ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில் Kabishthalam Perumal Temple in Tamil

பெரும்பாலும் பெருமாள் மிகவும் விரும்பி அமர்கின்ற இடம் தமிழ்நாட்டை பொறுத்த அளவில் காவிரி கரையோரம் என்பது அத்தனை வரலாறுகளும் மிக அழகாக எடுத்துச் சொல்கின்றன.  பகவான் மிகவும் ஆசைப்பட்டு நடந்த  இடம்,  இறந்த இடம்,  பயணம் செய்த இடங்களிலெல்லாம் ஏதாவது ஒரு ஆச்சரியமான சம்பவங்களை,  பக்தர்களுக்காக செய்து காட்டி மகிழ்வித்திருக்கிறார்.  இதுவரை பகவான் யாரையும் எழுதியதில்லை.  தன்னை குறை சொல்பவர்களையும் காப்பாற்றி வாழ்க்கையை தந்திருக்கிறார்.  ஆதிமூலமே என்று தொலைத்த பொது காப்பாற்றிய திருத்தலம்தான் கபிஸ்தலம்.  கும்பகோணம் திருவையாறு வழிப்பாதையில் பாவநாசத்திற்கு  கிழக்கே மூன்று கிலோமீட்டர் தொலைவில்,  கொள்ளிட ஆற்றின் தென்பகுதிக்கும் காவிரியாற்றின் வட பகுதிக்கும் இடையில் அமைந்திருக்கிறது ஸ்ரீ  கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில்.

புஜங்க சயனம் கிழக்கு நோக்கிய 3 நிலை கோபுரம்.  பாம்பணையில் பள்ளி கொண்டு காட்சியளிக்கிறார்.  தாயார் ரமாமணிவல்லி. பொற்றாமரையாள்.  தீர்த்தம்  கஜேந்திர புஷ்கரணிகபில தீர்த்தம்.  கோயிலின் விமானம்  சுகநாக்கருதி விமானம். 'வாலி'க்கு பெருமாள் நேரடியாக காட்சி கொடுத்த தளம் என்பதால் கபிஸ்தலம் என்று பெயர் உருவாயிற்று.

பெருமாளின் விளையாட்டுக்களில் இன்றைக்கும் முக்கியமானதாக நம் நினைவுக்கு வருவது கஜேந்திர மோட்சம்.  அது நடந்த இடம் இந்த கபிஸ்தலத்தில் தான் என்பதால் மிகவும் புண்ணியமான தளமாக காலங் காலமாகபோற்றப்பட்டு வருகிறது.

இந்திரா ஜிம்னன் என்னும் அரசன்,  துர்வாச முனிவரை சரிவர மதிக்காமல் போனதால் துர்வாச முனிவர்,  மன்னனை யானையாக மாற்றி விட்டார்.  இதுபற்றி அறிந்த மன்னன்,  தனக்கு எப்படி  சாபவிமோசனம் கிடைக்கும் என்று கேட்டபோது. "நீ யானையாக இருந்தாலும் திருமாலின் மீது பக்தி கொண்டு இருப்பாய்.  ஒரு சமயம் ஒரு முதலை உன் காலை கவ்வும் அப்பொழுது விஷ்ணு முதலையிடமிருந்து உன்னைக் காப்பாற்றி சாபத்திலிருந்து மீட்பார் என்று துர்வாச முனிவர் வழியும் காட்டினார்.

அகத்திய முனிவர் ஒரு சமயம் ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த பொழுது, 'குஹி'  என்னும் அரக்கன் விளையாட்டிற்காக தண்ணீரில் மூழ்கி முனிவரின் காலை இழுத்து துன்புறுத்த கோபம் கொண்ட முனிவர். குஹியை முதலையாக மாற்றிவிட்டார். தான் செய்த தவற்றை உணர்ந்த குஹி அகத்தியரிடம் மன்னிப்பு கேட்டு சாபம் நீங்க வலிக்குது "கஜேந்திரன் என்ற யானை இத்தலத்தில் நீர் அருந்த வரும்பொழுது நீ அதன் காலை பிடித்து இழுப்பாய். அப்பொழுது திருமால் கருட வாகனத்தில் வந்து கஜேந்திரன் என்ற அந்த யானையை உன்னிடமிருந்து காப்பாற்ற உன் மீது சக்கராயுதத்தை வீசுவார்.  அப்போதுதான் உனக்கு சாபவிமோசனம் என்று சொல்லி மறைந்தார். 

அதன்படியே முதலை அந்த கஜேந்திர யானையை கவ்வ 'ஆதிமூலமே'  என்று அந்த யானை விஷ்ணுவை நோக்கி கதற,  பெருமாள் கருட வாகனத்தில் தோன்றி கஜேந்திரனுக்கு உயிர்ப் பிச்சையும்,  அந்த முதலைக்கு சாப விமோசனமும்  கொடுத்தார்.  அதனால்தான் இப்பொழுதும்  இத்தலத்தில்  பங்குனி மாதம் கஜேந்திர மோட்ச  விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பரிகாரம்

வாழ்க்கையில் வறுமைப்பிடியில் சிக்கித் தவிப்பவர்கள் தொழிலில் நஷ்டமடைந்து வேறு எதுவும் செய்வதறியாமல் துடிப்பவர்கள்,  விரோதிகளின் மத்தியில் மாட்டிக்கொண்டு உயிருக்கு பயந்து கொண்டு இருப்பவர்கள்,  நல்லவர்களின் சாபத்தினால்  பலவாறு அவதிப்படுபவர்கள்,  நோயினால் ஒவ்வொரு நாளும் துடித்து கொண்டு இருப்பவர்கள் அத்தனை பேர்களும் தங்களது கஷ்டங்கள் நீங்க இங்கு வந்து ஒரு நாள் முழுவதும் தயங்கி அர்ச்சனை ஆராதனை செய்து மனமுவந்து பிரார்த்தனை செய்தார் அவர்களுக்கு பகவான் கருடன் மூலம் பறந்து வந்து கஷ்டங்களைப் போக்கி உயிர்  காட்டு அருள்வார் என்பது உண்மை.

Quickly Find What You Are Looking For