திருத்தஞ்சை மாமணிக் கோவில் Or Thanjai Mamani Koil in tamil
தஞ்சாவூர் பலவகைகளில் மிகவும் பிரசித்தி பெற்றது என்பது வரலாறு காட்டும் உண்மை. 108 திருப்பதிகளில் நரசிம்மருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கோயில்களில் தஞ்சை மாமணிக் கோவிலும் அதனருகே வீற்றிருக்கும் தஞ்சையாளிக் கோவிலுக்கும் பங்கு உண்டு. தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திலும், திருவாரூருக்கு மேற்கே58 கிலோமீட்டர் தூரத்திலும் வெண்ணாற்றங்கரையில் அமைந்திருக்கிறது.
மாமணிக் கோயில், மணிகுன்றம் தஞ்சையாளிக் கோயில் ஆகிய மூன்று கோயில்களிலும் " பெருமாள்" எழுந்தருளி இருக்கிறார். பக்கத்து பக்கத்து கோயில்களகவே இருக்கின்றன. மாமணிக் கோயிலில் மூலவர் ஸ்ரீ நீலமேகம் பெருமாள் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார். தாயார் செங்கமல வல்லி. தீர்த்தம் கன்னிகா புஷ்கரணி, அம்ருத தீர்த்தம், வெண்ணாறு. மணிக்குன்றம் கோயிலில் மூலவர் மணி கொன்ற பெருமாள். தாயார் அம்புஜவல்லி. தீர்த்தம் ஸ்ரீ ராம தீர்த்தம் வெண்ணாறு. விமானம் மணி கூட விமானம். மூன்றாவது கோயில் தஞ்சையாழி மொட்டை கோபுரம் மூலவர் ஸ்ரீவீர நரசிம்மப் பெருமாள். தாயார் தஞ்சை நாயகி, தீர்த்தம் சூர்ய புஷ்கரணி, வெண்ணாறு. விமானம் வேத சுந்தர விமானம்.
மாமணிக் கோயிலின் மூல வரலாறு சரியாக தெரியவில்லை. மார்க்கண்டேய முனிவருக்கு எம்பெருமான் தரிசனம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அதேபோல நீண்ட காலம் தவம் புரிந்த பராசர முனிவருக்கு பகவான் பிராத்திசமாகியிருக்கிறார். இரண்டாவது கோயிலான மணிக்குன்றத்தில் மார்க்கண்டேயர் பெருமாளுடைய வேண்டுதலின் பொருட்டு பலமுறை நேரிடையாக தரிசனம் கொடுத்ததாக வரலாறு. மூன்றாவது கோயில் தஞ்சை யாளிகர் கோவிலுக்கு ஒரு சிறப்பு வரலாறு உண்டு. பகவான் தஞ்சக யானையைப் பிளக்க நரசிம்ம அவதாரம் எடுத்து நகங்களால் குத்திக் கிழித்த போது தஞ்சகன் வேண்டிக்கொண்டபடி நரசிம்மா உருவத்தோடு சேவை சாதித்தார். அதேபோல் தஞ்சகன் பெயரால் ஊரும் பெயர் மாறிற்று. தஞ்சகன் நகர்தான் பின்னர் தஞ்சாவூராக மாறியது. இந்தக் கோயிலின் விக்ரகங்கள் தஞ்சையை பார்த்தபடி அமைந்திருப்பதால் தஞ்சையை காத்தருளும் தெய்வமென்று வழங்கப்படுகிறது.
திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார் இந்தக் கோயிலைப் பற்றி பாடியிருக்கிறார்கள்.
பரிகாரம்
' ஏவல்- பில்லி, சூனியம்- பேய் பிசாசு போன்ற துர்தேவதைகளால் பாதிக்கப்பட்டவர்களும் எதையோ கண்டு பயந்து என்ன சிகிச்சை செய்தும் பல நன்றி பித்துப் பிடித்து தன்னிலை மறந்து அவர்களும் நரம்புத் தளர்ச்சி மூளை வளர்ச்சி குன்றியவர்களும் இந்த கோவிலுக்கு வந்து செய்ய வேண்டிய பூஜைகளை செய்தால் அத்தனை கொடிய நோயிலிருந்தும் தப்பிவிடலாம். விதியை மாற்றி எழுதும் வலிமை மனிதர்களுக்கு இல்லை. ஆனால் பிரார்த்தனை மூலம் எந்த கோயில் பெருமாளின் அனு கிரகத்தோடு விதியை நல்லபடியாக மாற்றி எழுத முடியும். இது இன்றைக்கு நேற்றைக்கு அல்ல, காலம் காலமாக நடந்து வரும் உண்மை. எனவே உங்கள் கஷ்டங்களை முற்றிலும் தீர இங்கு சென்று வந்தால் போதும்.