திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில் Saranathan Temple in Tamil

வேதத்தை நமக்கு அருளியவர் பெருமாள்.  வேதத்தின் மூலம் தான் நாம் இந்த முன் ஜென்ம  பாவத்தை கழித்துக் கொண்டிருக்கிறோம். பகவானை  நேரடியாக காண துடிப்பவர்கள் வேத கோஷம் மூலம் காண முடியும்.  அதுதான் நம் அனைவருக்கும் ஜீவநாடி.  அப்படிப்பட்ட வேதத்திற்கு கூட முன்னொரு காலத்தில் மிகப்பெரிய ஆபத்து வந்த பொழுது அந்த வேதங்களை பிரளயத்தில் இருந்து காப்பாற்ற  பகவான் ஒரு கடம் செய்து  எப்பேர்ப்பட்ட இயற்கை சூழ்நிலைகளிலும் அது உடையாதவாறு செய்து அதனுள் வேதத்தை வைத்துகாப்பாற்றி தந்திருக்கிறார்.  அவர்தான் ஸாரநாத பெருமாள். இத்தகைய அதிசய சம்பவம் நடந்த இடம் திருச்சேறை.  இது பஞ்ச ஸார சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

கும்பகோணம் குடவாசல் திருவாரூர் செல்லும் வழியில் சுமார் 24 கிலோ மீட்டர் தூரத்தில்,  திருச்சேறை உள்ளது. ஸார சேத்திரம், வளநகர் என்ற பெயரும் உண்டு.  கோயிலின் வடக்கில் முடிகொண்டான் ஆறுக்கும் தெற்கு குடமுருட்டி ஆறுக்கும் இடையில் 400 * 300 அடி நீள அகலத்தில் 90 அடி உயர ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ள இந்த கோயிலில் மூணு நிலை பிரகாரங்கள் உண்டு.  மூலவர் ஸாரநாத பெருமாள்.  நின்ற  திருக்கோலம்.  வடபுறத்தில் காவேரி. தெற்குப் பக்கத்தில் மார்க்கண்டேயர்.  தாயார் ஸாரநாயகி. புஷ்கரணி சாரா புஷ்கரணி.  விமானம் ஸாரா விமானம். 

பிரளய காலத்தில் வேதங்களும் அழிந்துவிடுமோ என்று பகவானே அச்சப்பட்ட பொழுது இந்த திருத்தலத்தில் உள்ள மண்ணைக் கொண்டு செய்த பானையால்  வேதங்களை வைத்து மூடிவிட்டாள்  எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் வேதம் அழியாது என்று பிரம்மா,  விஷ்ணுவுக்கு சொல்ல விஷ்ணுவே  ஸாரநாதனக இங்கு வந்து பானை தயாரிப்பு அதில் வேதத்தை வைத்து காப்பாற்றினார்.

ஒரு முறை  காவேரியானவள், 'தனக்கு கங்கையை விட அதிக பெருமை வேண்டும்'  என்று வேண்டி இத்தளத்தில் உள்ள சாரா புஷ்கரணியின் மேற்கரையில் அரசு மரத்தடியில் ஸார நாதனை வேண்டி  தவம் செய்தாள்.  தவத்திற்கு மகிழ்ந்த ஸாரநாதன்  கருட வாகனத்தில் பூமிதேவி,  நிளா தேவி, சாரநாயகி, மகாலட்சுமி, ஸ்ரீதேவி சகிதம் வந்து தரிசனம் தந்து காவேரிக்கு அந்த வரத்தை அளித்தார். கும்பகோணத்து மகாமகம் போல்,  ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் பூச நட்சத்திரத்தில் குரு வரும் பொழுது இந்த ஸதலத்தில் பெருமாள் 5 தேவிகளுடன் காட்சி அளிக்கிறார்.  இது  மகாமகம் புண்ணியத்திற்கு ஒப்பாகும்.  சார  புஷ்கரணியில் நீராடுவது அன்றைக்கு அவ்வளவு புனிதமாகும்.

மன்னார்குடியிலுள்ள இராஜ கோபாலன் திருப்பணிக்காக நிறைய கற்கள் தேவைப்பட்டது. 'நாச பூபாலன்'  என்பவனையும் ஒரு கல்லாக நினைத்துக்கொண்டு தூக்கி வரப்பட்டான்.  அப்போது அரசரும் மற்றவர்களும் தன்னைக்  கல்லாக நினைத்து  துன்புறுத்துகிறார்கள் என்று கண்ணீர் விட்டு திருச்சேறை சாரநாத பெருமாள் இடம் முறையிட்டான்.  பெருமாளே நரசபூபாலன் முன்பு தோன்றி உன் கஷ்டம் விலகும்.  நானே அழகிய மணவாள நாயக்கர் முன்பு உன் பொருட்டு செல்வேன்' என்று சொல்லி ராஜகோபால பெருமாளாக அந்த அரசனுக்கு தரிசனம் கொடுத்து நரசபூபாலனை மீட்டதாக  சிறப்பு செய்தி உண்டு.  திருமங்கையாழ்வார் இந்தக் கோயிலைப் பற்றி 13 பாசுரங்கள் பாடி இருக்கிறார்.

பரிகாரம்

வாழ்க்கையில் பெருமை அடையவும்,  தடங்கல்கள் விலகவும், நினைத்ததை சாதிக்கவும்  சொத்து சுகம் கைவிட்டு போகாமல் இருக்கவும்,  கோர்ட் விஷயங்களில்  சாதகமான சூழ்நிலை ஏற்படவும்,  பதவி உயர்வு கிடைக்காமல் தடைபட்டு கொண்டிருந்தால் அந்த முட்டுக்கட்டைகள் விலகவும்,  பிரிந்த குடும்பம் ஒன்று சேரவும்,  உறவினர்களால் எந்தவித அபகீர்த்தி ஏற்படாமல் இருக்கவும்,  ஆரோக்கியம் நல்லபடியாக நீடிக்கவும் இந்த தலத்திற்கு வந்து புஷ்கரணியில் நீராடி ஸார நாதனை தரிசித்தால்  போதும்,  சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும்.

Quickly Find What You Are Looking For