திருவாலி திருநகரி பெருமாள் கோயில் Thiruvali Thirunagarii Temple in Tamil

 திருவாலி

 திருவாலி சௌபாக்கியத்தை கேட்டபொழுதிலே  தரக்கூடிய கருணைக்கடல் திருமால் தான் வித்தியாசமில்லாமல் அள்ளிக் கொடுக்கும் அந்த பரந்த மனதுடன் பெருமாள் பக்தர்களை கண்டாள் சாதுவான பசு  அக்கிரமக்காரர்களை கண்டால் பசுவான்  சிம்மம்தான்.  பகவானை  நரசிம்ம அவதாரம் அதற்கான விரும்புவோருக்கு அமைந்த இடம் சீர்காழியில் இருந்து தென்கிழக்கு எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவாலி திருநகரில் உள்ள பெருமாள் கோயில் தான்.

 இந்த ஸ்தலத்திற்கு  ஆவி நாடு,  பில்வாரண்யம்  என்று வேறு பெயர்களும் உண்டு.  மூலவர் லட்சுமி நரசிம்மர்.  லக்ஷ்மி வலது பாகத்தில் தழுவிக்கொண்டு தரிசனம் தருகிறார்.  உற்சவர் திருமாலி  நகராளன்.  தாயார் அம்ருதகடவல்லி.  தீர்த்தம்  இலாஷணி புஷ்கரணி,  விமானம் அஷ்டாக்ஷர விமானம்.  இன்னொரு கோயில் திருநகரி  இரண்டும் தனித்தனியாக இருந்தாலும் ஆழ்வார்கள் ஒரே திவ்ய தேசமாக மங்களாசாசனம் செய்து இருக்கிறார்கள்.

  பஞ்ச லட்சுமி நரசிம்மா  சேத்திரத்தில் இதுவும் ஒன்று.  இரணியனை வதம் செய்து சீக்கிரம் அடங்காமல் இருப்பதைக் கண்டு தேவர்களும் முனிவர்களும் திருமகள் இடம் வேண்டியதால் பெருமாளின் சீற்றம் தணிக்க.  பிராட்டியார்  எம்பெருமானின் வலது தொடையில் வந்து அமர்ந்தார் இறைவனது சீற்றம் அடங்கியது.  தன் தொடையில் வந்தமர்ந்த தேவியை இறைவன் ஆலிங்கனம் செய்து கொண்ட திருக்கோலம் இந்த கோயிலில் காணப்படுகிறது.  திருமங்கை ஆழ்வார்  சூலி நாட்டை  தலைநகராகக் கொண்டு திகழ்ந்தார்.  எனவேதான் ஆழ்வாருக்கு ஆவி நாடான் என்ற பெயர்.  திருமங்கையாழ்வாரின் மனைவி வளர்ந்த இடம் என்ற பெருமையும் உண்டு.

 இன்னொரு சுவையான சம்பவமும் உண்டு.

 இறைவன் திருமகளை மணந்து கொண்டு அருகிலுள்ள திருநகரிக்கு வந்து கொண்டிருக்கும் பொழுது ' வேதராஜபுரம்'  என்னுமிடத்தில் வழிமறைத்து  பெருமாளிடம் வழிப்பறி செய்தார் திருமங்கையாழ்வார்.  பிறகு வந்திருப்பது திருமால் என்பதை உணர்ந்து வருந்த பெருமாள் திருமங்கை ஆழ்வாரை மன்னித்து உபதேசம் செய்த இடமும் இங்கு தான் உள்ளது.  இன்றைக்கும் அதனை நினைவுபடுத்துகிற வகையில் பங்குனி மாதம் உத்திரம் முதல் நாள் இரவு,  'வேடுபரி'  உற்சவம் நடக்கிறது.

 பரிகாரம்

குடும்ப மனக்கஷ்டம் உள்ளவர்கள்,  செய்கின்ற பணியில் பல்வேறு இடையூறுகளை சந்தித்து நிம்மதி இல்லாமல் தவிப்பவர்கள்,  எதிரிகளின் ஆவேச தாக்குதலால் தினமும் அவதிப்படுபவர்கள்,  வாழ்க்கையில் முன்னேற முடியாமல் பலரது  முட்டுக்கட்டைகளால்  மனம் நொந்து கொண்டிருப்பவர்கள்,  கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள்,  திருமண வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் இருப்பவர்கள்,  பில்லி சூனியம் ஏவல் போன்ற  துர்தேவதைகளால்   மாட்டிக்கொண்டு முழிப்பவர்கள்,  இந்த திருவாலியில் உள்ள பெருமாளை தரிசனம் செய்து கொண்டாள் அத்தனை கஷ்டங்களும்  அடியோடு விலகும்.

 திருநகரி

  பெருமாள் செய்யும்   திருவிளையாடல்களை அவ்வளவு எளிதில் நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது.  எப்பொழுது எந்த உருவில் வந்து நமக்கு அருள்பாலிப்பார்  என்றும் சொல்ல முடியாது.  முதலில் இது போதனையாக இருந்தாலும் பின்னர் அதுவே நமக்கு சொர்க்க வாசலுக்கு வழிகாட்டும்.  அப்படிப்பட்ட சோதனைகளை ஆழ்வார்கள் பெற்று புண்ணியம்  சேர்த்திருக்கின்றனர்.  திருமங்கையாழ்வாருக்கும்  பகவான் சோதனை செய்த பின்னர் குருவாக மாறி மந்திர உபதேசம் செய்த புனிதமான கோயில் திருநகரி என்பது.  இது சீர்காழிக்கு கிழக்கு ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

 லட்சுமிபுரம் வில்வாரண்யம் என்ற திருநகரிக்கு வேறு பெயர்கள் உண்டு.  புராணங்களில் ஆலிங்கனபுரம்  ஸ்ரீநகரி,  விக்னேஸ்வர நல்லூர் என்றிருக்கிறது.  உப்பனாற்றின்  தென்கரையில் மூன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள கோயில்.  மூலவர் வேதராஜன்,  திருமகள் பூமி தேவியுடன் மேற்கு நோக்கி வீற்றிருக்கிறார்.  ஐந்து பிரகாரங்கள் ஏழு நிலை,  ஐந்து நிலை,  மூன்று நிலை என்று கோபுரங்கள் இருக்கின்றன.  உற்சவர் கல்யாண ரங்கநாத பெருமாள்.  தாயார் அமுதவல்லி இறைவன் கல்யாண கோலத்தில் திருமங்கையாழ்வாருக்கு காட்சி கொடுத்த ஸ்தலம்.

 திடீரென்று காணாமல் போன திருமகளை தேடி எங்கும  அலைந்தும் காணாமல்,  கடைசியில் இத்தளத்திலுள்ள  புஷ்கரணியில் உள்ள தாமரை  மலருக்குள் மறைந்திருந்த  திருமகளை கண்டு திருமால் ஆலிங்கனம் செய்து கொண்டார்.  திருமங்கையாழ்வார் அவதரித்த ஸ்தலம்.  பஞ்ச நரசிம்ம  மூர்த்திகளில் இரண்டு மூர்த்திகள் இங்குண்டு.  பெருமாள்,  திருஞானசம்பந்தரை வாதத்தில் வென்று அவரிடம் பெற்ற வேலோடு  வேடனைப் போன்ற தோற்றத்தில்,   தாயார் குமுதவல்லி யுடன் காட்சியளிக்கிறார்.  திருநாங்கூர் 11 கருட சேவைக்காக திருநகரிலிருந்து  திருமங்கையாழ்வார் புறப்பட்டுச் செல்வார்.  குலசேகர ஆழ்வார்,  திருமங்கையாழ்வார் இராமானுஜர்,  ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஆகியோர் இந்த கோயிலுக்கு மங்களாசாசனம் செய்திருக்கிறார்கள்.  பங்குனி மாதம் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும்.

 பரிகாரம்

 வாழ்க்கையில் நிறைய சோதனைகளை பெற்று கொண்டிருப்பவர்களும்,  பெருமாளின் திவ்ய தரிசனம் தனக்கு எப்படியாவது கிடைக்க வேண்டும் என்று துடிப்பவர்களும்.  தெரிந்தோ தெரியாமலோ  பொன்னை இழந்து  பொருளை   இழந்து  வாடுபவர்களும்,  குடும்பத்தில் ஒற்றுமை  குலைந்து மனவேதனை பெற்றுக் கொண்டிருப்பவர்களும்  குழந்தைகள் மூலம், ' பெற்றோர் மூலம்  மனக் கஷ்டம் அடைந்து அதிலிருந்து மீளமுடியாமல் அவதிப்படுபவர்களும் பெருமாளுக்கு இங்கு வந்து கல்யாண உற்சவம் செய்து,  பெருமாளை  சரணடைந்தால் இக்கட்டான நிலையிலிருந்து விரைவில் மீண்டு விடுவார்கள்.  எதிர்காலத்தில் இனிமேல்  அப்படி ஒரு பிரச்சினை வராது என்பதும் கண்கூடு.

Quickly Find What You Are Looking For