திருக்கோழி அல்லது திரு உறையூர் Azhagiya Manavala Perumal Temple Woraiyur in Tamil

சோழ நாட்டு திருப்பதிகளில் இரண்டாவது இடத்தைப் பெறுவது திருக்கோழியிலுள்ள அழகிய மணவாளப் பெருமாள் கோயில்.  திருச்சி மாநகருக்கு அருகிலேயே சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.  நகரின் அருகே இருக்கும் இந்த திருக்கோயில் மிகவும் பழமையானது.  பார்க்க கொடுத்து வைக்க வேண்டிய புண்ணிய ஸ்தலம்.

கோயிலின் மூலவர் அழகிய மணவாளப் பெருமாள்.  பெயருக்கேற்ற படியே  கண்ணுக்கும்  மனதிற்கும் இனியவராகவே  காட்சி தருகிறார்.  நின்று சேவை சாதிக்கும் திருக்கோலம்.  சக்கரத்தை ப்ரயோகிக்கும்  நிலையில் இருக்கின்ற கோலம்.  வடக்கே  திருமுகமண்டலம். தாயார்  கமலவல்லி   நாச்சியார்.  மற்றொரு பெயர் உறையூர்வல்லி என்பதாகும்.  இந்த கோயிலில் தாயாருக்கு என்று தனி சன்னதி எதுவும் இல்லை.  சதா சர்வ காலம் அருள் பொங்கும் புன்னகை திருக்கோலத்தில் காட்சியளிப்பதால் மனதிற்கு மிக ரம்மியமான தரிசனம்.

 கல்யாண தீர்த்தம்,  சூரிய புஷ்கரணி,  குடமுருட்டி நதி இந்த கோயிலில் தீர்த்தமாகும்.  தேவர்களுக்கெல்லாம் அருள் பாலிக்கும் திருத்தலம் என்று பெருமையும் உண்டு.  கோயிலின் விமானம் கல்யாண விமானம்.

 சோழ மன்னனின் திருமகளான கமலவல்லிக்கு  பெருமாள் மீது தீராத காதல்.  மணந்தால்  பெருமாளைத்தான் மணப்பேன் என்று கடுமையான விரதம் பூண்டால்.  எவ்வளவு பேர்  தடுத்தும் கேட்காமல் விரதம் எல்லை மீறி தாண்டி போக  இனியும் கமலவல்லியை சோதிக்கக் கூடாது என்று அழகிய மணவாளப் பெருமாள்,  மனமிரங்கி கமலவல்லியை திருமணம் செய்து கொண்டதாக வரலாறு.  திருமணத்திற்குப் பின் கமலவல்லி நாச்சியார் என்று புதுப் பொலிவு பெற்றார்.

 திருப்பாணாழ்வார் அவதாரம் செய்த  திருத்தலம் என்பதால் அவருக்கு இங்கு தனி சன்னதி இருக்கிறது.  ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத்திற்கு முதல் நாள் ஸ்ரீரங்கத்திலிருந்து ஸ்ரீரங்கநாத உத்சவ மூர்த்தி இந்தக் கோவிலுக்கு பிறந்ததிலிருந்து கல்யாண உற்சவம் கண்டு பக்தர்களை அருள்பாலிப்பது வழக்கம்.  மிகவும் பழமையும் அபாரமான சக்தியையும் உள்ளடக்கிய இந்த திரு உறையூர் அழகிய மணவாள பெருமானுக்கு திருமங்கையாழ்வாரும் குலசேகர ஆழ்வாரும் மங்களாசாஸனம் செய்திருக்கிறார்கள்.

பரிகாரம்

 முற்பிறவியின் தோஷம்  காரணமாக திருமணம் நடக்காமல் தவித்துக் கொண்டிருப்பவர்களுக்கும்,  திருமணமாகி,  சூழ்நிலையால் பிரிந்து வாழ்பவர்களுக்கும்,  இளம் வயதிலேயே தோல் நோயால் துன்பப்படுபவர்களுக்கும்  அழகிய அறிவுள்ள குழந்தை பிறக்க வேண்டும் என்பவர்களுக்கும்  அனுக்கிரஹம் கிடைக்கும் ஒரே கோயில் இந்த அழகிய மணவாளப் பெருமாள் கோயில் தான்.  குறிப்பாக புதன் சனியன்று  இந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்பவர்களுக்கு அடுத்த பிறவி என்பது இருக்காது என்று நம்பப்படுகிறது.

 விசேஷங்கள்

 சோழ மன்னனின் திருமகளான கமலவல்லி நாச்சியார் ஸ்ரீ ரங்கநாதன் மீது காதல் கொண்டு,  விரதம் இருக்க அழகிய மணவாளன் இங்கு வந்து திருமணம் புரிந்து கொண்டதாக ஸ்தல புராணம். திருப்பாணாழ்வாரின் அவதாரத் தலமாகிய இங்கு அவருக்கும் ஒரு  தனி  சன்னதி இருக்கிறது.  வருடம் தோறும் பங்குனி உத்திரத்திற்கு முதல் நாள் ஸ்ரீரங்கத்திலிருந்து ஸ்ரீ ரங்கநாதர் உற்சவர் எழுது எழுந்தருளி கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.  வெட்காளியம்மன் என்ற பெயரில் மாரியம்மன் கோயில் ஒன்று இவ்வூரில் உள்ளது.

Quickly Find What You Are Looking For