ஸ்ரீ சாரங்கபாணி பெருமாள் பெருமாள் கோயில் Sarangapani Temple in Tamil

மங்களமாக இருக்க வேண்டும் என்றார் பெருமாளின் அனுக்ரகம் வேண்டும்.  தேவாதி தேவர்களுக்கும்  எக்காலத்திலும் இரவா நிலை வேண்டும் என்பதற்காக மோகினி அவதாரம் எடுத்து பாற்கடலில் கடைந்தெடுத்த அமிர்தத்தை வழங்கிய ஸ்ரீமன் நாராயணன் நல்லவர்களுக்காக அவர்கள் துன்பப்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் அவதாரம் எடுத்து காப்பாற்றுவார்.  இதற்கு அடையாளமாக இன்றைக்கும் அமிர்த குடத்தை தாங்கி நின்று சேவை சாதிக்கிறார் திருக்குடந்தையில். திருக்குடந்தை என்று அழைக்கப்பட்டு வரும் கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் அறியாதவர்கள் எவருமே இல்லை.

தஞ்சாவூரிலிருந்து வடகிழக்கில் சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் காவிரி ஆற்றின் தென் பகுதியில் சுமார் 100 ஏக்கர் நிலப்பரப்பில் கிழக்கு நோக்கி 147 அடி உயரம் கொண்ட 11 நிலை இராஜகோபுரமும்,  மூன்று பிரகாரங்களையும் கொண்டு மூலவர் ஸ்ரீ சாரங்கபாணி பெருமாள் பாம்பணையின் மீது பள்ளி கொண்டு அருள்பாலித்து வருகிறார் சக்கரபாணி.  இராமர்கோயில், ஸ்ரீ சக்கரபாணி திருக்கோயிலும் உண்டு. தாயார்  கோமளவல்லி.  ஹேமா புஷ்கரிணி என்னும் பொற்றாமரை குளம் உண்டு.  விமானம் வைதீக விமானம்.  வசந்த மண்டபம் நூறு கால் மண்டபம் உண்டு. 'சாரங்கம்'  என்னும் வில்லை ஏந்து நின்றதால் சாரங்கபாணி என்று பெயர் வந்ததாக ஒரு செய்தி உண்டு.  ஹே முனிவருக்கு ஒரு சன்னதி உண்டு. இவர்கள் மகளாகத் தோன்றிய திருமகளை இறைவன் மணந்து கொண்டதாக ஐதீகம்.
சுவாமியின்  கருவறை தேர்வில் பிரம்மாண்டமான சக்கரங்கள் கொண்ட திருத்தேர்  போன்று  காணப்படுகின்றது.  உத்தராயண, தட்சிணாயன வாசலென்று இரு வாசல் வழியே சென்று முறைப்படி வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.  12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிம்ம ராசியில் மக நட்சத்திரத்தில்' குரு'  வரும்பொழுது 'மகாமகம்'  என்னும் ஒரு பெரிய விழா கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீமத் நாதமுனிகள் இந்த காலத்தில்  பாடப்பட்ட நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ' இது பத்து' என்னும்  பொருள்பட ஒருவர் இருப்பதை கொண்டு இந்தப் பாடல்களைப் பாடியவர் யார்? என்று அறியாமல் வருத்தப்பட்டார்.  அப்போது பகவான் ஸ்ரீ இமந்நாத முனிகளின்  கனவில் தோன்றி ஆழ்வார் திருநகரிக்கு சென்று நம்மாழ்வாரின் சந்தித்தால் நாலாயிர திவ்விய பிரபந்தத்தின்  சந்தேகத்திற்கு விடை கிடைக்கும் என்று வழிகாட்டினார்.  இறைவனது கட்டளையை ஏற்று ஸ்ரீமந் நாதமுனிகள் நம்மாழ்வாரை தரிசனம் செய்ய,  நம்மாழ்வார் நாலாயிர திவ்ய பிரபந்தங்களை சொல்லிக்கொடுத்து அவரது சந்தேகத்தையும் போக்கினார்.

 நாலாயிரப் பாசுரங்களை எந்தவித குறையும் இல்லாமல் நிலைநிறுத்த ஸ்ரீமந் நாத முனிகளுக்கு இந்த சக்கரபாணி பெருமாள் உதவி செய்ததால் இறைவனுக்கு ஆரா அமுதன் என்ற பெயரும் உண்டு.  ஆண்டாள் திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார்,  பேயாழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் இக்கோயிலைப் பற்றி நிறைய பாசுரங்கள் பாடி இருக்கிறார்கள். கோமளவல்லி தாயார் இதுவரை கோயிலை விட்டு வெளியே வந்ததே இல்லை என்பதால் 'படி தாண்டா பத்தினி'  என்ற பெயரும் உண்டு.

பரிகாரம்

எத்தகைய இடையூறு வாழ்க்கையில் வந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் இந்த சாரங்கபாணியை சரணடைந்து விட்டால் போதும்.  பகவானே கனவில் வந்து, திக்குத் தெரியாமல் திண்டாடு பவர்களுக்கெல்லாம்  திக்கைக் காட்டி தைரியத்தையும் கொடுப்பார்.  படிக்கின்ற மாணவர்கள் தேர்வு நேரத்தில் பரீட்சை பயம் வராமல் இருக்கவும் தேர்வு எழுதும் பொழுது திடீரென்று படித்தது நினைவுக்கு வராமல் தவிப்பதை தடுக்கவும்  வெளியூர் பயணத்தின்பொழுது இக்கட்டான நிலையில் மாட்டிக்கொள்ளாமல் தப்பிக்கவும்,  பயம் விலகவும் மரண பயத்திலிருந்து வெளியே வரவும்,  இந்த சாரங்கபாணி கோவிலுக்கு முடிந்த போதெல்லாம் வந்து பெருமாளை தரிசனம் செய்து  பிரசாதத்தை வைத்துக் கொண்டால் போதும். சக்கரம் போல் இவர் உங்களை காப்பார்.

Quickly Find What You Are Looking For