108 திவ்ய தேசம் : 108 Divya Desam in Tamil

 எம்பெருமான் எங்கும் நிறைந்து  எப்பொருளிலும் எழுந்தருளி இருக்கின்ற போதிலும்,  குறிப்பிட்ட சில  தலங்களும் அங்குள்ள திருக்கோயில்களும் விசேஷமான திறமை பெற்றவராக தொன்று தொட்டு கருதப்பட்டு வருகின்றன.  இதனால்தான் நமது வணக்கத்திற்குரிய ஆழ்வார் பெருமக்களும் ஆச்சாரிய மகான்களும் அந்த புனித தலங்களுக்கு யாத்திரையாகச் சென்று,  பெருமாளை சேவித்து,  துதித்து பாசுரங்கள் பாடினார்கள்;  கிரந்தங்கள் ஏற்றினார்கள்.  அதன் விளைவாக அந்த தலங்கள் புனித நிலையிலிருந்து உயர்ந்து,  தெய்வீக நிலையை அடைந்து,  திவ்ய தேசங்கள் என்று  போற்றப்பட்டலாயின.

சோழநாட்டு திருப்பதிகள்

1

ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோயில

 ஸ்ரீ வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதாக "கோயில் " என்ற சிறப்புப் பெயரும்  விளங்குவதும் காவிரி கொள்ளிடம் நதிகளின் நடுவில் அமைந்ததுமான இக்கோயில் சென்னை-திருச்சி  அகல ரயில் பாதையில் திருவரங்கம்  ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  திருச்சியிலிருந்து பேருந்தில் சென்றார் கோயில் தெற்கு கோபுர  வாசலிலேயே இறங்கலாம்.  இங்கு சத்திரங்கள்,   இராமானுஜர் கூடங்கள்  மற்றும் ஹோட்டல்கள் முதலிய எல்லா வசதிகளும் உள்ளன.   

2

திருக்கோழி அல்லது திரு உறையூர்

 இது திருச்சி மாநகராட்சியில் ஒரு பகுதி.  டவுன் ஜங்ஷன ்-    மெயின் கார்டுகேட் மார்க்கத்தில் உறையூர் அல்லது நாச்சியார் கோயில் என்ற இடத்தில்  இறங்கலாம்.  திருச்சி ஜங்ஷனில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம்.

3

திருக்கரம்பனூர் (உத்தமர் கோயில்)

  இது திருச்சி அருகில்  கார்டு லைனில் உள்ள ஒரு சிறிய ஸ்டேஷன்.  ஸ்ரீரங்கத்திலிருந்து வழக்கு 3/4 கிலோமீட்டர்.  திருச்சியிலிருந்தும் ஸ்ரீரங்கத்திலிருந்து திருவெள்ளறை போகும் பஸ் வழியில் இங்கு இறங்கலாம்.

4

 திருவெள்ளரை(புண்டரீகாக்ஷன் பெருமாள் கோயில்)

 திருச்சியிலிருந்து துறையூர் போகும் பேருந்துப் பாதையில் சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.  டவுன் பஸ்களும் செல்கின்றன.  ஸ்ரீரங்கத்திலிருந்து உத்தமர் கோயில் வழியாகவும் பஸ்ஸில் செல்லலாம்.  இங்கு வசதிகள் எதுவும் இல்லை.  திருச்சியில் தங்கி சேவித்து விட்டு திரும்பிப் போகலாம்.  பெரிய  மதில்களுடன் கூடிய விசாலமான இக்கோயில்,  பேருந்து பாதையில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

5

திரு அன்பில்(திருவடிவழகிய நம்பி பெருமாள் கோயில்)

 திருச்சி- கல்லணை,  கும்பகோணம் பஸ் மார்க்கத்தில் உள்ளது.  திருச்சிக்கு சமீபம் லால்குடிக்கு  கிழக்கே 8 கிலோமீட்டர். திருச்சியில் தங்கி  பேருந்தில் சென்று சேவித்துவிட்டு திரும்பலாம்.  நடராஜபுரம் என்ற ஊருக்குப் போய் அங்கிருந்தும் 3/4 கிலோமீட்டர்   அன்பில் அடையலாம்.  இங்கு சத்திரம்,  ஹோட்டல்கள் முதலிய  வசதிகள் ஒன்றும் இல்லை.  கொள்ளிடக் கரையில் உள்ள கோயிலடியில் இருந்தும் நதியைக் கடந்து வரலாம்.

6

திருப்பேர் நகர் (கோவிலடி)

 அன்பிலிருந்து  கொள்ளிடத்திற்கு அக்கறையில் ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.  தோஹுர் -  திருக்காட்டுப்பள்ளி - தஞ்சை பஸ்ஸிலும் வரலாம்.  திருக்காட்டுப்பள்ளியில் இருந்து கல்லணை போகும் சில பேருந்துகள் கோயிலடி வழியே செல்கின்றன.  அரை மணி நேரத்திற்கு ஒரு முறை வேன் வசதி உண்டு. தஞ்சாவூர்,  கும்பகோணத்தில் இருந்தும் (திருவையாறு,  திருக்காட்டுப்பள்ளி வழியாக)  போகலாம்.  கோவிலுக்கு மிக அருகாமையில்  பேருந்து   நிற்கிறது. .  கார் வசதி உள்ளவர்கள் திருச்சியில் இருந்து போகலாம் " திருப்பேர் நகர்"  என்றான் யாருக்கும்  தெரியாது;  ஆகையால் " கோயிலடி"  என்று சொல்ல வேண்டும்.  கோயில் காவிரிக் கரையின் மேல் ஒரு மேட்டின் மேல் இருக்கிறது.  குளிக்க வசதி உண்டு.

7

திருக்கண்டியூர் அரன் சாபம் தீர்த்த பெருமாள்

 தஞ்சையிலிருந்து வடக்கு திருவையாறு செல்லும் பேருந்தில் 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.  டவுன் பஸ் வசதி உள்ளது.  தஞ்சையிலோ  திருவையாற்றிலோ (இங்கிருந்து சமீபம்)  தங்கி  சேவிக்கலாம்.

8

திருக்கூடலூர் வையம் காத்த பெருமாள்

 தஞ்சாவூரிலிருந்து பேருந்து மருதமலை திருவையாறு சென்று அங்கிருந்து கும்பகோணம் செல்லும் பேருந்தில் 11 கிலோ மீட்டர் தூரத்தில்  இவ்வூரை அடையலாம்.  அல்லது தஞ்சாவூர்- கணபதி அக்ரஹாரம் மார்க்கம் டவுன் பஸ்ஸில் செல்லலாம்.  இவ்வூருக்கு அய்யம்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து வடக்கே ஆறு கிலோமீட்டர் வண்டியில் செல்லலாம்.  இங்கு தங்கும் வசதிகள் ஒன்றுமில்லை.  தஞ்சாவூர் அல்லது திருவையாற்றின் தங்கி சேவிக்கலாம்.

9

 திரு கபிஸ்தலம்(ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில்)

 பாபநாசம் ரயில் நிலையத்திலிருந்து வண்டியில் வரலாம்.  கும்பகோணத்தில் இருந்தும் திருவையாறு பேருந்தில் வரலாம்.  சத்திரங்கள்,  தடைகள் உண்டு.   கும்பகோணத்திலிருந்து,  பாபநாசத்திலிருந்தும்  டவுன் பஸ் வசதி உண்டு.

10

திருப்புள்ளம் பூதங்குடி(திருப்புள்ளம் பூதங்குடி பெருமாள் கோயில)

 கும்பகோணத்திலிருந்து சுவாமி மலை வழியாக திருவைகாவூர் செல்லும் டவுன் பஸ் பாதையில் சுவாமிமலைக்கு  அப்பால் 4  அல்லது 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.  ஸ்ரீ அகோபில மடத்தின் நிர்வாகத்தில் இருக்கிறது.  மடத்தின் வசதிகள் உண்டு.  திரு ஆதனூர் சமூகத்திலேயே உள்ளது.

11

திரு ஆதனூர்(ஆண்டளக்கும் ஐயன் பெருமாள் கோயில்)

 சுவாமிமலையிலிருந்து குமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.  இங்கு வசதிகள் எதுவும் இல்லை.  இந்தக் கோயில் அகோபில மடத்தின் நிர்வாகத்தில் உள்ளது.  பயணத்தில் திருப்புள்ளம்  பூதங்குடியோடு  பேருக்கு சேமிக்கலாம்.

12

திருக்குடந்தை(ஸ்ரீ சாரங்கபாணி பெருமாள் கோயில்)

  கும்பகோணம் ரயில் நிலையத்திலிருந்து இக்கோயில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.  இந்த ஊரில்,  ஹோட்டல்,  சத்திரம் முதலிய பல வசதிகள் உண்டு.  பல பகுதிகளில் இருந்தும்  பேருந்துகள்  வருகின்றன.

13

திருவிண்ணகர் (உப்பிலியப்பன் கோவில்)

 இங்கு தங்கும் வசதி உண்டு.  கும்பகோணத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதால் அங்கேயே தங்கி  காரிலோ பேருந்திலோ இங்கு வரலாம்.  திருநாகேஸ்வரம் நிலையத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர்.  ஆனால் வாகன வசதி மிகக் குறைவு.

14

திருநறையூர் (நாச்சியார் கோவில்)

 கும்பகோணத்திலிருந்து 10 கிலோ மீட்டர்  தூரத்தில் உள்ளது.  டவுன் பஸ் மற்றும் பல வெளியூர் பேருந்துகளிலும்(முக்கியமாக,  குடவாசல், திருவாரூர் வழி) போகலாம்.  எல்லா வசதிகளும் உண்டு.  உப்பிலியப்பன் கோயிலில்  இருந்தும் நகரப் பேருந்தில் போகலாம். 

15

 திருச் சேறை(திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில்)

 நாச்சியார் கோயிலில் இருந்து சுமாராக பத்து கிலோமீட்டர்.  கும்பகோணத்திலிருந்து  தென் கிழக்கில் 24 கிலோ மீட்டர் தூரத்தில் திருவாரூர் நெடுஞ்சாலையில் உள்ள இவ்விடத்திற்கு நகரப் பேருந்து மூலம் செல்லலாம். சத்திரம் ஹோட்டல்களும் உண்டு. குடவாசல் என்ற நகரம் மிக அருகில் உள்ளது.  முடிகொண்டான் ஆற்றுக்கும்  குடமுருட்டி ஆற்றுக்கும் இடையில்  அமைந்துள்ளது.

16

திருக்கண்ணமங்கை பக்தவச்சலப் பெருமாள் கோயில்

 திருச்சேறையிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர்.  கும்பகோணத்திலிருந்து சுமார் 40 கிலோமீட்டர்.,  திருவாரூர் பேருந்து நிலையத்திலிருந்து வடமேற்கு சுமார் ஏழு கிலோமீட்டர் கும்பகோணம்- திருவாரூர் பேருந்து மூலம் வரலாம்.  நகரப் பேருந்து வசதி உண்டு.  குடவாசலில்  இருந்தும் வரலாம்.

17

திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோயில்

  நாகப்பட்டினத்தில் இருந்து நன்னிலம் போகும் பேருந்தில் திருப்புகலூர் (திருப்புகூர்)  என்ற இடத்தில்   இறங்கி இரண்டு கிலோமீட்டர் போக வேண்டும்.  நன்னிலம் ரயில்வே நிலையத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் தூரம்.  மாயவரத்தில் இருந்து சன்னா நல்லூர் வழியாக திருப்புகலூர் வரலாம்.  இங்கு வசதிகள் ஒன்றுமில்லை.  நன்னிலத்தில் தங்கி சேவிக்கலாம்.  குடவாசல் இருந்தும்  பேருந்து வசதி வசதி உண்டு.

18

திருக்கண்ணங்குடி லோகநாதப் பெருமாள் கோவில

 திருவாரூருக்கு 14 கிலோமீட்டர் கிழக்கு.  நாகப்பட்டினத்திலிருந்து திருவாரூர் பேருந்து வழியாக சிக்கிலுக்கும்  கீவளுருக்கும் இடையேயுள்ள  ஆழியூர் என்ற இடத்தில் இறங்கி அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்தோம் வண்டியிலோ செல்லலாம்.  தஞ்சாவூர் கீவளூர் ரயில் பாதையில் உள்ள கீவளூர்  ரயில் நிலையத்திலிருந்து மூன்று கிலோமீட்டர்  சென்றோம் அடையலாம். இங்கு வசதிகள் ஒன்றுமில்லை.

19

திரு நாகப்பட்டினம் சவுந்தரராஜப் பெருமாள் கோயில்

 இங்கு வசதிகள் இருந்தும்,  அதிக ஸ்தலங்கள் அருகில் இல்லாததால்  மாயவரத்தையே மைய இடமாக கொள்வது நல்லது.  மாயவரத்தில் இருந்து  பேருந்தில் வந்து இறங்கினால் பேருந்து நிலையத்திற்கு  எதிர்  தெருவில் சற்று தூரத்தில் நன்கு நிர்வகிக்கப்படும்,  அழகிய பெரிய கோவில் (நாகப்பட்டினம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 2 மைல் தூரம்) உள்ளது.

20

திருத்தஞ்சை மாமணிக் கோவில்

 தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் நாலு கிலோ மீட்டர் தூரத்தில் வெண்ணாற்றங்கரையில் உள்ளன இந்த மூன்று கோயில்கள்.  இதற்கு அருகாமையில் ஒரே ஒரு திவ்ய தேசம் தான் இருப்பதால் மைய இடமான கும்பகோணத்திலிருந்து வந்து  சேவிக்கலாம்.  கும்பகோணம் -  தஞ்சாவூர் பேருந்தில் வரும்போது தஞ்சாவூர் எல்லையில் வெள்ளாற்றங்கரையில் இறங்கிக் கொள்ளலாம்.  தஞ்சாவூரிலிருந்து நகரப் பேருந்தில் வரலாம்.  மூன்று கோயில்கள் சேர்ந்து ஒரே திவ்ய தேசமாக பாடல் பெற்றுள்ளன.  மூன்றும் அருகருகே உள்ளன.

21

திருநந்திபுர விண்ணகரம்

 கும்பகோணத்திலிருந்து பேருந்தில் கொருக்கை என்ற ஊருக்கு வந்து  அங்கிருந்து 2.5  கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டும்.  வழியில் ஒரு வாய்க்காலை கடக்க வேண்டும்.  நகரப்  பேருந்திலோ வண்டியிலோ(மினி பஸ்)  கும்பகோணத்தில் இருந்து வரலாம்.

22

திருவெள்ளியங்குடி

 கும்பகோணம் அல்லது திருப்பனந்தாளிலிருந்து அணைக்கரை செல்லும் பேருந்தில் சேங்கானூரில்  இறங்கி ஒரு கிலோ மீட்டர் நடந்து திருவெள்ளியங்குடி செல்ல வேண்டும்.  முட்டக்குடியில் இறங்கியும்  வண்டியிலும் வரலாம்.  கும்பகோணத்திலிருந்து நகரப் பேருந்துகளும் சேங்கானூருக்கும்,   கோயில் அருகிலும் இப்போது செல்கின்றன.

23

திருவழுந்தூர் (தேரழுந்தூர்)

 மாயவரத்திலிருந்து  தென்மேற்கு 21 கிலோ மீட்டர் நகரப் பேருந்தில் போகலாம்.  அகோபில மடம் உண்டு.  கும்பகோணத்திலிருந்து மாயவரம் போகும் பேருந்திலும் போகலாம்.  இங்கு அவ்வளவு சவுகரியம் இராது.

24

திருச்சிறுபுலியூர்

 மாயவரம்- திருவாரூர் ரயில் பாதையில் கொல்லுமாங்குடி நிலையத்திலிருந்து மூன்று கிலோமீட்டர்.  மாயவரத்தில் இருந்து நகரப் பேருந்தில் கொல்லுமாங்குடி போகலாம்.  இங்கு வசதிகள் ஒன்றுமில்லை.  மாயவரத்தில் தங்கி  சேவிப்பது நலம்.

25

 திருத்தலைச் சங்க நாண்மதியம்

 மாயவரத்தில் இருந்து ஆக்கூர்  போய் அங்கிருந்து சீர்காழி செல்லும் சாலையில் மூன்று கிலோமீட்டர் சென்று இவ்வூரை அடையலாம்.   ஆக்கூரிலிருந்து நகரப் பேருந்து வசதி உண்டு.  சீர்காழியிலிருந்து பேருந்தில்  ஆக்கூர் வரலாம் யாரு.  பூம்புகார் -  மேலையூர் வழி.  இவ்வூரில் வசதிகள் ஒன்றும் இல்லை.  தலச்சங்காடு என்றால்தான் தெரியும்.  தளத்தின் காட்டிலிருந்து மண் சாலை வழியாகச் சென்று தூரத்தில் வயலுக்கு நடுவே இக்கோயில் உள்ளது. 

26

திரு இந்தளூர் (மயிலாடுதுறை)

 இது மாயவரம்  நகராட்சியின் ஒரு பகுதி.  நகரப் பேருந்தில் போகலாம்.  அவருக்கு அக்கரை.

27

திருக்காவளம்பாடி (திருநாங்கூர்)

 சென்னை -  மயூரம் ரயில் பாதையில் வைத்தீஸ்வரன் கோயில் ரயில் நிலையத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது.  சீர்காழி நிலையத்தில் கிழக்கே 10 கிலோ மீட்டர்.  சீர்காழியில் இருந்தோம்,  திருவெண்காட்டிலிருந்து பஸ்ஸில் வரலாம்.  திருநகரியிலிருந்து வண்டிப்பாதை உள்ளது.  இங்கு வசதிகள் எதுவும் இல்லை.

28

 திருக்காழிச்சீராம விண்ணகரம் (சீர்காழி)

 சீர்காழி ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர்  தூரத்தில் உள்ளது.  பஸ்சில் சென்றால் கோயில் சன்னதி வாசலிலேயே இறங்கலாம். அனைத்து வசதிகளும் உள்ளது.

29

திரு அரிமேய விண்ணகரம்

 சீர்காழி நிலையத்திலிருந்து தென்கிழக்கே 8 கிலோமீட்டர் தொலைவில் திருநாங்கூருக்குள்ளேயே உள்ளது.  குடமாடுகூத்தர் கோயில் என்றுதான் பலருக்கும் தெரியும்.  சீர்காழியிலிருந்து நகரப் பேருந்துகள் செல்கின்றன.

30  திருவண் புருஷோத்தமம்

 இந்த தலமும் சீர்காழியில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில்  திருநாங்கூரிலேயே உள்ளது.  பேருந்து வசதிகள் உண்டு.

31

திருசெம்பொன் செய்கோவில் (திருநாங்கூர்)

 இதுவும் சீர்காழியிலிருந்து எட்டு கிலோமீட்டர் தூரத்தில்   திருநாங்கூரிலேயே உள்ளது.  பஸ் வசதி உண்டு.

32

திருமணி மாடக் கோவில்(திருநாங்கூர்)

 சீர்காழியில் இருந்து சுமார் எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் திருநாங்கூருக் குள்ளேயே உள்ளது.  திரு நாராயண பெருமாள் கோயில் என்று பிரசித்தம்.  தங்குவதற்கு ராமானுஜ கூடம் உண்டு.  உணவு வசதிகளை கோயில்களில் தான் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.  சீர்காழியில் இருந்து  நகரப் பேருந்து வசதி உண்டு.

33

 திரு வைகுந்த விண்ணகரம் (திருநாங்கூர்)

 சீர்காழியிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.  பஸ் வசதிகள் உண்டு. இதுவும் திருநாங்கூர் நிலையே உள்ளது.

34

 திருவாலி  திருநகரி

 திருவாலி:  சீர்காழி -  திருவெண்காடு பேருந்து சாலையில் உள்ளது.  சீர்காழி நிலையத்திலிருந்து  தென்கிழக்கு எட்டு கிலோமீட்டர்.   திருநாங்கூரில் இருந்து பத்து கிலோமீட்டர்.  கீழ சாலையிலிருந்து 1.25 கிலோமீட்டர்.  இவ்வழி வந்தாள் திருநாங்கூரில் இருந்து  ஆறு கிலோமீட்டர்.  இங்கு வசதிகள் எதுவும் இல்லை.

35

திருத்தேவனார் தொகை

 சீர்காழி நிலையத்தில் இருந்து  தென்கிழக்கே 6 கிலோமீட்டர். சீர்காழி- திருவெண்காடு பேருந்து மார்க்கத்தில் திருவாலியில்  இறங்கி முக்கால் மைல் வண்டியில் வரலாம்.  திருநாங்கூரில் இருந்து நான்கு கிலோமீட்டர் வண்டிப்பாதை.  இங்கு வசதிகள் எதுவும் கிடையாது.

36

திருமணிக்கூடம் (திருநாங்கூர்)

 சீர்காழியில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருநாங்கூர்  எல்லையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

37

திருத்தெற்றியம்பலம் (திருநாங்கூர்)

 சீர்காழியில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள  திருநாங்கூரிலேயே  உள்ளது.  திருத்தெற்றியம்பலம் என்ற பெயர் பலருக்குத் தெரியவில்லை.  பள்ளிகொண்ட பெருமாள் என்று பிரசித்தம்.  கீழ வீதியில் இருந்து மேற்கே செல்லும் சாலையில் உள்ளது.

38

திருவெள்ளக் குளம் (அண்ணன் பெருமாள் கோயில்)

 சீர்காழி நிலையத்திலிருந்து தென்கிழக்கில் பத்து கிலோமீட்டர். சீர்காழி நாகை  பேருந்துகள் அனைத்திலும் செல்லலாம்.

39

திரு பார்த்தன் பள்ளி (திருநாங்கூர்)

 சீர்காழியிலிருந்து 13 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.  இடையில் சிறிய காவிரி ஆற்றை கடந்து வரவேண்டும்.  திருவெண்காட்டிலிருந்து தென்மேற்கே 3 கிலோமீட்டர்.  கப்பி பாதை உண்டு.  சிறிய  ஊர். வசதிகள் எதுவும் இல்லை.

40

 திருச்சித்ரக் கூடம்(சிதம்பரம்)

 சென்னை - திருச்சி மெயின் லைனில் சிதம்பரம் ரயில்வே நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் தில்லை நடராஜர் கோயிலுக்குள் உள்ளது.  பல ஊர்களில் இருந்தும்  பேருந்து வசதிகள் உண்டு.  சத்திரங்கள்  ஹோட்டல்கள் எல்லா  வசதிகளும் உள்ள பெரிய நகரம்.

நடுநாட்டுத் திருப்பதிகள்

41

திருவஹீந்த்ரபுரம்

 சென்னையில்- திருச்சி  மெயின் லைனில் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.  சென்னையிலிருந்து காரில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக பாண்டிச்சேரி,  கடலூர் வழியாக சென்று வரலாம்.  கடலூரில் தங்கியும் சேவிக்கலாம்  நகர பேருந்து வசதி உண்டு.

42

திருக்கோவலூர் (உலகளந்த பெருமாள் கோயில்)

 சென்னையில்- திருச்சி  மெயின் லைனில் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.  சென்னையிலிருந்து காரில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக பாண்டிச்சேரி,  கடலூர் வழியாக சென்று வரலாம்.  கடலூரில் தங்கியும் சேவிக்கலாம்  நகர பேருந்து வசதி உண்டு.

 

தொண்டை நாட்டுத் திருப்பதிகள்

43

திருக்கச்சி (அத்திகிரி-காஞ்சிபுரம்)

 செங்கல்பட்டு -  அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள இந்த நிலையில் சென்னை கடற்கரை -  காஞ்சிபுரம் ரயிலில் சென்றும் அடையலாம்.   சென்னையிலிருந்தும்  மற்றும் பல ஊர்களிலிருந்தும் காஞ்சிபுரத்திற்கு  பேருந்து வசதிகள் உண்டு.  சென்னை பெங்களூர் சாலையில் ஸ்ரீபெரும்புதூர்  தாண்டி தெற்கே பிரிவு.  எல்லா வசதிகளும் ஏராளமாக உண்டு.  பெரிய நகரம்.

44

அஷ்ட புயகரம் (காஞ்சிபுரம்)

 காஞ்சியிலேயே வரதராஜர் சன்னதியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் மேற்கே ரங்கசாமி குலத்திற்கு தெற்கே உள்ளது.  ஹாட்ஸன்பேட்டை தேரடிக்கு அருகில் உள்ளது.

45

 திருத்தணிகா (காஞ்சிபுரம்)

 காஞ்சியிலேயே அஷ்டபுயகரத்திலிருந்து முக்கால் கிலோமீட்டர் தூரத்தில் மேற்கே உள்ளது.

46  திருவேளுக்கை (காஞ்சிபுரம்)
47 திறுநீரகம் (காஞ்சிபுரம்)
48 திருஊரகம் (காஞ்சிபுரம்)
49 திருப்பாடகம் (காஞ்சிபுரம்)
50 திரு நிலாத் திங்கள் துண்டம்(காஞ்சிபுரம்)
51  திருவெட்கா (காஞ்சிபுரம்)
52 திருக்காரகம் (காஞ்சிபுரம்)
53 திருக்கார்வானம் (காஞ்சிபுரம்)
54 திருக் களவனூர் (காஞ்சிபுரம்)
55 திருப்பவள வண்ணம் (காஞ்சிபுரம்)
56  திருப்பரமேஸ்வர விண்ணகரம் (காஞ்சிபுரம்)
57  திருப்புட்குழி
58 திருநின்றவூர் (திண்ணனூர்)
59  திரு வெவ்வுள் (திருவள்ளூர் வீரராகவ பெருமாள கோவில்)
60 திருவல்லிக்கேணி பார்த்தசாரத திருக்கோயில்
61  திருநீர்மலை
62  திருவடந்தை நித்ய கல்யாணப் பெருமாள் கோவில்
63 திருக்கடல் மல்லை(மகாபலிபுரம்) தல சயனப் பெருமாள்
64 திருக்கடிகை

மலைநாட்டுத் திருப்பதிகள்

65 திருநாவாய் (திருநாவாய் நவ முகுந்தன் பெருமாள் கோயில்)
66  திருவித்துவ கோடு (திருவிச்சிக்கோடு)
67 திருக்காட்கரை (திரிகாக்கரா) திருக்காட்கரை காட்கரையப்பன் கோயில்
68 திருமூழிக்களம் ஸ்ரீ லட்சுமணப் பெருமாள் கோயில்
69 திருவல்ல வாழ் (திருவல்லா)
70 திருக்கடித்தானம்
71 திருச்செங்குன்றூர்
72 திருப்புலியூர் (குட்டநாடு) 
73 திருவாறன் விளா (ஆரம்முளா) திருக்குறளப்பன் பெருமாள் கோயில்
74 திருவண் வண்டூர் (திருவா முண்டூர்) பாம்பணையப்பன் பெருமாள் கோயில்)
75 திருவனந்தபுரம் திருவனந்தபுரம் பத்மநாபசாமி பெருமாள்
76 திருவட்டாறு திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள்
77 திருப்பதி சாரம் (திருவண் பரிசாரம்)

பாண்டிய நாட்டுத் திருப்பதிகள்

78 திருக்குறுங்குடி
79 திருச்சிரிவரவரமங்கை (வானமாமலை)
80 திருவைகுண்டம் (நவ திருப்பதி)
81 திருவர குணமங்கை (நவ திருப்பதி)
82 திருப்புளிங்குடி (நவ திருப்பதி)
83 திருத் தொலைவில்லி மங்கலம் (நவ திருப்பதி-  இரட்டை திருப்பதி)
84  திருக்குளந்தை (நவ திருப்பதி)
85 திருக்கோளூர் (நவ திருப்பதி)
86 தென்திருப்பேரை (நவ திருப்பதி)
87 திருக்குருகூர் (நவ திருப்பதி) (ஆழ்வார் திருநகரி)
88 திருவில்லிபுத்தூர்
89  திருத்தண்கால்
90 திருமோகூர்
91 திருக்கூடல் (கூடலழகர்)
92 திருமாலிருஞ்சோலை (அழகர் கோவில்)
93 திருக்கோஷ்டியூர்
94  திருப்புல்லாணி (தர்ப்ப சயனம்)
95 திருமெய்யம்

வடநாட்டுத் திருப்பதிகள்

96 திருவயோத்தி
97 திருநைமி சாரண்யம்
98  திருப்பிருதி
99 திருக் கண்டம்(கடிநகர் தேவப்ரயாகை)
100  திரு வதரியாச்ரம் (பத்ரிநாத்)
101 திரு சாளக்ராமம் (முக்திநாத்)
102 திருவடமதுரை
103 திருவாய்பாடி (கோகுலம்)
104 திருத்துவாரகை
105 திரு சிங்கவேள் குன்றம் (அஹோபிலம்)
106  திருவேங்கடம்
107 திருப்பாற்கடல்
108 திருப்பரமபதம்

 

Quickly Find What You Are Looking For