அயோத்தி கோயில்

 எல்லா அவதாரங்களிலும் மிகுந்த சிறப்பான அவதாரம் என்று சொல்லப்படுவது ஸ்ரீ ராமாவதாரம் அப்படிப்பட்ட ஸ்ரீ ராமன் பிறந்த இடம் தான் அயோத்தி.  இந்து மதத்தினர் அனைவரும் வாழ்வில் ஒருமுறையாவது அயோத்திக்குச் சென்று ஸ்ரீராமனை தரிசிக்கவே ஆசைப்படுகிறார்கள்.  கருணை வெள்ளமாக ஆபத்பாந்தவனாக விளங்கும் ஸ்ரீராமனை அவனது பிறந்த ஊரில் தரிசிப்பது என்பது மிகப் பெரிய புண்ணியம்.  எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் இந்த வாய்ப்பு?

 காசி - வாரணாசி  லக்னோ ரயில்வே மார்க்கத்தில் பைசாபாத் ரயில் நிலையத்தில் இருந்து.  ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது அயோத்தி!  சனக்கூட்டம் அதிகம் குறுகலான சந்திப்பில் இருக்கிறது இந்த திருக்கோயில் மூலவர் சக்கரவர்த்தித் திருமகன்.  ரகு நாயகன் என்ற  பெயரும் உண்டு.  வீற்றிருந்த திருக்கோலம் வடக்கே பார்த்து தரிசனம் கொடுக்கிறார்.  தாயார் சீதா பிராட்டி தீர்த்தம் பரமபத ஸத்ய புஷ்கரணீ.  ஸரயு நதி,  விமானம் புஷ்பகார விமானம். 

 தென்னிந்திய கோயில்களின்  அமைப்புப்படி இந்த கோயில் கட்டப்பட்டிருக்கிறது.  அம்மாஜி மந்திர்  என்ற பழைய கோயில் உண்டு.  ஸ்ரீ ரங்கநாதர் பள்ளிகொண்ட பயணத்தில் இருக்கிறார்.  கோயில்களில் தென்னிந்திய வைஷ்ணவர்கள் தான் பூஜை செய்தார்கள்.  பிரம்மாவின் மூத்த பிள்ளை ஸ்வாயம்புவமனு.  இவருக்கு ஸ்ரீமன் நாராயணன்  வைகுண்டத்தின் ஒரு பகுதியான அயோத்தியை பிரம்மா மூலம் கொடுத்தார்.  அந்த அயோத்தியை பிரம்மா மனு சக்கரவர்த்தி இடம்கொடுக்க மனு சக்கரவர்த்தி அந்த அயோத்தியை பூலோகத்திற்கு கொண்டு வந்து ஸரயு நதியின் தென்கரையில் ஸ்தாபித்தார்.  இதுதான் அயோத்தி என்று நாம் போற்றப்படும் புண்ணிய பூமி.  ஏழு முக்தி தரும் புண்ணிய தலங்களில் இதுவும் ஒன்று.

 பெரியாழ்வார், குலசேகர ஆழ்வார்,  தொண்டரடிப் பொடியாழ்வார்,  திருமங்கையாழ்வார் நம்மாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்து இருக்கின்றனர்.  எனினும் கோயிலில் இதற்கான கல்வெட்டு இருப்பதாக தெரியவில்லை.  சில குறிப்புகள் ஆழ்வார் பாடிய கோயில் மும்மூர்த்திகளும் இல்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது.

 பரிகாரம்

 சகல விதமான பாவங்கள் நம்மிடமிருந்து தொலைய வேண்டும் ஆனால் ராமா ராமா என்று சொன்னாலே போதும்.  அந்தப் பாவங்களை தொலைக்க பாரத பூமியில் அவதாரம் செய்த  ஸ்ரீராமபிரானது கோயிலுக்கு ஒரு தடவை சென்று வந்து விட்டார்.  ஏழேழு ஜென்மத்துக்கும் எந்த வித பாவமும் அண்டாது.   இனினும் சொல்லப்போனால் மருத்துவம் என்பதே இருக்காது.

Quickly Find What You Are Looking For