திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோயில் Sowriraja Perumal in Tamil

நாகப்பட்டினத்திலிருந்து நன்னிலம் செல்லும் வழியில் நன்னிலத்திற்கு கிழக்கே  எட்டு கிலோமீட்டர் தூரத்தில் கிருஷ்ணாரண்யா க்ஷேத்திரம். பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரம், ஸப்த புண்ணிய ஷேத்திரம்  என்னும் புனிதமான ஸதலம் இருக்கிறது. இதைத் திருக்கண்ணபுரம் என்று புராணங்கள் கூறுகின்றன! வடக்கே திருமலைராயனாறு,  தெற்கே  வெட்டாறு இந்த இரண்டுக்கும் இடையே கிழக்கு மேற்காக 316  அடி நீளம் 216 அடி அகலம் வடக்கு தெற்காக 95 அடி உயர கோபுரம் 7 நிலை கொண்டு  கம்பீரமாக காட்சியளிக்கிறது.

 மூலவர் ஸ்ரீ நீலமேகப் பெருமாள் நின்ற திருக்கோலம்.  தாயார் கண்ணபுர நாயகி (ஸ்ரீதேவி,  பூதேவி, ஆண்டாள், பத்மினி என்ற பெயரும் உண்டு)  கோயிலுக்கு எதிரில் பெரிய புஷ்கரணி.  இந்த நித்ய புஷ்கரணி 450 அடி நீளம் 415 அடி அகலம்.  ஒன்பது படித்துறை கொண்டது.  உற்சவர் சவுரிராஜ பெருமாள்.  விமானம் உத்பலா வதக விமானம். பஞ்சகிருஷ்ண ஸ்தலங்களில்  இதுவும் ஒன்று.  பெருமாள் எல்லா அக்ஷரங்களிலும் இந்த ஸதலத்தில் ஸாந் நித்யம் செய்கிறபடியால் இந்த ஸதலம்  ஸ்ரீமதஷ்டா க்ஷர மகா மந்திர ஸித்தி க்ஷேத்திரம்  என்று புராணங்களில் சொல்லப்படுகிறது.  திருவரங்க  ஸதலம்  வேலை வீடு.  இந்தத் ஸதலம்  கீழை விடு. என்று உயர்ந்ததாக போற்றப்படுகிறது.

அபய ஹஸ்தத்திற்கு பதிலாக வரத ஹஸ்தம் காணப்படுகிறது.  உற்சவர்,  கன்யகாதானம் வாங்க கையேந்திய நிலையில் தேவை சாதிக்கிறார்.  விபீஷணனுக்கு  ஸ்ரீ ரங்கநாதர் அருளியபடி அமாவாசை தினத்தன்று இறைவன் நடையழகை சேவை சாதித்த ஸதலம்.  விபீஷணனுக்குத்  தனி சன்னதி உண்டு.  உபரி சரவசு  மன்னன்  புத்திரப்பேறு வேண்டி  இந்த ஸதலத்தில் தவம் செய்து பத்மினி என்று அழகான பெண் குழந்தைக்கு தந்தை ஆனதால் பத்மினி,  இத்தலப் பெருமானே  தனக்கு கணவனாக வரவேண்டும் என்று விரும்பியதால் சவுரிராஜ பெருமாளே  பத்மினியை மணந்து கொண்டார்.

சோழ மன்னர் ஒருவர்,  ஒரு நாள் இந்த பெருமாளுக்குச் சூட்டிய மாலையில் தலைமுடி இருப்பதைக் கண்டு கோயில் அர்ச்சகர் இடம் கேட்க இது பெருமாளின் தலைமுடிதான் என்று அர்ச்சகர் பதில் சொன்னார்.  இதை நம்ப மறுத்த அரசன்,  கருவறைக்குச் சென்று பெருமாளைப் பார்த்தார்.  பெருமாள் தலையில் ஒரு முடி இருந்தது.  அது உண்மையான மனிதனா என்று சந்தேகப்பட்டு,  அரசன் அந்த தலைமுடியை இழுக்க பெருமாள் தலையிலிருந்து ரத்தம் வந்தது. அரசன் இதைக் கண்டு அதிர்ந்து பெருமாளிடம் மன்னிப்பு கேட்டான்.  பெருமானும் தன் தலைமுடியை வளர்த்து அரசனுக்கு காண்பித்து அரசனது சந்தேகத்தை போக்கி  மன்னித்து அருளினார்.  இதனால் உத்ஸவ பெருமாளுக்கு ' சவுரிராஜன்'  என்ற பெயரும் உண்டு.

முனையத்தரையின் என்ற பக்தர் தனது மனைவி சமைத்த உங்களை அர்த்த சாமதத்திற்கு பின்பு கோயிலுக்கு எடுத்துச் சென்று பெருமாளுக்கு நைவேத்தியம் செய்ய நினைத்தார்.  பகவானும் பக்தனின் வேண்டுகோளை ஏற்று,  மூடிய கோயில் கதவைத் திறந்து மணியோசை அடித்து வெண் பொங்கலை நெய்வேத்தியமாக ஏற்றுக்கொண்டார்.  இன்றைக்கும் இந்த பெருமாளுக்கு அர்த்த சாமத்தில் முனியை தரையர் நினைவாக ' முனியோதரம் பொங்கல்' சமர்ப்பிக்கப்படுகிறது.  இக்கோயிலுக்கு தனியே சொர்க்கவாசல் இல்லை. விகடாக்ஷன்  என்றும் அசுரனை வதம் செய்த இடம். பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகர ஆழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் ஆகியோர் இங்கு மங்களாசாசனம்  செய்திருக்கிறார்கள்.

பரிகாரம்

தினமும் சந்திக்கும் கொடூரமான பிரச்சினைகளிலிருந்து விலகவும் மந்திரங்களாலும் தந்திரங்களாலும் துன்பப்படும் அனைவரும் அதில் இருந்து விலகவும் இங்கு வந்து,  புஷ்கரணியில் பெருமாளை சேவித்து முனித்தரயப் பொங்கலை நெய்வேத்தியம் செய்து உண்டால் இடர்பாடுகள் நீங்கி,  வாழ்க்கையில் அனைத்து சவுபாக்கியங்களையும் பெறுவார்கள்.

Quickly Find What You Are Looking For