திரு நாகப்பட்டினம் சவுந்தரராஜப்பெருமாள் கோயில் Nagapattinam Soundararajaperumal Temple in Tamil
நகரின் நடுவிலேயே பஸ் நிறுத்தத்திற்கு அருகில் நடந்தே சென்று பெருமாளை தரிசிக்கும் கோவில்களில் நாகப்பட்டினத்தில் உள்ள சவுந்தரராஜ பெருமாள் கோவிலும் ஒன்று. மிகப் பழமையான கோயில் என்பது இதன் பெருமை. நாகப்பட்டினத்திற்கே பெருமை தரக்கூடிய இந்த கோயிலை பற்றி பிரம்மாண்ட புராணத்தில் நிறைய கதைகள் சொல்லப்பட்டு இருக்கின்றன. மற்ற எல்லாவற்றையும் விட ஆதிசேஷன் இந்த தளத்தில் உள்ள ஸாரா புஷ்கரணியில் தவமிருந்து பெருமாளை நேரடியாக தரிசனம் செய்த ஸ்தலம்.
கோவிலில் ஏழு நிலை ராஜகோபுரம் மூன்று பிரகாரங்கள் இருக்கின்றன. மூலவர் நீலமேகப் பெருமாள் நின்ற திருக்கோலம். உற்சவர் சௌந்தரராஜ பெருமாள். தாயார் சௌந்தர்ய வல்லி, கஜலட்சுமி. தீர்த்தம் ஸாரா புஷ்கரணி. விமானம் சௌந்தர்ய விமானம். நீலமேகப் பெருமாள் கதையுடன் என்று அருள்பாலிப்பது விசேஷம். முதலில் நாகன் பட்டினம். பிறகு நாகப்பட்டினம் ஆக மாறிற்று. ஆதிசேஷனை தனது சயனமாக பெருமாள் ஏற்றுக்கொண்ட சம்பவம் இங்குதான் நடந்தது. மிக அபூர்வமான அஷ்டபுஜ நரசிம்மரின் வெண்கலச்சிலை இங்கு உண்டு. ஒரு கை பிரகலாதனின் தலையை தொட்டும் மற்ற கைகள் ஹிரண்யனை வதம் செய்கின்றனவாக இருக்கிறது, அபயஹஸ்தம் காணலாம்.
உத்தானபாதன் அரசனின் குமாரனான துருவன் பெருமாளை நினைத்து கடுமையாக தவம் செய்தான். துருவனின் தவத்தை கலைக்க பல்வேறு முயற்சிகள் நடந்தன. ஆனால் துருவன் அசரவே இல்லை. இளம் பாலகன் ஒருவன், இப்படி ஒரு கடும் தவத்தை செய்ததை கண்டு மகிழ்வடைந்த எம்பெருமான் கருட வாகனத்தில் துருவனுக்கு காட்டிக்கொடுத்து ' உனக்கு என்ன வரம் வேண்டும்' என்று கனிவுடன் கேட்டார். இறைவனின் பேரழகில் மயங்கிய துருவன், தான் எதற்காக இத்தனை கடும் தவம் செய்து கஷ்டப்பட்டேனொ அந்த மூல காரணத்தை விட்டுவிட்டு ' இவ்வளவு அழகாக இருக்கும் தாங்கள் இந்தத் தளத்தில் பேரழகோடு எப்பொழுதும் எனக்கு தரிசனம் தரவேண்டும் என்று கேட்டான். எம்பெருமானும் துருவனின் ஆசையை நிறைவேற்ற இந்த ஸதலத்தில் சவுந்தரிய ரூபமாகவே காட்சியளிக்கிறார்.
நாக பெருமானுக்கும் துருவனும் பெருமாள் நேரடியாக காட்சி தந்த ஸதலம் என்பது பெருமை. நாக கன்னிகையை மணக்க விரும்பிய கோடநாடு அரசனின் வேண்டுதலை சௌந்தரராஜ பெருமாள் நிறைவேற்றி வைத்திருக்கிறார். திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்த கோயில்களில் இதுவும் ஒன்று.
பரிகாரம்
ஜாதகத்தில் நாகதோஷம் உள்ளவர்கள், கால சர்ப்ப தோஷம் உள்ளவர்கள் நாகத்தின் தீண்டப்பட்டு உயிரிழந்த குடும்பத்தினர் மேலும் பாதிக்கப்படாமல் இருக்கவும், திருமணமாகாமல், வம்சவிருத்தி தோஷம் உள்ளவர்கள், பிறக்கின்ற குழந்தைகள் அழகும் அறிவும் கொண்டு பிறக்க வேண்டுமென்று நினைப்பவர்களும், இந்த சவுந்தரராஜ பெருமாள் ஸதலத்திற்கு வந்து கடுமையாகப் பிரார்த்தனை செய்து வழிபட்டார் அவர்களுக்கு எத்தகைய தோஷங்கள் இருந்தாலும் விலகும். நல்ல புத்திரர்கள் பிறப்பார்கள். அவர்கள் தெளிவாகவும் பிறந்து முன்னோர்களது பாவத்தையும் கழித்து, குடும்பத்தை சௌக்கியமா மாற்றுவார்கள் என்பது இந்த ஸதலத்திற்கே உரிய பெருமை.