திருக்கண்ணமங்கை பக்தவச்சலப் பெருமாள் கோயில் Tirukannamangai Bhaktavatsala Perumal Temple in Tamil

மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஸ்தலம் கும்பகோணம் திருவாரூர் மார்க்கத்திலிருந்து  சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.  திருச்சேறயிலிருந்து 24 கிலோ மீட்டர் தூரம்.  பகவான் திருவடி அடைந்தார் மோட்சம் கிடைக்கும் என்று பொதுவாகச் சொல்வார்கள்.  இந்த திருக்கண்ணமங்கை கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்தார் மோட்சம் கிடைத்து விடும் என்பது பெரியோர்களது வாக்கு.

 வெட்டாற்றின் தென் பகுதியில்  சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் 5 நிலை இராஜகோபுரம் மூன்று பிரகாரங்களுடன் மூலவர் பக்தவச்சலப் பெருமாள் நின்ற திருக்கோலம்.  பூமாதேவி அபிஷேகவல்லி என்று மற்றொரு பெயர்.  விமானம் உத்பல விமானம்.  தீர்த்தம் தர்சண புஷ்கரணி.  தலவிருட்சம் மகிழமரம்.  வரும் பகவானுக்கும் ரோமச முனிவருக்கும் நேரடியாக காட்சி கொடுத்த ஸ்தலம். எப்பேர்பட்ட அவர்களும் தங்களுக்கு மோட்சம் கிடைக்க வேண்டுமானால் இந்த ஸ்தலத்தில் ஒரு நாள் இரவு முழுவதும் தங்கி,  மறுநாள் பெருமாளை தரிசித்தால் போதும் என்பது ஐதீகம்.

சந்திரன் தனது குருவின் மனைவியுடன் தொடர்பு கொண்டதால் குருவின் சாபத்திற்கு ஆளாகி தன் எல்லாம் இழந்து கவலைப்பட்ட பொழுது,  பிரமதேவன் சந்திரனிடம் வந்து உலகத்தில் உள்ள திருக்கண்ணமங்கை ஸ்தலத்திற்குச் சென்று அங்குள்ள தர்சண புஷ்கரணியில் நீராடி பக்தவச்சலப் பெருமாளை சரண் சரண் அடைந்ததால் இறந்து கொண்டிருக்கும் ஒளியை மீண்டும் பெற முடியும் என்று வழிகாட்டினார்.  சந்திரனும் பிரமதேவர் சொன்னபடி இங்கு வந்து தங்கி பெருமாளை தரிசித்து குரு சாபம் நீங்க பெற்றான்.

நாத முனிவரின் சீடரான திருக்கண்ண  மங்கையாண்டான் இந்தத் ஸ்தலத்தில் ஆனி மாதம் திருவோணத்தன்று  அவதரித்தார்.  லட்சுமி தேவியும் பகவானை நோக்கி தவம் செய்த  ஸதலமென்பதால் 'லட்சுமிவனம்' என்ற பெயரும் இந்த ஸ்தலத்திற்கு உண்டு. சிவபெருமான் இங்கு நான்கு பக்கங்களிலும் நான்கு உருவம் கொண்டு பக்தவச்சலப் பெருமாளை காவல் காத்து வருவதாக சொல்லப்படுகிறது.  தாயார் சன்னதியில் தேன்கூடு ஒன்று உண்டு.  அதற்கு தினமும் பூஜை செய்யப்படுகிறது.  கோயிலுக்கு அழகுபடுத்தும் விமானம்,  மண்டபம் அரண்யம், ஸரஸஸு, ஷேத்திரம் ஆறு நகரம் ஆகிய ஏழு அம்சங்களும் இங்கு ஒன்று சேர கிடைப்பதால் இந்த ஸ்தலம் 'ஸப்தாபம்ருத க்ஷேத்ரம்' இன்று புராணங்களில் மிகப் பெருமையாக சொல்லப்படுகிறது.

பரிகாரம்

 வாழ்க்கையின் பயனே  மறுபிறவி வேண்டாம் என்பதுதான்.  மோட்சத்திற்கு சென்று விட்டால்  மறுபிறவி இல்லை.  எனவே மோட்சத்தை வேண்டுபவர்கள்,  குடும்பத் தொல்லைகளால் பாதிக்கப்பட்டு நிம்மதியை இழந்து கொண்டிருப்பவர்கள்,  மறைமுகமாக நோயினாலும் மற்றவர்கள் வெறுக்கத்தக்க நோயினாலும் பாதிக்கப்பட்டு திண்டாடிக் கொண்டிருப்பவர்கள்,  யாருக்கும் தெரியாமல்,  மனச்சாட்சிக்கு துரோகம் செய்துவிட்டு பாவத்தை செய்கிறவர்கள் அத்தனை பேரும் இந்த ஸ்தலத்திற்கு வந்து ஓர் இரவு தங்கி,  மறுநாள் விடியற்காலையில் பக்தவச்சலப் பெருமாளை தரிசித்தால் அவர்கள் 'மோட்சம்'  நிலைக்கு மரியாதையோடு  சென்றடைவார்கள் என்பது இத்தலத்தின் பெருமை.

Quickly Find What You Are Looking For