தளிக்க கூடியது. அனுமதி பெற்று பார்வையிட வேண்டும். நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. தொலைபேசி: 044- 22540500/ 501/502.
விவேகானந்தர் இல்லம்
விவேகானந்தர் இல்லம் பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு முன்னர் தமிழ்நாட்டில் ஐஸ் பாளங்கள் தயாரிக்கப்படவில்லை. அமெரிக்காவிலிருந்து ஐஸ் பாளங்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இப்படி இறக்குமதியாகும் ஐஸ் பாலங்களை பாதுகாப்பதற்காக 1842 ஆம் ஆண்டு டுயுடர் ஐஸ் கம்பெனி ஒரு மாளிகையை கட்டியது. இந்த மாளிகையில் 1874 வரை வர்த்தகம் நடந்தது. அதன் பின்னர் இந்த மாளிகையை பிலகிரி ஐயங்கார் விலைக்கு வாங்கி கேஸ்டில் கெர்னான் என்று பெயரிட்டார். சுவாமி விவேகானந்தர் தனது புகழ்பெற்ற அமெரிக்க சிகாகோ உரையை நிகழ்த்திவிட்டு கல்கத்தா திரும்பும்போது, சென்னையில் பிப்ரவரி 6 முதல் 15 வரை இந்த வரலாற்றுப் புகழ் மிக்க மாளிகையில் தங்கினார். 1930ஆம் ஆண்டு இந்த மாளிகை அரசாங்கம் பொறுப்பை ஏற்றுக் கொண்டதோடு 1963 ஆம் ஆண்டு விவேகானந்தர் நூற்றாண்டு விழாவின் நினைவாக அவர் பெயரை இக்கட்டிடத்தில் சூட்டியது. பின்னர் 1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த மாநிலம் சீரமைக்கப்பட்டு, அப்போதைய தமிழக முதல்வர் திரு கருணாநிதி அவர்கள் 20, டிசம்பர் 1999 அன்று விவேகானந்தர் திரு உருவச் சிலையையும் திறந்து வைக்கப்பட்டது இந்த நினைவாலயத்தில் 3 வது களத்தில் மிகச் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட அமைதியின் உறைவிடமாக ஒரு தியான மண்டபம் உள்ளது. உண்மையில் இங்குதான் விவேகானந்தரும் அமர்ந்து தியானம் செய்தார். நினைவாலயத்தை பார்க்க வருகை செய்பவருக்கும் தியானம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. எழுமின், விழிமின் என்று இந்திய இளைஞருக்கு அறைகூவல் விடுத்தவர் விவேகானந்தர். பார்வை நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை மாலை 3 மணி முதல் 7 மணி வரை. புதன் விடுமுறை. தொலைபேசி: 044-28446188.
வள்ளுவர் கோட்டம்
சென்னையின் மற்றுமொரு கட்டடக்கலை அற்புதம். வள்ளுவப் பெருந்தகை திருக்குறள், மொத்தம் 133 அதிகாரங்கள், 1330 ஈரடி குறட்பாக்களை உள்ளடக்கியது. இந்த குறட்பாக்கள் அனைத்தும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திருவள்ளுவர் நினைவகம் தேர் வடிவில் அமைக்கப்பட்டு, அதன் அருகே 4000 பேர் அமரும் கொள்ளளவில் அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கு ஆசியாவிலேயே மிகப் பெரியது. கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ள தேர் திராவிட கட்டுமானக் கலையின் சிறப்பை எடுத்துரைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கட்டிடக்கலையின் அற்புதமான இக்கோயிலை அமைப்பதற்கு காரணமான கலைஞர் கருணாநிதியின் பெயர் இதன் திறப்பு விழா கல்வெட்டில் இல்லை ஒரே ஒரு குறை மட்டுமே உள்ளது. பார்வை நேரம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை.
தோட்டக்கலைத் தோட்டம்
அரிதான மரங்கள், மூலிகை செடிகள், மலர் செடிகள் ஆகியவற்றுடன் 22 ஏக்கருக்கு மேல் தோட்டம் நகரை அலங்கரிக்கிறது. சென்னை கதீடரல் சாலையில், செயின்ட் ஜார்ஜ் கதீட்ரலுக்கு அருகே இதோட உள்ளது. என் கவிதைகள், கன்றுகள், ஒட்டுச் செடி பதியங்கள் விலைக்கு தரப்படுகின்றன. ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் மலர் கண்காட்சி பார்வையாளர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும். பார்வை நேரம் காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணி வரை. மதியம் 1.30 மணி முதல் மாழை 5.30 மணி வரை. தொலைபேசி: 044-28111758.
நினைவகங்கள்
அம்பேத்கர் மணிமண்டபம்
டாக்டர் அம்பேத்கார் இந்திய அரசியல் சட்டத்தின் சிற்பி. ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட கோடிக்கணக்கான மக்களுக்காக போராடிய மாமேதை. இவர் ஏப்ரல் 14, 1891 பிறந்தார். தன் ஆயுட்காலம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடி, இந்திய குடியரசின் சட்ட அமைச்சராக பொறுப்பேற்று, இறுதியில் டிசம்பர் 5 1956 இயற்கை எய்தினார். இந்த அரிய தலைவரின் நினைவாக இந்த மணிமண்டபம் மந்தைவெளி பக்கத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தில் அம்பேத்கரின் முக்கிய வாழ்க்கை நிகழ்ச்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. பார்வை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5.30 மணிவரை. தொலைபேசி: 044-22351941.
அண்ணா சதுக்கம்
அறிஞர் அண்ணா, திராவிட இயக்கத்தின் தலைவர். பல நூல்களைப் படைத்தவர். மிகச் சிறந்த பேச்சாளர். தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தவர். எளிமைக்கு உதாரணம் ஆனவர். தமிழ் மக்கள் அவரை அண்ணா என்று பாசத்துடன் அழைத்தனர். அவருடைய முழுப்பெயர் சி.என். அண்ணாதுரை. கடந்த 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 இல் அண்ணா மறைந்தார். அண்ணா மறைந்தாலும் அவருடைய பொது பண்பாடு, அரசியல் நாகரீகம், மனிதநேயம், தமிழ் பற்று ஆகியவை என்றும் நிலைத்திருக்கும். இவருடைய நினைவிடம் மெரினா கடற்கரையின் வடபுலத்தில், எம் ஜி ஆர் நினைவிடத்திற்கு அடுத்துள்ளது. பார்வை நேரம்: காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை.
பக்தவச்சலம் நினைவகம்
திரு. பக்தவச்சலம் அவர்கள் கடந்த 2.10.63 முதல் 6.3.67 வரை தமிழக முதல்வராக இருந்தார். சிறந்த நிர்வாகி. எளிமையானவர். இவர் 13.2.87 இல் காலமானார். இவருக்கான நினைவகம் கிண்டியில் உள்ளது. பார்வை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை. தொலைபேசி: 044-26241547.
பாரதியார் நினைவு இல்லம்
மகாகவி பாரதி தமிழகத்தின் தனிப்பெருமை. ஔவை, வள்ளுவர், கம்பனுக்கு பிறகு தமிழில் கவிஞன் இல்லை என்ற பழி நீக்கிய தமிழ் காயின் அரும்பெரும் கவிஞன். தமிழ் கவிதையில் நவீனத்துவத்தை முதலில் கொண்டு வந்தவர். சிறந்த இதழாளர். இதழியல் துறையில் முதலில் கேலிச்சித்திரம் வரைந்தவர். அற்புதமான கட்டுரைகளை எழுதியவர். விடுதலைப் போராளி. ரஷ்யா, இத்தாலி, பெல்ஜியம் போன்ற உலகநாடுகளின் விடுதலைப் போராட்டத்தை கவிதை பாடி வரவேற்ற முதல் இந்திய கவிஞர். நெல்லை மாவட்டம் எட்டையபுரத்தில் 11-12-1882 அன்று தோன்றிய பாரதி தனது போர் குணத்தின் காரணமாக ஊர்விட்டு வாழ வேண்டியதாயிற்று. இப்படிப்பட்ட நிலையில் 39 ஆம் வயது வரை சென்னையில் தன் இறுதி ஆண்டுகளை கழித்து மறைந்தார். அவர் வாழ்ந்த இல்லம் இப்போது நினைவகம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த நினைவகத்தில் பாரதியார் காலத்தின் புகைப்படங்கள், அவருடைய கையெழுத்துப் பிரதிகள், நண்பர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. அமைவிடம்: 83, டி. பி . கோயில் தெரு, பார்த்தசாரதி கோயில் எதிர்ப்பக்கம், திருவல்லிக்கேணி, சென்னை - 600005. பார்வை நேரம்: காலை 9.45 முதல் மாலை 5.45 வரை. தொலைபேசி: 044-25382456.
காந்தி நினைவு மண்டபம்
' வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டில் எல்லாம்-' என்று காந்தியை பற்றி பாடுகிறார் மகாகவி பாரதி. உண்மையும் அதுதான். ஏனென்றால் பகைவனுக்கும் அருளும் நன்நெஞ்சு, இயேசுவுக்குப் பின் காந்திக்கு மட்டுமே வாய்த்தது. இவரைப்போல விடாப்பிடியான போராளியை உலகம் இதுவரை கண்டதில்லை. அகிம்சையை தவிர வேறு ஆயுதம் இவரிடம் கிடையாது. இதைக் கொண்டுதான் சூரியன் மறையாத பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வெற்றி கண்டார். ஆப்பிரிக்க விடுதலைக்கு வித்திட்டார். அறப்போராட்டம் என்றாள் அது காந்தியின் போராட்டம் இந்தியா என்றால் அது காந்தியின் தேசம். இப்படித்தான் கூறுகிறார்கள் மேலைநாட்டு அறிஞர்கள். இவரை தேசபிதா கொண்டாடினர் பாரத மக்கள். விடுதலை பெற்ற முதல் ஆண்டிலேயே சில தோட்டாக்கள் பழி வாங்கின. இவரது நினைவு மண்டபம் கிண்டியில் உள்ளது. பார்வை நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. தொலைபேசி: 044-22351941.
எம். ஜி. ஆர். நினைவு இல்லம்
உலகப் புகழ்பெற்ற நடிகரான எம்ஜிஆர் அவர்கள். 30.6.77 முதல் 17.2.80, 9.6.80 முதல் 24.12.87 வரை தமிழக முதலமைச்சராக பதவி வகித்தார். இவர் தனது பெரும்பாலான நேரத்தை இந்த இல்லத்தில் கழித்தார். இந்த இல்லம் தற்பொழுது எம்ஜிஆர் நினைவு இல்லம் ஆக்கப்பட்டுள்ளது. அமைவிடம்: 27, ஆற்காடு தெரு, தியாகராய நகர், சென்னை - 17. பார்வை நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை. தொலைபேசி: 044-26530279.
காமராஜர் நினைவகம்
தென்னகத்தின் காந்தி, கர்மவீரர் என்று பலவாறு போற்றப்பட்டார். இவர் தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த ஒன்பது ஆண்டுகாலம் தான் தமிழகத்தின் பொற்காலம் என்று வர்ணிக்கப்படுகிறது. படிக்காத மேதை என்று பாராட்டப்பட்ட காமராஜர் சிறிது காலம் அகில இந்திய காங்கிரசின் தலைவராக பணியாற்றினார். தேசத்தின் சோதனையான கட்டத்தில் எல்லாம், காமராஜர் தலையிட்டு, சிக்கலுக்கு தீர்வு கண்டார். எல்லாவற்றுக்கும் மேலாக இலவசக் கல்வி, பள்ளி குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு, சேரி உட்பட அனைத்து கிராமங்களுக்கும் மின் விளக்கு ஆகியவற்றை எந்த வித ஆர்ப்பாட்டமும் இன்றி நடைமுறைப்படுத்தி காட்டினார். குழந்தைகளின் கல்விக்கண் திறந்தவர். இவர் மரணம் 2.10.1975 அன்று நிகழ்ந்தது நினைவு மண்டபம் கிண்டியில் உள்ளது. பார்வை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை. தொலைபேசி என்: 044-24349040.
காமராஜர் நினைவகம்
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் குமாரசாமி மற்றும் சிவகாமி அம்மைக்கு மகனாக 15.7.1903 ல் விருதுநகரில் பிறந்தார். இவர் 2.10.75 ஆம் ஆண்டு இயற்கை எய்துவது வரை இந்த இல்லத்தில் மிக எளிமையாக வாழ்ந்தார். இவர் வாழ்ந்ததும் மறைந்ததும் இந்த இல்லத்தில் தான். அமைவிடம்: திருமலைப்பிள்ளை சாலை, தியாகராஜநகர், வள்ளுவர் கோட்டம் பக்கம் சென்னை - 600017.
எம்ஜிஆர் நினைவிடம்
மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்தை ஒட்டி இது அமைந்துள்ளது. எம்ஜிஆர் அவர்கள் 24 டிசம்பர் 87 அன்று மறைந்தார். பார்வை நேரம்: காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை.
மொழிப்போர் தியாகிகள் மண்டபம்
தமிழகத்தில் இந்தித் திணிப்புக்கு எதிராக போராடிய தமிழ் போராளிகளின் தியாகத்தை நினைவு கொள்வதற்காக இந்த மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. தியாகிகளில் குறிப்பிடத்தக்கவர்கள் திருச்சி சின்னசாமி, கோடம்பாக்கம் சிவலிங்கம், விருகம்பாக்கம் அரங்கநாதன், கீரனூர் முத்து, சிதம்பரம் ராஜேந்திரன், விராலிமலை சண்முகம், தாளமுத்து நடராசன் மற்றும் பலர். அமைவிடம்: காந்தி மண்டப வளாகம், கிண்டி சென்னை - 600032. பார்வை நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. தொலைபேசி: 044-22351941.
ராஜாஜி நினைவகம்
' அரசியல் சாணக்கியன்' என்று பாராட்டப்பட்ட சிறந்த ராஜதந்திரி, விடுதலை அடைந்த இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி வகித்தவர். இதற்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்தவர். இவருக்கான நினைவுச்சின்ன ஹிந்தியில் உள்ளது. பார்வை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5.30 வரை தொலைபேசி: 044-22351941.
பெரியார் நினைவிடம்
பகுத்தறிவு பகலவன். தமிழ்நாட்டின் சாக்ரடீஸ். இவர் கால் வைத்த இடங்கள் எல்லாம் மூடநம்பிக்கைகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு பகுத்தறிவு பரப்பப்பட்டது. வருணாசிரம அதர்மத்தை வெட்டி வீசிய அறிவென்னும் வாள். கார்த்திக்கு எளியர். கடுமை கண்டு கலங்காதவர். தமிழகத்தின் கலங்கரை விளக்கம். 17.9.1879 இல் வேங்கடப்ப நாயக்கருக்கும் சின்னத்தாயி அமைதிக்கும் மகனாக உதித்தவர். பின்னர் சுயமரியாதை இயக்கம் கண்டு பகுத்தறிவுப் புயலாக, பெண் விடுதலைப் போராளியாக, பதவியையும், அதிகாரத்தையும் அருகே அண்டவிடாமல், வாழ்ந்து 24.12.73 அன்று இயற்கை எய்தினார். இவருடைய திராவிட கழக இடத்திலேயே இவருக்கு நினைவகம் இருக்கிறது. இங்கு அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. அமைவிடம்: ஈ.வி.கே சம்பத் சாலை, வேப்பேரி சென்னை - 600007. பார்வை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை. தொலைபேசி: 044-26618163.
தியாகிகள் மணிமண்டபம்
இந்திய விடுதலைப் போரைக் கண்ணீர்விட்டு வளர்க்காமல் செந்நீர் விட்டு வளர்த்தவர்கள் நமது நாட்டு விடுதலைப் போராளிகள். இத்தியாகிகள் தங்கள் பொன்னான எதிர்காலத்தை, இன்று நமக்காக, விடுதலை வேள்வி தீயில் ஆகுதி செய்தார்கள். விடியலின் மக்களான அவர்களை கௌரவிப்பது நமது தேசிய கடமை. ஆகவே, தியாகிகளை நினைவு கூறும் விதமாக ஒரு மணிமண்டபம் அமைக்கப்பட்டது. அமைவிடம்: சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, கிண்டி, சென்னை - 600032. பார்வை நேரம்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை. தொலைபேசி எண்: 044-22351941.
உயிரியல் பூங்கா
கிண்டி தேசியப் பூங்கா
உலகிலேயே, தனது எல்லைக்குள் உயிரியல் பூங்கா உள்ள ஒரே நகரம் என்ற பெருமை சென்னைக்கு மட்டும் தான் உண்டு. நூற்றுக்கணக்கான ஏக்கரில் காட்டு சூழலில் அழிவின் விளிம்பில் உள்ள புள்ளிமான், வெண் மான், இங்கு புனுகுப் பூனை மற்றும் மீன்கொத்தி, குயில் போன்ற அரிய பறவை இனங்களும் இங்கு பேணப்படுகின்றன. இதை குழந்தைகள் பூங்கா என்றும் கூறுவார்கள். கட்டாயம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய இடம். அமைவிடம்ச கிண்டி சென்னை - 600032. பார்வை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை. தொலைபேசி: 044-22353623.
பாம்பு பண்ணை
இங்கு மலைப்பாம்பு, ராஜநாகம், கட்டுவிரியன், கண்ணாடி விரியன் இவைத்தவிர ஆமை, கடலாமை போன்ற இதர ஊர்வன வகைகளும் உங்களை கண்ணாடி கூண்டிலிருந்து வரவேற்கும். உங்கள் கண் முன்னால் நல்லபாம்பு இடமிருந்து நஞ்சை எடுப்பதை நேரடியாக காணலாம். பாம்புகளின் மர்மமான குணாதிசயங்களை விளக்குவார்கள். ரோமுலஸ் வைடேகர் என்ற அயல்நாட்டவர் இப்பணியை உருவாக்கினார். அமைவிடம்: அடையாறு குழந்தைகள் பூங்காவிற்கு அடுத்து உள்ளது. பார்வை நேரம்: காலை 9 மணி முதல் மாலை5.30 மணி வரை தொலைபேசி: 044-22353623.
நினைவுச் சின்னங்கள்
காந்தி கண்ட கனவின் நினைவு
இது 1919 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் நாள். இந்த நாளில்தான் ரவுலட் சட்டம் என்ற கொடுஞ் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அன்று இரவு திலகர் பவன் இருந்த இடத்தில் தங்கியிருந்த மகாத்மா காந்தி, விஷயத்தை அறிந்ததும் தூக்கம் இன்றி தவித்தார். இச்சம்பவம் பற்றி காந்தி " அன்று இரவு நான் தூக்கமும் விழிப்புமாக அவஸ்தைப்பட்டுக் கொண்டு இருந்தேன். திடீரென்று ஒரு யோசனை வெடித்தது. அதுவும் ஒரு கனவில் முழு நாட்டையும் ஒத்துழையாமையில் ஈடுபடும்படி அறைகூவல் விடவேண்டும். ஒட்டுமொத்த தேசமும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை, நகரம் முதல் கிராமம் வரை.... அனைவரும்... அனைத்தும், இது ஒரு அற்புதமான அனுபவம்". காந்தி கனவுகண்ட மாளிகை இப்போது இல்லை. அதற்குப் பதிலாக ஒரு நினைவுச் சின்னம் நிற்கிறது. ஏகாதிபத்தியத்தை புரட்டிப்போட்ட கனவல்லவா? அமைவிடம்: சோலா ஹோட்டல் முன்பு, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை.
வெள்ளையனே வெளியேறு இயக்க நினைவுச்சின்னம்
கொயட் இண்டியா மூமென்ட் என்ற வெள்ளையனே வெளியேறு இயக்கம் கண்டு 50 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் நினைவுச்சின்னம். இந்த நினைவுச் சின்னத்தை 02.10.93 அன்று அப்போதைய தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் திறந்து வைத்தார். அமைவிடம்: காந்தி மண்டபம் அருகாமை அடையாறு சென்னை - 600020.
இந்தியா குடியரசாக 50 ஆண்டு நிறைவுபெற்ற நினைவுத்தூண்
இந்திய நாடு குடியரசாக மலர்ந்து 50 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக அமைக்கப்பட்ட நினைவுத்தூண். இந்த நினைவுத் தூணை 25.01.2001 அன்று அப்போதைய தமிழக முதல்வர் திரு. மு. கருணாநிதி அவர்கள் திறந்து வைத்தார். அமைவிடம்: மெரினா கடற்கரைச் சாலையில், கலங்கரை விளக்கம் அருகில், மயிலாப்பூர், சென்னை - 600004.
குதிரைப்பந்தய தடை நினைவுச்சின்னம்
குதிரை பந்தயம் ஒருவகை சூதாட்டம் என்பது மட்டுமல்ல, பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக ஏழைகளை மேலும் ஏழைகள் ஆக்கும் ஒருவகை விளையாட்டு. தமிழக அரசு 1974 ஆம் ஆண்டு இந்த சூதாட்டத்திற்கு தடைவிதித்தது. வரலாற்று சிறப்புமிக்க இந்த முடிவு எடுத்ததன் நினைவாக 16.8.74 அன்று குதிரையை தடுத்து நிறுத்தும் இந்த கம்பீர சிலை நிறுவப்பட்டது. அமைவிடம்: அண்ணா சாலை மேம்பாலம்.
அரசு கவின் கலை கல்லூரி
இதுவே நம்நாட்டில் முதன்முதலாக நிறுவப்பட்ட கவின் கலைக்கல்லூரி. ஆங்கிலேயர் டாக்டர் அலெக்சாண்டர் ஹண்டர் அவர்களால் கிபி 1850 ஆம் ஆண்டு இக்கல்லூரி நிறுவப்பட்டது. பின்னர் 1915 - ல் புகழ்பெற்ற இந்திய சிற்பியான தேபி பிரசாத் ராய் சவுத்ரி அவர்கள் இக்கல்லூரியின் முதல்வராக பொறுப்பேற்றார். இவரே இப் பொறுப்புக்கு வந்த முதல் இந்தியர் என்பதுடன் காலனிய காலத்திலும் சுதந்திரம் பெற்ற பிறகும் முதல்வராக பணியாற்றியவர் என்ற பெருமையும் உடையவர். இவர் காலத்தில், இக்கல்லூரி தேசிய அளவில் புகழ்பெற்றது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை மற்றும் காந்திசிலை ஆகியவை ராய் சௌத்ரி இன்றுவரை நினைவுகூற வைக்கின்றன. சந்தான ராஜ், சந்ரு, முனுசாமி, தனபால் அல்போன்சா, ஆதிமூலம், ஆர். பி. பாஸ்கர் போன்ற தமிழகத்தின் புகழ்பெற்ற கலைஞர்களை உருவாக்கிய பழமையான கல்லூரி. இக்கல்லூரியில் தான் இந்தியாவிலேயே முதன்முதலாக, புகைப்படக்கலை வகுப்பு துவங்கப்பட்டது. அமைவிடம் எண் 31, தந்தை பெரியார் ஈ வி ஆர் நெடுஞ்சாலை, பெரியமேடு, சென்னை - 3.
லலிதா அகடமி
நம் நாட்டின் கலைகளை வளர்ப்பதற்காக, மத்திய அரசின் பண்பாட்டு அமைச்சகத்தால் கடந்த 1978-ல் அமைக்கப்பட்ட லலிதா அகாடமி ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். இதன் பிராந்திய மையம் சென்னையில் உள்ளது. சமகாலக் கலையை வளர்க்கும் விதமாக கலைஞர்களுக்கு காட்சிக்கூடம், கலை பட்டறை, நிகழ்ச்சிநிரல் போன்ற வசதிகளை செய்து தருவது இந்த அகாடமியின் நோக்கம். இங்கு கல், உலோகம், மரம் மற்றும் சிற்பச் சிலைகள், ஓவியம் வரைகலை, கலப்பு ஊடகப் படைப்புகள் போன்றவையும் சேமிக்கப்படுகின்றன. ஒரு கலை நூலகமும் உள்ளது. சமகால இந்தியக் கலை பற்றி வெளியீடுகள் இங்கு கிடைக்கும். வரைகலை, செராமிக், சிற்பம் ஆகியவற்றுக்கான பயிற்சிப்பட்டறை, ஓவிய பயிற்சி கூடம் போன்ற வசதிகள், குறைந்த கட்டணத்தில் கலை மாணவர்களுக்கு வழங்கப்படுவதுடன், சிறப்புரை நிகழ்வுகளும் இங்கு நடைபெறும்.
இவர்கள் தவிர கலை மற்றும் கைவினைக் கண்காட்சி நடத்துவதற்கு வசதியாக காட்சிக்கூடங்கள் வாடகைக்கு கிடைக்கும். பார்வை நேரம்: காலை 9.30 முதல் மாலை 6 மணி வரை. அமைவிடம்: ரீஜினல் சென்டர் 4 கிரீன் சாலை, சென்னை - 6 தொலைபேசி: 044-28291692, 28290804.
அருங்காட்சியகங்கள்
அரசு அருங்காட்சியகம்
இது கிபி 1789 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட ஆங்கிலேய ஆட்சியில் உருவாக்கப்பட்டது. பாந்தியன் காம்ப்ளக்ஸ் என்று பெயர். இப்போது இந்த வளாகத்தில் அரசு அருங்காட்சியகம், கன்னிமாரா பொது நூலகம் மற்றும் தேசிய கலைக்கூடம் ஆகியவை உள்ளன. அரசு அருங்காட்சியகத்தில் நம் சம காலத்திய கலைப்பொருட்கள் முதல், வரலாற்றுக்கு முற்பட்ட கண்டுபிடிப்புகள் வரை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பல வரலாற்று காலகட்டங்களை சேர்ந்த கற்சிலைகள், வெண்கல சிலைகள் இடம்பெற்றுள்ளன. இவைகளின் கலை நேர்த்தி சொல்லிமாலாது. , உயிரியல் இனவியல், புவியியல் ஆகிய கல்வித்துறை சார்ந்த அத்தாட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தது போல் உலகப் புகழ்பெற்ற அமராவதி மென்கல் புடைப்பு சிற்பங்கள் இங்குதான் உள்ளன. நம் நாட்டில் வேறு எங்கும் கிடையாது. இதைவிட்டால் லண்டன் அருங்காட்சியகத்தில் தான் இதன் மற்றொரு பகுதி உள்ளது. இது சிற்பத் தொகுப்பில் புத்த ஜாதகக் கதைகளின் முக்கியக் கட்டடங்கள் சித்திரக்கதை செதுக்கப்பட்டுள்ளன. அமைவிடம். 486, பாந்தியன் சாலை, சென்னை - 600008. நேரம்; காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. விடுமுறை: வெள்ளிக்கிழமை. தொலைபேசி: 044-28193238, 28193778.
கோட்டை அருங்காட்சியகம்
தலைமைச் செயலகத்தின் வடக்குப் பக்கத்தில் இந்த அருங்காட்சியகம் உள்ளது. ஒரு காலத்தில் கோட்டையில் பணியாற்றும் அதிகாரிகளின் அலுவலகமாக இது இருந்தது. பின்னர் வங்கியாக மாறியது. இந்த வங்கியே மெட்ராஸ் பேங்கின் முன்னோடி வங்கி. மெட்ராஸ் வங்கி பின்னர் பம்பாய் மற்றும் பெங்கால் வங்கியுடன் ஐக்கியமாகி, இம்பீரியல் மேன் என்ற பெயர் சூடி இப்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா என்ற பெயரைப் பெற்றுள்ளது. இதன் மாடியில் உள்ள நீண்டகால பொதுமக்களுக்கான பட்டுவாடா அறையாக முன்னர் இருந்தது. பின்னர் கிபி 1796ல் மேற்கூரையில் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. இதுதான் சென்னையின் முதல் கலங்கரை விளக்கம். அடுத்து 1948இல் இது அருங்காட்சியகமாக ஆனது. இந்த அருங்காட்சியகத்தில் சென்னையை உருவாக்கிய மகத்தான நபர்களின் அசல் கையெழுத்து ஆவணங்கள் பாதுகாக்கப்படுகின்றன. பழங்கால நாணயங்கள், வெள்ளிச் சாமான்கள், சீருடைகள், மூலப்படிகள், செதுக்கு வேலைப்பாடுகள் மற்றும் ஆரம்பகால சென்னையின் கச்சாத்து பொருட்கள் போன்ற அரிதான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பார்வை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை. வெள்ளி விடுமுறை. அமைவிடம்: காமராஜர் சாலை, செயின்ட் ஜார்ஜ் கோட்டை, சென்னை - 600009. தொலைபேசி: 044 - 25670276.
தேசிய கலைக்கூடம்
இந்தோ இஸ்லாமிய கட்டிடக்கலையின் சிறப்பு எடுத்துக்காட்டு இது. கட்டடம் முழுவதும் சிவப்பு மணற்கல்லால் கட்டப்பட்டது. இதன் உள்ளே உள்ள கலைப்படைப்புகள் மட்டுமல்லாமல் இக்கட்டடமே கலைப் புதையல்கள் தான். மேலும் இங்கு 16 மட்டும் பதினெட்டாம் நூற்றாண்டு கால மொகலாய ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றோடு 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தக்காண ஓவியங்கள், வெண்கலக் கலைப்பொருட்கள் மற்றும் 10, 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கைவினைப் பொருட்களோடு பல்வேறு காலகட்டங்களை சேர்ந்த கைவினைப் பொருட்களும் இங்குள்ளன. படைப்புக் கடவுளான பிரம்மாவுக்கு பொதுவாக கோயிலோ, சிலைகளோ இல்லை. இங்கு பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் ஒரு சிற்பம் பிரம்மாவுக்கு உள்ளது. கட்டாயம் பார்க்க வேண்டிய சிலை. அமைவிடம்ச 486, பாந்தியன் சாலை, சென்னை - 600008. பார்வை நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை. வெள்ளி விடுமுறை. தொலைபேசி: 044-28193238, 28193778.
தலைமைச் செயலகம்
புனித ஜார்ஜ் கோட்டை தமிழக அரசு தலைமைச் செயலகம் உள்ள இடம். வந்த ஆங்கிலேயர்களால் இந்தக் கோட்டை கட்டப்பட்டது. இப்போது சென்னை என்றும் இடையில் மதராஸ் என்றும் அழைக்கப்பட்ட இப் பட்டணம் கிபி 1630-ல், ஆங்கிலேயர் வரும்போது மதராசி என்று அழைக்கப்பட்டது. வர்த்தகத்துக்கு வந்த ஆங்கிலேயர் அதற்கான வர்த்தக வளாகம் கட்ட ஒரு இடம் வாங்க தீர்மானித்தனர். அதன்படி மதராசி இடமும் வாங்கப்பட்டு ஏப்ரல் 23 கிபி 1640 இல் கட்டடமும் கட்டிமுடிக்கப்பட்டது. இந்த நாள் ஜார்ஜ் அவர்களின் புனித நாளாகையால் அன்று முதல் செயின்ட் ஜார்ஜ் கோட்டை என்று அழைக்கப்படுகிறது.
வழிபாட்டுத் தலங்கள்
அஷ்டலட்சுமி கோயில்
இக்கோயிலில் லட்சுமி தேவி எட்டு முகங்களாக பக்தர்களுக்கு அருள் அளிக்கிறாள். கோயிலின் திருவிழா காலம் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மதங்களுக்கு இடையில் வரும் ' நவராத்திரி 9 நாள் விழா' மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். நகரின் அனைத்து பகுதியிலிருந்தும் பக்தர்கள் திரண்டு வருவார்கள். எலியட்ஸ் கடற்கரை ஓரம் இருப்பதால் கடற்காற்றுன் இதமும் கிடைக்கும். அமைவிடம் எலியட்ஸ் கடற்கரை சென்னை - 600090. பார்வை நேரம்: காலை 6.30 முதல் இரவு 9 மணி வரை. தொலைபேசி: 044-24911763.
ஐயப்பன் கோயில்
சென்னையில் முதன்முதலாக அமைக்கப்பட்ட ஐயப்பன் கோயில். இது மகாலிங்கபுரத்தில் உள்ளது. அமைவிடம்: 18, மாதவன் நாயர் தெரு, மகாலிங்கபுரம், நுங்கம்பாக்கம் சென்னை - 600034. பார்வை நேரம்: காலை 4 மணி முதல் 11 மணி வரை. மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை. தொலைபேசி: 044-28171197.
ஐயப்பன் கோயில் (இராஜா அண்ணாமலைபுரம்)
சபரி மலையில் கோயில் கொண்டுள்ள சுவாமி ஐயப்பன் தான் இங்கும் எழுந்தருளியுள்ளார். அங்கு உள்ள மூலக் கோயில் போலவே இங்கும் 18 படிகள் உள்ளன. சிறப்பு பூஜைகள் அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடைபெறும். ஏராளமான பக்தர்கள் இக்கோயிலை தரிசிக்கிறார்கள். அமைவிடம்: இராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 600028. பார்வை நேரம்: காலை ஆறு மணி முதல் 11 மணி வரை மாலை 5.30 முதல் இரவு 9 மணி வரை. தொலைபேசி: 044-26490013.
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்க மையம்
சுவாமி பக்திவேதாந்த பிரபுபாதா என்பவர் உருவாக்கிய பக்தி இயக்கம் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா. உலகம் முழுவதும் உள்ள இதன் பக்தர்களை இணைக்கும் மயமாக இது திகழ்கிறது. அமைவிடம்: 32, பர்கிட் சாலை, தி நகர் சென்னை - 6000017. பார்வை நேரம்: காலை 4.30 முதல் நண்பகல் 1 மணி வரை, மாலை 4 முதல் இரவு 8 மணி வரை.
காளி பாரி கோயில்
சென்னையில் உள்ள மிகச்சிறந்த ஆன்மீக பயிலகம் இது. காளி பாரி என்ற வங்காளச் சொல்லின் பொருள் காளி வீடு என்பதாகும். கொல்கத்தாவில் உள்ள தட்சினேஸ்வர் காளி கோயிலின் சாயிலில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு அமைதியான தியான மண்டபம் உள்ளது. அவ்வப்போது பஜனைகளும், ஆன்மீக சொற்பொழிவுகள் நிகழும். நவராத்திரி துர்க்கை பூஜை மற்றும் காளி பூசை வெகு சிறப்பாக இங்கு நடைபெறும். பார்வை நேரம்: காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை. மாலை 4 மணி முதல் இரவு 9 மணிவரை. அமைவிடம்: 32, உமாபதி தெரு, சென்னை - 600033. தொலைபேசி: 044-24837170.
காளிகாம்பாள் கோயில்
காளிகாம்பாள் இங்கு கோயில் கொண்டுள்ளாள். பராசக்தியின் இன்னொரு திரு உரு காளி. தீமையை அழித்து நன்மையை உருவாக்க அன்னை மகா சக்தி கொண்ட உக்கிர பொருள் பங்காளி. சக்தி காக்கிறாள் சஞ்சலம் இல்லை என்றான் பாரதி. பார்வை நேரம்: காலை 6.30 மணி முதல் 12 மணி வரை. மாலை ஐந்து மணி முதல் இரவு 9 மணி வரை. அமைவிடம்: 212, , தம்பு செட்டி தெரு சென்னை - 600001. தொலைபேசி: 044-25229624.
கபாலீஸ்வரர் கோயில
கபாலீஸ்வரர் கோயில் ஆதியும் அந்தமும் இல்லா பெருமான் ஆதிசிவன் எழுந்தருளியுள்ள இக்கோயிலைப் பற்றி திருஞான சம்பந்தர் பதிகம் பாடியுள்ளார். அன்னை பார்வதி மயில் உருவம் கொண்டு எம்பெருமானை வழிபட்டதால் இக்கோயில் இருக்கும் திருத்தலம் திருமலை என்னும் சிறப்பு பெயரால் அழைக்கப்படுகிறது. இக்கோயிலுக்கு என்று அகண்ட திருக்குளம் ஒன்று உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் ஏப்ரல் மாதங்களில் பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா மிகவும் முக்கியமானது. பத்தாம் நாள் நடக்கும் அறுபத்து மூவர் திருவிழா இக்கோயிலின் தனிச்சிறப்பு. ' அரிது அரிது அடியார் தம் பெருமை சொல்லவும் அரிது' என்று பாடிய தமிழ் தாய் அவ்வையின் மொழிக்கு ஏற்ப சைவ சமயக் குறவர்கள் 63 நாயன்மார்களைப் பெருமை படுத்தும் விழா இது. அமைவிடம்: மயிலாப்பூர் சென்னை - 600004. தரிசனநேரம்: காலை ஆறு மணி முதல் பகல் 1 மணிவரை. மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை. தொலைபேசி: 044-24641670.
அறுபத்தி மூவர் திருநாள்
நாயன்மார்கள் 63 வரை சிறப்பிப்பதால் இதற்கு அறுபத்தி மூவர் என்று பெயர். சைவ சமய எழுச்சிக்கு இவர்களே காரணம். மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா இது.
தெப்பத் திருநாள்
மயிலை கபாலீஸ்வரர் குளத்தில் நடக்கும் தெப்பத் திருவிழா இது. இத் தெப்பத்தில் கபாலீஸ்வரர் கற்பகாம்பாளும் வளருவார்கள். அப்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள்.
பாம்பன் சுவாமிகள்
தமிழ் மக்களிடம் மிகவும் பிரபலமான பாம்பன் சுவாமிகள் ராமேஸ்வரம் அருகில் பாம்பனில் கிபி 1850 ஆம் ஆண்டு அவதரித்த சித்தர். சித்தர் மரபு என்பது தமிழகத்திற்கே உரித்தான ஒன்று. பாம்பன் ஸ்வாமிகள் 1929 ஆம் ஆண்டு முக்தியடைந்தார். ஜீவ சமாதி மற்றும் கோயிலாக இது விளங்குகிறது. தரிசனநேரம்: காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை. தொலைபேசி: 044-24521866.
மருந்தீஸ்வரர் கோயில்
மருந்தே சிவம்; சிவமே மருந்து என்பதைப் போல இக்கோயிலில் எழுந்தருளியுள்ளார் எம்பெருமான் மூலிகைத் தோட்டம் ஒன்றும் உள்ளது. இக்கோயிலில் உள்ள முக்கண்ணனை வழி பட்டால் சகல நோய்களும் நீங்கும் நலம் பெறுவார்கள் என்பது வாழையடி வாழையாய் நிலவிவரும் நம்பிக்கை. எம்பெருமானின் இக்கோயில் 11-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. நமது கலாச்சாரம், கட்டிடக்கலை ஆகியவற்றில் அத்தாட்சியாகும் இக்கோயில் விளங்குகிறது. இத்தருதலத்திற்கு இராம காவியம் படைத்த வால்மீகி வந்ததாக கர்ண பரம்பரைச் செய்தி ஒன்று உண்டு. அதன் காரணமாக இப்பகுதி திருவான்மியூர் என்று அழைக்கப்படுகிறது. தரிசன நேரம்: காலை 6 மணி முதல் 1 மணி வரை. மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை. தொலைபேசி: 044-24410477.
மத்திய கைலாஷ்
நடுக்கைலாஷ் (கைலாயம்) என்றும் இதைக் கூறுவார்கள். வலப்புறம் நடுமையில் விநாயகப் பெருமான் வீற்றிருக்க, அவர் தந்தை பரமேஸ்வரன், நம்மை உமையவள், ஆதித்தியன் மற்றும் திருமால் ஆகியோர் எழுந்தருளி உள்ளனர். அனுமனுக்கும் பைரவருக்கும் சன்னதிகள் தனியே உள்ளன. வெண் பளிங்கு கற்களால் ஆக்கம் பெற்ற கோயில் இது. அமைவிடம் சர்தார் பட்டேல் சாலை, சென்னை - 600020. தரிசனநேரம்: காலை 5.30 மதியம் 12 மணி வரை. மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை. தொலைபேசி: 044-22350859.
பார்த்தசாரதி சுவாமி கோவில்
குருச்சேத்திரப் போரில் பார்த்தனுக்கு தேர் ஓட்டினார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன். இந்த காலத்தில் அவர் வெளிப்படுத்திய போர்க்கள வேதமான கீதை இந்தியாவின் உலகப் பங்களிப்பு. பகவானின் இந்த அற்புதக் கோலத்தில் இக்கோயிலில் மூர்த்தி எழுந்தருளி உள்ளது இக்கோயிலின் சிறப்பு. தமிழக அளவில் புகழ்பெற்ற இக்கோயில் தென்திருப்பதி என்று கருதப்படுவதால் இந்தியாவின் இதர பாகங்களில் இருந்தும் பக்தர்கள் தினசரி வந்து தரிசிப்பார்கள். அமைவிடம் திருவல்லிக்கேணி, ஐஸ் ஹவுஸ் அருகே. தரிசனநேரம்: காலை 6.30 மணி முதல் மதியம் 1 மணி வரை மாலை 3 மணி முதல் இரவு 8மணி வரை தொலைபேசி: 044-28442462.
வடபழனி ஆண்டவர் கோயில்
வடபழனியில் உள்ள இந்த முருகன் கோவில் கட்டி 100 ஆண்டுகள் தான் ஆகிறது. இருந்தபோதிலும் இக்கோயில் அதன் அழகு மற்றும் பரிமாணத்தில் மிகுந்த புகழை பெற்றுள்ளது. பழனி மலையில் உள்ள முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் இது. பார்வை நேரம்: காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மாலை 3 மணி முதல் 8 30 மணி வரை. தொலைபேசி: 044-24836903.
திருமலை திருப்பதி தேவஸ்தானம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலை அறிமுகம் செய்யவேண்டியதில்லை. ஆந்திர மாநில எல்லைக்குள் தான் திருப்பதி வருகிறது என்றாலும் தமிழகத்தில் ஏராளமான பக்தர்கள் உண்டு. ஆகவே சென்னையில் உள்ள பக்தர்களின் வசதிக்காக திருப்பதி தேவஸ்தானம், ஒரு தகவல் மையத்தை சென்னையில் ஏற்படுத்தியுள்ளது. இங்கு திருப்பதி குறித்த அனைத்துத் தகவல்களும் கிடைக்கும். சனி ஞாயிறு போன்ற நாட்களிலும் இந்த அலுவலகம் இயங்கும். செவ்வாய் தேசிய விடுமுறை நாட்கள் மற்றும் மாதத்தில் அனைத்து இரண்டாவது திங்கள் கிழமைகள் விடுமுறை. நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை. மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை. அமைவிடம்: 50, எங்க நாராயணன் சாலை, தி நகர், சென்னை - 17. தொலைபேசி: 044-24343535.
சீரடி சாய்பாபா கோவில்
அனைத்திந்திய சாய்பாபா சமாஜம் என்று அழைக்கப்படும் இந்தக் கோயில், ஸ்ரீ சாய்பாபா ஒரு இந்துவாக பிறந்து இஸ்லாமிய அன்பர் ஒருவரால் வளர்க்கப்பட்டு, இறுதியில் சுஃபி ஆன்மீகத்தில் தனி சிறந்தவராக மலர்ந்தார். சித்து விளையாட்டுக்கள் செய்வதில் வல்லமை பெற்றவராக இவர் கருதப்படுகிறார். ஞாயிற்றுக் கிழமைகளில் அக்னி பூஜை நடக்கும். நேரம்: காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை. அமைவிடம்: ஆல் இந்திய சாய் சமாஜம், 15 வெங்கடேச அக்ரஹாரம், மயிலாப்பூர் சென்னை - 600004. தொலைபேசி: 044-244640784.
திருவள்ளுவர் கோயில்
நானூறு வருடங்களுக்கு முன்பு, திருவள்ளுவர் நினைவாக கட்டப்பட்ட நினைவகம் இது. திருவள்ளுவர் ஒரு புலவராக இருந்த போதிலும் மக்கள் அவரை கடவுளாக வழிபடுகின்றனர். காலை இக்கோயிலில் பூஜைகள் ஆராதனைகள் நடக்கின்றன. ஆகவே இப்போது இது கோயிலாகவே கருதப்படுகிறதுச அமைவிடம்: திருவள்ளுவர் கோயில் மயிலாப்பூர், சென்னை - 600004.
ஸ்ரீராமகிருஷ்ணர் கோயில்
மயிலாப்பூரில் உள்ளது, ஸ்ரீராமகிருஷ்ணரின் சர்வ மத கோயில். ஸ்ரீ ராமகிருஷ்ணர் பரமஹம்சர் சமரச சன்மார்க்கத்தின் ஒரு குறியீடு தென் இந்திய கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ள பகவான் இராமகிருஷ்ணர் 7 அடி உயர சிலையாக தாமரை மலரின் நடுவில் வீற்றிருக்கிறார். பளிங்குச் சிலை இது. அனைத்து மதத்தினரும் இக்கோயிலுக்கு செல்லலாம். நேரம்: காலை 5 மணி முதல், மதியம் 1.30 மணி வரை மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை. தொலைபேசி: 044-24941959.
ஸ்ரீ நாராயண குரு
கேரளத்தில் வாழ்ந்த ஸ்ரீநாராயணகுரு ஒரு மகத்தான சமூக சீர்திருத்தவாதி. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக, குறிப்பாக ஒடுக்கப்பட்ட பெண்களின் தன்மானத் திற்காக பெரும் கலகம் செய்த உத்தமர். இவரை சிறப்பிக்கும் இந்த நினைவாலயம் வேப்பேரி நாராயண குரு சாலையில் உள்ளது.
தேவாலயங்கள்
ஆண்டர்சன் சர்ச்
சென்னைக்கு வந்த ஸ்காட்லாந்து இறை பணியாளர்களில் ஒருவர் ஜான் ஆண்டர்சன். இவர் கிபி 1835 இல் ஜான் ஆண்டர்சன் பொதுப் பள்ளியை ஆரம்பித்தார். பின்னர் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மற்றும் பள்ளி என்று இது பெயர் மாற்றம் பெற்று சென்னை ஜார்ஜ் டவுன் பகுதிக்கு மாற்றப்பட்டது. இப்படி கல்வித்துறைக்கு பெரும்பங்கு செய்தவர் இப்பணிக்காக நினைவுகூற படாமல் சார்ஜாவில் உள்ள இந்த சர்ச் இவர் பெயரை நினைவு படுத்தி கொண்டுள்ளது. இந்த சர்ச்சின் அழகான கட்டிடத்தில் தான் சென்னை கிறிஸ்தவ கல்லூரி முன்பு இருந்தது. சர்ச்சின் உயர்ந்த கோபுரமே ஆண்டர்சன் என்ற கல்விமானின் ஆன்மாவில் கொளுந்து விட்ட கல்வி சுடரின் வீரியத்தை எடுத்துக்காட்டும். இந்த ஆலய வளாகத்திற்குள் ஆங்கில வழி மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அமைவிடம்: பிராட்வே, சென்னை - 600108. தொலைபேசி: 044-25351097.
அவெல்லா திரேசா சர்ச்
சென்னையின் முதல் பிஷப் அலுவலகம் இது. முதல் பிஷப் இங்குதான் தனது அன்றாட பணிகளை மேற்கொண்டார். இதன் பின்னர் தான் இந்த அலுவலகம் மயிலாப்பூருக்கு மாற்றப்பட்டது. இந்த சர்ச்சின் புனித அன்னையின் திருநாமம் அவெல்லா திரேசாம்மால். அமைவிடம்: 5, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, சென்னை - 600034. தொலைபேசி:044-28278788.
ஆண்ட்ரூ சர்ச்
ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவின் ஆகச்சிறந்த புனிதச் அச்சாக இது கருதப்பட்டது. இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட சர்ச். சென்னையின் புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர் திரு எஸ் முத்தையா, ' ஜார்ஜியா கட்டடக்கலையின் மிகச் சிறந்த ஒன்றாக இந்த சர்ச் விளங்குகிறது' என்று எழுதியுள்ளார். மேலும் டபிள்யூ. டிமன்ரோ இந்தச் சர்ச்சை சென்னையில் அதி உன்னத சர்ச் என்று குறிப்பிட்டுள்ளார். சர்ச்சின் அசல் பெயரே (ஆண்ட்ரூஸ் கிரிக்) ஸ்காட்லாந்து டன் சென்னைக்கு தொடர்பு இருந்ததை குறிப்பாகச் சுட்டிக் காட்டுகிறது என்பதுடன் அப்போதைய பிரிட்டிஷாரின் ' சென்னை ராஜ்தானி' என்ற பெயரையும் எடுத்துக்காட்டுகிறது. மேலும் 1815 ஆம் ஆண்டு சென்னை ராஜ்தானிக்கு ஒரு ஸ்காட்லாந்து காரர் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இப்படி நிறைய ஸ்காட்லாந்து காரர்கள் அப்போது சென்னையில் வசித்ததால் அவர்களுக்காக தனியே இந்த சர்ச் கட்டப்பட்டது. அமைவிடம்: பூந்தமல்லி நெடுஞ்சாலை, எறும்பு ரயில் நிலையம் பின்பக்கம் சென்னை - 600008. தொலைபேசி: 044-25611236, 25612608.
செவன்த் டே அட்வென்டிஸ்ட் சர்ச்
செவன்த் டே அட்வென்டிஸ்ட் என்பது ஒரு அனைத்துலக அமைப்பு. இதனுடைய இறைப்பணி என்பது சி எஸ் ஐ மற்றும் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் பணிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இதன்படி இந்த சர்ச்சில் வாரத்தில் சனிக்கிழமை தோறும் இறை ப்ரார்த்தனை நடப்பதால் இது 7 ஆம் நாள் சர்ச் என்று அழைக்கப்படுகிறது. இந்த சர்ச்ன் கீழ் ஓர் உயர்நிலைப் பள்ளி நடக்கிறது. அமைவிடம்: ரித்தர்டன் சாலை, வேப்பேரி, சென்னை - 600007. தொலைபேசி: 044-26412618.
கிறிஸ்து சர்ச்
கிரைஸ்ட் சர்ச் மற்றும் கிரைஸ்ட் பள்ளியும் 150 வருட வரலாற்றைக் கொண்டது. கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த ரெவரண்ட் ஹென்றி டெய்லர் என்பவர் கிபி 1842 இல் சென்னை மவுண்ட் சாலையில் உள்ள எளிய மக்கள் பிரார்த்தனை செய்வதற்காக துவக்கிய சர்ச் மற்றும் பள்ளிகளுக்கான முதல் துவக்கம். இதற்குப்பின் கிபி 1843 இல் ஆர்ச் டெக்கான்ஹேர்பர் இந்த சர்ச்ன் வளாகத்திற்குள் இரண்டு பள்ளிக்கூடங்களை திறந்தார். அப்போது இந்த பள்ளிகள், மௌண்ட் ரோடு ஆண்கள் பள்ளி, மௌண்ட் ரோடு பெண்கள் பள்ளி என்று அழைக்கப்பட்டது. இந்தப் பள்ளிகள் அங்கீகாரம் பெற்ற கிரைஸ்ட் சர்ச் பள்ளிகள் என்று பெயர் பெற்றன. அமைவிடம்: அண்ணா சாலை, காஸ்மோபாலிட்டன் கிளப் அருகே, சென்னை - 600002. தொலைபேசி: 044-28549786.
சாந்தோம் கதீட்ரல் சர்ச்
புனித இயேசுவின், இறை அரசுப்பணியில் அவரால் தேர்வு செய்யப்பட்ட 12 நேரடி சீடர்களில், புனித தீதிம், தோமையரும் ஒருவர். புனித தோமையர் இயேசுவின் இறைச் செய்திகளை ஏந்திக் கொண்டு இந்தியாவுக்கு வந்தார். அப்போது புனிதர் இயேசு மறைந்து 52 ஆண்டுகள் தான் ஆகியிருந்தது. இச்சமயம், கோவா கடற்கரையில் உள்ள திரேங்கனூர் துறைமுகத்தில், புனித தோமையர் காலடி எடுத்து வைத்தார். அதன்பின் கடற்கரைப் பகுதிகளில் , 7 இடங்களில் தேவ வழிபாட்டுத் தலங்கள் ஏற்படுத்தி, அப்பகுதி மக்களை கிறிஸ்தவ மார்க்கபடுத்தினர். அடுத்து தோமையார் கேரளத்தை விட்டு தமிழகத்துக்கு வந்து மயிலைபுரம் என்று அழைக்கப்பட்ட சென்னை மயிலாப்பூர் கடற்கரைப்பகுதியில் தனது இறைப் பணிகளை தொடர்ந்தார். இப்பணி மக்களின் வசீகரிப்பவே, அவர்கள் கிறிஸ்தவதிற்கு மாறினார்கள். இதை பார்த்து வெகுண்டு எழுந்த அப்போதைய மன்னர் ராஜாமகாதேவன், அவரைப் படுகொலை செய்ய ஆட்களை நியமித்தார். இதையறிந்த தோமையார் அங்கிருந்து நீங்கி, சைதாப்பேட்டைக்கு அருகிலுள்ள சின்ன மலை குகையில் தலைமறைவாக இருந்து மக்கள் மத்தியில் இறைப்பணி ஆற்றினார். அப்படி இருந்தும், கொலைகாரர்கள் அவரை பின் தொடர்ந்து வர அங்கிருந்து தப்பித்து இன்றைய செயின்ட் தாமஸ் மலையை புகலிடமாக கொண்டார். அங்கே எதிரிகளால் கொல்லப்பட்ட புனிதரின் திருவுடல் மயிலாப்பூர் கடற்கரையில் கிபி 72 ஆம் ஆண்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. பின் வந்த காலகட்டங்களில் தேவாலயம் பெருகி வளர்ந்து இன்று தியாகத்தின் சின்னமாக சாந்தோம் சர்ச் என்ற பெயரில் உயர்ந்தோங்கி நிற்கிறது. இத் தேவாலயம் 2004இல் புதுப்பிக்கப்பட்டு இன்னும் பொலிவு பெற்று விளங்குகிறது. உலக அளவில் இயேசுவின் நேரடி திருடர்கள் 12 பேர்களில், இரண்டே இரண்டு பேர்களுக்கு மட்டும்தான் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறைகளின் மீது ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. ஒன்று ரோமில் உள்ள புனித பேதுரு தேவாலயம். இரண்டாவது புனித தோமையாருக்கான இந்த சாந்தோம் தேவாலயம். அமைவிடம்: சாந்தோம் நெடுஞ்சாலை (மெரினா கடற்கரையில் தென்பக்கம்) மயிலாப்பூர், சென்னை - 600004. தொலைபேசி: 044-24985455.
சின்னமலை சர்ச்
இயேசுவின் நேரடி சீடர்களில் குறிப்பிடத்தக்கவரான புனித தாமஸ் இங்குள்ள குகை ஒன்றில் தங்கி இறைப் பணி ஆற்றிய இடம் இது. அப்போது இவரை கொல்ல ஒரு முயற்சி நடந்தது. ஆனால் செயின்ட் தாமஸ் இந்த குகை பின் வழியாக தப்பித்துவிட்டார். இவருடைய காலடித்தடம் குகையின் பின்புறத்தில் இருப்பதாக கருதப்படுகிறது. மேலும் இங்கு புனித நீர் ஊற்று ஒன்று உள்ளது. சென்ற நூற்றாண்டின் இறுதியில் வட்ட வடிவில் இங்கு தேவாலயம் கட்டப்பட்டது. அமைவிடம் சின்னமலை, சைதை பாலம் அருகில், சைதாப்பேட்டை சென்னை - 600018.
செயின்ட் ஜார்ஜ் கத்தீட்ரல் சர்ச்
கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக நிற்கும் இந்த சர்ச் கிபி 1815 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இறையியல் வகையிலும் புகழ்பெற்ற இந்த சர்ச்சுக்கு மற்றும் ஒரு பெயரும் உண்டு. வரலாற்று சிறப்பு பெற்ற தனித்தன்மை மிக்க மனிதர்களையும் இந்த சர்ச் நினைவூட்டும். அத்தகையவர்களில் முதலிடத்தில் உள்ளவர் திராவிட மொழி ஒப்பிலக்கணம் எழுதிய கால்டுவெல் பாதிரியார். இவருக்கு அடுத்து இறையியலாளர்கள், ஹெபர், டாக்டர் கோரி ஆகியோர். இவர்களுக்கு அடுத்து சென்னைக்கு பட்டு தயாரிப்பை அறிமுகப்படுத்திய ஆண்டர்சன், வில்லியம் பாரி, ஜான் பின்னி போன்ற ஆங்கில வர்த்தகர்கள் உள்ளனர். பொதுவாகப் பார்த்தால் சர்ச் போன்ற புனித தலங்களுக்கு அருகில் ஆயுதங்களை காட்சிப்படுத்துவது வழக்கமில்லை. ஆனால் விதிவிலக்காக இந்த சர்ச்சை ஒட்டியுள்ள கல்லறை வளாகத்தில் பழங்கால துப்பாக்கிகள், முனை கத்திகள் போன்றவை இடம்பெற்றுள்ளன. ஸ்ரீரங்கத்தை ஆங்கிலேயர்கள் கிபி 1799 இல் வெற்றி கொண்டபோது கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் இவை. அமைவிடம்: 224, கத்தீட்ரல் ரோடு, சென்னை - 600086. தொலைபேசி: 044-28112740,28112741.
ஜெயின் ஜார்ஜ் கோட்டை செயிண்ட் மேரி சர்ச்
இந்தியாவின் முதல் ஆங்கிலிகன் சர்ச் இது கிபி 1680 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த சர்ச்சில் தான் அமெரிக்காவின் உலகப் புகழ்பெற்ற ஏல் பல்கலைக் கழகத்தை நிறுவிய - சென்னை மாகாணத்தின் அப்போதைய ஆளுநர் எலிகு ஏலின் திருமணம் நடந்தது. அடுத்து புகழ் பெற்ற ஆங்கில தளபதி ராபர்ட் கிளைவ் அவர்களின் திருமண முறைமையையும் இங்குதான் நடந்தது. இந்து கல்லறை கல் தான் இந்தியாவிலுள்ள மிகப்பழமையான கல்லறைக்கள். அமைவிடம்: செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகம், ராஜாஜி சாலை (கடற்கரை தெற்கு சாலை), சென்னை - 600009.
வேளாங்கண்ணி சர்ச்
இந்த சர்ச் ஆரோக்கிய புனித அன்னை வேளாங்கண்ணிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. நாகை வேளாங்கண்ணி சர்ச் ஒப்பிடும்போது, இது மிகச் சிறியது என்றபோதும், ஏராளமான பக்தர்களை தனது அருள் சக்தியால் ஈர்க்கிறது. அமைவிடம்: பெசன்ட் நகர் சென்னை - 600090. தொலைபேசி: 044-24911246.
மசூதிகள்
மக்கா மசூதி
சென்னை மாநகரில் உள்ள முக்கியமான மசூதி இது. நூற்றுக்கணக்கானவர்கள் ஒரே சமயத்தில் இங்கு இறைத் தொழுகை செய்ய முடியும். அமைவிடம்: பாபா அசரத் சையத் முஷா ஹத்திரி தர்கா. அமைவிடம்: அண்ணாசாலை சென்னை - 600002.
மாமூர் மசூதி
சென்னை மண்ணடி வால் இஸ்லாமியர்களின் தொழுகை மசூதி இது. பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டு பிற்பகுதியில் கருங்கல் கட்டடமாக மாற்றி அமைக்கப்பட்டது. மேலும் சுற்றுச் சுவரும், இரட்டைத் தூண் ஆதாரமும் சமீபத்திய கட்டிடத் திறப்பு. ஒரே நேரத்தில் 5000 பேர்கள் கூடி தொழுகை செய்யுமளவு இது விரிவானது. அமைவிடம்: அங்கப்பன்(நாயக்கன்) தெரு, முத்தியால்பேட்டை, சென்னை - 600001.
பெரிய மசூதி
இப்போதைய ஆற்காட்டு இளவரசரின் பாட்டனார் நவாப் வாலாஜா முஹம்மது அலி அவர்கள் சிவப்புக்கல் இந்த அற்புதமான மசூதியை கட்டி அருளினர். டில்லியில் உள்ள ஜிம்மா மசூதியை விட பெரியதாக இது கருதப்படுகிறது. அமைவிடம்: திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600005.
ஆயிரம்விளக்கு மசூதி
இந்த மசூதி பல்-குவி மாடங்களுடன், அந்த தந்த நேரத்தில், சமீபத்தில் வரையப்பட்ட புனித குர்ஆன் வாசகங்களுடன் வெகு நேர்த்தியாக கட்டப்பட்ட மசூதி. இந்த மசூதிக்கு மூலமான மசூதியை கிபி 1800 நவாப் உம்டட்- உல்- உம்ரா அவர்கள் ஷியா பிரிவு இட்லியா மக்களுக்காக உருவாக்கினார். அமைவிடம்: சைடன்ஹாம் சாலை, ஆயிரம்விளக்கு சர்ச் கான்வென்ட் எதிரில், மௌண்ட் ரோடு சென்னை - 600006. தொலைபேசி: 044-28518195.
புத்தவிகார்
மகா புத்தர் இந்திய ஆன்மீக செல்வங்களில் தலையாய இடத்தை வகித்தவர். இவர் சித்தார்த்தர் ஆக பிறந்து 30 வயதில் ஞானம் எய்தி தனது 82 ஆம் வயதில் வான் பேரு பெற்றார். இவர் உருவாக்கிய புத்தர் தர்மம் உலக அளவில் பரவியது. சென்னையில் உள்ள ஒரே புத்த விகார் இதுதான். அமைவிடம்: கென்னத் சந்து, எழும்பூர் ரயில் நிலையம் எதிரில், சென்னை - 600008. தொலைபேசி: 044-28192458.
குருத்வார்
சீக்கிய குருக்களின் தலைமை குரு, குரு கோவிந்த் சிங் இவர் கடவுளை அடைய இயற்கையான, அமைதியான வழிகளை வழங்கினார். பஞ்சாப் அமிர்தசரசில் உள்ள பொற்கோவில் சீக்கியர்களின் புனித தலம் சென்னை வாழ் சீக்கியர் களுக்காக இந்த குருத்துவார் கட்டப்பட்டது. அமைவிடம்: ஜி என் செட்டி சாலை தி நகர், சென்னை - 600017. தொலைபேசி: 044-28268509.
தர்காக்கள்
அண்ணாசாலை தர்கா
சுமார் 450 வருடங்களுக்கு முன்னால் இங்கு ஒரு முஸ்லீம் துறவி வாழ்ந்து வந்தார். அவர் பெயர் பாபா ஹஸ்ரத் சையத் முஸா கத்ரி. இந்த இஸ்லாமிய துரோகி உலக சகோதரத்துவத்தை போதித்தார். இறுதியில் அவர் இந்த இடத்தில் சமாதி அடைந்தார். இந்த தர்காவுக்கு அனைத்து மதத்தவர்களும் பக்தர்களாக விளங்குகிறார்கள். அமைவிடம்: அண்ணா சாலை, தலைமை தபால் நிலையம் அருகே.
ஹசரத் பாபா தர்கா
இஸ்லாமிய ஞானியான இவர் இயற்பெயர் ஹஸ்ரத் தஸ்தகீர் சாகித் பாபா. 300 ஆண்டு பழமையானது இந்த தர்கா. தஸ்தகீர் சாகிப் அவர்கள் தனக்கு ஏற்படப்போகும் மரணத்தை முன்கூட்டியே அறிந்தவுடன், தனது சீடர்களிடம் எனக்கு எந்த இமாமின் கீழும் ஜனாசா என்ற ஈமச்சடங்கு பிரார்த்தனைகள் செய்யக்கூடாது என்று கட்டளை இட்டாராம். இவ்விதம் கூறிய அவர் தன்னுடைய ஈமச்சடங்கு நடந்த பிறகு தானே தோன்றி பின்னர் மறைந்தாராம். அமைவிடம்: 83, டாக்டர் நடேசன் ரோடு, சென்னை - 600005, தொலைபேசி: 044-28521077.
கத்ரி பாபா தர்கா
கல்வெட்டில் இதைப்பற்றி உள்ள தகவல்கள் சையத் பாபா கத்ரி ஷ கிபி 1793 ஹசரஸ்ரப்பானி பாபா ஷா கத்ரி கிபி 1793 என்பது மட்டும்தான். மக்கள் கத்ரி பாபா என்று அன்புடன் அழைக்கின்றனர். ஒரு பழமையான மரத்தின் நிழலுக்கு கீழ் உள்ள இந்த தர்கா அனைத்து மத மக்களாலும் தொலப்படுகிறது. அமைவிடம் தமிழ்நாடு பாரத் ஸ்கவுட்ஸ் வளாகம், வின்கோக் பார்க், திருவல்லிக்கேணி சென்னை - 600005. தொலைபேசி: 044-28512947.
முகமது இஸ்மாயில் சாஹிப் தர்கா
இஸ்லாமியர்கள் இந்த தர்காவை காயித்-இ-மில்லத் அவர்கள் திருவல்லிக்கேணி பேட்டையில் 5.6.1896 ஆம் ஆண்டு பிறந்தார் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போதும், பின்னர் பாராளுமன்ற உறுப்பினரான போதும் ஆற்றிய பணிகள் இவர் ஒரு சிறந்த பாராளுமன்ற வாதி என்பதை நிரூபித்தது. காயிதே மில்லத் அவர்கள் 5.4.1972 அன்று வானுலகு அடைந்தார். அமைவிடம்: திருவல்லிக்கேணி பெரிய மசூதி வளாகம், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை - 600005.
தமீம் அன்சாரி பாபா தர்கா
இவர் புனித மதினாவில் பிறந்தார். இறைவனடி நேர்ந்ததும், அவருடைய திருவுடல், ஒரு புனித பேழையில் வைத்து கடலில் விடப்பட்டதாம். இப்புனித பேலை கோவளம் கடற்கரையில் தங்கியிருக்கிறது. இந்த அடிப்படையில் தான் இந்த தர்கா எழுந்தது. மாதத்தில் பௌர்ணமி அடுத்து வரும் வியாழக்கிழமை இங்கு வழிபாட்டிற்கான புனித நாள். அமைவிடம்: கோவளம் கடற்கரை. நேரம்: காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை.
மோதி பாபா தர்கா
இவருடைய முழு நீளப் பெயர் ஞானி காஜாகுதுப் சையத் குளம் தஸ்தகீர் மோதி பாபா. மோதி பாபா ஏமனில் பிறந்து நாகப்பட்டினத்திற்கு வந்ததாகவும், பின்னர் சென்னை காஜியின் அன்பைப் பெற்று, வாழ்ந்து இங்கேயே 1959ல் இறைவனடி சேர்ந்ததாகவும் ஒரு பக்தி பாடல் கூறுகிறது. ஆன்மீக ஆற்றலின் மிகச்சிறந்த இவர், மனிதகுல மேம்பாட்டிற்காக தன்னால் ஆன அனைத்தையும் செய்த புனிதர். அமைவிடம்: 422, பாந்தியன் சாலை, எழும்பூர் சென்னை - 600008.
சமணர் வழிபாட்டுத்தலங்கள்
மகான் சாந்திநாத் சமணக் கோயில்
சமணர்கள் அல்லது சீனர்களின் தீர்க்கதரிசிகளை தீர்த்தங்கரர்கள் என்று சொல்வது மரபு. இப்படி வந்த பதினெட்டாவது தீர்த்தங்கரர் தான் புனித மகாவீரர். இவர்தான் சமண மதத்தை நிறுவியவர். புத்தருக்கு இணையாக கருதப்படும் இவர் அகிம்சையை போதித்தது டன் புனித கொள்கைகளையும் வகுத்து அருளினார். சமண மதத்தின் இலச்சினை ஸ்வஸ்திக் வடிவமாகும். அமைவிடம்: ஜி என் செட்டி சாலை, தியாகராய நகர் சென்னை - 600017. தொலைபேசி: 044-28151779.
ஜெயின் குரு மந்திர்
சென்னையில் வரிசையாக உள்ள ஜெனர்களின் கோயில்கள் பெரும்பாலும் பளிங்கு கற்களால் ஆனவை. அவற்றைப் போலவே இந்த கோயில்களின் கட்டிடக்கலையும் பளிங்கு கல்லினால் உன்னதமாக எழுந்துள்ளது. தொலைபேசி: 044-24925574.
ஸ்ரீ விஜய சாந்தி ஸ்ரீ சுவாமிஜி குரு மந்திர்
தங்கள் வழிபாட்டுத் தலமாகவும், மகாவீரரின் புனித கொள்கைகளை பரப்புவதற்காகவும் ஜைனர்கள் இக் கோயிலை கட்டியுள்ளார்கள். அமைவிடம்: 68 அருணாச்சலம் தெரு, சிந்தாதிரிப்பேட்டை கூவம் பாலம் அருகில், சென்னை - 600002. தொலைபேசி: 044-28551032.
ஜெயின் பிரார்த்தனா மந்திர்
ராஜஸ்தான் மௌண்ட் அபுவில் உள்ள ஜெயின் குயிலைப் போல கலை மற்றும் கட்டடக்கலை உன்னதமாக சென்னையில் கட்டப்பட்டுள்ள கோயில் இது. அந்த வகையில் தென்னிந்தியாவின் தலைசிறந்த பளிங்குக் கலைக்கோயில் என்று பெயர் எடுத்துள்ள கோயில் இது. இதற்கு சுதேம்பரர் கோயில் என்று மற்றுமொரு பெயரும் உண்டு. இரண்டு அடுக்குகள் கொண்ட கோயிலில், அற்புத வேலைப்பாடுகள் அமைந்த வளாகமாக இக்கோயில் திகழ்கிறது. கடந்த 1994 ஆம் ஆண்டு இக்கோயில் கட்டப்பட்டது. மேல்தளத்தில் நான்கு பக்கங்களிலும் (சௌமுகி) 23வது தீர்த்தங்கரர் புனிதர் ஸ்ரீ பர்ஷவநாத் பகவானின் திரு உருவம் கொலு கொண்டுள்ளது என்றார் கீழ்தளத்தில் குருதர் யோகிராஜ் சாந்தி சுரேஷ்வர்ஜி கோயில் கொண்டுள்ளார். இக்கோயிலின் வளாகத்துக்குள்ளேயே உள்ள ஜெயின் வித்யாலயா பள்ளி மற்றும் பெண்கள் கல்லூரி மாணவிகளிடம் பக்தியை பரப்புவதற்காக இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. அமைவிடம்: 96, வேப்பேரி நெடுஞ்சாலை, சென்னை - 600007. நேரம்: சாதாரண நாட்களில். காலை 10 மணி முதல் மதியம் 12.30 வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை. விடுமுறை நாட்களில் நேரம்: காலை 8.30 முதல் மதியம் 12.30 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை. தொலைபேசி: 044-25610148.
இருபத்திமூன்றாம் தீர்த்தங்கரர் மகான் பார்சுவநாதர்
ஸ்ரீ ஜெயின் பிரார்த்தனா மந்திரில் இத்திருவுருவச் சிலை உள்ளது. ஜெயின வேதப்படி கடவுளின் நிறம் பசுமை. அன்பர் சிறப்புக் கருதி எச்சிலை கர்நாடகாவை சேர்ந்த செல்லூர் சுரங்கத்திலிருந்து கொண்டுவரப்பட்ட குவார்ட்ஸ் வகை உயரிய கல்லால் அமைக்கப்பட்டுள்ளது. வைரங்களை வெட்டும் சிறப்பு கருவிகளைக் கொண்டுதான் இக்கல்லில் சிலை வடிக்க முடியும். மேலும் இச்சிலை உள்ள பிரார்த்தனை மண்டபம் கண்ணாடி வேலைப்பாடுகளால் ஆனது. தென்னிந்தியாவில் இவ்விதமான கண்ணாடி வேலைப்பாடுகள் அரிது.
பொழுதுபோக்கு
கோ கார்டிங்
கார் பந்தயங்களை பார்த்திருப்பீர்கள். சக்கரங்கள், என்ஜின், ஸ்டீயரிங் போன்றவை மட்டுமே இருக்கும். இதற்கும் கார் என்றுதான் பெயர். இந்த கார் பந்தய வீரர்கள் கவச உடையுடன் மிக வேகமாக செல்வதை பார்த்து நீங்களும் அவர்களைப்போல பழக வேண்டும் என்று ஆசைப்படுவீர்கள். அந்த ஆவலை நிறைவு செய்வதற்காகவே இந்த கோ கார்டிங் தல உருவாக்கப்பட்டுள்ளது. அமைவிடம்: 38 ஆற்காடு சாலை, சென்னை. தொலைபேசி: 044-24836600.
திறந்த வெளித் திரையரங்கம்
உலகின் முதல் கடலோர திறந்தவெளி திரையரங்க வளாகம் இது. பிரார்த்தனா திறந்தவெளி திரையரங்கம், ஆராதனா திரையரங்கு மற்றும் ஓய்வு உணவகம் ஆகியவை உள்ளன. இந்த திரையரங்கில் காரில் அமர்ந்தபடியே திரைப்படத்தை பார்க்கலாம். அமைவிடம்: திருவான்மியூரில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இஞ்சம்பாக்கம், கிழக்கு கடற்கரை சாலை, சென்னை - 600041. தொலைபேசி: 044-24491402, 24491692.
கோயம்பேடு பிளானட்யும்
கோயம்பேட்டில் ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம் இருப்பதுடன் மிகப்பெரிய, காய், கனி, மலர், சந்தை இருப்பது தெரிந்ததே. ஆனால் அவ்வளவாக மக்களுக்கு அறிமுகம் ஆகாதது இந்த பிளானட் யும். இங்கு ஐந்து ஆய்வகங்கள், சிறுவர் மற்றும் முதியவர்களுக்கான பூங்கா, டைட்டானிக் கப்பலை நினைவூட்டும் ராட்சத பலூன் போன்றவை உள்ளன. அமைவிடம்: 100 அடி சாலை, கோயம்பேடு சென்னை - 600107. பார்வை நேரம்: காலை 5.30 முதல் இரவு 10.30 மணி வரை.
விஜிபி கோல்டன் பீச்
உல்லாச பயணிகளின் முக்கிய இடங்களில் இதுவும் ஒன்று. பசுமையான சூழலில், உள்ளம் கொள்ளை கொள்ளும் கடற்கரை அழகுடன் கோல்டன் பீச் அமைந்துள்ளது. மேலும் இங்கு குழந்தைகளுக்குப் பிடித்த மிக்ஸர், ரோலர் கோஸ்டர், பிளேயிங் மிஷின் பலூன் ரேசர் போன்ற ஏகப்பட்ட விளையாட்டுகள் உள்ளன. அமைவிடம்: கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் அருகே. தொலைபேசி: 044-24491445, 24491446, பார்வை நேரம்: காலை 9 மணி முதல் மாலை 7.30 மணி வரை.
குதிரைச் சவாரி
சென்னை குதிரைப்பந்தய கிளப் உடன் இணைந்து இந்த குதிரை ஏற்றப்பள்ளி தொடங்கப்பட்டுள்ளது. இங்கு குதிரை ஓட்டுவதற்கான பயிற்சிகள் கற்பிக்கப்படுகின்றன. முதலில் இதன் பெயர் மெட்ராஸ் போலோ அண்ட் ரைடர்ஸ் கிளப் என்று இருந்தது.