ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோயில் Srirangam Temple in Tamil
திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே ஐந்து கிலோமீட்டர் தூரத்தில், காவிரிக் கரையோரத்தில் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் கோயில் உள்ளது. இக்கோவில் 3072 அடி நீளம் 2520 அடி அகலம் கொண்டு, ஏழு பிரகாரங்களையும் 21 கோபுரங்களையும் கொண்டது. தெற்கு ராஜகோபுரம் 236 அடி கொண்டது. இக்கோயிலின் கருவறை 240 அடி நீளம் 180 அடி அகலமும் கொண்டது.
மூலவர் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கி ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டு காட்சி அளிக்கிறார். உற்சவர்நம் பெருமாள், தாயார் ஸ்ரீரங்க நாச்சியார், தீர்த்தம் சந்திர புஷ்கரணி காவிரி கொள்ளிடம், கோயிலின் விமானம் ப்ரணவாக்ருதி, தலவிருட்சம் புன்னை மரம்.
சூரிய குலத்தைச் சேர்ந்த மனுகுமாரன் இஷ்வாகு. இவன் பிரம்மனை நோக்கி தவம் புரிந்து திருமாலின் திருவாராதன விக்ரகத்தை கேட்டு வாங்கி அயோத்தியில் வைத்து வழிபட்டு வந்தான். இந்த விக்ரகத்தை ஸ்ரீராமபிரான் வழிபட்டார்.
ஸ்ரீராமன், இராவணனை என்று சீதாபிராட்டியை மீட்டு அயோத்திக்கு வந்த பொழுது நம் முன்னோர்கள் வழிபட்டு வந்த திருமாலின் எதிர்பாராத திருவாராதன விக்ரகத்தை. அன்புக் காணிக்கையாக விபீஷணனுக்கு வழங்கினார். விபீஷணன் அதை எடுத்து இலங்கைக்கு கொண்டு செல்லும் பொழுது, காவேரி, கொள்ளிடம் நதிக்கரையில் வைத்து இளைப்பாறினார். மீண்டும் அந்த விக்கிரகத்தை எடுக்க முயன்ற பொழுது அதை எடுக்க முடியவில்லை. " தான் இனிமேல் இங்குதான் நிரந்தரமாக இங்கேயே இருக்கப் போவதாக" பெருமாளே விபீஷணனிடம் கூறியதால் விபீஷணன் மனமுவந்துஅந்த விக்ரக பெருமாளை வணங்கி விட்டு விட்டு இலங்கைக்குச் சென்றார். பெரும்பாலும் விபீஷணனுக்கு அருளும் வகையில் இலங்கையை நோக்கித் தன் வாழ்வை வரும்படி சயனித்தக் கொண்டார்.
சோழநாட்டு அரசனான தர்மவர்மன் பெருமாளுக்கு முதலில் சிறு கோயிலைக் கட்டினான். இதற்குப் பிறகு சேர, பாண்டிய அரசர்களும் இக் கோயிலை கட்டி முடிக்க அரும்பாடு பட்டனர். இது நாளடைவில் மிகப்பெரிய கோயிலாக உருவெடுத்தது. இன்றைக்கு வைணவத் தலங்களில் முதலாவது கோயிலாக, புகழ்பெற்ற 108 வைணவ தளங்களில் முன்னிலையில் நிற்கிறது.
பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கை, பேயாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம். கம்பனது இராமாயணம் அரங்கேற்றியதும் இங்கேதான்.
இராமானுஜர் இறுதியில் திருநாடு அடைந்தாலும் அவரது திருமேனியை வசந்த மண்டபத்தில்- கெடாதவாறு மூலிகைச் சாந்து பூசி இன்றுவரை வைத்திருக்கிறார்கள்.
பரிகாரம்
இத்தளத்திலுள்ள மூலவரை- வெள்ளி அதிகாலை விஸ்வரூப தரிசனம் கண்டு வந்தால் திருமணமாகாதவர்களுக்கு புசுக்கிரதோஷம் விலகி திருமணம் நடக்கும் பணக்கஷ்டம் உள்ளவர்கள்-அந்த சங்கடத்திலிருந்து மீண்டு விடுவார்கள். வெளிநாடு சென்று முன்னுக்கு வரவேண்டும் என்ற துடிப்பவர்கள், வேலை தேடுபவர்கள், சொந்தத் தொழில் செய்ய ஆசைப்படுபவர்கள் அனைவருக்கும் யோகத்தை சௌபாக்கியத்தையும் தரக்கூடிய ஸ்தலம் இது என்பது மிகப் பெரிய சிறப்பு.
மூலவர்: ஸ்ரீ ரங்கநாதன் (பெரிய பெருமாள், நம்பெருமாள், அழகிய மணவாளன்) புஜங்க சயனம்(ஆதிசேஷன் சயனத் திருக்கோலம்) தெற்கே திருமுக மண்டலம்.
உற்சவர்: நம்பெருமாள் என்ற சிறப்பு பெயருடன் நின்ற திருக்கோலம்.
தாயார்: ஸ்ரீ ரெங்கநாயகி (ரங்க நாச்சியார்).
தீர்த்தங்கள்: சந்திர புஷ்கரணி, காவிரி, கொள்ளிடம், வேதச்ருங்கம்.
ஸ்தல விருட்சம்: புன்னை.
மங்களாசாசனம்: பத்து ஆழ்வார்களும் ஆண்டாளும் (மதுர கவி ஆழ்வார் தவிர).
பெரியாழ்வார்: 183, 189, 212, 245, 402- 432.
ஆண்டாள்: 607- 616.
குலசேகர ஆழ்வார்: 647- 676, 728.
திருமழிசை ஆழ்வார்: 872, 800-806, 844, 870, 2384, 2411. 2417, 2441.
தொண்டரடிப்பொடியாழ்வார்; 872- 926.
திருப்பாணாழ்வார்: 927-936.
திருமங்கையாழ்வார்: 1019, 1213, 1378, -1427, 1506, 1571, 1664, 1829, 1978, 2029, 2038, 2043, 2044, 2050, 2062, 2063, 2065, 2069, 2070, 2073-76, 2673 (71), 2674 (118).
பொய்கை ஆழ்வார்: 2087.
பூதத்தாழ்வார்: 2209, 2227, 2251, 2269.
பேயாழ்வார்: 2342, 2343.
நம்மாழ்வார்: 2505, 3348-58.
மொத்தம் 247 பாசுரங்கள்.