அஹோபிலம் லட்சுமி நரசிம்மர் கோயில்
ஒவ்வொரு அவதாரத்திலும் பகவான் கொடிய அரக்கர்களை கொன்று ஜனங்களை காப்பாற்றி இருந்தாலும் தன்னுடைய பக்தன் பிரகலாதனுக்காக அவனுடைய தந்தையான இரணியனை பகவான் வித்தியாசமாக உருவம் எடுத்துக் கொன்றதுதான் இன்றைக்கும் நம்மை புல்லரிக்கச் செய்கிறது. பகவான் நரசிம்ம அவதாரம் எடுத்த அற்புதமான இயற்கை எழில் சூழ்ந்த ' 'அகோபிலம்' முக்கியமான புண்ணிய சேத்திரங்களில் ஒன்று.
சென்னை மும்பை ரயில் பாதையில் உள்ள கடப்பாவில் இறங்கி அங்கிருந்து பேருந்தை பிடித்து சுமார் 72 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ' அருலகட்டா' என்ற ஊரில் இறங்க வேண்டும். இங்கிருந்து இன்னொரு பேருந்தில் சென்றார் ஒரு மணி நேரத்தில் அஹோபிலம் சென்று விடலாம். இங்கேயுள்ள கோயிலில் அகோபில, வராஹ, மாலோல, யோகானந்த பாவந, காரஞ்ச, சத்ரவட, பார்கவ, ஜ்வால நரசிம்மன் என்று ஒன்பது நரசிம்மர் கோவில்கள் உண்டு. மலை மீது மழை அடிவாரத்திலுமாக ஒன்பது நரசிம்மர் சன்னதிகள் இருக்கின்றன.
கீழ் அஹோபிலத்தில் மூலவர் பிரகலாதவரதன். லக்ஷ்மி நரசிம்மன் வீற்றிருந்த திருக்கோலம். உற்சவர் மலோல நரசிம்மர் தாயார் அமிர்தவல்லி, செஞ்சு லட்சுமி. தீர்த்தம் இந்திர நரசிம்ம பாபநாச கஜ பார்கவ தீர்த்தங்கள். விமானம் குகை விமானம் முதல் அழகிய சிங்கருக்கு போக ரூபத்தில் லக்ஷ்மி நரசிம்மர் நேரடியாக தரிசனம் தந்த இடம்.
மேல் அகோபிலமடம். பத்து கிலோமீட்டர் மலைமேல் பயணம் செய்தால் அடைந்துவிடலாம். இது ஒரு குடவரைக் கோயில். மூலவர் அஹோபில நரசிம்மர். தாயார் லட்சுமி. தீர்த்தம் பவநாசினி. விமானம் குகை விமானம். பிரகலாதனுக்கு பிரத்யட்சம் ஆன ஸ்தலம்.
சீதையை கண்டுபிடிக்க இராமன், இங்குள்ள லட்சுமி நரசிம்மரிடம் ஐந்து ஸ்லோகங்களாக துதித்து வழிபட்டார். இந்த மூர்த்தி ஸ்வயம்பு மூர்த்தி. நரசிம்மர் வேடுவனாக மாறி செஞ்சு லட்சுமி தாயாரை மணந்து கொண்டதாக வரலாறு. இந்த கோவிலுக்கு மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருப்பது மலோல நரசிம்மன் கோவில். இதற்கு இன்னும் நான்கு கிலோமீட்டர் தொலைவில் ஒரு தோண் உண்டு. இந்த தூணில் இருந்து தான் ஸ்ரீ நரசிம்மர் அவதாரம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கும் அருகே கீழே ஜ்வாலா நரசிம்மர் கோயில் உக்கியமாக காட்சியளிக்கிறது.
அகோபில மடத்து ஜீயர்களின் ஒருவரான ஆறாவது பட்டம் ஷஷ்டபராங்குச யதீந்தர மஹாதேசிகன் மேல் நரசிம்மர் புகுந்திருப்பதாகவும் இவர் இங்குள்ள குகையில் இன்னும் தியானத்தில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். அந்த குகையை சிமெண்ட் போட்டு மூடி இருப்பதை காணலாம். கருடன் கேட்டுக்கொண்டதற்கிணங்க பகவான் தனது நரசிம்ம அவதாரத்தை இந்த மழையில் காட்டியதாக ஒரு வரலாறு உண்டு. ஆதிசங்கர பகவத் பாதாளை இங்குள்ள கபாலிகள் கொலை செய்ய முயன்ற பொழுது லக்ஷ்மி நரசிம்மர் காப்பாற்றியதாக ஸ்தல வரலாறு.
பரிகாரம்
மனிதனுக்கு தாங்க முடியாத துன்பம் வரும் பொழுது தன்னிலை மறந்து ' அம்மா' என்று கதறுவதுபோல யார் யாருக்கு என்ன துன்பம் வந்தாலும் வாய் விட்டு சிரி நரசிம்மா என்று கூப்பிட்டால் போதும். பகவான் எந்த ரூபத்திலாவது வந்து இரணியனைக் கொன்ற அதுபோல் துன்பத்தைக் கொன்று பக்கபலமாக. கடைசிவரையிலும் இருப்பார் எனவே அத்தனை தேர்தலும் ஒரு முறை அகோபிலம் சென்று வணங்கினால் ஆயிரம் ஆண்டுகளுக்கு யாராலும் எந்த வித துன்பமும் வராமல் நரசிம்மர் காப்பாற்றுவார்.