திருவழுந்தூர் (தேரழுந்தூர்) தேவாதிராஜன் பெருமாள் கோயில் Therizhandur Temple in Tamil
மாயவரம் குத்தாலம் கோமல் செல்லும் வழியில் சுமார் 21 கிலோ மீட்டர் தூரத்திற்கு திருவழுந்தூர் என்னும் புண்ணியஸ்தலம் உண்டு. இந்த ஊருக்கு அழுந்தூர், கிருஷ்ணாரண்ம் என்று வேறு பெயர்களும் உண்டு. பொதுவாக கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண பெருமாள் இரண்டு கைகளுடன் தான் காட்சி தருவார். இந்த கோயிலில் உள்ள கிருஷ்ணன் ருக்மணி, சத்யபாமாவுடன் பசு கன்றுடன், நான்கு கைகள் உடையவராக திருக்கோலம் கொண்டுள்ளார்.
காவிரி கரையின் ஓரத்தில் மூன்று நிலைகள் உடைய கோபுரம் மற்றும் இரண்டு பிரகாரங்களும் உடையது. மூலவர் தேவாதிராஜன் நின்ற திருக்கோலம். உற்சவர் ஆமருவியப்பன், செங்கமலவல்லி. தீர்த்தம் தரிசனம் புஷ்கரணி. விமானம்கருட விமானம். பஞ்ச கிருஷ்ண சேத்திரத்தில் இதுவும் ஒன்று. தர்ம தேவதை, உபரி, சரவசு, காவேரி, கருடன், அகத்தியர் ஆகியோர் இங்கு இறைவனை நேரடியாக கண்டவர்கள்.
அகத்திய முனிவர் இத்தளத்தில் கீழ் அமர்ந்து இறைவனை நோக்கி தவம் புரிந்து கொண்டிருந்தார். அப்போது அவரது தவத்திற்கு இடையூறாக ஊர்த்து வரதன் என்னும் அரசன் வானவெளியில் தேரை செலுத்தினான். இதையறிந்த அகத்தியர் தன் தவ பலத்தால் தேரை மேலே செல்லாமல் அழுத்தினார். தேறும் மேலே செல்லாமல் வானிலிருந்து கீழே விழுந்து மண்ணில் அழுத்தியது. அதனால் தேரழுந்தூர் என்ற இந்த ஸ்தலத்திற்கு பெயர் வந்தது. கண்ணபிரான் ஆசையோடு மேய்ந்து கொண்டிருந்த பசுக்களை நான்முகனான பிரம்மன், கண்ணனுக்கு தெரியாமல் அந்த பசுக்களை இந்த ஸதலத்திற்கு கொண்டு மறைத்துவிட்டார். பிரம்ம தேவனின் இந்த செய்கையை கண்ட கிருஷ்ணன், தன்னுடைய சக்தியினால் ஏராளமான பசுக்களை மாயையாக படைத்துவிட்டார். இதனால்கதிகலங்கிப் போன பிரம்மன் கிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்டார். அத்தோடு நிரந்தரமாக இந்த தலத்தில் தங்கி அருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டதற்கேற்ப, பகவான் கிருஷ்ணர் ஆமருவியப்பன் என்ற திருநாமத்தோடுஇத்தளத்தில்எழுந்தருளியுள்ளார். கவிச்சக்கரவர்த்தி கம்பன் இந்த ஊரில் பிறந்தார். திருமங்கையாழ்வார், மணவாள மாமுனிவர் ஆகியோர் இந்த திருத்தலத்தை போற்றிப் பாடி இருக்கிறார்கள்.
பரிகாரம்
காணாமல் போன நபர்கள் மீண்டும் வீட்டிற்கு திரும்புவதற்கும் கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் வந்து சேர்வதற்கும், மிகுந்த அதிகாரிகளால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து விடுபடுவதற்கும் தங்களது வாழ்க்கையில் புகுந்து குறுக்கீட்டு பல்வேறு இன்னல்களை தந்து கொண்டிருக்கும் கயவர்களிடமிருந்து தப்பிப்பதற்கும் இங்கு வந்து தேவாதிராஜ பெருமாளை மனமுருகி பிரார்த்தனை செய்து கோயில் விதிப்படி செய்ய வேண்டிய பரிகாரங்களை செய்தால் அத்தனை கஷ்டமும் தூள்தூளாகி ஆனந்த பெருவாழ்வு வாழ முடியும். இன்னும் சொல்லப் போனால் அவர்கள் பிரச்சனைகளுக்கு ஏற்ப பெருமாளின் நேரடி தரிசனம் கிடைக்கலாம்.