ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் பெருமாள் கோயில் Thiru Aadanoor Temple in Tamil

வேத காலத்திலும் சரி,  இப்பொழுதும் சரி, 'அக்னி'க்கு தனி மரியாதை கொடுப்பது உண்டு.  உலகில் மிகவும் புனிதமானது,  கலப்படமில்லாது, சுத்தமானது என்று நம்புகிற அக்னி பகவானே சாபத்திற்கு குள்ளாகி அவதிப்பட்ட பொழுது ' பெருமாள்'  தன் கருணையால் அந்த சாபத்தை போக்கி இருக்கிறார் என்பது மிகவும் ஆச்சரியமான செய்திதான்.  இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் பஞ்சபூதங்களை விட ஸ்ரீமன் நாராயணன் தான் சகலவிதமான சக்தியைப் பெற்றவர்,  பகவானை அணுகினால் நாம் முக்தி அடையலாம்.  அவன் எல்லாவற்றுக்கும் மேலானவன் என்பது புறிக்கிறது.

  சுவாமி மலைக்கு வடக்கே மூன்று கிலோமீட்டர் தூரத்தில் கொள்ளிடத்திற்கும் காவிரிக்கும் இடையே உள்ளது தான் திரு ஆதனூர் கோயில்.  மூன்று நிலை இராஜகோபுரம், இரண்டு பிரகாரங்கள் கருவறையில் ஸ்ரீ ஆண்டாளக் குமையன் புஜங்க சயனத் திருக்கோலம்.  தலைமையின் கீழே  மரக்கால்.  இடது கையில் ஓலை எழுத்தாணி.  காலடியில் காமதேனு திருமங்கையாழ்வார்.  தாயார்  ஸ்ரீரங்க நாயகியார், உற்சவர் அழகிய மணவாளன். தீர்த்தம் சூர்ய புஷ்கரணி கோயிலுக்குத் தெற்கே தாமரைத் தடாகம்.  தலவிருட்சம் பாடலிமரம். பிரணவ விமான தோற்றம்.  பார்க்கவ சேத்திரம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த கோயில் திரு ஆதி ரங்கேஸ்வரம் என்று புராணங்களில் குறிப்பிடுவதால் இந்தக் கோயில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு முன்பே கட்டப்பட்டது.  திருவரங்கம் கோயிலில் எத்தனை சிற்பங்கள் உள்ளது அத்தனை சிறப்புகளும் இந்த கோயிலுக்கு உண்டு.

 ஒரு சமயம் காமதேனுவுக்கு பெருமாளை சேவிக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. தேவலோகத்தில்  பெருமாளைச் சேவிக்க பலதடவை முயன்றும் தோற்றுப் போனதால் மனம் நொந்து அமர்ந்து விட்டது.  அப்போது 'பகவானேச் சேவிக்க வேண்டுமென்றால்  பூலோகத்திற்குச் சென்று திருஆதனூர் கோயிலில் பிரார்த்தனை செய்தாள் பகவான் நிச்சயம் தரிசனம் கொடுப்பார்'  என்று அசரீரி வாக்கு கேட்டது.  உடனே காமதேனு இந்த தளத்திற்கு வந்து பிரார்த்தனை செய்து.  பகவானும் காமதேனுவுக்கு காட்சி தந்தார்.

ஒரு சமயம் தன்னை விட்டார் சுத்தமானவன் வேறு யாருமில்லை என்ற கர்வத்தில் அக்னி தேவன் அளவுக்கு அதிகமாகவே கொட்டம் அடித்தான்.  இதைக் கண்டு மாமுனிவர் துர்வாசர் 'உன் கொட்டம் அடங்கிப் போகும். இனி உனக்கு எரிகின்ற சக்தி இல்லை' என்று சாபமிட்டார்.  இதற்குப்  பிறகுதான் அக்னி தேவன் தன் தவற்றை உணர்ந்து சாபவிமோசனம் கேட்க காமதேனுவுக்கு காட்சியளித்த திரு ஆதனூர் சென்று பெருமாளை வழிபட்டு வந்தால் இழந்த சக்தியை மீண்டும் பெறலாம் என்று துர்வாசர் சொன்னார். அக்னி தேவனும் இங்கு வந்து பெருமாளை வேண்டியதின் பின்னர் அவரது சாபம் விலகியது. இதனால்  தான் என்னவோ இன்றைக்கும் இறைவனது திருவடி அருகே அக்னி பகவானின் உருவம் காணப்படுகிறது.  இறைவன் பிறகு முனிவருக்கும் அருள் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.

பரிகாரம்

அக்னியால்  எந்தவித  ஆபத்து ஏற்படாமல் இருக்கவும் விபத்து இல்லாத  அதுவே பெரு வாழ்க்கை வாழவும் தொழிற்சாலைகளில் மின்சாரத்தினால் பாதிப்பு ஏற்படாமல் காப்பாற்றவும்,  பெட்ரோல்,  டீச்ல், மின்சாரம் போன்றவற்றால் வாழ்க்கை வீணா போகாமல் இருக்கவும்,  எதிரிகளால் உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் தடுக்கவும் ஜாதகத்தில் செவ்வாய் தோசத்தினால் திருமண வாழ்க்கை பாதிக்காமல் தடுக்கவும் இந்த ஸ்தலத்திற்கு வந்து எம்பெருமானை வழிபட்டு  பிரார்த்தனை செய்து தாயாருக்கு புடவை சாற்றி நெய் விளக்கு ஏற்றினால் எந்தவித கெடுதலும் ஏற்படாது என்பது உண்மை.

Quickly Find What You Are Looking For